""இந்தியாவுக்கு ஏற்ற வகையில் கூடார வீடுகள் அமைப்பேன்,'' என்று, ஜெர்மானிய கூடார வடிவமைப்பாளர் மார்க்கஸ் ஹூன்ஸ்டார்ப்பே கூறினார்.
சென்னையில் நடந்து வரும், இந்தோ-ஜெர்மன் அர்பன் மேளாவில், இந்தியாவின் கூடாரங்களின் அமைப்பையும், ஜெர்மனியின் கட்டட அமைப்பையும் உள்ளடக்கிய புதிய வகை நவீன கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மேளாவும், இக்கூடாரங்களில் அமைந்துள்ளது. நவீன அலுவலகங்களுக்கு உரிய அனைத்து வசதிகளுடன் கூடிய இக்கூடாரத்தில், தரையில் பிளைவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்கஸ் ஹூன்ஸ்டார்ப்பே வடிவமைத்துள்ளார். கிராமங்களுக்கும் இக்கூடாரங்களை அமைக்க வேண்டும் என்பது இவருடைய விருப்பம்.
தினமலருக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியதாவது: இந்தியாவில் நான் பார்த்த கூடாரங்கள் தான், தற்போதைய கூடாரங்கள் அமைப்பதற்கு ஊக்கமாக இருந்தது. எக்கு மற்றும் மெம்பிரேன்களால் அமைக்கப்பட்ட இக்கூடாரங்கள், அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், திருமணம் மற்றும் பெரும்பாலான கொண்டாட்டங்களுக்கு, கூடாரங்கள் பயன்படுத்துவது எனக்கு ஊக்கத்தை கொடுத்தது. அதில் எங்கள் நாட்டின் அமைப்பு முறையும், இருக்க வேண்டும் என எண்ணினேன். அதுவும் இயற்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என விருப்பப்பட்டேன். பாரம்பரியங்களோடு கூடிய நவீனம், நிலைத்த இடத்தை பெறும். எனவே, எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கூடாரங்களை வடிவமைத்தேன். இக்கூடாரங்களை அனைத்து விழாக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இக்கூடாரங்கள், கிராமங்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் விருப்பம். இந்தியாவில் தற்போது அடுக்கு மாடி வீடுகள் அமைந்துள்ளதால், அதனால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக, கூடார வீடுகள் அமைக்கும் பணியில் ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.