Sonia asks Cong to "stand up and fight aggressively" | "பிளாக் மெயில்' அரசியல் நடத்துகிறது பா.ஜ.,: சோனியா ஆவேசம்| Dinamalar

"பிளாக் மெயில்' அரசியல் நடத்துகிறது பா.ஜ.,: சோனியா ஆவேசம்

Updated : ஆக 30, 2012 | Added : ஆக 28, 2012 | கருத்துகள் (44)
Advertisement
 "பிளாக் மெயில்' அரசியல் நடத்துகிறது பா.ஜ.,: பதிலடி கொடுக்கும்படி சோனியா ஆவேசம்,Sonia asks Cong to "stand up and fi

புதுடில்லி : நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், பா.ஜ., "பிளாக் மெயில்' அரசியல் நடத்துகிறது. இதுவே, அந்தக் கட்சியின் முக்கியக் கொள்கையாக உள்ளது. பா.ஜ.,வின் இதுபோன்ற அரசியலுக்கு பயந்து விடாமல், ஒருங்கிணைந்து, அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் பார்லிமென்டரி கட்சிக் கூட்டத்தில், சோனியா ஆவேசமாகப் பேசினார்.

"நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில், நடந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. இதைக் காரணமாக வைத்து, பார்லிமென்ட் மழைக் காலக் கூட்டத் தொடரையும், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முடக்கி வைத்துள்ளது.இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் பார்லிமென்டரி கட்சிக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.

இதில், காங்., தலைவர் சோனியா பேசியதாவது: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், பார்லிமென்டில் பிரதமர் விரிவாக விளக்கம் அளித்து விட்டார். அமைச்சர்களும் விளக்கம் அளித்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் விவாதம் நடத்துவதற்கு தயார் என்றும், பல முறை தெரிவித்து விட்டோம்.ஆனால், பா.ஜ., தலைவர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி, பார்லிமென்ட் நடவடிக்கைகளை முடக்குகின்றனர். பா.ஜ., தலைவர்களின் பொய் பிரசாரம், இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பார்லிமென்டை முடக்கி, பிளாக் மெயில் அரசியல் நடத்துகின்றனர். இதுவே, அந்தக் கட்சியின் கொள்கையாகி விட்டது. காங்கிரஸ் தலைவர்களையும், பிரதமரையும், அளவுக்கு அதிகமாக விமர்சிக்கின்றனர்.

அவர்களின் நடவடிக்கைக்குப் பயந்து விடாமல், உடனுக்குடன், தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். நம் ஆட்சியில், மக்களுக்காகப் பல சாதனைத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். எனவே, எதைக் கண்டும் பயப்படக் கூடாது.தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை, பா,ஜ.,வின் மூத்த தலைவரே விமர்சிக்கிறார். எதிர்க்கட்சி, தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சர்வதேச நாடுகள், தற்போது கடுமையான பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றன.இந்தப் போக்கு, நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கையை, நாம் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சோனியா பேசினார்.


"சான்றிதழ் தேவையில்லை' :

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் குற்றச்சாட்டு குறித்து, ஆலோசிப்பதற்காக, பா.ஜ., பார்லிமென்டரி கட்சிக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ""எங்களின் பொறுப்புணர்வுக்கு, சோனியா, சான்றிதழ் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நிலக்கரி ஒதுக்கீடு விவகாரத்தில், பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, காங்கிரசுக்கு உள்ளது. நிலக்கரிச் சுரங்க விஷயத்தில், பார்லிமென்டுக்கு உள்ளே தான், காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனரே தவிர, வெளியில் பேச மறுக்கின்றனர்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajaram avadhani - Tiruchy,இந்தியா
30-ஆக-201209:45:48 IST Report Abuse
rajaram avadhani அதாவது பாஜக ஒழித்துகட்டபடவேண்டும், மோடியை போட்டு தள்ளிவிட வேண்டும், எதிரிகளே இல்லாத தனி முழு மெஜாரிட்டியுடன், எல்லாருடைய வாயையும் அடைத்து விட்டு ராகுல் சோனியா பிரியங்கா என்ற கூட்டு தலைமையில் காங்கிரஸ் சுதந்திரமாக கொள்ளை செயல்களில் ஈடுபடவேண்டும். அப்போ இந்தியா நல்ல(?) முன்னேற்றம் அடையும். இதுதானே உங்க ஆசை. எதுக்கு சுத்தி வளச்சி..... ஓபனா பேசுங்க மேடம்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஆக-201209:32:52 IST Report Abuse
Pugazh V நண்பர்களே நிலக்கரி ஒதுக்கீட்ட்டில், "டெண்டர் அல்லாத முறையை ஆரம்பித்ததே பி ஜே பி தான். 1993 ஆம் ஆண்டு முதல் இந்த டெண்டர் இல்லாமல் ஒதுக்கீடு செய்யும் முறை, பி ஜே பி காலம் முதலே அமலில் இருக்கிறது. (ஆங்கில நாளேடுகளைப் படித்துப் பார்க்கவும்). எனவே தான் பி ஜே பி எந்த விவாதத்திற்கும் ஒத்துக் கொள்ளாமல், "பிரதமர் ராஜினாமா செய்" என்று ஒரே வார்த்தையைப் பிடித்துத் தொங்குகிறது.
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Maskat ,ஓமன்
29-ஆக-201216:14:21 IST Report Abuse
Tamilnesan எப்படிங்கோ போபோர்ஸ் ஊழல் புகழ் குவத்ரோச்சியை ( உங்க சொந்தகாரரை ) பிடிக்க சிபிஐ நானூறு கோடி செலவு செய்து உலகை சுற்றி வந்தார்களே. இதை விட பெரிய ப்ளாக் மெயில் டிராமா உலகில் எங்குமே நடக்காது. இனிமேலும் நடைபெறாது. ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
29-ஆக-201215:45:19 IST Report Abuse
vasan இந்தியர்களையே விரைவில் அடிமைகளாக்க வேண்டும் என்பது தான் இவரது ஆசை...........இவரும் அமெரிக்காவின் கை கூலி தான்.
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
29-ஆக-201215:32:30 IST Report Abuse
V Gopalan Better, she can pack up and remain silent. Leave about BJP, may be they do Black mail or white mail but what about the report of CAG?Similarway, a mouthpiece liar/lawyer said not even a pie loss to govt then why former telecom minister was in Tihar? If report of CAG is bias, susp him ping enquiry or abolish the post, this is what politicians do who ever come across, should be weeded out. The tree was about to loose its root but due to Late Seetharam Kesari unnecessarily poured water with menure to ensure again the dead tree to blossom with an eye that none should go above him. To keep a check among our own countrymen due to jealousy, implanted a foreigner without knowing the pros and cons and now the hand is spareaded like Banyan tree wherever put its hands all lakhs/crores of rupees bungled, and the head of country made deaf & dumb. Similar to Tamilnadu electorates who weeded out Hand, entire country should ensure that this symbol is erased once and for all so as to facilitate country&39s development. Did not mean that present opposition party is efficient which is also a spinster group of corruption gang, hence electorates better to choose only Indepents who are matured, free from criminal record and their antecedents. It may take some time but certainly country will poise for development once this hand symbol afflicted with gangrin.
Rate this:
Share this comment
Cancel
cvnbm - sdef,பார்படாஸ்
29-ஆக-201214:37:09 IST Report Abuse
cvnbm பாரதிய ஜனதா மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது black மெயில். நீங்க நடத்துறது என்ன என்று சொல்லுங்களேன் ,,சோனியா அன்னை அவர்களே, தேர்தல் வரட்டும் நாங்க சொல்லுவமுள்ள ,,பொறுங்கள் நம் இந்திய தலைவர்களே, ஒற்றுமையை கை விடாதீர்கள். வெற்றி நமதே ,,தோல்வி பயம் சோனியாவை தொற்றி கொண்டது தெளிவாக பேச்சில் தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
மொக்கை - madurai,இந்தியா
29-ஆக-201214:35:26 IST Report Abuse
மொக்கை எதற்குமே அசைந்து கொடுக்காத சோனியா, நிலக்கரி விஷயத்தில் ஆவேசப்படுகிறார் என்றால், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கிறது..நிலத்தின் அடியில் இருக்கும் கரி காங்கிரசின் மூஞ்சியில் பூசப்படும் நாள் தூரத்தில் இல்லை..
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
29-ஆக-201214:27:10 IST Report Abuse
ram prasad 2g ஒதுக்கிட்டில் முறை கேட்டை ஆரம்பித்து வைத்ததே பா ஜ கவை சேர்ந்த பிரமோத் மகாஜன் தானே , அவரை கொன்று விட்டு நல்லவன் வேஷம் போடுகிறது பா ஜ க , அதே போல் தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பா ஜ க எந்த முறையை பின் பற்றியது ? விவாதம் நடத்த விடாமல் மக்கள் வரிபணத்தை வீணடிப்பதில் முதலிடம் பா ஜ கவிற்கு தானே
Rate this:
Share this comment
Cancel
Rasmi - Jeddah,சவுதி அரேபியா
29-ஆக-201214:24:59 IST Report Abuse
Rasmi நான் இங்கே ஒன்றை கூற வேண்டும். அதாவது தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு எந்த இடத்திலும் நாகரிகமான கருத்தை எழுத தெரியாது. தனிப்பட்டவர்களை பாதிக்கும் வகையில் உங்கள் கருத்துகளை கேவலமான முறையில் எழுதுகிறீர்கள். இது தமிழ் என்ற பண்பாட்டிற்கு அப்பாலானது. இந்தியாவில் தமிழ் நாட்டை தவிர எந்த மாநில மக்களும் இப்படியான மாதிரி நடந்தது இல்லை. ஏன் நான் இலங்கையன் என்ற வகையில் எமது நாட்டில் ஒரு மனிதன் இப்படியான அநாகரிகமான முறையில் நடக்க மாட்டங்கள். முதலில் தமிழ் பண்பாட்டை மதித்து நகரிகமாக நடந்து கொள்ளுங்கள். ஊழல் ஊழல் என்று பேசும் நீங்கள் எதற்கு கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்களுக்கு வாக்கு போட்டீர்கள்? முதலில் உங்கள் இரு தலைவர்களை மாற்றுங்கள் அப்புறம் மத்தவங்கள் பற்றி பேசுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
29-ஆக-201214:14:13 IST Report Abuse
GURU.INDIAN இதை விட்டால் வேறு வழி இல்லை BJP க்கு. அவர்களால் நாட்டுக்கு மேலும் நஷ்டம்தான் ஏற்படும். அதை செய்து ஆட்சியை பிடிக்க திட்டம் போடுகிறார்கள். தமிழக மக்கள் வேண்டும் என்றால் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒட்டு போடலாம். மற்ற மாநிலத்தில் அது நடக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை