HC gives nod for KNPP; terms safety concerns as 'unfounded' | கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் தொடுத்த மனுக்கள் தூள்: அணுமின் நிலையம் செயல்பட ஐகோர்ட் அனுமதி| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (38)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை:"கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்குவதற்கு தடையில்லை' என, ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. அணு மின் நிலையம் செயல்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு மின் நிலையம் கட்டப்பட்டது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் இது. ரஷ்ய நாட்டின் உதவியுடன், இந்த அணு மின் நிலையம் துவங்கப்பட்டது. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட்டன.அணு மின் நிலையம் இயங்கும் நிலையில், கூடங்குளம் பகுதியில், சில தீய சக்திகள், கடும் எதிர்ப்பைக் கிளப்பின; தொடர் உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தின. ஐகோர்ட்டிலும், அணு மின் நிலையம் செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், பல மனுக்களை தாக்கல் செய்தன.

இவற்றில், "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் நிர்வாகி, சுந்தரராஜன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், "நிபுணர்கள் அடங்கிய குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை வெளிப்படையாக ஆய்வு செய்யவும், பொது மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும். புதிதாக சுற்றுப்புறச் சூழல் ஆய்வு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதல் இல்லாமல், அணு மின் நிலையம் இயங்கக் கூடாது என, உத்தர விட வேண்டும்' எனக் கூறப்பட்டது.
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ரவீந்திரன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் சார்பில், வழக்கறிஞர், ஆர்.சுரேஷ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அட்வகேட் ஜெனரல், நவநீதகிருஷ்ணன், வழக்கறிஞர், ரீட்டா சந்திரசேகரன், தமிழக அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர், இன்பதுரை, நியூக்ளியர் பவர் கார்பரேஷன் சார்பில், வழக்கறிஞர், கிருஷ்ணா சீனிவாசன் ஆகியோர், இவ்வழக்கில் ஆஜராகி வாதாடினர்.

மீறல் இல்லை:
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' நேற்று பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும் போது,

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முறைகள் எதுவும் மீறப்படவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை, அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், மத்திய அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுற்றுப்புறச் சூழலை பேண, தேவைப்படும் போது, அதிகாரிகளால் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு. இந்த வாரியமும், மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நன்றாக பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவுகள் எல்லாம் தன்னிச்சையானது என, கருதுவதற்கு முகாந்திரமில்லை.

பாராட்டு:
கூடங்குளம் பகுதிக்காக, 500 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கூடங்குளம் அருகமை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் வீடுகள், தலா, மூன்று லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, 200 கோடி ரூபாயை செலவிட திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் கருணையை நாங்கள் பாராட்டுகிறோம். உடனடியாக, தீவிர நடவடிக்கைகளை, அரசு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். வெளியேற்றப்படும் மாசின் தரத்தை பேணுதல், சட்டப்படியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதை, ஒழுங்குமுறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில், அவ்வப்போது, முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துவதற்கு, திருநெல்வேலி கலெக்டர் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவற்றை நடத்த வேண்டும்.

கலாம் யோசனை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பரிந்துரைத்தது போல், அந்தப் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனையை கட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளை, விடுதிகள் வசதியுடன் துவங்க வேண்டும். மீனவர்களின் இயந்திரப் படகுகளையும், படகுகளை பழுதுபார்க்கவும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு வழங்க

Advertisement

வேண்டும்; தேவையான நிதி உதவியையும் அரசு வழங்கலாம். மீன்களை வைக்க, குளிரூட்டும் சேமிப்பு மையங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இதுகுறித்து, மாநில அரசு தான் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.அணு மின் நிலையத்தை இயக்கக் கோரிய மனுவைப் பொறுத்தவரை,அதிகாரிகள் தான் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.இதன் மூலம், கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் ஏற்படுத்திய தடை தூளாகியது.

பத்து நாட்களில் மின் உற்பத்தி:
""கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 10 நாட்களில் மின் உற்பத்தி துவங்கும்,'' என, அணு மின் நிலைய இயக்குனர் சுந்தர் கூறினார்.கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நேற்று பைசல் செய்யப்பட்டன. இந்நிலையில், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில், கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனர் சுந்தர் பங்கேற்றார்.

அவர், நமது நிருபரிடம் கூறியதாவது:கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான மனுக்கள் பைசல் ஆகி, உற்பத்தி துவங்குவதற்கான அனுமதி கிடைத்த தீர்ப்பை வரவேற்கிறோம். அடுத்த வாரம், கூடங்குளத்திற்கு அணு சக்தி பாதுகாப்பு ஒழுங்குமுறை கமிஷனின் உயர்மட்டக்குழு வர உள்ளது.அக்குழு, அணு மின் நிலையத்தை பார்வையிட்டு, மின் உற்பத்திக்கான ஒப்புதல் வழங்கும். அதன்பின், ஓரிரு, நாட்களில் மின் உற்பத்தி துவங்கும். எனவே, இன்னும் 10 நாட்களில், கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்க வாய்ப்புகள் உள்ளன.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (38)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
01-செப்-201222:35:44 IST Report Abuse
v.sundaravadivelu மக்களின் இருளைப் போக்க வந்த இந்த அற்புத செய்தியை வரவேற்கத் தெரியாத மூடன் எவனும் இந்தப் பிரபஞ்சத்தில் வாழத் தகுதியற்றவன் என்பதே எனது அனுமானம்... இருளில் மூழ்கிக் கயமை பல செய்யும் நோக்கில் இருப்பவன் மட்டுமே இந்த இருள் விலகும் திட்டத்தை மறுத்தளிக்கத் துணிவான்... அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளே இதனை ஆமோதிக்கிற போது.. இதன் மேன்மையை புரிந்து கொள்ள மனசு பிரியப் படவில்லை என்றால் அந்த மனது நிச்சயம் ஏதோ ஓர் வியாதியில் பீடித்துள்ளதென்று தானே அர்த்தம்? ஓர் நேர்மையான மனிதர் கலாம் என்பது பூக்கடைக்கு விளம்பரம் போன்ற வார்த்தை... அப்படிப் பட்டவர் மக்களின் வாழ்க்கையில் மண்ணைப் போடத் துணிவாரா?.. ஆனால் வீம்புக்கு வேட்டையாடுபவர்களும், முழுப் பூசணியை சோற்றில் மறைப்பவர்களும், விழித்துக் கொண்டே தூங்குவது போல நடிப்பவர்களும் .. கொடிதூக்கிப் போராடுவார்கள்... அவர்களுக்கு "சுமூக சமூகம்" என்பதே ஓர் கெட்ட வார்த்தையாகும்..
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
01-செப்-201222:25:11 IST Report Abuse
babu தூள் தூள் போனது என்ன, இந்த தளம் தூசி தட்ட படுகிறது, இதோ வருது அதோ வருது மின்சாரம் அவசரம் அரசியல் வாதி சைறேன் ஒலிக்குது விளக்கு மிளிருது, மின் வண்டி வந்த பாடு இல்லை,
Rate this:
Share this comment
Cancel
siva raman - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-201221:10:52 IST Report Abuse
siva raman குஜராத் கலவரம் தீர்ப்பு வந்து ரெண்டு நாள் ஆச்சு ... அதபத்தி ஒரு சின்ன செய்தியாவது போட்டு இருக்கனும்.
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
01-செப்-201220:07:13 IST Report Abuse
Nagan Srinivasan மாசு படுத்துவோம் வாங்க கடலை இதில் ஏசல் இல்லையே காசு செலவு பண்ணியாச்சு இனி தூசு செய்வோம் சுற்றுபுரத்தையே நேச மனிதர்காள் நீங்கள் இனி, ஆசை தீர அனுபவியுங்கள் மின் உற்பத்தியை? வாசம் கமழும் அணு உற்பத்தி தென் , தேசம் நிறையட்டும் கதிர்வீட்சிலே
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-201214:17:43 IST Report Abuse
periya gundoosi ஒரு பகுதி மேடானது என்றால் இன்னொரு பகுதி பள்ளமானது என்று அர்த்தம், நம்நாட்டை ஆக்கிரமித்தவனை விரட்டி அடிக்க வேண்டுமென்றால் நமது படை வீரர்கள் 100பேர் சாகத்தான் செய்வார்கள். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடியும். இதெல்லாம் தத்தவார்த்தமான, யதார்த்தமான உண்மைகள். கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் பாதிப்பு அடையலாம், பாதிப்பு அடையாமலும் இருக்கலாம். அதற்கு இயற்கைதான் உதவி செய்ய வேண்டும். இயற்கையோடு யாரும் சவால் விட முடியாது. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். இதற்கு இறைவனை பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி இல்லை. கியூரியாசிட்டி வின்கலம் 06.08.2012ல் செவ்வாய்கிரகத்தில் இறங்கியது. அன்று முதல் நேற்று வரை நடந்த பூகம்ப நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி மற்றும் தினமலரிலிருந்து தொகுத்து தருகிறேன். 10.08.12 ஈரான்,12.08 சீனா, 14.08 ரஷ்யா,காஷ்மீரில்,ஜப்பானில்,மற்றும் மீண்டும் ஈரானில் மிதமான நிலநடுக்கம், 19.08 இந்தோனேஷியா,20.08 நியூகினியா மற்றும் இந்திய வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம், 21.08 இந்தோனேஷியா, 24.08 நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம், 27.08 இந்தோனேஷியா,கலிஃபோர்னியா மற்றும் எல்சல்வடோர் கடல்பகுதியில் நிலநடுக்கம், 31.08 பிலிப்பைன்ஸில் கடுமையான நிலநடுக்கம். மனிதனின் அழிவுக்கு மனிதனே காரனமாவான் என்பது நிதர்சனமான உண்மை. திரு. பாலசுப்ரமனியன் ராமமூர்த்தி அவர்களே தாங்கள் கருத்தை சிறந்த முறையில் பதிவு செய்து கொண்டே வந்து கடைசியில் முரண்பாடான கருத்தைப் பதித்து இருக்கிறீர்கள். அதாவது வேற்று கிரஹத்தில் வாழலாம் என்று. மனிதன் வாழ தகுதியான இடம் பூமி மட்டுமே, இன்னும் 1 கோடி வருடமானாலும் சரி வேறு எந்தக் கிரஹத்திலும் மனிதன் வாழ முடியாது. இதெல்லாம் வெற்றுக் கற்பனை.
Rate this:
Share this comment
Velmurugan Subramanian - kudankulam,யூ.எஸ்.ஏ
01-செப்-201220:02:56 IST Report Abuse
Velmurugan Subramanianஎல்லா ஆபத்துக்களும் ஒன்றா?அணு ஆபத்தின் விளைவுகளையும் பற்றி எங்காவது படித்து விட்டு கருத்தை எழுதவும். எனது வீடு உலையின் சுவரிலிருந்து 500m தொலைவில் உள்ளது. பொறியாளர்களின் டவுன் 11 KM தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தங்களுக்கு தெரிந்தது இவர்களுக்கு தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel
mohamed Rafiudeen - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-201213:59:33 IST Report Abuse
mohamed Rafiudeen கூடங்குளம் அணுமின் நிலையம் மிகுந்த பாதுகாப்போடு செயல் பட வாழ்த்துகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Gowrishankar - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-201211:22:36 IST Report Abuse
Gowrishankar அடுத்த படியாக உச்ச நீதிமன்றம் செல்வோம்..
Rate this:
Share this comment
Cancel
Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா
01-செப்-201209:31:27 IST Report Abuse
Ubaidullah Razzaq ஆயிரம் மெகா வாட் kidaikkum பொது இன்னி என்ன கவலை அசத்துங்க
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
01-செப்-201208:51:52 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy திருவாளர் முக அவர்கள் நமது முதல்வரை குறை சொல்கிறார் இந்த விஷயத்தில் அவர் ஆளும் கட்சியாக இருந்தப்போ என்ன பண்ணினார்னு எல்லோருக்கும் தெரியும் ஏன் மத்திய அரசை நிர்பந்தித்து அவருடைய ஆட்சியிலேயே திறக்க முயற்சி செய்யலை எதிர்கட்ச்சியாக கூட உக்காரமுடியாமல் pona pinbu கமென்ட் அடிக்க ரொம்பவும் ஈசி 3 பேர் தூக்கு விஷயத்தில் அவர் அடிச்ச கமென்ட் இன்னும் எந்த மக்களும் மறக்கவில்லை (ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால் இவர்களை மன்னிதிருப்பார் என்றது பகவான் ராமர் எந்த காலேஜ் ல இன்ஜினியரிங் படித்தார் என்றது) அதுமாதிரி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் இவர் என்ன கமென்ட் அடிப்பாரோ? ஏன்னா இலங்கை கடற்படை நமது மீனவர்களை சுடுகிறார்கள் என்றதற்கு இவர் மீனவர்களை பேராசை பிடித்தவர்கள் என்றார்? அதுமாதிரி நமது முதலவர் எடுத்தேன் கவிழ்த்தேன்னு செய்யாமல் போராட்டகாரர்களுக்கும் போராட உரிமை கொடுத்தார்கள் இல்லைனா இந்த தலைவனும் இன்னொமொரு கருப்பு MGR என்று தனக்கு தானே குடும்ப சகிதமா உலரும் கூட்டமும் என்னவெல்லாம் சொல்லிருக்கும் மின்சரா தட்டுபாடு இப்போது நாடு முழுவதுமா வந்தாச்சு இந்த நாடு மக்கள் தொகையின் பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகள் பெருகளை Paarpom இன்னும் சில ஆண்டுகள் இல்லையேல் வேறு கிரஹத்தில் குடி பெயர்வோம்
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
01-செப்-201208:30:21 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy நமது முதலவர் என்ன தீர்மானம் போட்டாருன்னே யாரும் ஒழுங்கா படிக்கலை அந்தபகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்கும்வரையில் நிருத்திவைக்குனும்னு தான் அந்த தீர்மானம் அப்போரும் ஒரு குழு அமைத்தார் பிறகு போராட்டகாரர்களுக்கும் அவகாசம் கொடுத்தார் மிகவும் ஜனநாயக முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டார் அதைகுரைசொள்ள எதிர்கட்சியாகவோ இல்லை சிந்தனையே இல்லாத அறிவாளியாகவோ கமென்ட் அடிக்க முடியும் ஆளும் கட்சி எல்லாத்தையும் face பண்ணனும் பின்பு எதாவது அசம்பாவிதங்கள் நடந்து விளைவுகள் மோசமகிருந்தால் அவ்வளவு தான் ஆண்ட அரசின் தலை காலி உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி முதல்வரின் நிதானமான நடவடிக்கைக்கு கிடைத்த பரிசு இது வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் ஏன்னா அவரின் கடன் மக்கள் பனி செய்வதே உலகமே nuclear powerilirundhu விடுபட முயற்சிக்கும்போது நாம் அதை வேணும் என்கிறோம் தினமும் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை பல அண்டை நாடுகளில் கடலுக்கடியில் உருவாகும் நிலநடுக்கம் எதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் நமது முதல்வரை பழி சொல்ல முடியாது அவரும் பொறுப்பு ஏற்க தேவையில்லை அனுசக்திகழகம் தான் முழு பொறுப்பு அச்சத்தை போக்கிருக்கவேண்டும் ஆரம்பத்திலேயே போராடகரர்களும் தாங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துக்கணும் முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பின்பு பாப்போம் ethir விளைவுகள் உண்டா தீமைகள் என்ன அப்போது தெரியும் உண்மையான முகத்தின் முகவரி அணு உலை இருப்பது தமிழ் நாடு அதில் ethavadhu அசம்பாவிதங்கள் நடந்தால் அனுபவிக்கபோவது தமிழன் ஆனால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்துக்கு நமது முதலவர் மத்திய அரசை கேஞ்சனுமாம் என்னடா சட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.