வெளியே சொல்லாதீர்:
சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமைஅலுவலகத்தில் நடந்த கட்சியின்செயற்குழுக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:ஒவ்வொரு கூட்டத்திலும், நான்உங்களிடம் பகிர்ந்து கொள்ளும்விவரங்கள் அனைத்தும் பத்திரிகைகளில் வெளிவந்து விடுகின்றன. குடும்பம் தான் கழகம்; கழகம் தான் குடும்பம். நமது குடும்பத்திலுள்ள பிரச்னைகளை, வெளியே சொல்வது சரியான அணுகுமுறை அல்ல. குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகளை, நமக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்; வெளியே பகிர்ந்து கொள்ளக்கூடாது.நாற்பதும் நமக்கே: அடுத்த ஆண்டில், லோக்சபா தேர்தல் வரவுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், எந்தநேரத்திலும் லோக்சபா தேர்தல் வரலாம். தேர்தலுக்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்காக, நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமிக்கிறேன். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய நான்கு பேரும், 40 லோக்சபா தொகுதிகளுக்கும் வலம் வருவர். தொகுதி வாரியாக, கட்சியின் செயல் வீரர்கள் குழுக் கூட்டம் நடைபெறும்.பட்டியல் தாருங்கள்:
என்னென்ன வசதி வேண்டும் என்ற பட்டியலை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டு, அவற்றை என்னிடம் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கொடுக்க வேண்டும். அதற்காக மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரிவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தி .மு.க ஆட்சி சரி இல்லை என்றுதான் அம்மாவை ஆட்சியில் உட்கார வைத்தார்கள். ஆனால் இன்று அந்த தி.மு.க.வே ..பரவாயில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதை அம்மா அப்பொழுதுதான் உணர்வார்களோ? பரவலாக உள்ள ஊழல், திருட்டு, அரசாங்க அலுவலகங்களில் உள்ள மந்த நிலைமை, மின் தட்டுப்பாடு என்ற பல்வேறு அமசங்களிலும் இந்த அரசு தோல்வியைத்தான் தந்துள்ளது. அம்மா அறிவித்துள்ள திட்டங்களின் செயல்பாட்டை கள அளவில் சுதந்திரமான அமைப்பு மூலம் ஆய்வு செய்தால் பெரும்பாலான அரசு அலுவலர்கள் சிக்கி கொள்ளவே நேரிடும்.
அம்மா....விலையில்லா கிரைண்டர்.... மிக்சி....பேன்.... எல்லாம் வீட்டுக்கு வந்திருச்சு..... ஏன் விலையில்லா லாப் டாப்பும் மாணவர்களிடம் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளதை மறக்க முடியாது.....
எனினும் மின்சாரம் மிக பெரிய சவால் என்பதை மறுக்க முடியாது. மின் தேவைக்கு மத்திய அரசை நம்பாமல் உடனடியாக ஏதேனும் மாற்று வழியில் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும்.
2 G மற்றும் கிரானைட் ஊழலை பாலிஷ் போட்டுக்கொண்டே இருங்கள்.... கூட்டணி விசயத்தில் சற்று ஜாக்ரதைய கையாளவும்.....
நாற்பதும் பெற்று பாரதத்தை தலைமை ஏற்று தமிழகத்தை மீண்டும் தலைநிமிர வைக்க, வழி நடத்த வாழ்த்துக்கள்...........
இது என்ன சங்கரன் கோவில், புதுகோட்டை தேர்தலா? 38 அமைச்சர்களையும் மொத்தமா அனுப்பி, தேர்தல் கூடங்களை ஆக்கிரமித்து, மாத கணக்கில் டென்ட் அடிச்சி அரசின் பணத்தை விரயம் செய்து, கத்தை கத்தையா பணம் பட்டுவாடா பண்ணி, இலவசங்களை அள்ளி வீசி, அராஜகம் நடத்தி இறுதியில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்வதற்கா? கடந்த தெரிதலில் பொய்யை அதிகம் சொல்லி மக்களை நம்ப வைத்து வெற்றி பெற்று விட்டார்கள் என்பதை இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சி தோலுரித்து காட்டி யுள்ளது. இந்த நாட்களில், பாதி வருடங்களை கொடநாட்டில் ஓய்வு, பெங்களூரு வழக்குக்கு செலவு என்றே கடத்தியாகிவிட்டது. விலைவாசி விண்ணை முட்டி விட்டது. மின்சாரம் பற்றாக்குறை ௩ மணி நேரமாய் இருந்ததை ௧௦ மணி நேரமாகியது, பஸ், மின்சாரகட்டனத்தை பல மடங்கு அதிகரித்து சாதனை, போளிகாரர்களின் கட்டுக்கடங்கா கொலைவெறி, தினமும், நாட்டில், கொலை, கொள்ளை, திருட்டு, பள்ளி மாணவர்கள் இறப்பு இப்படி நாட்டை கந்தரை ஆக்கி வைத்திருக்கும் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தேர்தலில், டெபாசிட் கிடைக்குமா என்று சந்தேகம்தான். பொய் சொல்லி ஓட்டு வாங்கி கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதாவுக்கு எதையுமே தமிழ் மக்களுக்கு செய்யாமல் வேதனையை உருவாக்கியவருக்கு மக்கள் பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்கள்.
40 / 40 துக்கு சில வழிகள். கிரனைட் புதையலை (3 லட்சம் கோடிக்கு மேல் -வாரம் இருமுறை இதழில் படித்தேன்) அரசாங்கம் கை பற்றி, நேர்மையான IAS அதிகாரிகளை நியமித்து, 6 மதத்திற்குள் அதை இந்திய மற்றும் வெளி சந்தைகளில் விற்கலாம். அந்த பணத்தை கொண்டு தமிழகத்துக்கு தேவையான நலத்திட்டங்கள் (மின்சாரம், சாலை, மருத்துவமனை, நீர் விநியோகம், விவசாயம், etc.,) அனைத்தையும் 6 மாதத்தில் (அதாவது ஒரு குறுகிய கால வரையறைக்குள்) செயல் படுத்தி மற்றும் தமிழக கடனையும் அடைத்துவிட்டால், 40/40 இவர்களுக்கே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.