பதிவு செய்த நாள் :
கருத்துகள் (73)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: ""சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அரசின் நடவடிக்கைகள், பேப்பரில் தான் உள்ளது; தீவிர நடவடிக்கை இல்லை,'' என, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் தெரிவித்தார். திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், ஒரு குழந்தை இறந்தது. அந்த குழந்தையின் கன்னத்தில் எலி கடித்து குதறியதாக செய்தி வெளியானது. அரசு மருத்துவமனைகளில் நாய், எலி, பூனைகளின் தொல்லைகள் குறித்தும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, நேதாஜி போக்குவரத்து தொழிலாளர் பாதுகாப்பு தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நடத்துனர் சடையன் என்பவர், ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி விசாரணை: மனுவில், "மருத்துவமனைகளில் நாய், பூனை, எலிகள் தொல்லை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தான் ஏழை எளியவர்கள், நடுத்தர மக்கள் சிகிச்சைப் பெறுகின்றனர். அவர்கள் மத்தியில் பய உணர்வு உள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளைப் போல சுத்தமாக வைத்திருக்கவும், எலி, நாய், பூனைத் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், நீதிபதிகளிடம் கூறியதாவது: மருத்துவமனைக்குள் பார்வையாளர்களை,

நோயாளிகளின் உறவினர்களை அனுமதிக்க மறுக்கின்றனர். ஆனால், எலிகளும், பூனைகளும் நோயாளிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றன. மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் தாய், மகள் அருகில் எலிகள் இருப்பது போல் "தினமலர்' பத்திரிகையில் கார்ட்டூன் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கருப்புப் பூனை படை பாதுகாப்பு இருப்பது போல், நோயாளிகளுக்கு எலிகள் பாதுகாப்பாக இருக்கிறதா? இவ்வாறு கூறிய அவர், பத்திரிகையில் வந்த செய்தியையும் நீதிபதிகளிடம் காட்டினார்.

அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: அரசு இந்த விஷயத்தில் கடுமையாக உள்ளது. முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், மருத்துவமனைகளில் நாய், எலி, பூனை தொல்லைகளை தடுப்பதற்காக, கூடுதல் ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement

அலட்சியத்தால் இறக்கவில்லை: இந்தச் சம்பவம் தொடர்பாக, இரண்டு டாக்டர்கள் உள்ளிட்ட ஏழுஊழியர்கள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். நோயாளிகளின் பாதுகாப்புக்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தை இறந்துள்ளது. முறையான சிகிச்சை அந்தக் குழந்தைக்கு அளிக்கப்பட்டது. மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியத்தால், அந்தக் குழந்தை இறக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை நீதிபதி இக்பால், ""இந்தச் சூழ்நிலை எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. உங்கள் நடவடிக்கைகள், பேப்பரில் தான் உள்ளது; தீவிர நடவடிக்கை இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் கூறிய விவரங்களை, பதில் மனுவில் விரிவாக குறிப்பிடுங்கள்,'' என்றார். இதையடுத்து, விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்வதாக, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். பின், விசாரணையை நான்கு வாரங்களுக்கு, "முதல் பெஞ்ச்' தள்ளிவைத்தது.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (73)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar S - singapore,இந்தியா
31-ஆக-201219:59:05 IST Report Abuse
Sivakumar S எங்களுக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் .நிருபிக்குரோம்ல ஆமா ........... நன்றி சிவகுமார் சிங்கை .
Rate this:
Share this comment
Cancel
31-ஆக-201219:49:31 IST Report Abuse
கூடல்நகர் வெ இராசா இராமன் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி தேர்தலில் வென்றது செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அவர் மட்டும் எப்படி பங்கேற்கலாம்?
Rate this:
Share this comment
Cancel
- vellore,இந்தியா
31-ஆக-201218:55:02 IST Report Abuse
 மருத்துவமனை என்றால் மருத்துவர்களே எல்லாவற்றக்கும் பொறுப்பு என்று கிடையாது. தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போல மேனேஜர்,administrative officer,suprendent, ஆகியோரை நியமிக்க வேண்டும். இல்லைஎன்றால் நாய் பிடிக்கவும் எலி பிடிக்கவும் மேலும் கராத்தே குங்க்பூ போன்ற கலைகளை மருத்துவ பாட திட்டத்தோடு சேர்க்கவும்..
Rate this:
Share this comment
Cancel
SARAVANA MURUGAN - madurai,இந்தியா
31-ஆக-201217:24:35 IST Report Abuse
SARAVANA MURUGAN உயர்நீதி மன்றம் தமிழக அரசை கண்டித்தாலும்,இந்த அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்க போவதில்லை.......தனெக்கெதிரான சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதி மன்றம் எத்தனையோ முறை எச்சரித்தும் தொடர்ந்து வாய்தா வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஜெ எவ்வாறு இதற்கு செவி சாய்ப்பார். அட்வகேட் ஜெனரல் அவர்கள் சமச்சீர் கல்வி விவகாரத்தில் பட்ட அடியை மறந்திருக்கமாட்டார்...இது போன்ற பொதுப்பிரச்சனை தொடர்பான வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றேன் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தந்து நீதி மன்றங்களில் குட்டு படுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல……அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்துவதற்கு எத்தனையோமுறை அமைச்சர் சென்றார்……பாவம் அவர் எலி துங்குவதை பார்த்திருக்க மாட்டார்.இந்தமுறை எலி வந்த பிறகு தான் இந்த விவகாரம் உயர்நீதி மன்றம் வரைக்கும் வந்துள்ளது…அடுத்தமுறை புலி வரும்…..பாம்பு வரும்…யாரையாவது தாக்கும்….அடுத்ததாக உயர்நீதி மன்றம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை அரசிடம் விளக்கமாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்ப உத்தரவிடும்…..எலியை துரத்தும் போதே அருகில் இருந்த பாம்பையோ……புலியையோ துரத்தினால் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பிரச்சனையை சமாளிக்கலாம்…..ஆனால் பாவம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்சமயம் எலியை மட்டுமே தேடுவார்கள்….துரத்துவார்கள்….இது அவர்களின் மெத்தனப்போக்கு அல்ல………அரசின் மெத்தனப்போக்கு…………….அரசு எந்திரம் சரியாக இருந்தால் எலியை மட்டும் அல்ல வரப்போகும் புலியையும் எதிர்கொள்ளலாம்…………
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
31-ஆக-201217:19:30 IST Report Abuse
Tamilar Neethi அரசு மருத்துவமனை நடத்தும் யோக்கியதை. AIADMK ஆட்சியின் ஓராண்டு சாதனை . காலரா சாக்கடை - குடிநீரில் கழிவு - குவியும் குப்பை - இருளில் தெரு - இறந்தாலும் எலிகடி மருத்துவமனயில் எலி , நாய் , கரப்பான் பூச்சி , சாக்கடை, கொசு , நாற்றம், அழுக்கு, நுழை வாயிலில் இருந்து பிணவறை வரை கொஞ்சம்- பெரிய லஞ்சம் இதுதான் அரசு மருத்துவமனை. இது காலம் காலமாய் நாடந்து வரும் நிகழ்வு. இங்கு பணி புரியும் துப்புரவு தொழிலாளர்கள் அரசு பாதுகாப்பில் வலம் வரும் ஒருமாதிரி ஆசாமிகள் . இவர்கள் மருத்துவமனை பராமரிப்பு பார்க்க சொன்னால் இப்படி எலி பூனை நாய் பாம்பு வளர்கிறார்கள். இவர்களை எந்த மருத்துவ அதிகாரியும் கட்டுபடுத்த முடியாது. செங்கொடி சங்கம் கூட இவர்கள் பக்கம். இதில் வேறு மருத்துவர்கள் ஏகப்பட்ட வீக் -. விபத்து நடந்து இவர்கள் வசம் மாட்டிகொண்டால் அவளவுதான். வெளியில் பிணம் தான் வரும் . இதில் வேறு அரசு புதிய தலைமை செயலகம் , நூலகம் எல்லாம் மருத்துவமனை - எலி நாய் வளரும் இடம் ஆக்க முயல்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் - எல்லா துறையிலும் எலிகள் ஆதிக்கம் ... சில துறைகளில்- நாய்கள் ஆதிக்கம் ..இதற்கு மருத்துவர்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் தலைமை செயலகம் துறை செயலர்கள் , அமைச்சர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் . ஒருபக்கம் காலரா , மறுபக்கம் எலிகடி - கூவம் இப்படி ஒரு சென்னை . சென்னை மிக வேகமாய் வளர்கிறது - எலி தெரு நாய் என்று .... பேசாமல் சுகாதார துறை இன்னும் மக்கள் நலம் புரியும் பிற அரசு துறை எல்லாம் தனியார் வசம் ஒப்படைத்து விட்டு அரசு மேஜை கீழ் மேஜை மேல் வருமானம் வரும் துறைகளை மட்டும் தான் வசம் வைத்து கொள்ளலாம். இத்தனை இலவசம் கொடுக்கும் அரசு அரசு மருத்துவமனைக்கு வேலி, வெளிச்சம், துப்புரவு , காவல் கொடுக்க முடியாது எதோ ஆப்ரிக்கா தேசத்தில் இருப்பது போல மருத்துவமனைக்குள் எலி , தெருநாய் - பேருந்தில் பெரிய ஓட்டை - நீச்சல் குளத்தில் சாவு - அரசு துறை இயங்குகிறதா இல்லை தூங்குகிறதா இல்லை இதுதான் வளரும் வேகமா இல்லை காசு பார்க்க எலி ஒழிப்பு நிதி ஒதுக்கி - சும்மா நாடகமா இருக்கும் நிதி எல்லாம் - என்னஆச்சு புதிதாய் எலி பிடிக்க நிதி- நீதி துறை மட்டும் இலாவிட்டால் - இந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் -ஆடி தீர்த்து விடுவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
k.vijayakumar - chennai,இந்தியா
31-ஆக-201217:14:44 IST Report Abuse
k.vijayakumar அரசாங்க மருத்துவமனை ,பொது கழிப்பிடம்,கட்டண கழிப்பிடம்,சென்னை கழிவுனீறு குழாய்கள்,பேருந்து நிலையங்கள்,அரசாங்க விரைவு பேருந்துகள் நிறுத்தும் தனியார் உணவகங்கள் ,இவை அனைத்தும் நோய் பரப்பும் டவர்கள், இவை நன்றாக நோய் பரப்புகின்றனவா என்பதை கவனிக்க சுகாதர துறை,மாசுகட்டுபாட்டுவாரியம் ,கழிவுனீர் வாரியம் ,இந்த மருந்தை தயாரித்தால் நிறையவே விற்கும் என்பதை அறிவிப்பு கொடுக்கும் மருத்துவ துறை இந்த கூட்டணி ,அள்ளிதரும் பணம் தான் அரசியல் கட்சிகள் தேர்தல் சமயதில் வேட்பாளாருக்கு &வாக்காளருக்கு கொடுக்கபடும் பணம் .இதில் தவறு யில்லை கொஞ்சம் முதலீடு அதிக இலாபம்
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
31-ஆக-201215:19:57 IST Report Abuse
s.maria alphonse pandian வருகிற எட்டாம் தேதி நடைபெற உள்ள உயர்நீதிமன்ற 150 ஆவது ஆண்டு விழாவில் நீதிபதிகளுடன் ( சொத்து குவிப்பு வழக்கில் உள்ள ) ஜெயா மேடையில் சரி சமமாக அமர அனுமதிக்க கூடாதென கோரி வழக்கறிஞர்கள் செய்து வரும் போராட்ட செய்தியை வெளியிடாதது ஏனோ?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-ஆக-201217:56:44 IST Report Abuse
தமிழ்வேல் """" சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீனில் உள்ள """" என்று எழுதுவது சரியாக இருக்கலாம்......
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
31-ஆக-201220:54:30 IST Report Abuse
A R Parthasarathyஇதுபோன்ற தகவல்கள் உங்கள் கண்களுக்கு மட்டுமே தெரிகின்றதே ஏன்? கலைஞர் ஜெயாவை மறந்தாலும் நீங்கள் மறக்க மாட்டிர்கள் போல் இருக்கிறதே....
Rate this:
Share this comment
Cancel
KAARTHI - Paris,பிரான்ஸ்
31-ஆக-201215:00:42 IST Report Abuse
KAARTHI ""இந்தச் சூழ்நிலை எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. உங்கள் நடவடிக்கைகள், பேப்பரில் தான் உள்ளது. தீவிர நடவடிக்கை இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் உறுதி செய்ய வேண்டும்.""" அடுத்தவருடம் இதே தேதியில் அதே ஆஸ்பத்திரியில் நீதிபதி திடீர் விஜயம் செய்ய வேண்டும்...
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
31-ஆக-201216:44:30 IST Report Abuse
s.maria alphonse pandianநீங்கள் சொல்வதை பார்த்தால் நீதிபதியே நாட்டை ஆளவேண்டும் என்பீர்கள் போலிருக்கிறது.......
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
31-ஆக-201214:39:18 IST Report Abuse
ராம.ராசு அரசு, நீதிமன்றங்களுக்குக் கட்டுப்பட்டது என்று ஆளுபவர்களுக்கு காட்டுவது போல உள்ளது இந்த கண்டிப்பு. அரசு மருத்தவமனைகளில் தவறு நடந்து, அதற்காக வழக்குப் போட்டபிறகுதான் இதுபோன்ற கண்டிப்புகள். ஏன்... நீதிபதிகளும் அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் தங்களுக்கான சிகிச்சையை அரசு மருத்துவமனியில் எடுத்துக்கொள்ளலாமே. அப்போது அவர்களே அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து பிறகு கண்டிப்பாய் உறுதிபடுத்தலாம். வழக்கு என்று வந்த பிறகுதான் இந்தக் கண்டிப்பு என்றால் சாதாரணமானவர்களுக்கும், நீதிபதிகளுக்கும் என்ன வேறுபாடு...? மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்வது என்பது அவ்வளவு சிரமமானது அல்ல. அரசியல் தலியீடு இல்லாத மருத்துவ அதிகாரிகள் நியமனம், நேர்மையான பொதுநலன் கொண்ட மருத்துவ, ஊழியர்களை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்த அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்படுவார்களேயானால் அரசு மருத்துவமனை சுத்தமாக, சுகாதாரமாக இருக்கமுடியும். அங்கீரத்திர்க்காக, வெறும் கடைமைக்காக பணியை செய்யும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருக்கும்வரை அவர்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை செம்மையாக அவர்களால் வேலை வாங்க முடியாது. சாட்டை சுழற்றும் அதிகாரத்தால் சிறப்பான பணியை பெறமுடியாது. அவரவர் பணியை உணர வைக்கும் பக்குவம் உள்ள அதிகாரிகளால் மட்டுமே மருத்துவமனை சிறப்பாக நடத்த முடியும். அதற்கு மேல், செலவைக் காரணம் காட்டி போதுமான பணியாளர்களை நியமனம் செய்யாமல் இருப்பதும் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கும் என்பதும் எதார்த்தமான உண்மை.
Rate this:
Share this comment
K. Rajan - Tirunelveli ,இந்தியா
31-ஆக-201216:46:47 IST Report Abuse
K. Rajan நீதிபதிகள் வெளியே நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் மூக்கை நுழைக்க முடியாது. நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் மனு மீதுதான் நீதிபதிகள் விசாரிக்க அல்லது தங்களின் கருத்தை சொல்ல முடியும்....
Rate this:
Share this comment
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஆக-201217:17:52 IST Report Abuse
Mohanadas Murugaiyanஉண்மை அதுவல்ல...அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ஏழைகள் என்பதால் காட்டப்படும் அலட்சியம்தான் முதல் காரணம் .அவர்கள் வாங்கும் சம்பளத்தில் அந்த ஏழைகள் கட்டும் வரிப்பணமும் இருக்கிறது என்பது அவர்களுக்கு புரிவது இல்லை.ஏதோ அவர்கள் சொந்தப்பணத்தில் யாசகமாக செய்வதுபோல் நினைப்பு..அரசு வேலையில் இருக்கும் பலரும் இந்த நினைப்பில்தான் இருக்கின்றனர்.பேசாமல் அரசு வேலைகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு ஏழைகளுக்கு இலவச சேவை செய்வதை கட்டாயமாக்க சட்டம் கொண்டுவரலாம் .அதை கண்காணிக்க முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கலாம்........
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
31-ஆக-201221:00:45 IST Report Abuse
A R Parthasarathyஇவை அனைத்தும் நீதிபதிகளுக்கோ, அரசுக்கோ தெரியாது என்றா நினைகிறீர்கள்? எல்லாருக்குமே தெரியும். அரசுக்கு இயலாமை. நீதிபதிகளுக்கு நேரமின்மை. அவர்கள் இது போன்ற புலன் அரியும் செயல்களிலெல்லாம் ஈடு பட மாட்டார்கள். அவர்களுடைய வேலை நீதி மன்றத்தோடு சரி. நீதிபதி பீடத்தை விட்டு இறங்கினால் அவரும் சாதாரண மனிதர்தானே?...
Rate this:
Share this comment
Cancel
Siruvani - Raipur,இந்தியா
31-ஆக-201214:00:31 IST Report Abuse
Siruvani " சட்டங்கள், திட்டங்கள் எல்லாமே காகிதத்தில் மட்டுமே " எனவே அதிரடி என்று தினமலரில் செய்தி வர மட்டும் செய்யாமல் மக்கள் அன்றாட பிரச்சனைகள் தீர எதாவது செய்யுங்கள். ஏன் பொறுப்பாளிகளை பணியிடை நீக்கம் மட்டும்தான் செய்கிறீர்கள், பணி நீக்கம் செய்யுங்கள் அரசு வேலை செய்ய ஆட்கள பஞ்சம் ........ பணியிடை நீக்கம் என்பது சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக மட்டுமே இருக்கும் பணி நீக்கம் செய்து பாருங்கள் யாரும் அலட்சியமாக பணி நேரத்தில் தூங்க மாட்டங்க ( பணி நேரத்தில் )
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.