ஆத்தூர்: ஆத்தூர் அடுத்த, கல்வராயன்மலையில் இருந்த ஒரு கிராமம், தற்போது மண்ணோடு மண்ணாகிவிட்ட பரிதாபம் ஏற்பட்டுள்ளது. கிராமம் அழிந்து போன விவரம், மத்திய, மாநில அரசுக்கு, இன்றளவும் தெரியாது என்பதே வேடிக்கை.
சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் எல்லை பகுதியாக அமைந்துள்ளது, பெரிய, சின்னக் கல்வராயன் மலை. இதில், சேலம், விழுப்புரம் மாவட்ட எல்லையான, சின்னக் கல்வராயன் மலையில், "மணப்பாச்சி' என்ற கிராமம் இருந்தது. இக்கிராமத்தில், 160க்கும் மேற்பட்ட வீடுகளில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர்.
மணப்பாச்சி கிராம மக்கள் வசிக்கும் பகுதியில், மின்சாரம், சாலை, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய வசதி எதுவும் இல்லை. நோய் பாதித்த முதியவர் மற்றும் கர்ப்பிணி பெண்களை, "தொட்டில்' கட்டியும், விளைந்த பொருட்களை தலைச் சுமையாக கரடு, முரடான ஒத்தையடி பாதை வழியாக, 15 கி.மீ., தூரம் நடந்து, மணிவிழுந்தான் பெரியார் நகர், காட்டுக்கோட்டை வழியாக, தலைவாசல், ஆத்தூர் நகருக்கு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
மின்சாரம், சாலை வசதி, கல்வி, சுகாதார வசதி இல்லாததால், "கற்கால' மனிதர்களை போன்று வாழ்ந்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன், வாழ்வாதார நிலை இல்லாததால், மணப்பாச்சி கிராமத்தில் வசித்து வந்த மலைவாழ் மக்கள், தாங்கள் வசித்த வீடு, விளை நிலத்தை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினர்.தற்போது, மணப்பாச்சி கிராமத்தில் உள்ள, 160க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணோடு மண்ணாகி விட்டன. 50க்கும் மேற்பட்ட வீடுகளில், சமையல் பாத்திரம், சாமை, வரகு போன்ற தானியங்களும், அப்படியே விட்டுச் சென்ற நிலையில் உள்ளன. இங்கு வசித்த மக்கள் பலர், மணிவிழுந்தான் முட்டல், பூமரத்துப்பட்டி, மும்பை, சென்னை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து, அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
மணிவிழுந்தான் கிராம முன்னாள் ஊராட்சி தலைவர் நடேசன், முட்டல் மாதேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:மணப்பாச்சி மலை கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அழிந்து போன நிலையில் உள்ளன. மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற வாழ்வாதார வசதி இல்லாததால், 20 ஆண்டுக்கு முன் மலைவாழ் மக்கள், ஊரை காலி செய்து, வேறு பகுதிக்கு பிழைப்புத் தேடி சென்றதாக கூறுகின்றனர்.ஆனால், இன்று அந்த குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாகி விட்டதால், புளி, மா, கொய்யா, தென்னை மரங்களில் விளையும் காய், கனிகள் வீணாகி வருகின்றன. தானியம் விளைந்த விளை நிலம், பொட்டல் காடு போன்று உள்ளது. இங்குள்ள கோவிலில், கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் தேர்த் திருவிழா நடந்துள்ளது.தவிர, இக்கிராம மக்கள், பல்வேறு கிராமங்களுக்கு சென்று தெருக்கூத்து போன்ற கிராமிய கலை வளர்ச்சி பணிகளில் ஈடுப்பட்டதாக, முன்னோர் கூறுகின்றனர். வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் அப்படியே விட்டுச் சென்றதால், அவைகள் இறந்து, வழித்தடங்களில் எலும்புக் கூடுகளாக கிடக்கிறது. மணப்பாச்சி கிராமம் அழிந்து போன விவரம், மத்திய, மாநில அரசுக்கு, இன்றளவும் தெரியாது.இவ்வாறு கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அய்யா 1962 க்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ அதில் சிறிய மாற்றங்களுடன் ஆனால் பல அரசு காரியாலயங்கள் இல்லாது போய்விட்ட செங்கோட்டை போன்ற ஊர்களை கேரளாவிலிருந்து பிரிந்து தாய் தமிழ் நாட்டில் இணைந்ததால் மட்டுமே வாக்குகளுக்காக வாக்குறிதிகளை அள்ளிவீசும் வேட்பாளர்களை நம்பி வாக்குகளை அளித்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லாததை எந்த பத்திரிகையில் எழுதுவது? யாரிடம் சொல்வது?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.