புதுடில்லி : மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட, பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு, மும்பை ஐகோர்ட் விதித்த தூக்குத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது. "இந்தியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் பங்கேற்று, மிக முக்கியமான குற்றத்தைச் செய்த கசாப்பின் மேல்முறையீட்டு மனு, நிராகரிக்கப்படுகிறது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த, 2008 நவம்பர் 26ல், பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக, மும்பைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், ஓபராய், தாஜ் ஓட்டல்கள், சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர்.இதில், வெளிநாட்டவர் உட்பட, 166 பேர், பரிதாபமாக பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்ட, 10 பாகிஸ்தானியர்களில், ஒன்பது பேர், கமாண்டே படையினரால் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.தற்போது, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப் மீது, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு கோர்ட், கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது. மும்பை ஐகோர்ட்டிலும், இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. தன் மீதான தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கசாப், மேல்முறையீடு செய்தான்.
கசாப் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதலில் பங்கேற்றிருந்தாலும், அது தொடர்பான சதித் திட்டத்தில், எனக்கு எந்த பங்கும் இல்லை. சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்கள், எனக்கு மூளைச் சலவை செய்தனர். ஒரு ரோபோவைப் போலவே, என்னை பயன்படுத்தினர். எந்த குற்றத்தையும் நான் செய்யவில்லை. என் இளம் வயதை கருத்தில் கொண்டு, எனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில், கசாப் தெரிவித்திருந்தான். கசாப் சார்பில் ஆஜராகி வாதாடுவதற்கு, ராஜு ராமச்சந்திரன் என்ற வழக்கறிஞரை, உச்ச நீதிமன்றமே நியமித்தது. கசாப் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மும்பை
ஐகோர்ட் விதித்த தண்டனைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இரு தரப்பு வாதமும் முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு, ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நீதிபதிகள் அப்தாப் ஆலம், சி.கே.பிரசாத் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
வழக்கின் விசாரணை, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதற்கு, தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என, கசாப் கூறுவதை ஏற்க முடியாது. கசாப் சார்பில் வாதாடுவதற்காக, இந்த கோர்ட்டே, வழக்கறிஞரை நியமித்தது. குற்றம் செய்ததாக கசாப் ஏற்கனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை, இந்த கோர்ட், கவனத்தில் கொள்கிறது.இந்த நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் பங்கேற்று, மிக முக்கியமான குற்றத்தை கசாப் செய்துள்ளான். எனவே, மும்பை ஐகோர்ட் விதித்த தூக்குத் தண்டனையை, இந்த கோர்ட் உறுதி செய்கிறது.இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான சதித் திட்டம், பாகிஸ்தானில் தான் தீட்டப்பட்டுள்ளது என்பதை, இங்கு தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. இந்தியாவைச் சேர்ந்த பகீம் அன்சாரி, சகாபுதீன் அகமது ஆகியோரை, வழக்கில் இருந்து விடுவித்து, மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்பையும், இந்த கோர்ட் உறுதி செய்கிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், கசாப் சார்பில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதால், இப்போதைக்கு தண்டனை நிறைவேற வாய்ப்பில்லை என, சட்ட நிபுணர்கள்
தரப்பில் கூறப்படுகிறது.தீர்ப்பு குறித்து, கசாப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன்
கூறுகையில், ""உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்,''
என்றார். மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும், தீர்ப்பை
வரவேற்றுள்ளார்.
"தண்டனையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்':
காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறுகையில், ""அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, விரைவில் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.
பா.ஜ., மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில்,""நாட்டுக்கு எதிராக போர் புரிந்து, அப்பாவிகளை கொலை செய்தவர்களுக்கு, எந்த கருணையும் காட்டக்கூடாது. அரசு சார்பில் சிறையில், கசாப்புக்கு பிரியாணி வழங்கப்பட்டது போதும். எந்தவித தாமதமும் இன்றி, தண்டனையை விரைவில் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.
சுஷில்குமார் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சர் :""தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, கசாப், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தால், அந்த மனுவை, மிகக் குறைந்த காலத்தில் பரிசீலித்து முடிவு எடுப்போம். மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள், பாகிஸ்தானில் வசிக்கின்றனர். அவர்கள் மீது, பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கசாப்புக்கு தூக்கு மோடி, தாக்கரேக்கு எப்போது?
இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும்.
கசாப்பின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கசாப் இந்தியாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாக கூறி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தாலும் உடனடியாக முடிவெடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. பிரியாணி போட்டது போதும் கசாப்பை மட்டுமல்ல அப்சல்குருவையும் தூக்கிலிடுங்கள் என்கிறது பாஜக.
குஜராத் – நரோடா பாட்டியா படுகொலையை நடத்திய பஜ்ரங்தள்-ளின் பாபு பஜ்ரங்கி மற்றும் மோடியின் அமைச்சரவையில் முன்னர் அமைச்சராக இருந்த பாஜக வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாயா கோட்னானி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். 97 பேரை திட்டமிட்டு கொன்றதாக தெகல்காவில் பகிரங்கமாக பாபு பஜரங்கி போன்றவர்கள் ஒத்துக்கொண்ட பிறகும் கைதான 62 பேரில் 32 பேரை மட்டும்தான் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளார் நீதிபதி. ஆனால் சபர்மதி விரைவுவண்டி தீக்கிரையானதை விசாரித்த மத்திய அரசின் பானர்ஜி கமிசன் நடந்தது விபத்து எனச் சொன்னதும், அதன் அறிக்கையை 2005-இல் சட்டவிரோதமானது என்றது குஜராத் உயர்நீதி மன்றம். 58 பேர் இறந்த சபர்மதி விரைவுவண்டி தீக்கிரையான வழக்கில் நிரபராதிகளான 11 முசுலீம்களுக்கு தூக்குத்தண்டனையும், 20 பேருக்கு ஆயுள்தண்டனையும் கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
குஜராத் இனப்படுகொலை கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா-நானாவதிக் கமிசனின் ஆட்கள் தங்களவர்கள் என முன்னாள் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியா தெகல்காவிடம் போட்டுடைத்த பிறகும் அந்த கமிசன் ஷா இறந்தபிறகும் மற்றொரு நீதிபதியோடு தொடருகிறது. மோடி வந்த பிறகு போலீசார், நீதிபதி என அனைத்து அதிகார வர்க்கமும் காவிமயமானது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் இவர்கள் கூட்டணி அம்பலமானது அனைவருக்கும் தெரிந்ததே. சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிகாரியாக மாநில அரசு நியமித்த நோயல் பார்மர் முசுலீம்கள் அனைவருமே அடிப்படைவாதிகள் என முதலிலேயே வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புக்கு பின் அவரது நண்பரான ரமேஷ் படேல் எனும் அதிகாரியை நியமித்துள்ளது மோடியின் அரசு.
சபர்மதி வண்டி விபத்துக்குள்ளான 27 பிப்ரவரி 2002 அன்று நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலவரம் செய்யும் இந்துக்களை கண்டுகொள்ள வேண்டாம் என உத்தரவிடுகிறார் மோடி. இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிகாரியான சஞ்சீவ் பட் வெளிப்படையாக பேசத் துவங்கியவுடன் மோடியின் போலீசு அவர்மீது பாயத் துவங்கியது. இந்துமதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இசான் ஷாப்ரியின் மனைவி ஜாகியா ஷாப்ரி இதனை சுட்டிக்காட்டியவுடன், அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளை வைத்து பொய் சாட்சியம் சொல்ல வைத்தும், ஞாபகமில்லை என சொல்ல வைத்தும் சஞ்சீவ் பட்டையே வில்லனாக்கினர் மோடியின் புலனாய்வுக்குழுவினர். 3 வழக்குகளையும் அவர் மீது பதிவு செய்தனர்.
97 பேரைக் கொன்ற நரோடா பாட்டியா வழக்கில் குற்றவாளிகள் பலரும் ஆம், நாங்கள் அப்படித்தான் கொன்றோம் என்பதை தெகல்விடம் பெருமையோடு ஒப்புக் கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் எதுவும் 20 ஆண்டுகளுக்கு மேல் போகாது. ஆனால் சபர்மதி வண்டி விபத்துக்கான பகுதியில் வசித்தவர்கள் முசுலீம்களாக இருந்த காரணத்துக்காக தூக்குத் தண்டனையும், மரண தண்டனையும்.
2000 க்கும் மேற்பட்டோரை கொன்ற கொலைகாரன் மோடிக்கு பிரதமர் பந்தயக் குதிரை பதவி. இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும். கசாப்பை தூக்கிலடக் கோருவோருக்கு பாபு பஜ்ரங்கியும், மோடியும் தூக்கிலிடப்பட வேண்டியவர்களாக படாமல் போன காரணத்தை அவர்கள் ஆராய வேண்டும். பாபர் மசூதியை இடித்து கலவரம் நடத்திய அத்வானியும், மும்பை கலவரத்தை நடத்திய பால் தாக்கரேவும் கொல்லப்பட்டவர்களுக்கு பொறுப்பேற்று என்ன தண்டனை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
யாரும் எதுவும் பேசி பலனில்லை .இந்தியாவில் இந்துக்கள் இறக்குமதி செய்யப்பட்ட மற்ற மதங்கள் ,இறக்குமதி செய்யப்பட்ட ஆளும் கும்பல்இவற் றை ஒன்றும் செய்யமுடியாது .அதுதான் இந்தியாவின் தலை எழுத்து .இந்துக்கள்
minority ஆகி பாகிஸ்தானி வசிக்கும் இந்துக்கள் நிலைக்கு வருவார்கள்.காங்கிரஸ் அதற் காக பாடுபடுகிறார்கள்.
மாவோச்ட்டுக்கள் இந்துக்களாக இருந்தாலும் அவர்கள் இந்துக்களுக்காக போராடுவதில்லை. அவர்களின் குறிக்கோள் மத ரீதியானது அல்ல. ஆனால் முஸ்லீம்கள் போராடுவது இஸ்லாமிய மத ரீதியாகத்தான். இஸ்லாமியத்தை பரப்பவும் உலகை இஸ்லாமிற்கு மாற்றவும்தான். ஆனால் அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகள் அல்ல. அனைத்து தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள். இந்துக்கள் இப்படி மத ரீதியாக கொலை கொள்ளைகளில் ஈடுபடுவதில்லை உங்களிடம் நன்றாக பேசும் முஸ்லீம்கள் உள்ளத்தில் ஒன்று வைத்துப்பார்கள். எச்சரிக்கை....
பாகிஸ்தானிடம் நாம் ஏன் பயப்படவேண்டும். கசாப் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவன் இல்லை என்று அந்த நாடே கூறிவிட்டது. பிறகு ஏன் தாமதம். அவர்களை போல தகுந்த ஆதாரம் இருக்கிறதா என்று நாம் பாகிஸ்தானிடம் கேள்வி கேட்டால் போதும். மீண்டும் அவர்கள் கேள்வி கேட்டால் இன்னும் ஆதாரம் வேண்டும் இந்த ஆதாரம் போதாது என்று சொல்ல வேண்டும். நாம் பாகிஸ்தானிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.
கசாப் தூக்கில் போடப்படுவது இங்கு முக்கியமாக கருதபடுவது ஒரு பக்கம் இருந்தாலும், பயங்கரவாதம் இதனால் அழியாது. 116 பேருக்கு 1 மரணம் என்பது எந்த விதத்திலும் சமன்படுத்தாது. கசாப் ஒரு துருப்பு சீட்டே தவிர அவனே தலைவன் அல்ல. இன்று கசாப், நாளை இன்னொருவர். இந்த தூக்கின் நோக்கம் என்ன? அரசாங்கம் மார் தட்டிக்கொள்ளவா? கசாப் இறப்பதனால் முழு பாதுகாப்பு உறுதி படுமா? உண்மையான தீர்வு காண அரசாங்கம் முன் வரவெண்டும். - Bluesun
மனித உருவத்தில் இருக்கும் இந்த கொடிய மிருகம் அஜ்மல் கசாபை தூக்கில் போட்டு கொல்ல வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் யாருக்கும் கிடையாது... மாற்றுக் கருத்து இருக்கவும் கூடாது.
ஒரு நாட்டிலிருந்து, மற்றொரு நாட்டிற்குள் சட்டவிரோதமாக ...நுழைந்து, அங்கு வாழ்கிற மக்களின் உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்துவது என்பது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இதனை யாரும் மறுக்க முடியாது - மறுக்க கூடாது.
ஆனால், இந்த அளவுகோலை, தனது வசதிக்கேற்ப, தேசபக்தி என்கிற பொய்யான போர்வையில் சிலர் (பலர்) மாற்றிக் கொள்கிறார்கள்.
அஜ்மல் கசாபை தண்டிக்க வேண்டும் என்று ஒலிக்கும் பல குரல்களில், தேசபக்தி என்கிற போர்வையில், ஒருவித மத அரிப்பை தணிக்கும் குரல்களும் சேர்ந்து ஒலிப்பதை எளிதாக காண முடிகிறது.
இவனைப் போன்றே, எல்லை கடந்து அடுத்த நாட்டுக்குள் (பாகிஸ்தானுக்குள்) நுழைந்து, அங்குள்ள மக்களின் உயிர் பலிக்கு காரணமான, சரப்ஜித் சிங், சுர்ஜீத் சிங் போன்றவர்களை தூக்கில் போட்டு கொல்லுங்கள் என்று இந்த தேசபக்தர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?????
நமக்கு வடிந்தால்... அது ரத்தம் அடுத்தவனுக்கு வடிந்தால்... அது வெறும் தக்காளி சட்னிதான் என்கிற வடிவேலு காமெடிதானா, இந்த போலி தேச பக்தி???..ஒவ்வொரு பாகிஸ்தான் காரனும் பச்சை துரோகிகள் .. தீவிரவாதத்துக்கு
ஜாதி மதம் கிடையாது .. பின் ஏன் நீங்கள அடித்து கொள்கிறீர்கள் .. இவனை போல் ஒரு துரோகியை இன்னும் விட்டு வைப்பதே பாவம் ஆனால் இங்கு ஜனநாயகம் எங்கு இருக்கிறது .. ராஜீவ் காந்தியை கொன்றவனுக்கு ஒரு தீர்ப்பு கசாபுக்கு ஒரு தீர்ப்பா.. நாங்கள் மதத்தால் இஸ்லாமியர்களாக இருந்தாலும் எப்போதும் இந்தியர்களே .. அரபு நாடு போல தீர்ப்பு கொடுத்தால் .. குற்றமும் குறையும் நாடும் உருப்படும் . அரபு நாட்டில் தண்டிக்க படுபவர்களில்
80 % முஸ்லிமாக தான் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு கிடைக்கும் தண்டனைக்காக யாரும் வருந்த வில்லை .. நம் நாட்டிலேயும் அதே போல் தப்பு செய்தவனுக்கு தண்டனை உடனேயே கொடுக்க வேண்டும்அது கசாப இருந்தாலும் சரியே காமேஸ்வரனாக இருந்தாலும் சரியே .. ஒழிக தீவிரவாதம் வாழ்க பாரதம் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.