மதுரை: தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் சார்பில் காதக்கிணறு ஆர்.சி., நடுநிலை பள்ளியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு கண்காட்சி நடந்தது. மதுரை சி.இ.ஓ., நாகராஜமுருகன் துவக்கி வைத்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செல்வராஜ், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ஜெகநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி முனியாண்டி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ரமணி பங்கேற்றனர். பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் படைத்திருந்த 71 அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது, சுற்றுச்சூழல் மாசை தவிர்ப்பது,கடல் நீரை மறுசுழற்சி மூலம் குடிநீராக்குவது போன்ற 11 மாணவர்களின் படைப்புகள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டன. இப்படைப்புகள், மாநில அளவில் சென்னையில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் இடம் பெறும் என, அறிவியல் தொழில்நுட்ப மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.