Delta farmers goes for 100 day work | குறுவை பொய்த்ததால் நூறு நாள் வேலைக்கு சென்ற டெல்டா விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறுவை பொய்த்ததால் நூறு நாள் வேலைக்கு சென்ற டெல்டா விவசாயிகள்

Updated : செப் 01, 2012 | Added : ஆக 30, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததாலும், பருவமழை பொய்த்ததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகள் இரண்டு லட்சம் பேர், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நூறு நாள் வேலைக்குச் செல்கின்றனர். பருவமழை பொய்த்தது, கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தது போன்ற காரணங்களால், தமிழகத்தில் நடப்பாண்டில், குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சாகுபடி செய்யும் பரப்பில், 30 முதல், 40 சதவீத பரப்பு குறைந்திருக்கிறது. தற்போது நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக, கிணற்று நீர் பாசனமும், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால், டெல்டா விவசாயிகள் பலர், தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள, நூறு நாள் வேலைத் திட்டப் பணிக்குச் செல்வது, அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, உள்ளாட்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு நாள் வேலைத் திட்டத்தில், மாநிலம் முழுவதும், நாளொன்றுக்கு, 17 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். கடந்த சில வாரங்களாக, இந்த எண்ணிக்கை, 19 லட்சமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தஞ்சை, நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திடீரென்று இரண்டு லட்சம் பேர் வேலைக்கு வந்ததால், நூறு நாள் வேலைத் திட்டத்தில், புதிய திட்டங் களை வகுக்க வேண்டியுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை, கிராம ஊராட்சிகள் தயார் செய்துள்ளன. தமிழகத்துக்கு, ஆண்டுக்கு, 5,300 கோடி ரூபாயை, நூறு நாள் திட்டத்திற்காக, மத்திய அரசு ஒதுக்குகிறது. இங்கு வேலை கேட்டு வரும் தொழிலாளர்களுக்கு, "வேலை இல்லை' என்று சொல்வதில்லை. இவ்வாறு உள்ளாட்சித் துறை அதிகாரி கூறினார். விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும், ஒரு நாள் கூலியான, 132 ரூபாய் தான், விவசாயக் குடும்பங்களுக்கு ஓரளவு உதவுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radha - trichy,இந்தியா
31-ஆக-201222:19:21 IST Report Abuse
Radha they are providing only Rs.100. not Rs.132 evidence=myself & my mother
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
31-ஆக-201210:00:25 IST Report Abuse
JAY JAY பஞ்ச காலங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கை கொடுக்கிறது என்ற உண்மையை மறக்கவோ, மறுக்கவோ இயலாது.... விவசாயிகளுக்கு வெறுமனே , நிவாரணம் கொடுக்காமல் , வேலை வாங்கி சம்பளம் கொடுக்கும் இந்த திட்டம் பாராட்டுக்கு உரியது.... ஆனால் இப்போது செய்யப்படும் வேலைகள் , அடுத்து மழை வரும்போது உபயோகபட வேண்டும்.... நீரில்லா ஏரிகளை , குளங்களை, கண்மாயிகளை , இந்த 2 மாதத்தில் தூர் வாரினால், அடுத்த மழை , செழிப்பானதாக இருக்கும்.....பஞ்ச காலங்களுக்கு மட்டும், மத்திய அரசின் இந்த திட்டம் உபயோகமானது என்பதை அறுதியிட்டு சொல்லலாம்.... உழைத்து 130 ரூபாய் வாங்கினாலும் அது செரிமானமாகும் அவர்களுக்கு.... ஆனால் பஞ்ச காலங்களில் , வறட்சி சமயத்தில் மாதத்திற்கு 20 நாட்கள் அவர்களுக்கு வேலை இருக்குமாறு அரசு கவனிக்குமேயானால் தான் அவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ முடியும்....
