காவிரியில் தண்ணீர் தராமல் ஏமாற்றுவது மட்டுமல்லாமல், தக்காளி விஷயத்திலும், தமிழகத்தை கர்நாடக விவசாயிகள், கமிஷன் ஏஜன்டுகள் ஏமாற்றி வருவது அம்பலமாகியுள்ளது.
தமிழகத்திற்கு தேவையான காய்கறிகளில் 50 சதவீத அளவிற்கு, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தின் 70 சதவீத தேவையை பூர்த்தி செய்வதில் கர்நாடக மாநில தக்காளி பெரும் பங்கு வகிக்கிறது.
நாட்டு தக்காளி, நவீன் தக்காளி என்று தக்காளியில் இரண்டு வகைகள் உள்ளன. நாட்டு தக்காளி கோலிகுண்டு வடிவில் பெரிதாக இருக்கும். நவீன் தக்காளி என்பது, உருளையை போன்ற வடிவில் நீளமாக இருக்கும். நாட்டு தக்காளியில் புளிப்பு தன்மை அதிகம் இருப்பதால், தமிழகம், கேரளா, கர்நாடகா மக்கள் அவற்றை விரும்பி சுவைக்கின்றனர்.பெங்களூரு தக்காளி எனப்படும் நவீன் தக்காளியில், புளிப்பு தன்மை மிகவும் குறைவு என்பதால், அவற்றை, வடமாநில மக்கள் அதிகம் விரும்புகின்றனர். மேலும், வட மாநிலத்தவர்கள் தக்காளியை பயன்படுத்துவது மிகவும் குறைவு. அதற்கு பதிலாக வெங்காயம், பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு போன்றவற்றைதான் பயன்படுத்துகின்றனர்.
கர்நாடகாவில் நாட்டு தக்காளிக்கு இணையாக நவீன் தக்காளி விளைவிக்கப்பட்டாலும், அவை விலை போவதில்லை. இதனால், சமயோஜிதமாக செயல்படும், கர்நாடக மாநில விவசாயிகள், கமிஷன் ஏஜன்டுகள், நாட்டு தக்காளியுடன், நவீன் தக்காளியை கலப்படம் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து பிளாஸ்டிக் பெட்டிகளில் 14 கிலோ அளவிற்கு அடைத்து, தக்காளிகள், லாரிகள் மூலம் விற்பனைக்கு வருகின்றன. பெட்டியில் இரண்டு முதல் அதிகபட்சமாக மூன்று கிலோ அளவிற்கு நாட்டு தக்காளியுடன் நவீன் தக்காளியும் உள்ளது. இந்த விஷயம் தெரிந்தாலும், வியாபார நோக்கம் கருதி, தமிழக தக்காளி மொத்த வியாபாரிகளும், கமிஷன் ஏஜன்டுகளும், அவற்றை கண்டும், காணாமலும், இருந்து வருகின்றனர். இவற்றை வாங்கிச் செல்லும், மற்ற மார்க்கெட் வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும், நவீன் தக்காளி விற்பனை ஆகாததால், நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சென்னையை சேர்ந்த தக்காளி வியாபாரி கணேசன் கூறும்போது, "14 கிலோ எடைக்கொண்ட நாட்டு தக்காளி அதிகபட்சமாக 220 ரூபாய் வரையிலும், நவீன் தக்காளி 260 ரூபாய் வரையிலும், விற்பனை ஆகிறது. நாங்கள் பெட்டியாக வாங்கிச் சென்று கடையில் கொட்டி விற்கிறோம்.
அதில் நாட்டு தக்காளியை மட்டும் மக்கள் பொறுக்கி எடுக்கின்றனர். நவீன் தக்காளியை விட்டுச் செல்கின்றனர். பெட்டிக்கு மூன்று கிலோ அளவிற்கு நவீன் தக்காளி மீதம் ஆவதால், 50 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. கர்நாடகாவில் இருந்து தக்காளியை மொத்தமாக வரவழைக்கும், வியாபாரிகள், இந்த மோசடியை கண்டிக்க வேண்டும். அப்போதுதான் கர்நாடக விவசாயிகள், கமிஷன் ஏஜன்டுகள் வழிக்கு வருவார்கள்.இப்போது கர்நாடக பாணியில் கலப்படத்தை, ஆந்திர மாநில தக்காளி விவசாயிகளும், கமிஷன் ஏஜன்டுகளும் அரங்கேற்றத் துவங்கியுள்ளனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழக்கமாக தரவேண்டிய தண்ணீரை தராமல், கர்நாடகா தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதே பாணியில் தக்காளி விஷயத்திலும், கலப்படம் செய்து, தமிழர்களை ஏமாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்,'' என்றார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆமாண்டா மடயனுங்கள விளையிற நிலத்தை எல்லாம் கூறு (பிளாட் ) போட்டு நாசம் பண்ணுங்க இப்ப தக்காளி தான் பிரச்னை இன்னமும் கொஞ்ச நாள் போவட்டும் சோத்துக்கும் அலைய வேண்டியது தான் முன்ன இந்த வியாபாரிகள் நமது விவசாயிகளிடம் ஞாயமாக நடக்கட்டும் அப்புறம் போய் ஆந்திரா மற்றும் கர்நாடகாகாரனை கிழிக்கட்டும் பொது மக்களே நீங்க நல்லா பார்த்து வாங்குங்கள் போயும் போயும் இந்த வியாபாரிகளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க இவனுன்களால் விவசாயிகளுக்கும் லாபம் இல்ல உங்களுக்கும் லாபம் இல்ல அப்புறம் ஏன் நீங்க கவலைபடறீங்க
மக்குப்பசங்களா...நாட்டுத்தக்காளியை விட நவீன் தக்காளி விலை கூட (14 கிலோ எடைக்கொண்ட நாட்டு தக்காளி அதிகபட்சமாக 220 ரூபாய் வரையிலும், நவீன் தக்காளி 260 ரூபாய் வரையிலும், விற்பனை ஆகிறது.) பிறகு ஏன் நாட்டுத்தக்காளியில் நவீன் தக்காளியை கலக்கவேண்டும்? நான் நவீன் தக்காளிதான் வாங்குவேன், அதுதான் ஒருவாரம் ஆனாலும் கெடாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.