பதிவு செய்த நாள் :
கருத்துகள் (81)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை:ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.

தலைவர் பேட்டி:தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர்

கூறியதாவது:முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தரமானதேர்வு:தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அக்., 3ல் மீண்டும்...: அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.

மாற்றம் இல்லை: கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (81)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Moghan S T - Mombasa,இந்தியா
27-ஆக-201200:35:03 IST Report Abuse
Moghan S T நாம் புதுமை என்ற பெயரில் நம் வேர்களை இழந்து விட்டோம் . நமது பழைய கல்வி முறை வாழ்க்கையோடு , வாழ்க்கைமுறையோடு இணைந்த கல்வி. நமது இந்திய கல்வி முறையோ ஏட்டு சுரை காய் . இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
26-ஆக-201222:34:44 IST Report Abuse
g.k.natarajan +2 தேர்வில், 90% பேர் பாஸ் செய்யவேண்டும் என்று அரசியில்வாதிகள் நிர்பந்தத்தில் எல்லோரும் பாஸ் பெறுகிறார்கள்பிறகு இதுபோன்று, போட்டி தேர்வு வைத்தால் முடிவு இப்படிதான் இவர்கள் ஆசிரியர்களாகி என்றைக்கி....?அகில இந்தியா அளவில் தமிழ்நாட்டின் தரம் குறைவாக ஏன் இருக்கு என்று மக்களுக்கு தெரிய வைததற்க்கு நன்றி...? நடராசன்.
Rate this:
Share this comment
Cancel
Manimaran - chennai,இந்தியா
26-ஆக-201221:36:50 IST Report Abuse
Manimaran இது மிகவும் சரியான தேர்வு முறை. தகுதி உள்ளவர்கள் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். இதே தேர்வு முறையயை பொறியியல் மற்றும் இதர ஆசிரியர் அனைவர்க்கும் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
26-ஆக-201220:28:36 IST Report Abuse
Srinath ஒருபுறம் இவ்வளவு குறைவான எண்ணிக்கையினர் தேர்வு பெற்றிருப்பது கவலையளித்தாலும், இன்னொருபுறம் மாநிலத்தில் நிலவும் தகுதிக் குறைவு என்ற பூனைக்குட்டி கடைசியாக வெளிவந்திருக்கிறது என்று மகிழ்ச்சியே தருகிறது. இதையே உதாரணமாகக் கொண்டு கல்வித்தரம் மேம்படுத்த அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள நிகர்நிலை, தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து அரசாங்கத்தின் பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் அனைத்துக் கல்லூரிகளையும் கொண்டுவருவது இழந்த பொலிவை மீண்டும் பெற முடியும். வெற்றிபெற்றோர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். விரைவில் அரசாங்கம் இப்போது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் தரத்தையும் பரிசோதிக்கும் என்று நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
Muthu Muthu - singapore,சிங்கப்பூர்
26-ஆக-201218:48:24 IST Report Abuse
Muthu Muthu fail anavarkalai veettirku anuppunka niraiya thiramaiyanavarkalai appoint pannukka sir nadu munnerum evarkal ellam kasu koduthu vanthavarkal enpathu ippothu therikiratha?
Rate this:
Share this comment
Cancel
janet - mumbai,இந்தியா
26-ஆக-201218:20:28 IST Report Abuse
janet தமிழ் நாட்டில் இன்று மட்டுமல்ல ரொம்ப நாளாவே ஆசிரியர்களின் நிலை இதுதான். குறைந்த மதிப்பெண் எடுப்பவர்கள்தான் ஆசிரியை பணிக்கு படிக்கின்றனர். சும்மாவே வெறும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி எடுக்கின்றனர். அநேகருக்கு ஒன்றுமே சொல்லி கொடுக்க தெரியவில்லை. தமிழ் நாட்டில் மாணவர்களுக்கும் பேப்பர் திருத்தும்போது மதிப்பெண் மட்டும் மிகவும் தாராளமாக போட்டு விடுகின்றனர். இந்த பிள்ளைகள் வெளி மாநிலங்களுக்கு வந்து படுகிற பாடு மிகவும் அதிகம். தனியார் பள்ளிகளில் அதிகம் பணம் கொடுத்து படித்துவிட்டு ஆசிரியை பணிக்கு வருபவர்களுக்கு கொஞ்சம் சம்பளம் கிடைக்கிறது. ஆனால், அரசு பள்ளிகளில் செலவு இல்லாமல் படித்துவிட்டு ஆசிரியை பணிக்கு வந்து சம்பளம் அதிகம் வாங்குகின்றனர். இனிமேலாவது தகுதியான ஆசிரியர்கள் கிடைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ARUL - madurai,இந்தியா
26-ஆக-201217:35:30 IST Report Abuse
ARUL யார் இந்த அரசியல் வாதிகளுக்கு தேர்வு வைத்தால் ஒருவர் கூட தேற மாட்டார்கள் இன்க்ளுடிங் ..........
Rate this:
Share this comment
Cancel
Singam - Kuwait,குவைத்
26-ஆக-201217:24:08 IST Report Abuse
Singam இப்படித்தான் நல்லா வடிகட்டி எடுக்கணும்....அப்பத்தான் மக்கு வாத்தியார்களிடம் இருந்து குழந்தைகளை காப்பாத்தலாம்...
Rate this:
Share this comment
Cancel
periasamy - sivagangai,இந்தியா
26-ஆக-201217:05:13 IST Report Abuse
periasamy ஆசிரியர்கள் இடமாற்றத்தில் இலட்சங்கள் லஞ்சமாக ஆளும் கட்சியினர் வாங்குகிறார்கள் அதை ஜெயா அரசு கண்டுகொள்ளதது ஏனோ
Rate this:
Share this comment
Cancel
mohideen - Maamigili,மாலத்தீவு
26-ஆக-201216:37:01 IST Report Abuse
mohideen இதில் கருத்து கூறியதில் ஆசிரியர் யாரும் இல்லை என்று தெரிகிறது.6 லட்சத்தில் 5 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் கடந்த 10 - 15 வருடங்களாக ஆசிரியராக பணி புரிபவர்கள் தான்,இவர்களால் தான் கடந்த 15 வருடங்களாக பல டாக்டர்களும் ,என்ஜினியர்களும்,கம்ப்யூட்டர் தகவல் தொழில் துறை,மற்றும் பல I A S & I P S உருவாகி உள்ளார்கள்.கேள்வி தாள் தயாரித்தவன் புத்திசாலியும் இல்லை ,பாஸ் ஆஹாதவர்கள் முட்டாள்களுமல்ல.இங்கே கருத்து கூறிய கனவான்கள் எல்லாரும் தங்கள் குழந்தைகளை கேரளவுக்கோ இல்லை ஆந்திராவுக்கோ படிக்க அனுப்பி பலன் பெறட்டும். Mohideen ,Maldives .
Rate this:
Share this comment
Mannar - Athippatty,இந்தியா
28-ஆக-201221:16:13 IST Report Abuse
Mannarஅப்படி சொல்லுங்க சார், அவன் அவனுக்கு தான் கஷ்டம் என்னனு தெரியும். எதோ இவனுக எல்லாத்துக்கும் answer தெரிஞ்சவங்க மாதிரியே பெசுரனுங்க.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.