Two doctors Suspended by tamil nadu government | குழந்தையை எலி கடித்த விவகாரத்தில் டாக்டர்கள் 2 பேர் சஸ்பெண்ட்: அரசு அதிரடி| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (143)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: பணியில் அலட்சியமாக இருந்ததால், சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையின், நிலைய மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.,), பணியில் இருந்த டாக்டர் பார்த்திபன் உள்ளிட்ட ஒன்பது பேரை, அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், குறை பிரசவத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு, அவசர கிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் உடல்நிலை மோசமாகவே, கடந்த 26ம் தேதி, மாலை 5.45 மணிக்கு, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.இத்தகவல் குழந்தை யின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடலை மறுநாள் காலையில் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து, அன்றிரவு, சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டிலேயே குழந்தை யின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் : நேற்று முன்தினம் காலை, குழந்தையின் உடலை பெறச் சென்ற அதன் பெற்றோர், குழந் தையின் இடது கன்னத்தில், ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர். குழந்தையின் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த அவர்கள், "இறந்த தங்கள் குழந்தையின் முகத்தை எலி கடித்து குதறியுள்ளது' எனக் கூறி, தங்கள் உறவினர்களுடன், மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின் அவர்கள், போலீசில் அளித்த புகாரின் காரணமாக, இறந்த பச்சிளம் குழந்தையின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. "பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் துறையின் திசு பரிசோதனை முடிவுகள் வந்த பின்தான், குழந் தையின் கன்னத்தில் எலி கடித்ததா அல்லது சிறுநீரக கோளாறு காரணமாக, இவ்வாறு ஏற்பட்டதா என்பது தெரிய வரும்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

விசாரணை:தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச் சம்பவம் குறித்து, மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரி வித்தது. உடனே, மருத் துவக் கல்வி துணை இயக்குனர் முத்துராஜன் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு, மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ., - செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.நேற்று காலை 10 மணிக்கு, சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சென்ற, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்,

குழந் தைகள் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். அதன்பின், மருத்துவமனை அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதிரடி:ஆலோசனை முடித்து அமைச்சர் கிளம்பிய சிறிது நேரத்தில், திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ., ரமேஷ், சம்பவத்தின்போது பணியிலிருந்த டாக்டர் பார்த்திபன் மற்றும் ஏழு மருத்துவப் பணியாளர்களை, அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தது.மருத்துவமனையில் இருந்த குழந்தையை, எலி கடித்து குதறும் அளவிற்கு, தங்கள் பணியில் அலட்சியாக இருந்ததால், டாக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முடிவு தான். ஆனால், அரசுமருத்துவமனைகளின் வளாகங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், இதேபோன்ற அதிரடி நடவடிக்கையை, போர்க்கால அடிப்படையில் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

உணவகங்கள் மூடல்: இச்சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: *மருத்துவமனை விதிகளின்படி, பிரேதப் பரிசோதனை தேவைப்படாத இனங்களில், இறந்தவர் உடலை உடனே உரியவரிடம் ஒப்படைப்பதை மருத்துவ நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வழங்க இயலாத நிலையில், உடலை சவக்கிடங்கில் மட்டுமே உரிய பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.
* அரசு மருத்துவமனை வளாகங்களில் நாய், பூனை, எலி முதலியவை வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்கவும், அதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*எலிகளை பிடிப்பதில் பழக்கமுள்ள இருளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
*மருத்துவமனைகளில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவமனைகளிலேயே உணவு அருந்துவதால், நாய், பூனை, எலி தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே, மருத்துவமனை வளாகத்தில் உணவு அருந்துவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*மருத்துவமனைகளுக்குள் இயங்கும் நடமாடும் உணவகங்கள் உடனே மூடப்படும்.

Advertisement

உணவகங்களிலேயே உணவு அருந்துவது கட்டாயமாக்கப்படும்.*பார்வையாளர் நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

ஐகோர்ட்டில் மனு : அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லை குறித்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். தனது மனுவை அவசரமாக எடுத்து விசாரிக்கக் கோரினார்.தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி முன் நேற்று வழக்கறிஞர்ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, "அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையை எலி கடித்து குதறியுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு தான் காரணம். இதுகுறித்து தாக்கல் செய்யும் மனுவை, அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்' என்றார். அதற்கு, "மனுத் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா?' என நீதிபதிகள் கேட்டனர். "மனு தயாராக இருக்கிறது. தாக்கல் செய்ய வேண்டும்' என்றார் வழக்கறிஞர்.இதுகுறித்து நேதாஜி போக்குவரத்து தொழிலாளர் பாதுகாப்பு தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நடத்துனர் சடையன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "மருத்துவமனைகளில் நாய், பூனை, எலிகள் தொல்லை உள்ளது. நோய் பரவாமல் தடுப்பதற்காக, மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் இருக்கும் போது, அவர்களை மருத்துவர்கள், ஊழியர்கள் அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தான் ஏழை எளியவர்கள், நடுத்தர மக்கள் சிகிச்சைப் பெறுகின்றனர். அவர்கள் மத்தியில் ஒரு பய உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்கவும், எலி, நாய், பூனைத் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (143)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sulochana kannan - Sydney,ஆஸ்திரேலியா
30-ஆக-201206:08:41 IST Report Abuse
sulochana kannan ஏற்கனவே வேறொரு ஆஸ்பத்திரியில் இது நடந்தது.. இதே எலியோ பெருச்சாளியோதான்.
Rate this:
Share this comment
Cancel
sulochana kannan - Sydney,ஆஸ்திரேலியா
30-ஆக-201206:07:06 IST Report Abuse
sulochana kannan இதே மருத்துவ மனையில் ஆறு பிள்ளைகள் பெற்று உள்ளேன். . என்ன சுத்தம் , ஆகார வகைகள், டாக்டர்கள் கண்காணிப்பு என்று அருமையாக இருந்த காலம் அது. இப்போது சீர் குலைந்து இருக்க இந்த ஆட்சிகளின் ஊழல், நிர்வாக கோளாறு தான் காரணம். ஏழைகள் குழந்தையின் பாடியை வாங்கி எங்கே வைத்துகொள்வார்கள்? ஆமாம், அந்த குழந்தை குறை மாதத்தில் பிறந்தது போல தெரியவில்லையே. ?குழந்தை இன்குபேட்டரில் இருக்கும்போது தாய் எப்படி வீட்டிற்கு போனார்? கிட்னி என்பதெல்லாம் சும்மா தப்பித்துவிட எடுத்துவிட்ட கதை..
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
29-ஆக-201216:03:00 IST Report Abuse
N.Purushothaman தமிழத்தை முன்னேற்றுகின்றேன் என்கிற போர்வையில் சரியான திட்டமிடாமல்,ஒரு நேர்த்தி இல்லாமல் தாறுமாறாக ஒரு பாதுகாப்பு இல்லாத கட்டிடத்தை தான் இந்த கழக ஆட்சியினர் கட்டினார்கள்.....விளைவு இது போன்ற அசம்பாவிதங்கள்.....அரசு சார்பில் கட்டப்படும் எந்த அலுவலகமாகட்டும் சரி,மருத்துவமனையாகட்டும் சரி நன்கு திட்டமிட்டு நல்ல காற்றோட்ட வசதி,பாதுகாப்பு ,நல்ல தரம் போன்ற அம்சங்களை கொண்டு கட்டுவதோடு அதை காலம் முழுவது சரியாக பராமரித்தால் இது போன்ற அவலங்கள் நேராது.... ஆனால் நடந்தது என்ன????.....எந்த ஒரு அரசு கட்டிடமும் மேற்கூறிய மாதிரி அல்லாமல் பல விதிமுறை மீறல்களுடன் இருக்கிறது.....மற்றவர்களுக்கு நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு கட்டிடங்கள் எந்த நிலையில் உள்ளது என்று சொல்ல தேவையேயில்லை .... அதே போல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசியப்படும் அலுவலகங்களில் மேலாண்மை (Administration & Management )அலுவலர்களை நியமித்து அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் பராமரிப்பு நன்றாக அமைவதோடு சுற்று சூழலும் பேணி காக்கப்படும்....இதனால் சில வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டு வேலையையும் கொடுக்கலாம்.....இது அரசாங்கத்தின் தரப்பில் இருக்கிற குறை....அதே போல் மக்களிடமும் குறை இருக்கிறது .....அவர்களும் மருத்தவமனை நிர்வாகத்திற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.....அதாவது குப்பைகள்,கழிவுகள் கண்ட இடத்தில கொட்டாமல் இருப்பது ,தனி மனித ஒழுக்கத்தை கடை பிடிப்பது ....மருத்துவமனைகள் மற்றும் அரசு கட்டிடங்கள் நமக்காக உள்ளது அதை பாழ்படுத்தகூடாது என்பதை உணர வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel
Mustafa - Dammam,சவுதி அரேபியா
29-ஆக-201215:53:46 IST Report Abuse
Mustafa குழந்தை வோட்டை வழியாக விழுந்து இறந்த பிறகுதான் பள்ளி வாகன பரிசோதனை, எலி கடித்த பிறகுதான் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு இப்படி அசம்பாவிதங்கள் நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் டாஸ்மாக் நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Share this comment
Cancel
meekannan - Chennai,இந்தியா
29-ஆக-201215:32:03 IST Report Abuse
meekannan திரு. பார்த்த, நீங்க என்ன எல்லா கருத்துக்கும் மாஞ்சு மாஞ்சுன்னு பதில் கருத்தது சொல்றீங்க? அம்மாமேலே அவ்வளவு பிரியமா? குற்றம் குறை வந்துவிட கூடாதுன்னு ரொம்ப பதவுசா பேசுறீங்க. உங்க கடமையும் அதிமுக சொம்பு தூக்கிரதில உள்ள நேர்மையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சத்தியமா இந்த செய்தி வந்ததுக்கு அப்பறம் தான் தெரியும் நம்ப தமிழ்நாடு சுகாதார மந்திரி திரு. விஜய் என்று. நமது பொதுஅறிவை வளர்க்க கூட இதுபோல் இக்கட்டான தருநங்களில் இருந்து தான் தெரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு முன் மற்றொரு உதாரணம் திரு. நத்தம் விஸ்வநாதன். வாழ்க நாற்பது வளர்க இந்திய ஓங்குக அதிமுக
Rate this:
Share this comment
Cancel
sagee - chennai,இந்தியா
29-ஆக-201215:26:53 IST Report Abuse
sagee சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுல மட்டும் வேலை பாக்குரவங்களுக்கு 1 ஆளுக்கு 1 நாளைக்கு மட்டும் Rs.200 /- கொடுத்தாதான் ஒழுங்கா பாத்துகுராங்க. சிவகங்கையில் மட்டுமல்ல எல்லா ஊர் அரசு மருத்துவமனையிலும் இந்த நிலைமைதான். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஆக-201215:18:10 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ "பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் துறையின் திசு பரிசோதனை முடிவுகள் வந்த பின்தான், குழந்தையின் கன்னத்தில் எலி கடித்ததா அல்லது சிறுநீரக கோளாறு காரணமாக, இவ்வாறு ஏற்பட்டதா என்பது தெரிய வரும்&39 என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. //// போஸ்ட் மார்ட்டம் செய்யும் டாக்டர்களுக்கு "இன உணர்வு" நிச்சயம் அதிகமாகவே இருக்கும் """"குழந்தை அதன் தாயின் வயிற்றில் இருந்த போதே இந்தக் காயம் பட்டுள்ளது"""" என்று கூட ரிப்போர்ட் கொடுத்தால் ஆச்சரியப்பட முடியாது சிறுநீரகக் கோளாறு குழந்தைக்கு இருந்திருந்தால் இறந்து பிறந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
29-ஆக-201215:50:44 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..இது தான் நடந்திருக்கும், இதுவே என் கருத்தும், திரு நல்லவரே....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஆக-201216:03:57 IST Report Abuse
Nallavan Nallavan""""சிறுநீரகக் கோளாறால் கன்னத்தில் காயம் வரும்"""" என்று முன்னாபாய் எம்.பி.பி.எஸ். மட்டுமே ரிப்போர்ட் கொடுப்பார் ( இல்ல பெரிய டவுசர் கொடுக்குமா,,,, எனக்குத் தெரியாது )...
Rate this:
Share this comment
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
29-ஆக-201216:37:47 IST Report Abuse
R.சுதாகர்குழந்தை இறந்த பின் கூட கன்னத்தில் மட்டும் காயம் ஏற்பட எப்படி சாத்தியம்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். அப்படி இல்லையென்றால் பிரச்னையை திசை திருப்ப நினைக்கும் மருத்துவமனை நிர்வாகத்தினரையும் குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்ததாக உள்ளே தள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஆக-201215:10:20 IST Report Abuse
Nallavan Nallavan "இருக்கும் மருத்துவமனைகளை ஒழுங்காக நிர்வகிக்கவேண்டும்" என்று திமுகவினர் கோருவதில் தவறில்லை
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
29-ஆக-201215:41:25 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..தி.மு.க காரர்கள் மட்டுமே கூறுவதாக ஏன் இந்த தடுமாற்றம் / உளறல் திரு நல்லவரே நல்லவரே? யார் கூறினாலும் தவறில்லை என்றல்லவா? சொல்லியிருக்க வேண்டும்? உண்மையை தானே சொல்லுகிறீர்கள்? தயக்கம் தேவையில்லையே...கொஞ்சம் பாசம் தடுக்கிறதோ?...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஆக-201214:58:06 IST Report Abuse
Nallavan Nallavan ட்யூட்டி டாக்டராக ஒருவர் நிச்சயம் இருந்திருப்பார். இருவராகவும் இருந்திருக்கலாம் அவர் / அவர்களைப் பணி நீக்கம் செய்யவேண்டும். சர்வீஸ் இருந்தாலும் பென்ஷன் போன்றவற்றை நிறுத்திவைக்க வேண்டும். அவரது / அவர்களது மருத்துவப் பதிவை நிரந்தரமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். (இல்லாவிட்டால் கிளினிக் வைத்துப் பிழைத்துக் கொள்வார்). ஜே முதலில் இருக்கும் மருத்துவமனைகளைத் திறம்பட நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளட்டும். மற்ற விஷயங்களில் "எனது தலைமையிலான ஆட்சியில்" என்றும், "நான் உத்தரவிட்டேன்" என்றும் கூறுபவர் இந்த விஷயத்தில் ஏன் பொறுப்பேற்கவில்லை? இதே மருத்துவமனை நன்கு செயல்பட்டு "இந்தியாவிலேயே சிறந்த மகப்பேறு மருத்துவமனை" என்ற பெயரை இவரது ஆட்சிக்காலத்தில் ஏதாவது விருது கிடைத்தால் அந்தப் பெருமையில் பங்கு கேட்கமாட்டாரா????
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
29-ஆக-201215:42:49 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..நல்ல கருத்து, பாராட்டுக்கள், திரு நல்லவரே நல்லவரே....
Rate this:
Share this comment
Krish - India,சிங்கப்பூர்
29-ஆக-201216:03:29 IST Report Abuse
KrishNallavan Nallavan - உங்கள் டெக்னிக்கில் சொன்னால், பழைய ஜெ backup நிச்சயம் இருக்கும், அந்த backup யில் இருந்து, ரீஸ்டோர் செய்து, சில ப்ரோசிஜர் மற்றும் t a b l e லை நீக்கிவிட்டால், நீங்கள் சொல்லும்படி நடக்கும். நான் இன்று, அவருக்கு ஆதரவாக பேசவேண்டும் என்று நினைக்கவில்லை, ஒரு சிலர் கருத்து என் பதில் கருத்துக்கு காரணம்...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஆக-201216:35:12 IST Report Abuse
Nallavan Nallavanகிருஷ், சமீபத்தில் கூட ஒரு செய்திக்கான விமர்சனத்தில் மதுரை விருமாண்டி தேவையில்லாமல் "ரொம்ப நல்லவர்" என்று குறிப்பிட்டுள்ளார். எனக்கு அவரிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை """"உள்ளாட்சி அமைப்புக்களில் அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்டிக்கும் செயலில் ஜே உளஉளாக்கட்டிக்குத்தான் கண்டிக்கிறார் என்று அவர்களுக்குத் (கவுன்சிலர் etc.) தெரியும்"""" என்ற கருத்தை சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன் என்னைப் பொறுத்த வரை இரண்டு கழகங்களுமே தமிழகத்தைப் பீடித்த நோய்தான். இந்தச் செய்திக்கு அரசியல் கலக்காமல் கருத்து எழுத நினைத்தேன் முடியல...
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
30-ஆக-201203:06:32 IST Report Abuse
மதுரை விருமாண்டி@Nallavan Nallavan - Jubail ,சவுதி அரேபியா "இந்தச் செய்திக்கு அரசியல் கலக்காமல் கருத்து எழுத நினைத்தேன் முடியல.." - பாதை வேறானாலும் பயணம் ஒன்று தான் .... இலக்கும் ஒன்று தான்......
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
29-ஆக-201214:47:38 IST Report Abuse
ஆரூர் ரங எலி நாய் என்ன புலி கூட அங்கு வரலாம். சென்னை நகரத்திலேயே பொது சுகாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் ஒன்று அந்த மருத்தவமனை அமைந்துள்ள பகுதி.எங்கெஙகு காணினும் அள்ள அள்ளக் குறையாத குப்பை, சாக்கடை , கொசு, படிப்பறிவு குறைந்த ,பொது சுகாதார விழிப்புணர்வு குறைந்த ஏழைமக்கள் . இப்போதுள்ள நாய், எலியை ஒழித்தாலும் அந்தப் பகுதியில் சுதந்திரமாக நடமாடும் ஆயிரக்கணக்கான நாய்கள், லட்சக்கணக்கான எலிகளில் பல மருத்துவமனைக்குள் குடியேறும.அப்போது என்ன செய்வார்கள்? சுற்றிலும் சுவர் எழுப்பி , நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டுவருவர்களோ? தீர்வு? முதலில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள விதிமீறல் கட்டிடங்கள் , மார்க்கெட்டுகள்,பிளாட்பாரம் வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிப்புக்களை அகற்றுங்கள். தினம் குப்பை அள்ளுங்கள். தெருவில் குப்பை போட்டால் ஆயிரம் ரூ அபராதம் போடுங்க. அதிக கழிப்பறைகளைக் கட்டுங்கள். அதுவரை இந்த ஆஸ்பத்திரியை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் அருகில் அமையபோகும் (தலைமைச்செயலக) மருத்துவமனையில் குழந்தை மருத்துவப் பிரிவுக்கு அதிக இடம் ஒதுக்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.