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
31-ஆக-201209:01:37 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே கருநாடகம் தண்ணீர் தர மறுத்து விட்டதா? ஆஹா ஆஹா கருநாடகத்தில் என்னன்னா வறட்சி என்று கூறி மழை வேண்டி யாகம் என்று நடத்துறாங்க, இங்க பத்திரிக்கைகள்/மீடியாக்கள் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறார்கள்?, ஒரு வேலை கருநாடக மேகங்கள் தண்ணீர் தர மறுத்துவிட்டது என்று கூறலாமோ?, மத்தியப்ரதேசத்திலும், ஓடிசாவிலும், ஐதராபாத்திலும், கேரளாவிலும் மழை கொட்டுகிறது, சாலை பெருக்கெடுத்து ஓடுகிறது, சில இடங்களில் வெள்ளம் என்று செய்தி வருகிறது, கேரளா மலைபகுதி மழை நீர் அரபு கடலில் கலக்கிறது, அதே இந்தியாவில் ஒரு பகுதியில் வறட்சி, விவசாயம் பாதிக்கிறது, மத்தியில் ஆளும் கட்சியின் இளம் தலைவனோ நதி நீர் இணைப்பு கூடாது, சாதியபடாது என்று கூறுகின்றான்? எங்கே போயி முட்டிக்கொள்வது, கதம்பமான செய்திகள், தினமலரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து செய்தி தருகையில் தெளிவாய் குறிப்பிடுங்கள், இல்லையென்றால் எட்டப்ப மன்னன் பொங்கி எழுந்து கடிதம் எழுத புறப்பட்டு பின்னர் சிறை நிரப்புவான், கருநாடகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அல்லல் உறுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthy - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-201208:56:50 IST Report Abuse
Krishnamoorthy 100 நாள் வேலை திட்டம்? இதனால் இருக்கின்ற ஒரு சில விவசாய கூலி ஆட்களும் விவசாயம் செய்ய வருவதில்லை.... 100 நாள் திட்டம் மட்டும் தான். அதனால் பயன் அடைபவர்கள் அவ்வூர் தலைவர்கள் மற்றும் அவர் சேர்ந்த அல்லக்கைகள் மட்டுமே. எந்த ஒரு உருப்படியான காரியமும் இத் திட்டத்தால் நடைபெற்றதாக கேள்விப்பட்டதில்லை..... பெரும்பாலனவர்கள் இந்த அட்டையை மட்டுமே வைத்துக்கொண்டு பாதி கூலி பெற்றுகொள்கின்றனர்... மீதி அல்லக்கைகளுக்கு....... இலவச அரிசி, இலவச, மிக்சி, இலவச அடுப்பு, இலவச மின் விசிறி, இலவச, டிவி இப்படி எல்லாமே இலவசம்.... மக்கள் வேலை செய்ய யோசிக்கிறாங்க...... நாட்டை முன்னேற்ற எத்திட்டமும் வருமா?..... கடவுளுக்கு தான் வெளிச்சம்.....
Rate this:
Share this comment
Cancel
Vishnu Karthik - singapore,சிங்கப்பூர்
31-ஆக-201207:41:21 IST Report Abuse
Vishnu Karthik தமிழகத்துக்கு, ஆண்டுக்கு, 5,300 கோடி ரூபாயை, இதுக்கு பண்ணுறதுக்கு பதிலா மலை / நீர் காப்பத்த நடவடிக்கை எடுத்தா நிரந்தர பலன் கெடைக்கும் ...... இதுனால வெவசாயம் அழிந்து போனதுதான் மிச்சம்...
Rate this:
Share this comment
Cancel
Kumar - erode,இந்தியா
31-ஆக-201207:37:31 IST Report Abuse
Kumar 5300 கோடிகள் ஒதுக்கியதாக சொல்கிறார்கள். 125 ரூபாய் கூலி 100 நாள் வேலை, மொத்தம் 2300 கோடிதான் செலவு. மீதி 3000 கோடி எங்கே..??
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
31-ஆக-201205:14:09 IST Report Abuse
s.maria alphonse pandian தமிழக அரசின் பொறுப்பின்மைக்கு மத்திய அரசின் திட்டம் ஒரு ஆறுதல்....
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
31-ஆக-201209:08:59 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஎன்னே ஒரு அறிய கண்டுபிடிப்பு "maria alphonse - chennai ,இந்தியா எழுத நினைத்தது முந்தைய தமிழக அரசின் பொறுப்பின்மைக்கு மத்திய அரசின் திட்டம் ஒரு ஆறுதல்."...
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
31-ஆக-201202:29:38 IST Report Abuse
Sekar Sekaran சோம்பேறிகளின் இறுதி புகலிடமே இந்த திட்டம். 19 லட்சம் உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து உழைத்து காட்டி சாதித்த செயல் என்னவோ? இவர்கள் உண்மையாக உழைத்தால்..ஒரே நாளில் இத்தனை கரங்களும் சேர்ந்து ஓர் ஏரியையே தூர் எடுத்திருக்கலாமே..இது மத்திய அரசாங்கத்தின் ஊழல் செய்யப்படும் அபார திட்டமே. இதனால் என்னென்ன திட்டங்களும்..செயல்பாடுகளும் நடந்துள்ளன என்று சொல்ல முடியுமா? இது இப்படி என்றால்..இது போன்ற வேலைக்கு செல்ல காரணம்..விவசாயம் பொய்த்துவிட்டது. நதிநீரை தேசியமாக அறிவிக்காதவரை நாடு பாலைவனமாகும் காலம் விரைந்து வரும். எடுத்ததற்க்கெல்லாம் அரசாங்கத்தை கண்டிக்கும் கோர்ட்டார்கூட இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஆச்சர்யத்தையே கொடுக்கின்றது. காவிரி ஆணையத்தை கூட்ட சொல்லி ஒருமாதம் ஆகியும்..இப்போதுதான் பிரதமர் சம்மதம் தெரிவிக்கின்றார்.பதவி போதை அவரை டெல்டா விவசாயிகளை பற்றி சிந்திக்க மறுக்க வைக்கின்றது. முறையான அரசியல்வாதிகள் இல்லாத நாடு..இப்படித்தான் அல்லோகல்லோகப்படவேண்டும். அம்மாதான் அடுத்த பிரதமர் என்கிற அறிவிப்பு வேண்டுமானால் ஓரளவு நிலையை மாற்றும். நிச்சயம் காலம் உணர்த்தும் அதனை..
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
31-ஆக-201209:11:28 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேபட்டய கிளப்பிட்டீங்க, காவிரி நதி நீர் ஆணையம் கூட்டுங்க, முல்லை பெரியாறு ஆணையத்தை கூட்டுங்க,கிருட்டினா நீர் இணைப்பு ஆணையத்தை கூட்டுங்க, அதோட மர வளர்ப்பையும் கூட்டுங்க, ஏன்னா தமிழகம் முழுமையாய் மழை மறைவு பிரதேசமாய் மாறி விட்டது...
Rate this:
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
31-ஆக-201201:25:04 IST Report Abuse
Hasan Abdullah கர்நாடக பிஜேபி அரசாலும், தமிழக மாநில அரசாலும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கபட்டாலும் இப்போது மத்திய காங்கிரஸ் அரசின் 100 வேலை உறுதி திட்டம் தான் கைகொடுக்கிறது.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
31-ஆக-201205:34:00 IST Report Abuse
Pannadai Pandianகர்நாடகத்தில் தலிபான் ஆட்சி செஞ்சா தண்ணிய தாராளமா சப்ளை செய்வாங்க. அதேமாதிரி கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், மூனாறு, பீர் மேடு பகுதிகளில் லக்ஷரீ தொய்பா இன்னும் ஸ்ட்ராங் ஆவணும். அவுங்கத்தான் முல்லை பெரியாறு தண்ணிய தடை இல்லாம தமிழ்நாட்டுக்கு தொறந்து விடுவாங்க. அப்புறம் அந்த ஹைத்ராபாடி சுல்தான்கள் அனந்தபூர், சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டங்கள் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இந்த பாலாறு, கிருஷ்ணா நதி நீர் பிரச்சனை முடிவுக்கு வரும். இதெல்லாம் ஒருங்கிணைக்க நான் அஹ்மது ராப் சஞ்சானிய பாத்து பாத் கர்கே ஆயேங்கே...
Rate this:
Share this comment
Rameswaram Mahesh - Bedok ,,சிங்கப்பூர்
31-ஆக-201207:09:12 IST Report Abuse
Rameswaram Mahesh பாண்டியன், இதற்க்கு மேல் நெத்தியடி பதில் எதுவுமில்லை...கழிவறையில் தண்ணீர் வராவிட்டாலும் மத அடிப்படையில் கருத்து சொல்லும் கழிசடைகளுக்கு சரியான சாட்டையடிதான் உங்கள் பதில்......
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
31-ஆக-201209:06:15 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஹசன் சாப், கொஞ்சம் யோசித்து கருத்து எழுதுங்களேன், கேரளாவில் மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது, காவிரியில் கலக்கும் பவானி ஆறுக்கு நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தாலும் மேட்டூருக்கு தண்ணி வரவில்லை என்னென்ன காரணிகள் என்று கூற முடியுமா இல்லை அதற்க்கும் பிஜேபி தான் காரணி என்று கூறி விட்டு செல்வீர்களா? பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்று கூறுவதை நினைத்து கொள்ளுமாம், அதுபோல உங்களை பழக்க படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
31-ஆக-201200:50:36 IST Report Abuse
Thangairaja சோம்பேறிகளுக்கான இத்திட்டத்தில் இப்படி சில உதவிகளும் இருக்கத்தான் செய்கிறது. நிலத்தை தரிசாக போட்டு விட்டு இன்றைக்கு அன்றாடம் கிடைப்பதை வைத்து ஓட்டலாம். நாளைக்கு விளைச்ச்சலில்லாமல் ஏற்படும் வறட்சியை எப்படி சமாளிப்பது. விலைவாசிகள் இன்னும் தாறுமாறாக உயர வாய்ப்பு.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
31-ஆக-201205:38:56 IST Report Abuse
Pannadai Pandianஇது மத்திய அரசின் திட்டமானாலும் கிராம லெவெலில் நம்ம கட்சி காரங்க டெய்லி செலவுக்கு வருஷம் முழுவதும் கிடைக்க கலைஞர் அறிமுகப்படுத்திய வெற்றிகரமான திட்டம். கம்மாக்கரையில் வேறு எதுக்கோ ஒதுங்குரான்களோ இல்லையோ காதலுக்கு தற்போது காசு வாங்கிகிட்டு ஒதுங்குறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா கல்யாணம் ஆனா கேசுங்க பண்ற ரவுசுதான் தாங்க முடியில....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை