அசாமில் நடப்பதென்ன; அந்நியர் படையெடுப்பா?: வி.சண்முகநாதன் -
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அசாமில் கொந்தளிப்பான நிலை நிலவுகிறது. இங்கு தற்போது நடைபெறும் கலவரத்தால்
80க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்; பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் வீடு வாசலை இழந்துள்ளனர். இதனால் வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவே அமைதி குலைந்து காணப்படுகிறது.

எல்லையில் போதிய பாதுகாப்பு இல்லாததால் ஏராளமான வங்கதேசத்தவர் இந்த பகுதிக்குள் ஊடுருவியதே இந்த கலவரத்திற்கு காரணம். இவர்களின் வரவால் உள்ளூர் மக்களிடை யே ஒரு பாதுகாப்பற்ற நிலை உருவானது. வங்கதேசத்துடனான 676 கி.மீ., தூரம் வேலியில்லாமல் இருப்பதால், அதை ஒட்டியுள்ள அசாமில் 11 மாவட்டஙகளில் இவ்வாறு குடியேறியவர்களே பெரும்பான்மையாக உள்ள நிலை உருவாகி உள்ளது. வங்கதேச எல்லையில் உள்ள துப்ரி மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் இவ்வாறு குடியேறியவர்களாகவே உள்ளனர். இவர்கள் இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.பாகிஸ்தானின் பிரதமராக இருந்த புட்டோ, எழுதியுள்ள ஒரு புத்தகத்தில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் மட்டுமல்ல பிரச்னை; அசாம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்திய மாவட்டங்களும் பிரச்னைக் குரியவை தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இந்திய ஆதரவுதலைவர் என கருதப்படும் வங்க தேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஒரு புத்தகத்தில், கிழக்கு பாகிஸ்தானில் அசாம் மாநிலமும் இணைக்கப்பட வேண்டும். அங்கு ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன என்றுகுறிப்பிட்டுள்ளார்.


அரசு ஆதரவுடன் ஆக்கிரமிப்பு:

இந்த நிலையில் பார்த்தால் தற்போது அசாமில் நடப்பது ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பாகவே தோன்றுகிறது. சில சுயநல அரசியல் கட்சிகளின் ஆதரவோடு நடைபெறும் இந்த ஆக்கிரமிப்பு குறித்து, காங்கிரஸ் கட்சி ஓட்டு வங்கிக்காகமவுனம் சாதிக்கிறது. வெளிநாட்டவர் ஊடுருவல் குறித்தும் அதனால் ஏற்பட இருக்கும் ஆபத்து குறித்தும் அங்கு கவர்னராக இருந்த எஸ்.கே.சின்கா ஏற்கனவே மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

பொதுவாக இவ்வாறு சட்ட விரோதமாக குடியேறுபவர்களை கைது செய்வதும், அபராதம் விதிப்பதும், நாட்டை விட்டு வெளியேற்றுவதும்தான் பல நாடுகளில் கடைப்பிடிக்கும் நடைமுறை. ஆனால், இங்கோ இவ்வாறு சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் போன்ற சலுகைகள் தரப்படுகின்றன.தற்போதைய மத்திய, மாநில அரசுகள் இந்த சூழ்நிலையைக் கண்டுகொள்ளாதது மட்டுமல்ல, அதை மேலும் சிக்கலானதாக, தீர்க்க இயலாத பிரச்னையாக மாற்ற உதவுகின்றன.வெளிநாட்டினரைக் கண்டறிந்து, அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பி விடுவதன் மூலம் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். எல்லைப் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலி அமைக்க வேண்டும். தற்போது எவ்வளவு வங்கதேசத்தினர் இங்கு குடியேறி இருக்கின்றனர் என்று யாருக்கும் தெரியாது.பல லட்சம் பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களைக் கண்டறிந்து அவர்களின்ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் இங்கு சொத்து வாங்குவதை தடை செய்ய வேண்டும். வெளிநாட்டினரைக் கண்டறிந்து அவர்களை திருப்பி அனுப்புவது மட்டுமே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.


அரசியல் துணிச்சல் இல்லை:

காங்கிரஸ் அரசிடம் போதுமான அரசியல் துணிச்சல் இல்லை. வெளிநாட்டினர் நலனுக்கு ஏற்ப, சட்டத்தை காங்கிரஸ் அரசு மாற்றிக் கொண்டுள்ளது. முறையான அங்கீகாரம் இல்லாமல் வெளிநாட்டினர் குடியேறுவதைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்தியாவில் நடைமுறையில் உள்ள வெளிநாட்டினர் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி, வெளிநாட்டினர் எவராவது முறையான அங்கீகாரம் இல்லாமல் இங்கு தங்கி இருப்பதாக அரசு சந்தேகப்பாட்டால் அவருக்கு "நோட்டீஸ்' அனுப்பப்படும். அவர்தான் தான் வெளிநாட்டினர் அல்ல; இந்திய குடிமகன்தான் என்று நிரூபிக்க வேண்டும்.கடந்த 1983ல், அசாம் மாநிலத்திற்கு மட்டுமென ஒரு சட்டம் இயற்றப்பட்டது. வெளிநாட்டினர் சட்டத்திற்கு விதிவிலக்கு தரும் வகையில் அது அமைந்துள்ளது. அதில் விதிமுறைகள் மாற்றப்பட்டு, அங்கீகாரமற்ற வெளிநாட்டவரை வெளியேற்றும் முன், அவர் வெளிநாட்டினர் தான் என்று நிரூபிக்கும் பொறுப்பு அந்த மாநில அரசுக்குத் தரப்பட்டது.

சட்ட விரோத குடியேற்றத்தால், அசாம் மாநிலம் பெரிதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அசாம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தை வெளிநாட்டவரின் சொர்க்க பூமியாக காங்கிரஸ் கட்சி மாற்றி யுள்ளது.இந்த புதிய சட்டம், இந்தியாவில் ஒரு அமைதி யான படையெடுப்பை ஊக்குவிக்கிறது என்று கூறி, இந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் 2005ம்ஆண்டில் செல்லாதென அறிவித்தது. நடைமுறையில் உள்ள வெளிநாட்டினர் சட்டத்தை அமல் செய்வதற்குப் பதில் அந்த சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்தது அரசு. அதில் ரத்து செய்யப்பட்ட புதிய சட்டத்தின் அம்சங்கள் சேர்க்கப்பட்டன.எல்லையில் வேலி இடுங்கள்; வெளிநாட்டவரை வெளியேற்றுங்கள்: அரசின் அணுகுமுறை ஏமாற்றம் தருவதாக உள்ளது. இந்தசட்டத்திருத்தத்தை ஒரு இடைக்கால ஏற்பாடு என்று வர்ணித்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு. அரசின் கருத்துக்கள் எல்லாம் இவ்வாறே உள்ளன. காங்கிரஸ் கட்சி தன் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தனது ஓட்டு வங்கியைப் பெருக்கிக் கொள்வதற்காக, வெளிநாட்டினரின் சட்ட விரோத குடியேற்றத்தை காங்கிரஸ் அனுமதிக்கக் கூடாது. இது அசாம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. ஏதோ சில நாட்களுக்கு ராணுவத்தை இங்கு அனுப்புவதாலும், நிவாரண முகாம்கள் அமைப்பதாலும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண இயலாது.இந்த சட்ட விரோத குடியேற்றத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இருநாட்டு எல்லை நெடுகிலும் வேலி அமைக்கப்பட வேண்டும். சட்ட விரோதமாக குடியேறிவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (58)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kaavikodi - chennai,இந்தியா
28-ஆக-201200:51:06 IST Report Abuse
kaavikodi எந்த ஒரு பிரச்னை ஆகட்டும் உடனே தன மதத்திற்கு support பண்ணுவது.. இவ்வாறு நீங்கள் இருப்பதால் தான் என்னை மாதிரி நடு நிலைமையோடு இருந்தவர்கள் எல்லாம் ஹிந்து support ஆக மாறி விட்டோம் . , ப்ளீஸ் நீங்கள் இதையே தொடர்ந்து செய்யு மாறு வேண்டி கொள்கிறேன் , அப்போது தான் சில பேர்களுக்கு உரைக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
hari - madurai,இந்தியா
27-ஆக-201223:41:22 IST Report Abuse
hari இங்கே பதில் சொல்லும் முஸ்லிம் சகோதரர்கள் பலருக்கும் இந்தியன் என்ற நெனைப்பு இல்லை என்கின்ற போது மிகவும் வருத்தமாக இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
R.Saravanan - Male,மாலத்தீவு
27-ஆக-201221:55:29 IST Report Abuse
R.Saravanan ஹாஜ சலீம் அவர்களே, இந்தியாவின் மேல் பற்று கொண்டு நாங்கள் சொல்லும் கருத்துக்கள் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல.... நீங்கள் ஏன் மதத்தை இங்கே தினிக்கிரீர்கள்.... உங்கள் குடும்பம் அங்கே இருந்து அவர்களால் நீங்கள் வெளியேற்றப்பட்டு இருந்தால் உங்களுக்கு அதன் வலி தெரியும் நண்பரே..... மலேசியா, சிங்கப்பூர், இலங்கை வாழ் தமிழர்கள் தொன்று தொட்டு அங்கேயே இருப்பவர்கள் தான்..... அவர்கள் தமிழர் என்பதால் இங்கிருந்து போனார்கள் என்று நீங்கள் சொல்லுவதை ஏற்றுகொள்ளமுடியது....... அவர்கள் யார் சொத்தையும் புடுங்கவில்லை...... உழைத்து தான் சம்பாதித்து இருக்கிறார்கள்..... சொல்லபோனால் இலங்கையில் நடக்கும் நிகழ்வு உங்களுக்கு நன்றாகவே தெரியும்..... அங்கே சிங்களர்களால் தான் நம் தமிழர்கள் விரட்டபடுகிறார்கள்..... இந்தியனாய் சிந்தித்து கருத்து பதியுங்கள் நண்பரே........ இந்தியாவை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்ற துணைபுரியுங்கள்........
Rate this:
Share this comment
Cancel
balaji - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஆக-201219:20:41 IST Report Abuse
balaji give one more chance to congress.they cant make enough money.toooooooooo much feeelings.
Rate this:
Share this comment
Cancel
haja saleem - ajman,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஆக-201218:56:17 IST Report Abuse
haja saleem தமிழ் நாட்டில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாட்டிற்கு பிழைக்க சென்றவர்கள் எப்படி அந்த நாட்டின் பிரஜைகள் ஆனார்களோ, அதே அளவுகோல்தான் அசாமில் உள்ளவர்களுக்கு பொருந்தும். விவரம் தெரியாமல் பேசுவதும் வேண்டும் என்றே பேசுவதும் காவி சிந்தனை உடையவர்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டது. மனித உரிமைகளை மதிக்க தெரியாதவர்களின் வெளிப்படையான தோற்றத்தை தெளிவாக இந்த கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன. மேலும் இது சம்பந்தமாக விவாதம் பண்ண தயார்
Rate this:
Share this comment
ravi chandran - hong kong ,சீனா
28-ஆக-201200:04:32 IST Report Abuse
ravi chandranமுட்டாள் காஜா சலீம் நீ இருக்குற நாட்டுல ஒரு இந்து இறந்த கூட புடைக்க முடியாது இது உனக்கு தெரியாது . முட்டாளே பிறந்த மண்ணுக்கு கொஞ்சம விசுவாசமா இருங்கட ...
Rate this:
Share this comment
kaavikodi - chennai,இந்தியா
28-ஆக-201200:46:04 IST Report Abuse
kaavikodiஅது தானே , நீங்கள் பாதிக்கும் பொது உடனே மனித உரிமை பீரிக்கொண்டு வரும் ......
Rate this:
Share this comment
Cancel
Cool Krish - Karur,இந்தியா
27-ஆக-201218:54:06 IST Report Abuse
Cool Krish திரு முஹம்மத் சபீக் அவர்களே, நீங்கள் முதலில் வெளி நாட்டில் வேலை பார்த்து கொண்டு, நம் நாட்டின் இன்றைய சூழல் தெரியாமல் பேசாதீர்...அமெரிக்கா எடுத்துக்காட்டும் அளவுக்கு ஒன்றும் பெரிய உயரத்தில் இல்லை...நாமும் தாழ்ந்து போய்விட வில்லை...உங்கள் கருத்தை வெளியிட்ட இந்த பத்திரிக்கை நான் பாராட்டுகிறேன்...ஆனால் நீங்கள் மன்னிக்க பட வேண்டியவர் அல்ல....
Rate this:
Share this comment
Cancel
khaja mohaideen - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஆக-201218:14:56 IST Report Abuse
khaja mohaideen நாம் இந்தியர், நம் நாட்டில் சட்டத்ரிக்கு புறம்பாக வரும் யாரையும் நாம் எக்காரணம் கொண்டும் எதற்காகவும் அனுமதிக்க கூடாது . பங்களாதேசி, பாகிஸ்தானி, திபத்தியன், நேபாளி, ஸ்ரீலங்கன், பர்மானியன் ஆகியோர் முறையாக அரசு மற்றும் அந்த பிராந்திய மக்கள் அனுமதி பெற்றுதான் வரவேண்டும் . அவர்கள் அனைவரும் அகதிகள் என்ற வரைமுறையில் நிறுத்த வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஆக-201217:17:04 IST Report Abuse
Sivakumar Manikandan தமிழ் நாடுல என்ன வாழுதாம். மைனாரிட்டிய நம்பிதான் ADMK DMK DMDK AICc எல்லாமே.....சேலம் மேயர் சவுண்டப்பன் என்ன தமிழரா.. கன்னடம். . கோவில்பட்டி சேர்மன் தெலுங்கு.....ஊராட்சி தலைவர்கள் 50 % தமிழர்கள் கிடையாது .....மைனாரிட்டி ஓட்டு 20 % மட்டுமே .....ஆனால் பதவிகள் 50 % மேல் .....இங்கு மட்டும் என்ன வாழுது.....திராவிட கட்சி பிள்ளையார் சுழி EV ராமசாமி பெரியார் ஒரு தெலுங்கர் .........தமிழ் நாட்டின் பெரும் பணக்காரர்கள் தெலுங்கர்கள் & கன்னடதார்கள் தான் ......ஆனால் இஸ்லாமியர்கள் தமிழர்கள் .....ஆனால் அவர்கள் நாடா & மதமா ..என்றால் மதம் தான் முக்கியம் என்பார்கள் .....
Rate this:
Share this comment
Cancel
Manohar - Trichy,இந்தியா
27-ஆக-201216:54:32 IST Report Abuse
Manohar மைனாரிட்டி வாக்குகளை அண்டி பிழைப்பு நடத்தும் காங்கிரஸ் இருக்கும் வரை வந்தேறிகளுக்கு வாழ்வுதான். அதற்கான பலனை இன்னும் சில வருடங்களில் நாம் அனுபவித்தே தீர வேண்டும். விரட்டி அடிக்கப்பட வேண்டியது அந்நிய உடுருவல்காரர்கள் மட்டுமல்ல, இந்தியாவை சுடுகாடாக ஆக்கிக்கொண்டு இருக்கும் காங்கிரஸ் கொள்ளை கூட்டத்தையும் சேர்த்துதான். அதற்கு ஒரே வழி நரேந்திர மோடி போன்ற ஒருவர் பிரதமராக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
suvanappiriyan - riyadh,சவுதி அரேபியா
27-ஆக-201216:06:41 IST Report Abuse
suvanappiriyan வெளி நாட்டவர் ஹிந்து முஸ்லிம் என்று பார்க்காமல் அனைவரையும் வெளியேற்றி அமைதி திரும்பச் செய்ய வேண்டும். எல்லையில் முள் வேலி அமைத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்