Jayalalithaa hits out at Centre for not honouring veteran composers | அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.எஸ்.வி.,க்கு பத்ம விருது மறுப்பு: ஜெயலலிதா - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.எஸ்.வி.,க்கு பத்ம விருது மறுப்பு: ஜெ.,

Updated : ஆக 30, 2012 | Added : ஆக 29, 2012 | கருத்துகள் (115)
Advertisement
 அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.எஸ்.வி.,க்கு பத்ம விருது மறுப்பு: ஜெ., குற்றச்சாட்டு

சென்னை: ""அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, பத்ம விருதை வழங்க, மத்திய அரசு மறுத்து விட்டது,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயா "டிவி'யின், 14ம் ஆண்டு விழாவும், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு பாராட்டு விழாவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

இதில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: அரசியல் ரீதியான எதிரிகள், மத்திய அரசின் தொல்லைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், வெளியேயும் எதிரிகள், உள்ளேயும் சதிகள் என, அனைத்தையும் எதிர்கொண்டு, ஜெயா "டிவி' எதிர் நீச்சல் போடுகிறது. மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்; 13 வயதில் மேடை கச்சேரி நிகழ்த்தியவர்; 700க்கும் மேற்பட்ட, திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்; 300 இசைக் கருவிகளைக் கொண்டும் இசையமைத்தவர்; மூன்று இசைக் கருவிகளைக் கொண்டும் இசை அமைத்தவர்; 500க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளவர். சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள், இவர் குழுவில் சேர்ந்ததும், சாப்பிட நேரமின்றி இருந்தனர். இவரது இணையான ராமமூர்த்தி, பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்தவர்; வயலின் வித்வான். நுண்ணிய ஒலிகளைக் கூட, மிக நுட்பமாக, இசையில் சேர்த்தனர். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, இவர்களது இசை தான் என் நெஞ்சில் நிறைந்துள்ளது.

இன்றைய இசைப் போட்டிகளில், பங்கேற்கும் சிறுவர், சிறுமிகள் கூட, எம்.எஸ்.வி., பாடல்களைத் தான், தேர்வு செய்து பாடுகின்றனர். தொலைக்காட்சி, டேப் ரெக்கார்டர், கணினி, சி.டி., டி.வி.டி., இல்லாத காலத்திலேயே, இவர்கள் கொடி கட்டிப் பறந்தவர்கள். சங்கீதம் தெரியாதவர்கள் கூட, இவர்களது பாடல்களை அனுபவித்த அளவுக்கு, இனிமையாக இசையமைத்தவர்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் காலம் தான், தமிழ்த் திரை இசையின் பொற்காலம். இப்படி புகழ் பெற்ற இவர்கள், பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், தேசிய அளவிலான பத்ம விருது, கிடைக்காதது வருத்தமாக உள்ளது. சென்ற ஆண்டுக்கான பத்ம விருதுக்கு, விஸ்வநாதன் பெயரை பரிந்துரைத்தேன். ஆனால், மாநில அரசுக்கு எதிரான கருத்துடைய மத்திய அரசு, இதற்கு செவி சாய்க்கவில்லை. "ஜனாதிபதி விருது வேண்டாம்; ஜனங்களின் விருதே போதும்' என, எம்.எஸ்.வி., கூறினாலும், நான் சொன்னால், விருதை அளிக்கும் காலம் கனியும்; அப்போது, இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன். இசையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, இசைப் பயிற்சியை அளித்து, சிறந்த இசைப்பாளர்களையும், பாடகர்களையும் எம்.எஸ்.வி., உருவாக்க வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

முன்னதாக, விஸ்வநாதனுக்கு "திரை இசை சக்கரவர்த்தி' என்ற பட்டத்தையும், விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு, 60 பொற்காசுகள் கொண்ட, பொற்கிழியையும் ஜெயலலிதா வழங்கினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Ashokkumar - Srivilliputtur,இந்தியா
31-ஆக-201212:34:51 IST Report Abuse
K.Ashokkumar MSV ராஜா ரஹ்மான் மூவரையும் ஒப்பிடாதிர்கள் மூவரும் தனித்தன்மை திறமை கொண்டவர்கள். ராஜ் களம் பொற்காலம் அல்ல MSV -ராம மூர்த்தி பொன்னாக்கினார்கள் அவர்களின் முந்தைய இசையோடு ராஜா அதற்கு வர்ணம் பூசி மங்காமல் பர்ஹ்டு மெருகேற்றிக்கொண்டே இருந்தார் ரஹ்மான் அதில் வைரம் பதித்து அழகு படுத்திவிட்டார் மூவரும் வல்லவர்கள் தான்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
30-ஆக-201222:42:04 IST Report Abuse
Natarajan Ramanathan MS விஸ்வநாதன் மற்றும் இளையராஜாவுக்கு இணை இல்லை. ரஹ்மான் இசை விரைவில் உயரே சென்று உடனே கீழே விழுந்து விடுகிறது. ஆயுசு கம்மி.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
30-ஆக-201222:10:29 IST Report Abuse
muthu Rajendran 50 ஆண்டு தமிழ் திரையுலகை தனது இசையால் கட்டிபோட்டவர் எம் எஸ் வி. அவருக்கு இந்திய அரசின் விருதுகள் கிடைக்கவில்லை என்பது ஒரு குறை தான். பொதுவாக எல்லா மத்திய அரசு விருதுகளுக்கும் மாநில அரசு பரிந்துரைப்பது வழக்கம் தான். அதில் பரிசீலித்து தேவையான ஓவ்வொரு துறைக்கும் குறித்த எண்ணிகையில் ஏற்றுகொள்வார்கள். இதெல்லாம் அரசுகளிடையே உள்ள தகவல் பரிமாற்றம் ஆகும். இதை இப்படி நேரடியாக பொதுமேடையில் பேசுவதை தவிர்த்திருக்கலாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் எம் எஸ் வி தமிழ்த்திரை உலகின் பிதாமகர். அவரிடம் இருந்து வந்தவர்கள் மற்றவர்கள் அவர்களும் சிறப்புக்கு உரியவர்கள் .
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
30-ஆக-201223:56:25 IST Report Abuse
BebetoMSV க்கு பத்ம விருது கிடைக்க வில்லை என்றால் அதற்கு காரணம், வட நாட்டு மனப்பான்மை. தமிழர்கள் என்றாலே ஆதி காலத்திலிருந்தே குத்து பாடல் தான் தெரியும் என்று பெயர் எடுத்தவர்கள். தமிழ் நாட்டின் மிக பிரபலமான இசை - பிணத்திற்கு முன்னால் ஆடி பாடி கொண்டு செல்வது. என் மேல் கோபிக்காதீர்கள் . இது கூகுள் சொல்வது. ஆகையால் தமிழனின் இசை ரசனை மிகவும் மட்டம் என்று வட இந்தியர்கள் தமிழ் கலைஞர்களை ஒதுக்குகின்றனர் . நாம்தான் நமது culture களை மாற்றி கொள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-ஆக-201218:32:40 IST Report Abuse
g.s,rajan MSV music is also sweet,that is a different style,then Isai Gnani Ilaiyaraja come and has totally changed the tr and he has given excellent evergreen melodies earned many listners from the year 1976,still one cannot be with out his music.A.R.Rahman also done well but his music cannot be listened all the time like Ilaiyaraja. g.s.rajan,chennai
Rate this:
Share this comment
Cancel
Gopal Arumugam - Bangalore,இந்தியா
30-ஆக-201218:15:50 IST Report Abuse
Gopal Arumugam அனைத்து வாசகர்களும் அழகான கருத்துகளை கூறி இருகிறார்கள். அதில் பலர் விஸ்வநாதன் இளையராஜா மற்றும் ரஹ்மான் மூவரையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அது சரி அல்ல. மூவரும் மூன்று விதமான இசை வடிவத்தை தந்தவர்கள். இதில் ஒப்பிடுவதற்கு எதுவுமே இல்லை. மூவருமே இசை உலகத்தின் முப்பெரும் வேந்தர்கள்.
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
30-ஆக-201217:18:36 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar நமது திரை, இசை தியாக ராசா பாகவதருக்கு பிறகு மாறிவிட்டது.., ஸ்ரீ.பாகவதர் இசையால் பக்தியும் அவர் காலத்து வாழ்ந்த கலைஞர் மூலம் தேச பக்தியும் வளர்ந்தது..., இப்படி தான் ஒரு கலை இருக்க வேண்டும். நல்ல காலம் ஒரு ஆங்கில கவிஞர் கடவுள் ஷேக்பியர் கூறிய உலகமே நாடக மேடை நாமெலாம் நடிகர்கள் நான் படிக்கும் பொது என் வாழ்வில் தனித்து பிரித்து அன்ன பறவை போல் எது தேவை எது தேவைஇல்லை அப்போது நீக்கி விடுவான். அதன் அடிபடையல் என் ஆளுமை திறமை வளர்த்துகொண்டு வருகிறேன். மேலும் ஒரு இசை கலைசர் மூலம் மெல்லிசையும் என்னுருருவர் மூலம் கிராம இசையும் நடைமுறை கலைஞர் மூலம் மேற்கத்தி இசையும் மாறின..,கற்பனை கலை - நிழல் பட நடிகர்களுக்கு நடிப்பிற்கு ஊயிர் கொடுத்தது எனலாம். நமது மக்களுக்கு எந்த பயனும் தரவில்லை..,மக்கள் மூளைi நன்றக தூங்கி விட்டது. மேக சீரியல் மூலம் குடுப்ப வுறவுகள் மறந்து விட்டது ஆனால் பின்னணி இசை பாடகர் குரல் மூலம் பாடல்கள் பக்தியும் நல் சிந்தனையும் வளர்கிறது. அதற்கு மும்மூர்த்திகள் தான் நாம் அனைவரும் நன்றி சொல்லவேண்டும். சென்னை வானொலி நிலையம் அறிமுகம் செய்த சேர்த்தி இசை காலத்தால் என்றும் அழியாதவை நான் நன்கு அந்த முதல் இசை மாணவனாக நல்ல ரசிகனாக அனுபவித்தவன்.., எப்போதொழுதும் மன சந்தோசத்தையும் கொடுகும்- பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
30-ஆக-201215:53:29 IST Report Abuse
s.maria alphonse pandian இந்த விழாவில் கமல் ரஜினி சோ உள்பட திரளான திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்னும் செய்தியை வெளியிடாதது ஏனோ? நடிகர்கள் சங்கம் அழைத்த போது வராத ஜெயா....தனது தொலை காட்சியின் ஆண்டு விழாவிற்கு அழைத்தபோது திரை உலகினர் அனைவரும் வந்து கலந்து கொண்டது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது....ஜெயாவை பாராட்டி அவர்கள் பேசிய பேச்சுக்களையும் வெளியிட்டிருந்தால் இங்கே கருத்து எழுதும் என்னை போன்ற பலருக்கும் உதவியாக இருந்திருக்கும்....
Rate this:
Share this comment
Pa. Saravanan - Kovai,இந்தியா
30-ஆக-201216:38:38 IST Report Abuse
Pa. Saravananஒன்று நிச்சயம் மரியா. பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் நீங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்....
Rate this:
Share this comment
alex thennavan - chennai,இந்தியா
30-ஆக-201216:39:48 IST Report Abuse
alex thennavanஅவர்கள் கலந்து கொண்டது பெருந்தன்மையால் அல்ல..பயத்தினால்.......
Rate this:
Share this comment
alex thennavan - chennai,இந்தியா
30-ஆக-201216:40:31 IST Report Abuse
alex thennavanஇளையராஜா...எஸ்பி போன்றோரும் கலந்து kondaarka l ..........
Rate this:
Share this comment
Govind - Delhi,இந்தியா
30-ஆக-201218:24:24 IST Report Abuse
Govindமரியா அல்போன்ஸ் அவர்களே, வழக்கம் போல உளறி கொட்டி இருகிறீர்கள். திரைபடதுறையினர் ஜெயாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்ன போது தான் மு க வை போன்று புகழ் விரும்பி அல்ல என்று சொல்லிவிட்டு நாசூக்காக ஒதுங்கி கொண்டார். ஆனால் அப்படி பட்ட ஒரு நிலையை உங்கள் தலைவனிடம் இருந்து யாரும் எதிர்பார்க்க முடியாது. புகழ்ச்சி என்பது மு க வுக்கு மூச்சு காற்று போன்றது. அது இல்லை என்றால் ......
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
30-ஆக-201215:50:29 IST Report Abuse
T.C.MAHENDRAN எம்.எஸ்.வி.மட்டுமில்லை, நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜிகணேசன், பல்லாயிரக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்களை பாடிய T.M.சௌந்திரராஜன், எழுதிய கவிஞர் வாலிக்கும் இதுவரை மத்திய அரசின் எந்த விருதும் வழங்கப்படவில்லை .
Rate this:
Share this comment
முக்கண் மைந்தன் - மெட்ராஸ் ,இந்தியா
30-ஆக-201216:32:51 IST Report Abuse
முக்கண் மைந்தன் வாலிக்கு விருது மு க (கருணை "இல்லாத" நிதி ) சார்பில் வழங்கப்படும். VSK Iyer...
Rate this:
Share this comment
Govindarajur Rajarethinam - Tiruchirappalli,இந்தியா
30-ஆக-201217:24:41 IST Report Abuse
Govindarajur Rajarethinamபத்ம விருதுகளுக்கான பட்டியல் மாநில அரசின் பரிந்துரையுடன் அனுப்புவதை பரிசீலனை செய்து விருதுகள் அறிவிக்கபடுவதுதான் நடைமுறையாக உள்ளது என கேள்விபட்டுள்ளேன். வீர தீர செயல்களுக்கு காவல்துறை அலுவலர்களுக்கு மாநில அரசின் பட்டியல் பேரில்தான் விருது வழங்கபடுகின்றன. இவ்வாறு இருக்கையில் அம்மா அவர்கள் ஆட்சில் இருந்த காலத்தில் இவர்களுக்கு விருது வழங்க பரிந்துரை செய்திருக்கலாமே?...
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம்
30-ஆக-201214:30:15 IST Report Abuse
Appavi Tamilan ஜெயா "டிவி" எதிர் நீச்சல் போடுகிறதா? அதிமுகவினரே ஜெயா டிவியை பார்ப்பதில்லை...கலைஞர் டிவியில் கூட கருணாநிதி புகழ் பாடுவது அளவாகத்தான் உள்ளது..ஆனால் ஜெயா டிவியில் அது உச்ச கட்டம்.... அதன் நிகழ்ச்சிகளும் நன்றாக இல்லை...ஜெயா செய்திகளை ஒரு முறை பார்த்தால் போதும், உங்கள் நினைவில் ஒரே ஒரு வார்த்தை மட்டுமே இருக்கும்..தமிழக முதல்வர் செல்வி ஜே.ஜெயலலிதா...என்ன கொடுமை என்றால் ஜெயாவின் பெயரை அவர் என்றோ அல்லது தமிழக முதல்வர் என்றோ கூறமாட்டார்கள்...தமிழக முதல்வர் செல்வி ஜே.ஜெயலலிதா என்று திரும்ப திரும்ப கூறுவார்கள்....ஜெயா டிவி முன்னேற வேண்டுமென்றால் ஜெயா புகழ் பாடுவதில் மட்டும் கவனம் கொள்ளாமல், மற்ற நிகழ்ச்சிகளின் தரம் உயர வேண்டும்...குறிப்பாக யாரும் காண விரும்பாத திரை படங்களை எல்லாம் திரையிடுவதை நிறுத்த வேண்டும்...
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
30-ஆக-201219:06:41 IST Report Abuse
A R Parthasarathyஅப்பாவி தமிழனாக இருந்தாலும் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. செய்தி வாசிப்பவர் ஒருமுறை முதல்வர் பெயரை குறிப்பிட்டு விட்டால், தொடர்ந்து சொல்லவேண்டிய அவசியமில்லை. முதல்வர், அவர் என்று சொன்னால் போதும். ஆனால் செய்திகள் வாசிப்பவர் கொஞ்சம் கூட சலிக்காமல், திரும்ப திரும்ப தமிழக முதல்வர் செல்வி ஜே ஜெயலலிதா என்று கூறுவார். கேட்பவர்களுக்கு என்னவோ போல் இருக்கிறது என்பதை என் உணர மாட்டார்கலென்று தெரியவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பதில் தமிழக மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் தானே ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள்? நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் சுயவிளம்பரம் அடித்து கொள்வதை விட்டுவிட்டு நிகழ்ச்சிகளில் தரம் உயர முயற்சித்தால் நல்லது. இது சம்பத்த பட்டவர்களின் பார்வைக்கு போகுமா? மாற்றத்தை எதிர் பார்க்கலாமா?...
Rate this:
Share this comment
Cancel
ganesan r - chennai,இந்தியா
30-ஆக-201213:57:26 IST Report Abuse
ganesan r நன்றி முதல்வர் அவர்களே. இந்த நாட்டில் விருதுகளெல்லாம் அரசியல் விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே வழங்கபடுகின்றன என்பதை ஒத்துக்கொண்டதற்கு. இதற்கு தங்களுடைய ஆட்சியையும் விலக்கல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை