Bangladeshi's penetrate into Kerala, state govt. writes to PM | கேரளாவில் ஊடுருவும் வங்கதேசத்தினர் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம்| Dinamalar

கேரளாவில் ஊடுருவும் வங்கதேசத்தினர் மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம்

Updated : ஆக 28, 2012 | Added : ஆக 28, 2012 | கருத்துகள் (72)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பாலக்காடு: "கேரளாவில், வெளிமாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில், வங்க தேசத்தவர்கள் அதிகளவு ஊடுருவி வருகின்றனர்; அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

கேரளாவில், 13 லட்சம், வெளி மாநிலத் தொழிலாளர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலத் தொழிலாளர்கள் என்ற போர்வையில், வங்கதேசத்தினர் ஊடுருவுவது, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கேரள உளவுத்துறை சேகரித்த தகவலில், இந்த விவரம் தெரிய வந்துள்ளது. ஆலப்புழை மாவட்டம், ராமங்கரியில் கடந்த வாரம் பிடிப்பட்ட, வங்கதேசத்தைச் சேர்ந்த கும்பல், நாங்கு ஆண்டுகளுக்கு முன் கேரளா வந்துள்ளது; நன்றாக மலையாளம் பேசும் அவர்களிடம், எவ்வித ஆவணங்களோ; அடையாள அட்டையோ இல்லை. அவர்கள் வைத்திருந்த மொபைல் போனில் ஐ.எம்.இ.ஐ., எண் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல், கோட்டயம் மாவட்டம், கடுத்துருத்தியில், 10 பேர் கொண்ட வங்கதேச கும்பலை, உளவுத் துறை கண்டுபிடித்தது. பாகிஸ்தானுக்கு அடிக்கடி மொபைல் போனில் பேசியதை வைத்து, போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், சாந்திரா மாவட்டம், சுனால் கிராமம் வழியாக வங்கதேசத்தவர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவி வருவது, விசாரணையில் தெரியவந்துள்ளது.கேரளாவில் அதிகரித்து வரும் வங்கதேசத்தினரை, கட்டுப்படுத்த உதவுமாறு, மத்திய அரசுக்கு, கேரள உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""பிழைப்புக்காக கேரளா வரும் பிற மாநிலத்தவர்களை வரவேற்கிறோம். ஆனால், வெளிநாட்டவர் சட்ட விரோதமாக தங்குவதை அனுமதிக்க முடியாது. வங்கதேசத்தவர்கள், சட்டவிரோதமாக கேரளாவில் வந்து தங்குவது அதிகரித்து வருவது, கவலையளிக்கிறது. இவர்களின் வருகையை கட்டுப்படுத்த, எல்லையில் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
28-ஆக-201216:07:53 IST Report Abuse
மணிமேகலை  கேடு கெட்ட சோனியாவின் தலைமையில் இது போல் நிறையா எதிர் பார்க்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
28-ஆக-201215:06:17 IST Report Abuse
A R Parthasarathy நாட்டை பிரித்து கொடுத்த பிறகும், காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகிறது பாகிஸ்தான். நாட்டை பிரித்துகொடுக்க உதவிய பிறகும், நம் நாட்டுக்குள்ளே ஊடுருவுகிறது வங்க தேசம். இவைகளை பார்த்துகொண்டு, ஆட்சி ஆதாயத்திற்காக மௌனமாக் இருக்கிறது இன்றைய அரசு. நாட்டுப்பற்றுள்ள நல்லவர்கள் ஆட்சிக்குவர வேண்டும். நாட்டை சுற்றி அபாயநிலை எந்தநேரமும் நிலவுவதால், நம்முடைய உடன்பிறப்புக்களான ஜவான்கள் எந்நேரமும், பனிபடர்ந்த மலையின்மீது பாதுகாபிற்காக நிருத்தபட்டிருக்கிரார்கள். அரசியல் வாதிகள் சிறிதளவாவது சிந்தித்து பார்க்கவேண்டும். சரியான வெளியுறவு கொள்கையும், சட்ட திட்டங்களும் இருந்தால் இந்த கடினநிலை நம்முடைய ஜவான்களுக்கு வருமா? ஆட்சியாளர்களே, உங்கள் கொள்ளைகள் தொடர்ந்து நடப்பதர்க்க்காகவாவது, நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தக்கூடாதா?
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
28-ஆக-201214:24:20 IST Report Abuse
ganapathy சிரியாவில் கொல்லப்படுவது முஸ்லிம்களே. காஷ்மீரில் இரண்டு பேரு இறந்தால் காவி தீவிர வாதம் குஜராத்தில் கலவரம் என்றால் மோடி தீவிரவாதி என்பவர்கள் சிரியாவை எதிர்த்து கருத்து சொல்லவே இல்லை ஏன் ?
Rate this:
Share this comment
Cancel
jayan - Salem,இந்தியா
28-ஆக-201213:54:16 IST Report Abuse
jayan மன்மோகன் பதில் ராதா கிருஷ்ணன் உடனே அவர்களுக்கு ஓட்டர் அடையாள அட்டை வழங்கவும் மத்தியில் நாம ஆட்சிக்கு மீண்டும் வர அது பெரிதும் உதவி புரியும். அப்பதான் மேலும் சோனியாஜி பல கோடி கோடிகளை கொள்ளை அடித்து இத்தாலிக்கு அனுப்ப முடியும். மற்றபடி கேரளா மக்கள் இருந்தால் என்னே செத்தால் என்னே
Rate this:
Share this comment
Cancel
IYAPPAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஆக-201213:44:31 IST Report Abuse
IYAPPAN மொத்தத்தில் கடந்த ஆறு வருடமாக என்னதான் மத்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது. எவ்வளோவோ கோடிகளை கொட்டி ராணுவத்துக்கு செலவு செய்கிறது. நாட்டின் அடிப்படை தேவை மக்கள் பாதுகாப்பு,அமைதியான வாழ்கை இதை கூட செய்ய முடியாதது அரசின் கையலாகதனத்தின் வெளிப்பாடு.முடியாவிட்டால் ஆட்சிய கலைத்துவிட்டு தேர்தல் நடத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-ஆக-201213:44:29 IST Report Abuse
Pugazh V "...அன்னை சோனியா காந்தியின் கீழ் இயங்கும் மத்திய அரசு..." என்ன முட்டாள் தனமான வார்த்தைகள். சோனியா ஒரு சாதாரண அமைச்சர் கூட இல்லை. அவர் தலைமையில் இயங்கும் அரசா? ஒருவரைத் தாக்க இப்படியா ஆதாரமேயற்ற பொய்யான சொற்களைப் பேசுவது?? கேரளாவில் எந்த வேலைக்கும் கேரளத்தவர்கள் கிடைப்பதில்லை. கூலி வேலைகளில் கூட, "ஆண்கள் தலைச் சுமடு சுமக்க மாட்டார்கள். ஓட்டல்களில் டேபிள் கிளீன், வீடுகளில் தோட்ட வேலை, துணிக் கடைகளில் கேல்ல்னர் ௦ காபி சப்ளையர் வேலைகளை செய்ய மாட்டார்கள். அந்த வேலைக்கென வருபவர்களை கேரள போலீசே சோதனை செய்து அனுமதிப்பதோ மறுப்பதோ செய்யலாம்- இந்த கூலித் தொழிலாளில்கள் என்ன ஏரோப்லேனிலா வருகிறார்கள்- ரயிலில், பஸ்ஸில் மட்டுமே வருகிறார்கள், கேரளாவிற்குள் நுழையும் போதே சோதிப்பது மிக எளிது
Rate this:
Share this comment
Cancel
sundar.s - coimbator,இந்தியா
28-ஆக-201213:27:19 IST Report Abuse
sundar.s nizar please don't support to Pakistan and Bangadesh support our nation. you are INDIAN, ........jai hind.......,Jai hind.......vathey matharam..........
Rate this:
Share this comment
Cancel
vijay - kanyakumari,இந்தியா
28-ஆக-201212:08:02 IST Report Abuse
vijay அவர்களை கேரளாவுக்குள் அழைத்து வந்து குடியமர்த்துவதே இந்த அன்னை சோனியா காந்தியின் கீழ் இயங்கும் மத்திய அரசு தான்.... பின்பு எதற்கு இவர் அவர்களுக்கே கடிதம் எழுதுகிறார்....கடிதம் எழுதிய குற்றத்திற்காக ராதா கிருஷ்ணனை பதவியிலிருந்து நீக்குவது உறுதி.....
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
28-ஆக-201215:15:53 IST Report Abuse
A R Parthasarathyவிஜய், இப்படி அநியாயமாக பயமுறுத்தினால் எப்படி? மாநிலத்தின் பாதுகாப்பில் அக்கறையுள்ள அமைச்சராக இருப்பதால் ராதா க்ரிருஷ்ணன் கடிதம் எழுதுகிறார். உண்மையாகவே அவர்களுக்கு இனமான உணர்வுகள் உண்டு. தங்களுடைய இனத்தை சேர்ந்தவர்களை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் தான் அவர் கடிதம் எழுதி இருக்கிறார். அது தவறல்ல....
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
28-ஆக-201211:39:21 IST Report Abuse
மணிமேகலை  இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. நம்மிடம் அணு ஆயுதம் இருப்பதால் மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகின்றன .......
Rate this:
Share this comment
Vaibhav Kotagiri - Chennai,இந்தியா
28-ஆக-201214:40:52 IST Report Abuse
Vaibhav Kotagiriசகோதரா நாட்டின் மீது உனக்குள்ள நம்பிக்கையை நான் வணங்குகிறேன்.. ஆனால் இன்று நிலைமை வேறு... நமது அணு ஆயுதத்தை நம் நாட்டிலேயே வெடிக்க செய்திடுவார்கள்.. உளவுத்துறைக்கு கூட தெரியாமல், மும்பையில் தாக்குதல் நடத்தினார்களே... மறந்துவிட்டீரா... ஆயிரகணக்கான வங்கதேசத்தவர் நமது பாதுகாப்பிற்கு டிமிக்கி கொடுத்துதானே உள்ளே நுழைந்திருக்கிரார்கள்.. அணு ஆயுத விஷயத்தில், நமது அரசு புலித்தோல் போர்த்திய பசு.....
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
28-ஆக-201211:38:04 IST Report Abuse
Ravichandran அசாமில் அவசர கணக்கெடுப்பு தேவை, அனைத்து மாநிலங்களும் அரசு மற்றும் தனியார் நிறுவங்கள் வட நாட்டவர்க்கு வேலை கொடுக்கும்போது மூன்று தலைமுறை கொண்ட ரேஷன் கார்ட் விவரம், மற்றும் குடும்ப விவரம் நம் தேசத்தில் படித்த பள்ளி சான்றிதல் கேட்க வேண்டும். கேரளத்திலோ தமிழகமோ இவர்களுக்கு தங்க வீடு கொடுப்பது என்பது சைத்தானுக்கு வீடு கொடுத்த மாதிரிதான். வங்க தேசத்தினர் மீது ஒட்டு மொத்த இந்திய மக்களும் பார்வை பதிய வேண்டும். அவசர தேவை காங்கரஸ் அரசை இந்தியாவில் இருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும். கொடி வீரன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை