dehi ush | பெண் எம்.பி.,க்களின் ஆதிக்கம்| Dinamalar

பெண் எம்.பி.,க்களின் ஆதிக்கம்

Added : ஆக 26, 2012 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பெண் எம்.பி.,க்களின் ஆதிக்கம்

பார்லிமென்டில் உள்ள சென்ட்ரல் ஹாலுக்கு, எம்.பி.,க்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு உண்டு. ராஜ்ய சபா மற்றும் லோக்சபாவிற்கு மத்தியில் உள்ள, இந்த சென்ட்ரல் ஹாலில், எம்.பி.,க்கள் அமர்ந்து, அரசியல் நிலை குறித்து பேசுவதோடு, சாப்பிடவும் செய்வர். பல அரசியல் கிசுகிசுக்கள், இந்த சென்ட்ரல் ஹாலிலிருந்து தான் வெளிவருகின்றன.சென்ற வாரம், பல பெண் எம்.பி.,க்கள் சென்ட்ரல் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பா.ஜ., பெண் எம்.பி., ஸ்மிருதி ஈரானி மற்ற பெண் எம்.பி.,க்களை, தன் மொபைல்போனால் போட்டோ எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன், முலாயம் கட்சி எம்.பி., அவரோடு நின்று, பல பெண் எம்.பி.,க்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.இதைப் பார்த்த ஆண் எம்.பி.,க்கள், "என்ன நடக்கிறது இங்கே? போட்டோ செஷனா?' என்று கிண்டலாக கேட்டனர். ஒரு எம்.பி., "என்ன? ஜெயா பச்சன் பா.ஜ.,வில் சேருகிறாரா?' என்று கேட்டார். ஜெயா உட்பட எந்த பெண் எம்.பி.,யும், இதைக் கண்டு கொள்ளாமல், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு போட்டோ எடுத்து தள்ளிக் கொண்டிருந்தனர்.இவர்கள் ராஜ்யசபா எம்.பி.,க்கள்... லோக் சபா பெண் எம்.பி.,க்கள் சென்ட்ரல் ஹாலுக்கு வந்தாலும், இவர்களோடு இந்த அளவிற்கு நெருக்கம் காட்டுவது இல்லை.

ஜெயிக்க முடியுமா?

தமிழக காங்கிரசின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொண்டர்கள், கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இப்படியே போனால், 2014 தேர்தல் சமயத்தில், கட்சி அதோ கதிதான் என்று வருத்தப்பட்டனர், இரண்டு தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள். பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில், இவர்கள் இருவரும் அமர்ந்து, தமிழக காங்., நிலையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். இவர்களில் ஒருவர், தற்போது எம்.பி.,யாக உள்ளார். "2014 தேர்தலில், நாமெல்லாம் எங்கே வெற்றி பெற்று, மீண்டும் இங்கே வரப்போகிறோம்?' என்று, வருத்தத்துடன் சொன்னார் அந்த எம்.பி.,தவிர, முன்னாள் தமிழக காங்., தலைவர்களை கட்சி மேலிடம் கண்டுக் கொள்வதே இல்லை. அத்தோடு, தொண்டர்களும் நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம், பல முறை சொல்லியும் கட்சி மேலிடம் கண்டு கொள்ளவில்லை. அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரசின் கதி, அம்போதான் என்று வருத்தப்பட்டுக் கொண்டார் அந்த எம்.பி.,

முகம் பார்க்க மறுக்கும் எம்.பி.,க்கள்

சென்ட்ரல் ஹாலுக்கு, பிரதமர், சோனியா ஆகியோர் வந்தால், எம்.பி.,க்கள் கட்சி வேறுபாடு இல்லாமல், எழுந்து நின்று நமஸ்தே சொல்வர். ஆனால், கடந்த சில நாட்களாக, நிலக்கரி ஊழல் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என, பா.ஜ.,வினர் பார்லிமென்ட்டை முடக்கி வருவதால் நிலைமை மாறியுள்ளது.காங்கிரஸ் தலைவர் சோனியா, இரண்டு நாட்களுக்கு முன் சென்ட்ரல் ஹாலுக்கு வந்தார். உடனே, அங்கிருந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் அடித்து பிடித்துக் கொண்டு, அவர் அருகே சென்று நமஸ்தே சொன்னார்கள்.பக்கத்தில் இருந்த பா.ஜ., எம்.பி.,க்கள், சோனியாவை பார்த்த உடனேயே வேறு பக்கமாக முகம் திருப்பிக் கொண்டனர். பா.ஜ.,வை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என, சமீபத்தில் காங்., எம்.பி.,க்களுக்கு சோனியா சொன்ன அறிவுரையின் விளைவுதான் இந்தமுகம் திருப்புதலாம்!

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொதிகை சிவா - பொதிகை,இந்தியா
01-செப்-201223:08:18 IST Report Abuse
 பொதிகை சிவா நல்ல தலைவர்கள் இன்னும் வரவில்லை
Rate this:
Share this comment
Cancel
01-செப்-201204:57:01 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆரம்பம் என்றது இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கும். அதானாலே காகித பூ மணக்காது காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வராது:.................... இதோட சங்கு ஊத வேண்டியது தான். பாடை கட்ட வேண்டியது தான். சுடுகாட்டுக்கு போக வேண்டியது தான். தமிழ் நாட்டுலே இனிமேல் உன்னால தலை தூக்கறது ரொம்ப கஷ்டம். மலைய தூக்கி தலையிலே வைன்னு சொன்ன கதை தான். கோவிந்தா கோவிந்தா ................................
Rate this:
Share this comment
Cancel
A JEYARAJ - madurai at Talahassee ,USA,இந்தியா
01-செப்-201201:56:55 IST Report Abuse
A JEYARAJ காங்கிரஸ் கட்சியை எந்த கொம்பனாலும் அளிக்கமுடியாது மற்ற கட்சிகளின் நிலைமை இதைவிட ரொம்ப மோசம் கண்ணா ,,,மங்கு சனியா பொங்குசனியா பொறுத்துபார் pad
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
31-ஆக-201216:34:56 IST Report Abuse
Ayathuray Rajasingam காங்கிரஸ் கட்சிக்கு தலைக்கனம் கூடியதால், மங்கு சனி ஆரம்பித்து விட்டது. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடலின் ஞாபகம் தான் வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை