சென்னை:பள்ளி பஸ்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை அரசு தாக்கல் செய்ய கால தாமதம் ஆவதற்கு, சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. விசாரணையை வரும், 3ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னை சேலையூரில், இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து பலியான சம்பவம் குறித்த வழக்கை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' தானாக முன்வந்து விசாரித்தது."பள்ளி பஸ்களை ஒழுங்குபடுத்த, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்; வரைவு விதிகளை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மீண்டும் விசாரணை:
இதையடுத்து, விதிமுறைகளை வகுக்க, குழு ஒன்றை அரசு அமைத்தது. இவ்வழக்கு மீண்டும், "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்த போது, "விதிமுறைகள் வகுக்கப்பட்டு விட்டன; அமைச்சரவை முன் தாக்கல் செய்து, இறுதி செய்யப்பட வேண்டும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.இவ்வழக்கு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, வரைவு விதிகளை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, சென்னை சம்பவத்துக்குப் பின், வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் ஐந்து பேர், இவ்வாறு விபத்தில் இறந்துள்ளனர் எனக் குறிப்பிட்டு, விதிமுறைகள் தேவை என, வலியுறுத்தினார்.
சரியான தருணம்:
இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:வரைவு விதிகளை தாக்கல் செய்வதாக அட்வகேட்-ஜெனரல் உறுதியளித்தும், இதுவரை அரசு சார்பில் தாக்கல் செய்யவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. வரைவு விதிமுறைகளுக்கு, அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனக் கூறி, இரண்டு முறை அனுமதியும் பெறப்பட்டது.இந்தச் சம்பவத்துக்குப் பின், இது போன்ற விபத்துகளில், பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் இறந்துள்ளதாக, கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வரைவு விதிகளை கோர்ட்டில் தாக்கல் செய்ய, இது சரியான தருணம். விசாரணை, 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேருந்து கட்டணம் மற்றும் விலைவாசிய எத்தனும்னா நள்ளிரவிலேயே உயர்த்தும் ஆத்தா..எங்க ஆத்தாவுக்கு கோட நாட்டிலே ஓய்வு எடுக்கவே நேரமில்லே. அதுலே போய் மக்களுக்கு ஆதரவா தனியார் பள்ளி நிர்வாகிகளை எதிர்த்து சட்டம் போட சொன்னா.. கருணாநிதியை எதிர்த்து சட்டம் போட சொன்னா ஆத்தா உடனே போட்டு தாக்கும்.. மக்கள் இருந்தா என்ன செத்தா என்ன.. .. மத்தபடி அடுத்த லோக்சபா தேர்தலோட பார்த்துக்கலாம்..ஆத்தா நாமம் வாழ்க...
ஜெயா அம்மா இப்போதான் 40 தையும் ஆட்டைய போடுறதுக்கு 4 மங்குனிகளை போட்டுருக்காங்க, அவங்களெல்லாம் பொதுமக்களுக்கு என்ன வேணுமுன்னு தெரிஞ்சுகிட்டு வந்து, அம்மாகிட்ட சொன்னாங்கன்னா அதன் அடிப்படையில் சிபாரிசு பண்ணி , புது சட்டமெல்லாம் 2014 தேர்தல் சமத்துல மேடையில சொல்லுவாங்க, அப்போதானே மக்களுக்கு, அம்மாவோட மக்கள் மீதான கரிசனமும், அக்கறையும் புரியும், எல்லாத்தையும் வோட்டாக்க முடியும், இப்போவே சொன்னா மக்கள் மறந்துட்டு வோட்டு போடாம போயிட்டா, இதெல்லாமா கண்டிப்பாங்க? அப்புறம் YGP பத்தியாரும் கோர்ட்டுல கேள்வி கேட்டுடாலும் பிரசினையாட்சே? அம்மா இங்கேயும் பெங்களுரே FORMULA தான் FOLLOW பண்ணுவாங்க போல,,,,, சரி சரி போங்க...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.