காற்றாலை அருளால் குறைந்தது மின்வெட்டு நேரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழகத்தில், காற்றாலை கைகொடுத்து வருவதால், கடந்த இரு தினங்களாக, அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது. எனினும், கிராமப்புறங்களில், நள்ளிரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்வதாகக் கூறப்படுகிறது.


12 மணி நேரம்...:

கடந்த ஒரு வாரத்திற்கு முன், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு சராசரியாக வந்து கொண்டிருந்த மின்சார அளவில் பங்கம் ஏற்பட்டு விட, அதேசமயம், காற்றாலை மின்சாரமும் குறைந்து விட, சென்னை தவிர மற்ற பகுதிகளில், 12 மணி நேரம் மின்வெட்டு அமலானது.அடுத்த நாளில், காற்றாலைகள் கொஞ்சம் கைகொடுத்ததால், அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. எனினும், கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், காற்றாலை உற்பத்தி பெருமளவில் குறைந்து விட்டது.

சராசரியாக, 3,500 லிருந்து, 4,000 மெகாவாட் வரையில் கிடைத்து வந்த காற்றாலை மின்சாரம், 1,000மாகக் குறைந்தது. இதனால், மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதாக, மின் வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக, காற்றாலை மற்றும் மத்திய அரசு மின் தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரம், மீண்டும் கைகொடுக்கத் துவங்கிஉள்ளது.

நேற்று முன்தினம் நிலவரப்படி, காற்றாலையிலிருந்து, 3,327 மெகாவாட்; மத்திய மின் தொகுப்பில் இருந்து, 1,818 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. நேற்று காலை, 7:50 மணி நிலவரப்படி, காற்றாலை மூலம், 1,705 மெகாவாட்; மத்திய மின் தொகுப்பில், 1,599 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.நேற்று மாலை நிலவரப்படி, காற்றாலை மூலம், 3,600 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், வழக்கமான மின்வெட்டைத் தவிர, நள்ளிரவில், ஒரு சில மணி நேரம், மின்வெட்டு அமலாக்கப்பட்டுள்ளது.


கிராமங்களில் குறையவில்லை


சென்னை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், வழக்கமான மின் வெட்டு அமலாகி உள்ளது. நகர்ப்புறங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில், மின்வெட்டு நேரம், வழக்கத்தை விட, ஒரு சில மணி நேரம் அதிகமாக இருந்ததாக, பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில், மின்வெட்டு அதிகமாக இருந்ததால், பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GURU.INDIAN - beiruth,லெபனான்
28-ஆக-201221:21:43 IST Report Abuse
GURU.INDIAN இந்த லட்சணத்தில் 40 தொகுதியும் வேணுமாம் ?
Rate this:
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
28-ஆக-201213:55:20 IST Report Abuse
maran காற்றாலையை சரியாக பராமரித்தாலே தமிழ்நாட்டிற்கு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும் .....பராமரிப்பவர்கள் இந்தியன் என்றால் அவர்கள் உறங்கும் கூட்டம் ...வெளிநாட்டவர் பொறுப்பில் ஒப்படைத்து பாருங்கள் ....தடையில்லா மின்சாரம் கண்டிப்பாக கிடைக்கும் ...... மன்னிக்கவும் வாசகர்களே .......நம் அரசுத்துறையில் உள்ளவர்கள் பொறுப்பற்ற வேலையினால் மக்கள் எப்படி பாதிப்படைகின்றனர் என்பது பொறுக்கமுடியவில்லை ....
Rate this:
Share this comment
Cancel
Karthik Agri - Khobar,சவுதி அரேபியா
28-ஆக-201213:00:52 IST Report Abuse
Karthik Agri மக்களின் அடிப்படை பிரச்சனையான குடிநீர், மின்சாரம், சாலை வசதி, இந்த மூன்றைகூட சரிசெய்ய முடியாதவர்கள் எதற்கு பதவிக்கு வர ஆசை படனும் முன்னோடி திட்டங்களை யோசிக்காமல் என்னதான் செய்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Tamim Ansari - Chennai,இந்தியா
28-ஆக-201212:03:58 IST Report Abuse
Tamim Ansari அம்மாவின் அருளால் வந்த காற்றால் என்று சொல்லாமல் விட்டீர்களே வாழ்க தினமலர் நடுநிலைமை
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
28-ஆக-201211:18:35 IST Report Abuse
Ashok ,India .இரவில் மின்வெட்டு கொலை,கொள்ளை,தீவிரவாத செயல்களுக்கு ஏதுவாக இருக்கும். பகல் நேரங்களில் மின்வெட்டு இருந்தால் கூட சமாளித்து விடலாம். மின்சார சேமிப்பு அரசுக்கும் அவசியம் அரசு அலுவலக மிசர கட்டணத்தை அரசு ஆராய வேண்டும். மேலும் .... அரசியல் மேடைகளுக்கு மின்சாரம் வழங்க கூடாது. இரவு பத்து மணிக்கு மேல் கேபிள் டி .வி இணைப்பை துண்டிக்க அரசு ஆணை இட வேண்டும். திரையரங்குகள் இரண்டாவது ஆட்டம் திரைப்படம் காண்பிக்க தடை வேண்டும். விவசாயம் மோட்டர் அரை,வீடுகளில் குண்டு பல்பு உபயோகித்தால் தண்டனை என்று சட்டம் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அதிகப்படியான மின்சாரத்தை சேமிக்க முடியும். கிடைக்கின்ற மின்சாரத்தை சீரான அளவில் (பகலில் மட்டும் மின்வெட்டு) விநியோகிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Vaithi Esvaran - Chennai,இந்தியா
28-ஆக-201214:34:19 IST Report Abuse
Vaithi Esvaranஅசோக், நீங்கள் கூறுவது எல்லாம் சரி அரசு அலுவலகத்தை தவிர. எங்கே பல்பு வாங்க கூட யோசிப்பார்கள் எனவே மின் விரயம் அங்கே அதிகமில்லை. சென்னையை பொறுத்தவரை வரி விலக்கு பெற்ற IT நிறுவனங்கள் மின் சிக்கனத்தை பற்றி யோசிப்பது கிடையாது.அவர்களிடம் பணத்துக்கும் பஞ்சம் கிடையாது. சோலார் மின் நிலையங்கள் மற்றும் துணை மின்நிலையங்கள் அமைப்பது பற்றி யோசித்தாவது பார்க்க வேண்டும். மோடி செய்து விட்டார் என்பதால் தீண்டாமை பார்க்காது சோலார் நிலையங்கள் விஷயத்தில் பரிசீலனை செய்வது நல்லது.சோலார் நிலையங்கள் நன்கு செயல்படும் பருவகாலங்களில் அணுமின் நிலையங்களை குறைந்த அளவில் இயக்கலாம். மின் உற்பத்தி அதிகமுள்ள நேரங்களில் மீண்டும் மீண்டும் தேவைகளை அதிகரிப்பதும் அண்டை மாநிலங்களுக்கு மின் விற்பனை செய்து சுகாதரகேட்டை (அணுமின் மற்றும் நிலகரி நிலையம் மூலமாக) நாம் வாங்கிகொள்வதும் நிற்கவேண்டும். வைத்தி சென்னை....
Rate this:
Share this comment
Cancel
Abdul Kader - Dammam,சவுதி அரேபியா
28-ஆக-201210:51:23 IST Report Abuse
Abdul Kader தமிழகத்தில் நாள்தோறும் மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கி விட்டது. நாள் ஒன்றுக்கு 230 கோடி யூனிட் முதல் 250 கோடி யூனிட் வரை மின் பயன்பாடு உள்ளது. ஆனால் சுமார் 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பற்றாக்குறையாக உள்ளது. அவ்வப்போது காற்று வீசும் போது காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சார உதவியுடன் பிரச்னை ஓரளவு சமாளிக்கப்படுகிறது. திடீரென காற்றின் வேகம் குறையும் போது மின் இருப்பு குறைந்து உடனடி மின்வெட்டை அமல் படுத்த வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
28-ஆக-201210:08:46 IST Report Abuse
Indiya Tamilan டாஸ்மாக் சரக்கை அடித்துவிட்டு காற்றாலை அருளால் குறையவில்லை மின்வெட்டு நேரம் எங்க ஆத்தா அருளால்தான் குறைந்தது மின்வெட்டு நேரம் என தம்பட்டம் அடிக்க இன்னும் ஏன் ஒருவன் கூட வரவில்லை?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஆக-201209:21:29 IST Report Abuse
Pugazh V இப்போதாவது கூடங்குளம் மின் நிலையத்தின் முக்கியத்துவம் புரிகிறதா? காற்று அடித்தால் தான் மின்சாரம்- வெய்யில் அடித்தால் தான் மின்சாரம்- சோலார் மற்றும் காற்றாலை மின்சாரம் போதும் என்று சொல்பவர்கள்- நிரந்தரமான, தடையற்ற மின்சாரம் வழங்கும் திறன் கொண்ட கூடங்குளம் போன்ற மின் நிலையங்களை எதிர்க்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
28-ஆக-201204:30:57 IST Report Abuse
NavaMayam வேண்டிலேடர் என்ற செயற்கை சுவாசத்தில் உள்ளது தமிழகம் .. கழிவுகள் சரிவர அகற்றபடாததால் சிறுநீரகம் பதிக்க பட்டு செயற்கை சிருநீரகமான டயாலிசிஸ் மெசின் ஓடுகிறது .. லஞ்சம் என்ற கான்சருக்கு கீமோ தெரபி ட்ரிப் ஓடிக்கொண்டுள்ளது .. விலைவாசி உயர்வால் பிபி எகிறியுள்ளது ..அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் சரியாக்க நாலு பேர் மேக்கப் மென் குழு மிக்க பட்டுள்ளது .
Rate this:
Share this comment
Cancel
kalaignar piriyan - Arivaalaiyam,யூ.எஸ்.ஏ
28-ஆக-201202:27:42 IST Report Abuse
kalaignar piriyan கரண்ட்டு வேணா காத்தோட அருளால வரலாம், ஆனா அம்மாவோட அருளாலும் ஆசியாலும் தான் காத்தே வருது அது தெரியும்மா
Rate this:
Share this comment
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
28-ஆக-201204:10:09 IST Report Abuse
குஞ்சுமணி சென்னைஅவங்க அருளாலும் ஆசியாலும் காத்து வரல மொசக்கொட்டை சாகுபடிய பொறுத்துதான் காத்தே வருது , நிறைய மொசக்கொட்ட சாப்புடுங்க கரண்ட் வரும் , நீர் மின் நிலையம், அணு மின்நிலையம் மாதிரி மொசக்கொட்ட மின் உற்பத்தி புதிய கண்டு புடிப்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்