Plan to destroy Panchapandavar rock | பஞ்ச பாண்டவர் மலையை, "கூறு போட'த் தீட்டிய திட்டம் அம்பலம்: உடந்தை அதிகாரிகள் பட்டியல் தயார்| Dinamalar

பஞ்ச பாண்டவர் மலையை, "கூறு போட'த் தீட்டிய திட்டம் அம்பலம்: உடந்தை அதிகாரிகள் பட்டியல் தயார்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மேலூர்: இந்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவன (டாமின்) அதிகாரிகளின் அமோக ஆதரவுடன், மதுரை மாவட்டம் கீழவளவில் உள்ள தொல்லியல் துறையின் புராதனச் சின்னமான பஞ்சபாண்டவர் மலையை, வெடி வைத்து தகர்த்து, கிரானைட் கொள்ளை நடந்ததை, அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்தனர்; இதற்குத் துணையாக உள்ள ஊழல் அதிகாரிகள், விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். இதை தடுக்காமல் விட்டிருந்தால், ஏழு நாட்களில் மலை முழுவதையும் விழுங்கி, ஏப்பம் விட்டிருப்பர். மதுரை மாவட்டம், கீழவளவில், 61 ஏக்கர் பரப்பளவில், இந்திய தொல்லியல் துறைக்குச் சொந்தமான பஞ்ச பாண்டவர் மலை உள்ளது. இங்கு சமணர்கள் படுகைகள், கற்சிலைகள், கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. மலை முழுவதும், "ரோஸ்' நிறத்தில் ஏற்றுமதி தரம் வாய்ந்த கிரானைட் கற்கள் நிரம்பியுள்ளன. இம்மலை, தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. "மலையைச் சுற்றிலும், 300 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்கள் இருக்கக் கூடாது. மீறுவோர் மீது, இந்திய தொல்லியல் சட்டப்படி, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மலையை சுற்றிலும் ஏராளமான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையின், நில அளவை துறையின் சார்பில், எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன.

போலி டாமின் முத்திரை: பஞ்ச பாண்டவர் மலையின் அழகையும், கல்வெட்டுகளையும் காண, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட, ஏராளமானோர் வருவர். மலையின் அடிவாரத்தில், "டாமின்' சார்பில் ஒரு நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டவும், விற்பனை செய்யவும், "லீஸ்' எடுத்திருந்தது. இவர்கள், பஞ்ச பாண்டவர் மலையின் எல்லைக்குள்ளும், கைவரிசை காட்டத் துவங்கினர். இந்த அத்துமீறல்களை தொல்லியல் துறை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, நேரடியாக மலையை வெடி வைத்து தகர்த்து, கிரானைட் கற்கள் பகிரங்கமாக வெட்டி எடுக்கப்பட்டதை, தனிப்படையினர் நேற்று கண்டுபிடித்தனர். இம்மலையின் பெரும் பகுதியை, தற்போது காணவில்லை. கிரானைட் கற்கள், "டாமின்' முத்திரையுடன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெய்சிங் ஞான துரையின் விசாரணையில் நேற்று தெரிய வந்தது.

"ஊழல்' அதிகாரிகள் பட்டியல்: மேலூர், திருவாதவூர், அரிட்டாபட்டி பகுதிகளில், சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இம்மலைகள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எனினும், ஊழல் அதிகாரிகள் சிலரது முழு ஒத்துழைப்புடன், தேசிய அடையாளச் சின்னங்கள், விலை மதிக்க முடியாத புராதன மலைகள், தனிநபர் சுய லாபத்துக்காக, சிறுக சிறுக சுரண்டப்பட்டுள்ளன. இவற்றில், கீழவளவு சர்க்கரை பீர் மலை, பஞ்ச பாண்டவர் மலை, திருவாதவூர் மலைகள் அழிக்கப்பட்டுள்ளன. கனிம வளக் கொள்ளைக்கு துணை போன தொல்லியல் துறை, கனிம நிறுவனம், வருவாய் மற்றும் போலீஸ் துறையில் ஊழல் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இவர்களை விரைவில் கைது செய்ய, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumaraswami Balasubramanian - erode ,இந்தியா
29-ஆக-201201:30:06 IST Report Abuse
Kumaraswami Balasubramanian கொஞ்ச நாட்களில் தமிழ்நாட்டையே கூறு போட்டு விற்றுவிடுவார்கள் நமது அதிகாரிகள் சம்மதபட்ட அனைவர்களுடைய சொத்துகளையும் பறிமுதல் செய்யவும் அதற்கு உண்டான சட்டத்தை கொண்டு வரவும் செய்வார்கள ?செய்யத்தான் விடுவார்களா இந்த பணம் தின்னி அதிகாரிகள் <<<
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.