புதுடில்லி:"நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு, பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் மீது, மத்திய அரசு பழி சுமத்துவது சரியல்ல. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக உள்ளோம்' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
பா.ஜ., மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா, தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டி:நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு காரணமாக, மத்திய அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் கூறியுள்ளது. சுரங்க ஒதுக்கீடு நடந்தபோது, நிலக்கரி துறையை கவனித்து வந்த, பிரதமர் மன்மோகன் சிங் தான், இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தன் பதவியை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.ஆனால், மத்திய அரசு, தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதற்கு பதிலாக, பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் மீது பழிபோடுகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல. பா.ஜ., ஆளும் மாநிலங்களில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், அதை எதிர்கொள்ள, சம்பந்தபட்ட பா.ஜ., அரசுகள், தயாராக உள்ளன. விசாரணையை எதிர்கொள்வதற்கு, எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.
மத்திய அரசே பொறுப்பு:
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து பரிந்துரை செய்வது, சம்பந்தபட்ட மாநில அரசுகளின் கடமை. சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தால், அதற்கு பொறுப்பேற்க வேண்டியது, காங்., தலைமையிலான மத்திய அரசு தான். தார்மீக அடிப்படையில், பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்னைக்காக, பார்லிமென்ட்டை முடக்கியுள்ளதாக, எங்கள் மீது, ஆளும் கட்சியினர் குறை கூறுகின்றனர். தே.ஜ., கூட்டணி ஆட்சியின்போது, சவப் பெட்டி கொள்முதல் செய்தது தொடர்பான விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியினரும், இதேபோல், பார்லிமென்ட்டை முடக்கினர்.இவ்வாறு யஷ்வந்த் சின்கா கூறினார்.
ராஜிவ் பிரதாப் ரூடி, பா.ஜ., செய்தித் தொடர்பாளர்.: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து, பார்லிமென்ட்டில் விவாதம் நடப்பதை, பா.ஜ., தவிர்ப்பதாக, காங்கிரஸ் கட்சியினர் குறை கூறுகின்றனர்.விவாதம் நடத்துவதன் மூலம், சுரங்க ஊழலை சட்டப்பூர்வமாக, நியாயப்படுத்த மத்தியஅரசு முயற்சிக்கும். இதனால்தான், விவாதம் நடத்துவதற்கு,நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மத்தியில் ஆளும காங்கிரஸ் கட்சியையே பதவி விலக சொல்லி ஒன்றும் பாஜக கேட்கவில்லை .அதாவது அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய நிலக்கரி ஒதுக்கீடு நடந்த 2004 - 2009 அந்த துறைக்கு பொறுப்பு வகித்த மன்மோஹன்சிங் பதவி விலக வேண்டும் என்று தான் கோருகிறார்கள் .கடந்த காலத்தில் நடந்த ரயில் விபத்துக்கு எல்லாம் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகிய வரலாறெல்லாம் உண்டு .ஆகவே மன்மோஹன்சிங் இந்த 186000 கோடி ரூபாய் இழப்பு அரசுக்கு ஏற்படுத்திய காரணத்தால் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகி வழக்கை சந்தித்து தான் குற்றமற்றவர் என்பதை நிருபிக்கவேண்டும். மன்மோஹன்சிங் இந்த நிலக்கரி ஒதுக்கீடு முறையால் ஊழல்(சுயலாபம் ) செய்யவில்லை என்றால் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிய படுத்தவேண்டும் .அதற்க்கு துணைபோன மன்மோஹன்சிங் அவர்களும் குற்றவாளியே . சும்மாவேனும் தான் அப்பழுக்கு அற்றவர், கறைபடியாதவர் என்றெல்லாம் உதார் விட்டுக் கொண்டு இருப்பதை நம்பி நாட்டுமக்கள் ஏமாந்த காலம் மலையேறிவிட்டது .உண்மையிலேயே நெஞ்சில் துணிவு இருந்தால் மன்மோஹன்சிங் பதவி விலகி விட்டு அக்னி பரீட்சைக்கு தயாராகட்டும்.அதை விட்டு விட்டு இந்த காங்கரஸ் காரர்கள் எதிர் கட்சிகளுக்கு சவால் விடுவதை நிறுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மாநில கட்சிகளின் தலைவர்களை ஏதோ ஒரு விதத்தில் மிரட்டியோ அல்லது ஆசை காண்பித்தோ ஜெயித்து விட்டால் இவர்கள் பண்ணிய பல்லாயிரம் கோடி ஊழல்கள் எல்லாம் மறைந்து விடும் என்று நினைக்கிறார்கள் .ஆனால் மக்கள் 2014 தேர்தலில் தக்க பாடம் இந்த காங்கரஸ் காரர்கலுக்கு புகட்டுவார்கள் ஜெய் ஹிந்த்
இன்றைக்கு காங்கிரசுடன் இருக்கும் கட்சிகள் யார் யார்? ஊழல் பெருச்சாளிகள் சிபிஐ யின் பிடியில் சிக்கி உள்ள லாலு, முலாம் மற்றும் மாயாவதி. இவர்கள் மூவரும் இல்லை என்றால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து பல வருடம் ஆகி இருக்கும். இந்த மூன்று கட்சி தலைவர்களையும் வைத்து சதுரங்கம் ஆடி, இந்திய நாட்டை கொள்ளை அடிக்கின்றனர் காங்கிரஸ் காரர்கள். சோனியா மாப்பிள்ளை ராபர்ட் வதேரா மற்றும் சோனியாவின் சகோதரிகள் இன்று உலகத்தில் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் எப்படி இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகினர்? இந்திய ஏழை மக்களின் கண்ணீர், ரத்தம் மற்று கடும் உழைப்பின் பலனை இவர்கள் அனுபவிக்கின்றனர். ச்விச்ஸ் கொள்ளை கரன் ராஜீவ் காந்தி வைத்து விட்டு போன பணத்தில் ராகுல் திளைக்கின்றார், இதற்கு மன்மோகன் சிங், கபில் சிபல், உளறுவாயன் டிக் விஜய் சிங் ஆகியோர் விளக்கு பிடிக்கின்றனர். இவர்கள் ஏன் சோனியாவின் அடி வருடிகளாக இருக்க வேண்டும். இவர்கள் உண்மையானவர்கள் என்றல் இவர்களே சோனியாவை அப்புறப் படுத்திவிட்டு காங்கிரச்சையும், அரசையும் வழி நடத்தலாம்... அனால் இவர்களுக்கு விஞ்ஞான முறையில் கொள்ளை அடிக்க தெரியாது. சோனியாவுக்கு தெரியும் எப்படி அதை வெளி நாட்டிருக்கு கொண்டு போகவேண்டும் என்று........
புதிய ஒரு திட்டம் அல்லது செயல் முறை என்றால், முதலில் கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம். அதே போல தான் ஏல முறை, நஷ்டம் வரும் or லாபம் வரும் என்று முன்கூட்டியே ஜட்ஜ் பண்றது கஷ்டம். Even if, it is mistake of BJP, Why congress is not analysed this for 5 -6 year. if they follow whatever BJP followed means they why people elected you. if you are not doing proper work then, why you are taking so much responsibility and owning மினிஸ்டரி.
செந்தில் எப்படிங்க இப்படி போட்டு தாக்குறீங்க, இந்த அரசு மட்டுமல்ல பிஜேபி அரசும் சரியல்ல .......... ஆனால் இந்த அரசிடம் மோசமான அமைச்சர்கள் இருக்காங்க. அப்படி நினைத்தால் தலைமையும் அப்படிதான்னு நிருபிச்சிடாங்க ...... எப்படியும் இந்தியாவ விற்காமல் விட மாட்டோம்னு இந்த அரசு சொல்வது மட்டும் நல்ல கேட்குது ......... 2014 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நடக்கும் . நாம எல்லோரும் வெளிநாட்டுக்கு அகதிகளா போக வேண்டித்தான் ... இலங்கைக்கே கூட அனுப்புவணுக போல .......... அகதிகளாய் ( அடிமைகளாய் ) ....
இனி தேச விரோத காங்கிரஸ் என்ன ஊழல் செய்தாலும் அதன் பலி பிஜேபி மேல் தான் போடும்.இது சின்ன குழந்தைக்குகூட தெரியும்.ஆகையால் வரும் தேர்தலில் தேச விரோத காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காதீர்.மேலும் உண்மையான மத வாத கட்சியே காங்கிரஸ் தான்.இந்த காங்கிரஸ் ஒழிந்தால் நாடு உருப்படும்.இல்லை என்றல் நாட்டை கூறு போட்டு விற்றுவிடுவார்கள் இந்த உருப்படாத காங்கிரஸ் கட்சி.
எடியுரப்பா ஊழல் பண்ணினார் சரிதான். அப்ப சிதம்பரம், மன்மோகன் சிங்க் அரசு எந்த தவறும் பண்ணலன்னு சொல்றீங்களா. பிஜேபி தவறு செய்தது தெரிந்தும் அதையே மீண்டும் காங்கிரஸ் செய்தால் தவரில்லன்னு சொல்ல வரீங்கலா, மத்திய அரசுவின் மேல் நம்பிக்கை வைத்துதான் மீண்டும் ஆட்சிக்கு வந்தாங்க .... பார்த்து இருங்க இரண்டு கட்சியும் சேர்ந்து எல்லா ஊழலும் செய்தது நவமயம் அப்படின்னு சொல்லிட போறாங்க ......
சுரங்கத் தொழிலில் உலக அளவில் ஈடுபட்டுவரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான "வேதாந்தா ரிசோர்சஸ்&39 (நம்ம தூத்துக்குடி ஸ்டெர்லைட் உரிமையாளர்கள்தான்) கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளுக்கு ரூ.28 கோடி நிதி வழங்கியுள்ளது என்பதுதான் அது. அனில் அகர்வால் உருவாக்கிய வேதாந்தா நிறுவனம், தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ள தகவலின்படி, 2011-12 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளுக்கு 2.01 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த நிதியைப்பெற்ற கட்சிகள் எவை என்பது குறித்து ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இதேபோன்று 2009-10 நிதியாண்டில் 3.66 மில்லியன் டாலர் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 5.69 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 28 கோடி) அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகச் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காக இந்த நன்கொடைகள் அளிக்கப்பட்டதாக அந்த ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடடா ஐனநாயகத்தின் மீது இவர்களுக்கு எத்தனை அக்கறை என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.வேறென்ன. பார்லிமென்ட்டில் மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் வாக்கெடுப்பில் தடுமாறும்போதெல்லாம் ,அதனை ஆதரிக்கும் சிறு எதிர்கட்சிகளுக்கு தொழிலதிபர்கள் மூலமே இதுபோன்ற கையூட்டுக்கள் வருவது உண்மைதானே?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.