CRA meeting likely soon, Centre tells Supreme Court | காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட பிரதமர் சம்மதம்| Dinamalar

காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட பிரதமர் சம்மதம்

Updated : செப் 01, 2012 | Added : ஆக 30, 2012 | கருத்துகள் (19)
Advertisement

புதுடில்லி: "காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட, பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார்' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று தெரிவித்தது. "காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்டும்படி, பிரதமருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, கடந்த மாதம் 21ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில்: காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு ஜூலை 20ம் தேதி வரை, 36.15 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா தர வேண்டியுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால், மேட்டூர் அணையை வழக்கமான நடைமுறைப்படி, ஜூன் 12ம் தேதி திறக்க முடியவில்லை. தண்ணீர் திறக்கப்படாததால், குறுவை சாகுபடியும் நடக்க வில்லை.

இடர்ப்பாடு காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக, மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு கமிட்டி உருவாக்கிய பார்முலாக்களை, கர்நாடக அரசு பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதை ஏற்றுக் கொள்ளும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிடுவதோடு, காவிரி நதி நீர் ஆணையம் தன் சட்டப் பூர்வமான கடமையைச் செய்ய, அந்தக் கூட்டத்தைக் கூட்டும்படி பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், "காவிரி பிரச்னையில், மத்திய அரசு பொறுப்பற்ற நிலையை கடைபிடிக்கிறது; அக்கறையற்ற வகையில் செயல்படுகிறது' என, கண்டனம் தெரிவித்தது. மேலும், காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டும்படி, தமிழக அரசு விடுத்த வேண்டுகோள் மற்றும் மனு தொடர்பாக, 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு நேற்று பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, காவிரி நதி நீர் ஆணையத்தை, மத்திய அரசு விரைவில் கூட்டும். ஆணையத்தைக் கூட்ட, பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆணையத்தைக் கூட்டினால், குறிப்பிட்ட அளவு உறுப்பினர்கள், அதில் பங்கேற்க வேண்டும். கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாநில அரசுகள் சம்மதம் தெரிவித்தவுடன், ஆணையத்தைக் கூட்டும் தேதி முடிவு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aswin - tuticorin,இந்தியா
05-செப்-201207:14:28 IST Report Abuse
aswin காவேரி நதி நீர் ஆணையம், பெங்களூர் கேஸ்... ஒஹோ கதை அப்படி போகுதோ. காவேரி நதி நீர் ஆணையத்தை கூட்டிட்டா மட்டும் தண்ணீர் வந்துருமா.... ilana சுப்ரீம் கோர்ட் சொல்றத ஜெயா அல்லது கர்நாடகா கேட்டு நடக்க போகுதா, மழை வந்த பின்னால excess வாட்டர் வரும்.... அது வரை tacmac தண்ணீர் வேணா வரும்...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
31-ஆக-201217:04:35 IST Report Abuse
rajan உச்ச நீதியகம் மத்திய அரசை குட்டினால் தான் பிரதமரும் சோனியும் கண்ணை திறப்பாங்க போலிருக்கு. சுயநலத பத்தி சிந்திகிரவங்களுக்கு பொது நலம் மறந்து போகும். அதிலும் தமிழக விதில திருகுவளயும் சேர்ந்து ஒத்து ஊதும்.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
31-ஆக-201214:39:23 IST Report Abuse
s.maria alphonse pandian டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுக விவசாயிகள் நேற்று நடத்திய ஆர்பாட்ட செய்தியினை வெளியிடாதது ஏனோ?
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
31-ஆக-201216:11:26 IST Report Abuse
K.Sugavanamவிவசாயியையும் கரை வேட்டி கட்ட வெச்சுட்டீங்களா?...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-ஆக-201216:59:46 IST Report Abuse
தமிழ்வேல் பத்திரிக்கை அலுவலகங்களின் முன் செய்திருக்க வேண்டுமோ ?...
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
31-ஆக-201214:10:42 IST Report Abuse
N.Purushothaman தமிழகத்தில் தமிழர்கள் அனைத்திலும் சுயசார்பு அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு பயணித்தால் தான் அது நமக்கு நன்மை தரும்......நீர் விஷயத்தை பொறுத்தவரை பல நல்ல திட்டங்களை போர்க்கால அடிப்படையில் விரைவில் செயல்படுத்தினால் கண்டிப்பாக அது நமக்கு பலனை தரும்.....அதற்க்கு செய்ய வேண்டியவை....தமிழகத்தில் உள்ள அணைத்து நதிகளையும் இணைத்தல்.அதில் தடுப்பணைகளை கட்டுதல்.....மழை நீர் சேமிப்பை கட்டாயபடுத்துதல்....தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து கழிவு நீர் வாய்க்கால் அமைத்து அதை இணைத்து,அதற்க்கான சுத்திகரிப்பு தொழிற்சாலைகளை அமைத்து நீரை மறு சுழற்சிக்கு உட்படுத்துதல்....அப்படி செய்யப்பட்ட நீரை விவசாயத்திற்கு திருப்பிவிடல்....இவைகளை செய்தாலே நீர் மேலாண்மை மேன்மையுற்று நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும்.....அதே போல் வழக்கம் போல் செய்யப்படும் ஏறி,குளம்,போன்றவற்றிற்கு முறையான மாராமருத்து பணிகளை செய்தல்..... இவைகளை செய்தாலே நாம் மற்றவரிடம் நீர் கேக்க வேண்டிய அவசியமோ ,கை ஏந்துதலோ இருக்காது....
Rate this:
Share this comment
Cancel
r a selvam - chennai,இந்தியா
31-ஆக-201212:45:21 IST Report Abuse
r a selvam தமிழக மக்கள் கொஞ்சம் கொஞ்சமா செத்த பிறகு காவிரி ஆணையத்தை கூட்டுவரோ என்னவோ
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
31-ஆக-201212:44:57 IST Report Abuse
Kavee காவேரி நதி நீர் ஆணையத்தை கூட்டி ...என்ன பண்ண போறாங்களாம் ? அட போங்கடா நீங்களும் உங்க ஆணையமும்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-ஆக-201216:58:43 IST Report Abuse
தமிழ்வேல் அம்மா கோவித்துக் கொள்ளபோகிறார் ......
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - Juba,சூடான்
31-ஆக-201211:33:28 IST Report Abuse
Siva Kumar ஆணையத்தைக் கூட்டுவதற்கு ஒரு பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் சொல்லவேண்டியிருக்கிறது. செயல்படாத அல்லது செயல்பட விரும்பாத பிரதமர், திருட்டுக் கும்பல் காங்கிரஸ் ஆட்சி - இவர்களை மக்கள் தூக்கி எறிய வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
31-ஆக-201206:31:39 IST Report Abuse
K.Sugavanam நீதி மன்றம் தடி எடுத்ததும் ஆடுறாரு மண்ணு சிங்கு.ஆட்றா ராமா,ஆட்றா ராமா கேசுதான்.ஒடனே பெங்களூருல பட்டாஸ் வெடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. சூசுவாடி கேட்டு மூடிடும்.மக்கள் தவிப்புதான்..குஞ்சுக்கு கொண்டாட்டம் தான்.பன்ச் பன்சா பதியுவாறு.
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
31-ஆக-201205:52:15 IST Report Abuse
Jai தமிழ் நாடு விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையை தீர்க்காமல், மத்திய அரசில் பங்கு வைத்து சுகம் அனுபவிக்கும் திரு முக, என்று பதவியை ராஜினாமா செய்கிறாரோ அன்று இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும், சாத்தியம் உள்ளது. மற்ற நாட்டு தமிழனுக்கு போராடுவது போல நடிக்கும் இவர், ஏன் இந்திய தமிழனுக்காக போராட மறுக்கிறார். எல்லாம் இவரின் பதவி ஆசை.
Rate this:
Share this comment
alex thennavan - chennai,இந்தியா
31-ஆக-201206:33:56 IST Report Abuse
alex thennavanமாநில அரசு என்ன வெட்டி முறித்துவிட்டது என எண்ணுகிறீர்கள்?இருவருமே ஒரு குளத்தில் ஊறிய மட்டைகள்......
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
31-ஆக-201205:34:09 IST Report Abuse
s.maria alphonse pandian கர்நாடகாவை பிஜேபி ஆண்டாலும் சரி...காங்கிரஸ் ஆண்டாலும் சரி..நமக்கு தண்ணீர் கொடுக்கப்போவதில்லை...உபரி இருந்தால் மட்டுமே கிடைக்கும்..எனவே நாம் இந்த விஷயத்தில் அவர்களை சார்ந்திராமல் நமது குளங்கள் ..ஏரிகளை தூரெடுத்து மழை நீரை வீணாக்காமல் சேர்த்து வைக்க பழகவேண்டும்...பல அணைகளை கட்டிக்கொண்டு நீரை சேர்க்க வழியை தேடுவோம்..".நீர் சேமிப்பு" என்பதே நமது முழக்கமாகவும் செயலாகவும் இருக்கட்டும்...விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே சார்ந்திராமல் அவர்களுக்கு பிற துணை தொழில்களும் செய்துகொள்ள அரசு ஏதாவது திட்டங்களை செயல் படுத்த வேண்டும்......
Rate this:
Share this comment
alex thennavan - chennai,இந்தியா
31-ஆக-201206:09:51 IST Report Abuse
alex thennavanபாராட்டுக்கள்..இது போல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை எழுதுங்கள் அல்போன்சே...
Rate this:
Share this comment
Jai - ,கனடா
31-ஆக-201206:55:46 IST Report Abuse
Jaiதிரு முக அவர்கள் எப்பொழுதெல்லாம், மத்திய அரசில் பங்கு வகிக்கிராரோ அப்பொழுதெல்லாம், திரு மரியா அவர்களே, உங்களை போல் தான் சொல்லுவார், ஆட்சியில் பங்கு இல்லை என்றால், போராட்டம் என்பார். ஆனாலும் நீங்கள் சொல்லும் கருத்தின் சாரம் ஏற்புடையதே. சபாஷ்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை