லக்னோ:உ.பி.,யில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மற்றும் அக்கட்சி பொதுச் செயலர் ராகுல் தொகுதிகளான, ரேபரேலி மற்றும் அமேதியில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஐ.மு., கூட்டணிக் கட்சிகளின் தலைவருமான, சோனியா, உ.பி., மாநிலம், ரேபரேலி லோக்சபா தொகுதியில் இருந்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், இதே மாநிலத்தின் அமேதி லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக காங்., பொதுச் செயலர் ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவ்விரு தொகுதிகளிலும், தடை இல்லாமல் மின்சாரம் வழங்க, உ.பி., மின் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, நேற்று முன்தினம் இக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உத்தரபிரதேச மாநிலத்தின், பின் தங்கிய பகுதிகளை உள்ளடக்கிய, ரேபரேலி மற்றும் அமேதி லோக்சபா தொகுதிகளில், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தங்கு தடையின்றி, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பார்லிமென்ட் வளாகத்தில் சோனியாவும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்வும் நேரில் சந்தித்துப் பேசினர். இதற்கு பின், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நல்லா வைக்கிராங்கையா கூட்டு..சோனியாவும், முலாயம் சிங் யாதவ்வும் நேரில் சந்தித்துப் பேசினார்களாம்... இந்த அறிவிப்பாம்...நம்ம தானை தலைவர், துணைவி, இணைவி எல்லோரும் நேரில் சென்று சோனியாவை சந்தித்து பேசினார்கள்.. ஆனால் நடந்தது என்ன? தமிழன் என்றால் எப்பொழுதுமே இளக்காரம்.. அதுவும் தூய திராவிடத்தமிழர் என்றால் கேட்கவே வேண்டாம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.