68 percent woman's pass in TET | ஆசிரியர் தகுதி தேர்வு:தேர்ச்சி பெற்றவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு:தேர்ச்சி பெற்றவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள்

Updated : ஆக 27, 2012 | Added : ஆக 25, 2012 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 ஆசிரியர் தகுதி தேர்வு:தேர்ச்சி பெற்றவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள்

டி.இ.டி., தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.

டி.இ.டி., தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன."மைனஸ்' மதிப்பெண் குறித்து கேட்டபோது, ""தேர்வர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண்களை குறைத்து வழங்க, டி.ஆர்.பி.,க்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்தால் தான், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்,'' என்றனர்.சாதாரண தகவல்களைக் கூட சரிவர பூர்த்தி செய்யாததால், பலர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்ச்சி பெற்றவரில், எத்தனை பேர் அரசுப் பணிகளில் உள்ளவர்கள், பணியில் இல்லாதவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னரே தெரிய வரும் எனவும், டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.


83 பேர் தேர்ச்சி!

டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டையும் எழுதியவரில், 83 பேர், இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணி ஆகிய இரண்டில், இவர்கள் எதை விரும்புகின்றனரோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம்.இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு சம்பளமும்; பதவி உயர்வுக்கான வழி வகைகளும் அதிகம் உள்ளன. எனவே, பட்டதாரி ஆசிரியர் பணியையே பெரும்பாலானோர் தேர்வு செய்வர்.


விடுமுறை:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத, 6.69 லட்சம் பேருக்கு, அக்., 3ம் தேதி, மறு தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அன்று விடுமுறை அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, டி.ஆர்.பி., தெரிவித்தது. இது தொடர்பான அரசாணை, தேர்வுக்கு முன்னதாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


உடுமலையை சேர்ந்த திவ்யா முதலிடம்:

உடுமலை:ஆசிரியர் தகுதித் தேர்வில் 122 மதிப்பெண் பெற்று, உடுமலையைச் சேர்ந்த திவ்யா, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். "பொழுது போக்கு அம்சங்களை தவிர்த்து, தீவிர முயற்சி மேற்கொண்டதே வெற்றிக்கு காரணம்' என, திவ்யா தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த மாதம் 12ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், முதல் தாளில் 122 மதிப்பெண் பெற்று உடுமலை, கரட்டூரைச் சேர்ந்த திவ்யா, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை மூர்த்தி, உடுமலை தினசரி சந்தை காய்கறி மண்டியில், கணக்காளராக உள்ளார். தாய் ஜெயலட்சுமி, சத்துணவு அமைப்பாளர். தங்கை சரண்யா பி.இ., படித்துள்ளார்.

புங்கமுத்தூர் காந்தி கலா நிலையம் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, கோவையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரியில், டி.எட்., படிப்பை கடந்த 2005ல் முடித்துள்ளார். பின்னர், தொலைதூர கல்வியில் எம்.எஸ்சி., கணிதம் மற்றும் திருப்பூர் தனியார் கல்லூரியில் பி.எட்., முடித்துள்ளார். உடுமலை அருகே உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியராக திவ்யா பணியாற்றி வருகிறார்.


திவ்யா கூறியதாவது:

என் பெற்றோர் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானதில் இருந்து, தீவிரமாக தேர்வுக்கு தயாரானேன். மே மாத விடுமுறையில் சுற்றுலா, "டிவி' என பொழுதுபோக்கு அம்சங்களை தவிர்த்து, தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தினேன். பொதுவாக, "டிவி' பார்ப்பது பிடிக்காது; பயிற்சி வகுப்புகள் எதற்கும் செல்லவில்லை.போட்டித் தேர்வில் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. முதல் தாளில் மாநில அளவில் முதலிடம் கிடைக்கும் என, எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


கம்பம் பெண் மாநில முதல் இடம்:

சமூக அறிவியலில் 150க்கு 125 மதிப்பெண்கள் பெற்று, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி, மாநில முதல் இடம் பிடித்துள்ளார்.அருள்வாணி எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். அவர் கூறியதாவது: என் கணவர் ஹரிபாஸ்கர், இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, படித்து தேர்விற்கு தயாரானேன்.தேர்வில் பாடம் சம்பந்தமில்லாத சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.அதை தவிர்த்தால், என்னைப் போல பலரும் அதிக மதிப்பெண்களை பெறுவர். மாநில அளவில் முதல் இடம் எனக்கு எதிர்பாராத ஒன்று. மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமானது. அப்போது தான், சிறந்த, தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


சித்ரா:

142 / 150 இரண்டாம் தாள் கணிதம் / அறிவியல் முதலிடம் :
ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானதில் இருந்து, தீவிரமாக தேர்வுக்கு தயாரானேன். மாநில அளவில் முதல் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. தேர்வு முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது


சிறு தவறு... பேரிழப்பு!டி.

இ.டி., தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.இதில் அதிகபட்சமாக, முதல் தாள் தேர்வில், 621 பேர்; இரண்டாம் தாளில், 731 பேர், கேள்வித்தாள் வரிசை எண்ணை எழுதவில்லை. இவர்கள் அனைவருக்கும், மதிப்பெண் குறைக்கப்பட்டது. கூடுதல் தவறு செய்தவருக்கு, அதற்கேற்ப மதிப்பெண் குறைக்கப்பட்டது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன."மைனஸ்' மதிப்பெண் குறித்து கேட்டபோது, ""தேர்வர் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண்களை குறைத்து வழங்க, டி.ஆர்.பி.,க்கு அதிகாரம் உள்ளது. அதன்படி தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்தால் தான், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்,'' என்றனர்.

சாதாரண தகவல்களைக் கூட சரிவர பூர்த்தி செய்யாததால், பலர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்ச்சி பெற்றவரில், எத்தனை பேர் அரசுப் பணிகளில் உள்ளவர்கள், பணியில் இல்லாதவர்கள் எத்தனை பேர் என்ற விவரம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னரே தெரிய வரும் எனவும், டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.


இரு தேர்விலும் 83 பேர் தேர்ச்சி!

டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டையும் எழுதியவரில், 83 பேர், இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணி ஆகிய இரண்டில், இவர்கள் எதை விரும்புகின்றனரோ, அதை தேர்வு செய்து கொள்ளலாம்.இடைநிலை ஆசிரியரை விட, பட்டதாரி ஆசிரியருக்கு சம்பளமும்; பதவி உயர்வுக்கான வழி வகைகளும் அதிகம் உள்ளன. எனவே, பட்டதாரி ஆசிரியர் பணியையே பெரும்பாலானோர் தேர்வு செய்வர்.


-நமது நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balachander Rengamuthu - perambalur,இந்தியா
27-ஆக-201211:19:37 IST Report Abuse
Balachander Rengamuthu எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி ..... 6 3/4லச்சம் பேர்ல உத்தமபாளயக்காரங்க 4 பேர் முதல் 4 இடங்களை பிடிசிருகாங்களே இதுல ஏதாவது வில்லங்கம் உண்டான்னு {மார்க் 124 ,125 }விசாரிச்சு சொல்லணும் சாமி ..................
Rate this:
Share this comment
Cancel
umayal muthukumaran - chennai,இந்தியா
26-ஆக-201216:58:25 IST Report Abuse
umayal muthukumaran கடவுள் என்று தனியாக பிறப்பதில்லை....மக்களின் துயரங்களை ......மனித நேயத்தோடு தீர்ப்பவர்தான் கடவுள்.......அந்தவகையில் கடவுள் என்பவர் கருணாநீதி....மட்டும்தான்....
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
26-ஆக-201214:20:13 IST Report Abuse
Ramesh Rajendiran லஞ்சம் தராமல் வாழ்வது எப்படி, என ஒரு பாட திட்டம் எல்லா பள்ளிகளிலும் போதிக்க பட்டால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
bhardhapudhalvan - chidhambaram,இந்தியா
26-ஆக-201213:29:20 IST Report Abuse
bhardhapudhalvan சபாஷ் பெண்களே....மகளிர் மேன்மை நம் நாட்டின் மேன்மை என்பதை நிருபிக்கின்றீர்கள்....இந்த தேர்வில் முற்றிலும் திறமையை சோதிக்கும் அளவிலே கேள்விகள் கேட்கப்படிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது...இதில் நவ நாகரீக தமிழக பெண்கள் தமிழக ஆண்களை விட திறமையானவர்கள் என்பதை நிருபித்து விட்டார்கள்...இப்போது இதை யாராலும் மறுக்கமுடியாது... உங்களது சாதனை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
26-ஆக-201213:03:59 IST Report Abuse
KMP ஆண்கள் பாவம் அவர்களுக்கு டாஸ்மாக் போகவே நேரம் சரியாய் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
AKCG - tiruppur,இந்தியா
26-ஆக-201212:23:15 IST Report Abuse
AKCG தேர்வு எழுதும் விண்ணப்ப பாரத்தை கூட நிரப்பும் தகுதி இல்லாதவர்கள், இவர்கள் தான் நாளைய தலைமுறையை உருவாகும் வழிகாட்டிகள், இவர்களில் 6.72 லட்சம் பேரில் வெறும் 2448 பேர் தேர்ச்சி எனும் போது அதிர்ச்சியாகதான் உள்ளது. இதில் சிலர் நேரமின்மை என்று காரணம் காட்டுகிறார்கள் இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் .இட ஓதிக்கீட்டு முறை என்று ஒழிகிறதோ அன்று தான் கல்வியியல் சிறந்து விளங்கும் அதுவரை இப்படித்தான் இருக்கும். தரமான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு தகுதியான ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. மேலும் 1993 -94 வருடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களின் மீது இந்த அரசாங்கம் சிறிது கவனம் செலுத்தவேண்டும். இப்படியே காலம் கடந்தால் எப்படி?
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஆக-201212:08:06 IST Report Abuse
periya gundoosi அனைத்து அரசு வேலைக்கும் இப்படி தேர்வு வைத்து ஆட்களை தேர்வு செய்தால் திறமையானவர்கள் கிடைப்பார்கள் என்பது உண்மை. லஞ்சம்,ஊழல், முறைகேடு ஒழியும் என்பது தவறு. அப்படி என்றால் லஞ்சம்,ஊழல்,முறைகேடு செய்பவர்களெல்லாம் அறிவில் குறைந்தவர்களா? திறமையற்றவர்களா? இந்த மூன்று செயல்களுக்கும் பணத்தாசை ஒன்றே காரனம். ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களை வேலைக்கு சேர்ந்த பிறகு சில்மிஷம் செய்யாமல் இருக்கச் சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
- kovilpatti,இந்தியா
26-ஆக-201209:46:59 IST Report Abuse
 It is a very good approach to improve the quality of education since the year old appreciable Tamilnadu standard quality of education vanished day by day by implementing commercialization of education by educational institutions
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
26-ஆக-201208:27:49 IST Report Abuse
N.Purushothaman அணைத்து அரசு வேலைக்கும் இப்படி தேர்வு வைத்து எடுத்தால் பல திறமையானவர்களுக்கு அரசு வேலை கிடைத்து லஞ்சம்,ஊழல்,முறைகேடு ஒழியும்....அரசுத்துறையும் ஜொலிக்கும்.....
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
26-ஆக-201218:29:27 IST Report Abuse
K.Sugavanamஅட போங்க சார் இன்னும் சந்திர மண்டலத்துலையே இருக்கீங்க.கொஞ்சம் கீழே இறங்கி வாருங்கள்.இப்ப பதவி உயர்வுளையும் இட ஒதுக்கீடு பயன் படுத்த சட்ட திருத்தம் கொண்டுவர முயற்சி நடக்குது.இது எப்படி இருக்கு.அப்புறம் தகுதி அடிப்படையில் தேர்வுன்னு சொல்றவங்களை கேனைய்யங்களாக தான் பார்ப்பார்கள். ...
Rate this:
Share this comment
Cancel
llekshmiganthan - Chennai,இந்தியா
26-ஆக-201208:02:15 IST Report Abuse
llekshmiganthan It is absolutely true that only quality teachers with devotion,dedication,commitment and determination with selfless sacrifice can ensure quality education for all children in Govt.schools in future. L.Lekshmiganthan, Chennai.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை