Advertisement
பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர திட்டமா? மறுக்கிறார் அமைச்சர் சிதம்பரம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 ஆக
2012
00:52
பதிவு செய்த நாள்
ஆக 27,2012 23:55

புதுடில்லி:""நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், காங்கிரஸ் பண ஆதாயம் அடைந்ததாக, பா.ஜ., தலைவர்கள் கூறியிருப்பது, துரதிருஷ்டவசமானது. சுரங்க ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் திட்டம் எதுவும் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், காங்கிரஸ் கட்சி, நிதி ஆதாயம் அடைந்ததாக, சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது, துரதிருஷ்டவசமானது. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை, பா.ஜ., தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.இந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆதாயம் அடைந்ததாகக் கூறுவது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், பார்லிமென்டில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து விவாதம் நடத்துவதற்கு, எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிரச்னை குறித்து, பார்லிமென்டில் விவாதம் நடத்துவதை, பா.ஜ., குறை கூறுவது, ஆச்சர்யமளிக்கிறது.

மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையை விமர்சித்துள்ளதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கணக்கு தணிக்கை அலுவலகம் போன்ற சட்ட அமைப்பை, நியாயமாக விமர்சிப்பது என்பது, அனுமதிக்கப்பட்ட விஷயம் தான்.சுரங்க ஒதுக்கீடு குறித்த விவகாரத்தில், அரசு சார்பில், பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரப்படுமா எனக் கேட்கப்படுகிறது. லோக்சபாவில் அரசுக்கு, முழு பலம் உள்ளது. எனவே, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் திட்டம் எதுவும் இல்லை. சுரங்க நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படாது.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், ""பார்லிமென்டை முடக்கும் நடவடிக்கைகளில், பா.ஜ., ஈடுபட்டுள்ளதால், காலவரையின்றி, பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்படுமா எனக் கேட்கப்படுகிறது. பார்லிமென்டை காலவரையின்றி ஒத்தி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே அறிவித்தபடி, அடுத்த மாதம் 7ம் தேதி வரை, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும்,'' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலும், ""பார்லிமென்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும், அவசியம் எதுவும் ஏற்படவில்லை,''என்றார்.

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்



, ""சுரங்க ஒதுக்கீடு குறித்த விஷயத்தில், பா.ஜ., தலைவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கணக்கு தணிக்கை அலுவலகம் தாக்கல் செய்த அறிக்கை குறித்து, பார்லிமென்டில் விவாதிக்க முடியாது என்றால், அப்புறம் எதற்காக பார்லிமென்டை முடக்குகின்றனர்,'' என்றார்.

மன்மோகன் சிங், பிரதமர்:



""பல்வேறு விஷயங்களிலும், நான் மவுனம் காப்பதாக, எதிர்க்கட்சியினர் குறை கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான பதில்களை விட, என்னுடைய மவுனம் மிக உயர்ந்தது. ஏராளமான கேள்விகளை சந்திக்கும் சக்தி, என்னுடைய மவுனத்துக்கு உள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishsampath - coimbatore,இந்தியா
28-ஆக-201216:05:07 IST Report Abuse
krishsampath இந்த காமெடியன்களை வைத்து கொண்டு நம் அரசு எந்திரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அவமானம். தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் மாதிரி ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கிட்டு இருக்கானுங்க. அப்படியாவது எல்லா பெருச்சாளிகளும் ஒண்ணா உட்கார்ந்து கொண்டு பேசி வைச்சு ஒரே மாதிரி காது குத்துரானுங்களான்னா அதுவும் இல்ல கிடைச்சதை கொள்ளை அடிக்கணும் அது மட்டும் தான் தெரியும். இப்படி பண்ண தப்புக்கெல்லாம் தன்னிலை விளக்கம் கொடுத்துகிட்டே 5 வருஷத்தையும் கடத்திகிட்டு இருந்தா எப்படா மக்களோட பிரச்சனைகளை பற்றி யோசிப்பீங்க?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
jayan - Salem,இந்தியா
28-ஆக-201215:38:35 IST Report Abuse
jayan இந்த முறை முலாயம் ,மம்தா ,மாயாவதி ,இவர்களை நம்ப முடியாது அதனாலே ஓட்டெடுப்பு வேண்டாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
28-ஆக-201208:14:32 IST Report Abuse
ஆரூர் ரங எப்படா அடுத்த வாக்கெடுப்பு நடக்கும்?,பெரிய பெரிய பெட்டி வாங்கி காங்கிரசுக்கு வாக்களிக்கலாம் எனக் கனவு கண்டிகொண்டிருக்கும் சிறு கட்சிகளின் பிழைப்பில் மண்ணையள்ளிப் போட்டுட்டீங்களே பசி. இது நியாயமா? சங்கிலித்தொடர் கண்ணாஸ்பத்திரிக் கொள்ளையில் கிடைக்கும் பெட்டிகாளால் இவர்களும் சற்று பிழைக்கட்டுமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nethaji - Muthuvai, Mukavai Dist.,இந்தியா
28-ஆக-201210:02:10 IST Report Abuse
Nethajiஓட்டு எண்ணி பார்த்தா அவரே ஜெயிக்கவில்லை என்பது அவருக்கு தெரிந்துவிடும். எனவே அது பற்றி வேண்டாமே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Udayakumar Sree - Chennai,இந்தியா
28-ஆக-201215:30:28 IST Report Abuse
Udayakumar Sreeசரியா சொன்னீங்க...1000 முறை வழிமொழிகிறேன்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
28-ஆக-201201:23:28 IST Report Abuse
Kunjumani .. நேற்று நடந்த ஒரு நேர்முகக்காணலில் நான் பதிலே சொல்லவில்லை.. எனக்கு வேலை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்... நீயோ ஏராளமான கேள்விகளை சந்திக்கும் சக்தி, என்னுடைய மவுனத்துக்கு உள்ளது என்று கூப்பாடு போடுகிறாயே... எதுக்கு மக்கள் படிக்கணும், கேள்வி கேட்கணும், பதில் சொல்லணும்... சோனியாவிற்கு சலாம் அடிக்க கற்றுக்கொண்டால் போதுமே.. உன்னைவிட ஒரு அடிமை இந்த தேசத்தில் காண்பது அரிது... எங்கள் தானை தலைவரே சமயத்தில் கூடா நட்பு, வெளிநடப்பு என்று பிலிம் காட்டுகிறார் உனக்கு அதுகூடவா முடியாது? சத்தியமா சொல்லு.. உன்னால் நிம்மதியாக உறங்க முடிகிறதா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nethaji - Muthuvai, Mukavai Dist.,இந்தியா
28-ஆக-201210:10:40 IST Report Abuse
Nethajiஅவர் கட்சியிலுள்ள வழகறிஞர்கள் மந்திரி பதவியில் உள்ளவர்களே, தவறான வழி காட்டுகிறார்கள் என்பதை புரிந்து வழக்கறிஞர்களான சிதம்பரம் , கபில், குர்ஷித்,........................................... அனைவரையும் மந்திரி பதவியிலிருந்து தூக்கி விட்டால் .......................காங்கிரஸ் பிழைக்கும்.........................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
28-ஆக-201201:05:26 IST Report Abuse
Thangairaja மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையை விமர்சித்துள்ளதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு .....அப்படின்னா பா ஜ க குடும்பத்துல சி ஏ ஜி யும் ஒரு உறுப்பினரா...? ஒண்ணுமே புரிய மாட்டேங்குது போங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nethaji - Muthuvai, Mukavai Dist.,இந்தியா
28-ஆக-201210:06:05 IST Report Abuse
Nethajiசி ஏ ஜி பெரிய கணக்கு புலிகளா மிஸ்டர் மன்மோகன் நீங்கள் அந்த கணக்கை கூட்டி கழித்து அதை தவறு என ஆதாரத்துடன் வெளியிடலாமே சி ஏ ஜி ல் இருப்பவர்களுக்கு கணக்கே தெரியாது பண்ணலாமே மிஸ்டர் பி.எம்.,...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vadivelu - chennai,இந்தியா
28-ஆக-201211:23:10 IST Report Abuse
vadiveluயாரை கேக்குறீங்க. காங்கிரஸையா. அப்படி நினைத்துதான் சி ஏ ஜி யை காங்கிரஸ் விமரிசனம் செய்கிறதா? பி ஜே பன்னீர் என்று பெயர் இருந்தா கூட காங்கிரஸ் விமரிசுக்கும் என்று கொள்ளலாம்?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-ஆக-201200:59:07 IST Report Abuse
மதுரை விருமாண்டியார் செய்தாலும் ஊழலுக்கு நான் என்றுமே எதிரி தான்... இப்பொழுது இவ்வளவு கணக்கு பார்க்கும் CAG, பாஜக அரசு ஏலம் போட்டு இழப்பு வந்த போது, பொத்திக் கொண்டு அமைதியாக இருந்ததேன் ?? அதை அன்றே சுட்டிக் காட்டி நிறுத்தியிருந்தால், இவர்களுக்கு இவ்வளவு குருட்டுத் தைரியம் வந்திருக்குமா ?? அதை விடுங்க.. நமக்கு சென்டர் சமாச்சாரம் அவ்வளவு பரிச்சயம் கிடையாது.. ஆனா தமிழ்நாட்டிலேயும் தேனாம்பேட்டையில் அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ஒன்னு இருக்கே.. ஏ.ஜி ஆபீஸ்... அதாங்க, நாடகம் எல்லாம் போடுவாங்களே அவா எல்லாம் வேலை செய்ற ஆபீசு.. அந்த ஏ.ஜி ஆபீஸ் மட்டும் ஏன் நம்ம ஊர்லே எவ்வளவு உல்டாலக்கடி வேலை நடந்தாலும் "கம்ம்"முன்னு இருக்காங்க ?? உதாரணத்துக்கு, எம்ஜியார் காலத்தில், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை சட்டம் போட்டு தனியாருக்கு தாரை வார்த்தார்... இன்னிக்கி ஒரு வருசத்துக்கு அவர்கள் பண்ணும் பணம் ரூ. 7,500 கோடி... நான் மிதப்படுத்தித் தான் சொல்கிறேன்.. மிகைப்படுத்தவில்லை.. இது நமக்கு "இழப்பு" இல்லையா ?? இருவது வருசத்துக்கு எவ்வளவு ஆச்சு? கிட்டத்தட்ட சராசரி கணக்கா ரூ. 1,00,000 கோடி....ஆச்சா ?? சரி, அடுத்து மம்மி "கனிம வளங்களை தாரை வார்த்து சட்டம் போட்டப்போ யாருமே ஏன் ஒன்னும் சொல்லல்லை.. இதிலே வரி இழப்பு மட்டுமே வருஷத்துக்கு ரூ. 16,000 கோடி ன்னு நம்ம கலெக்டர் அறிக்கை சொல்லுது.. கனிம வளத்தில் கிடைக்கும் லட்சக்கணக்கான லாபமும் இழப்பு தானே..?? அது எவன் பைக்கு போச்சு ?? இதுவும் 20 வருசமாத் தான் நடக்குது.. அரசுக்கு நஷ்டம் இது நாள் வரை வரி இழப்பு மட்டுமே ரூ. 2,00,000 கோடிகளை தாண்டும்.. கனிமவளம் (தனியாருக்கு தாரை வார்த்து விற்றதால்) கிடைக்காத லாபம் அது ரூ. 20,00,000 கோடிகளைத் தாண்டுமே.. அடுத்து இலவசங்கள் என்ற போர்வையில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் "திட்டமிட்ட" கொள்ளைகள்.. நான் ஆட்சிக்கு வந்து லஞ்சம் அடிக்க என்னை தேர்ந்தெடு.. எனக்கு தகுதி ஒன்றும் இல்லை, அதனால் நீ ஓட்டு போட்டால் நான் உனக்கு லஞ்சம் கொடுப்பேன் என்று சொல்லி வாங்கப்பட்ட ஆட்சி... இலவசத்துக்காக அரசு இழக்கும் பணம் ஆண்டுக்கு - எனக்கு மூச்சு முட்டுது, கண்ணைக் கட்டுது... ஏ.ஜி ஆபீஸைத் தான் கேக்கோணும்......இப்படி எல்லா இழப்பும் ஊழல் தானே...?? இதுவரை 2G கணிக்கப்பட்ட இழப்பில் எவ்வளவு முட்டை என்று கணக்கு கேட்டுக் கொண்டிருந்தோம்.. அது சரியே.. இப்போ அனைவருமாக சேர்ந்து இந்த உள்ளூர் குத்தில் எவ்வளவு முட்டைன்னு எண்ணுவோமே... அதை தினமலரில் தலைப்பு செய்தியில் போடட்டுமே ... விசுவின் நிகழ்ச்சியில் எம்ஜியார் படம், ஜெயலலிதா படம், கருணாநிதி படம் போட்டு, இவர்களால் வீணான, வீணாகும் பணம் என்று மேடையில் போட்டு நன்னா பேசட்டுமே... தனியார் நடத்தினால் அரசுக்கு வருமானம் என்று சொல்பவர்களுக்கு.. அப்படி எதுவுமே நடக்கவில்லையே..?? ஊர் நாசமானது தானே மிச்சம், கல்வியின் தரம் தாழ்ந்தது தானே மிச்சம்.., இயற்கை வளம் சூறையாடப்பட்டது தானே மிச்சம்.. ஊழல் விஞ்ஞானி என்று சொல்லி அடிக்கிறோம்.. இப்படி சட்டம் போட்டு ஊழல் பண்ணுவதை ஏன் கண்டு கொள்வதில்லை ??...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.