UPA govt most corrupt: Jaitley | ஐ.மு.கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசு: அருண் ஜெட்லி பாய்ச்சல்| Dinamalar

ஐ.மு.கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசு: அருண் ஜெட்லி பாய்ச்சல்

Updated : செப் 02, 2012 | Added : ஆக 31, 2012 | கருத்துகள் (12)
Advertisement
 ஐ.மு.கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசு: பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பாய்ச்சல்UPA govt most corrupt: Jaitley

புதுடில்லி : ""ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழல் மிகுந்த அரசு என்ற பெயரை எடுத்துள்ளது. இந்த அரசால், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, நிலக்கரி சுரங்க உரிமங்கள் அனைத்தையும், ரத்து செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறினார்.

நிலக்கரி சுரங்க ஊழலை எதிர்த்து, பா.ஜ., இளைஞர் அணியின் சார்பில், டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேசியதாவது:நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன் நடந்த ஊழல்களை எல்லாம், இந்த ஊழல் மிஞ்சிவிட்டது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழல் மிகுந்த அரசு என்ற பெயரை எடுத்துள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தபோது, அதில், தனக்கு நேரடி தொடர்பில்லை என, பிரதமர் மன்மோகன் சிங், மழுப்பலாக பதில் அளித்தார். தற்போது, அவரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.

இதற்கு பொறுப்பேற்று, தன் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையும் நிறைவேறினால் மட்டுமே, பார்லிமென்ட் சுமுகமாக நடக்கும்.இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:போபர்ஸ் ஊழல் நடந்தபோது, எப்படி நாடு முழுவதும், அதை எதிர்த்து, போராட்டம் நடத்தப்பட்டதோ, அதுபோல், நிலக்கரி சுரங்க ஊழலையும் எதிர்த்து போராட்டம் நடத்துவோம். சமாஜ்வாதி கட்சி, ஒரு பக்கம், இந்த ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. மறுபக்கம், மத்திய அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. எனவே, சமாஜ்வாதி கட்சி போராட்டத்தை, நாங்கள் பொருட்படுத்தவில்லை.இவ்வாறு உசேன் கூறினார்.


முடியாது:

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ""நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் தான் முடிவு எடுக்க வேண்டும்,'' என்றார்.

காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறுகையில், ""போபர்ஸ் விவகரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்த, அப்போதைய கணக்கு தணிக்கை அதிகாரி டி.என்.சதுர்வேதி, பின்னர் பா.ஜ.,வில் சேர்ந்தார். அதுபோல், தற்போதைய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய்க்கும், ஒரு அரசியல் ரீதியான கொள்கை உள்ளது. அதனால் தான், மத்திய அரசு மீது, தொடர்ந்து புகார்களை கூறி வருகிறார்,'' என்றார்.

பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில், ""நிலக்கரி சுரங்க உரிமங்களை, ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. தவறு நடக்காத போது, எதற்காக ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.CHANDRASEKARAN - coimbatore,இந்தியா
01-செப்-201218:06:42 IST Report Abuse
N.CHANDRASEKARAN நமது நாடு சுதந்திரம் அடைந்தபின் நம்மை ஆண்ட ஆட்சியாளர்களில் தற்போதைய ஐக்கிய முற்போக்கு(?)கூட்டணி ஆட்சி தான் ஊழலில் முதன்மையானது என்பது உறுதி.மிகவும் முரண்பாடான விஷயம் என்னவென்றால் நேர்மைக்கு பேர் போன மன் மோகன் சிங்க் அதற்கு தலைமை நம் நாடு எங்கே போகிறது ? நம் இளய தலைமுறை நமது நாட்டின் மீதும் நம் எதிர்காலம் மீதும் நம்பிக்கையீழந்துவிடுவர்களோ என அச்சம் மனதில் தோன்றுகிறது.கடவுளே என் பாரதத்தை SAVE FROM THE CLUTCHES OF THESE WICKED MEN.
Rate this:
Share this comment
Cancel
Choodamani EV - Chennai,இந்தியா
01-செப்-201216:06:50 IST Report Abuse
Choodamani EV காங்கிரஸ் ஊழல் செய்கிறது என்று சொன்னால், பலரும், பா ஜ க செய்யவில்லையா என்று கேட்பதை பார்க்கும் பொழுது, அடுத்தவன் போல செய்தால் ஊழல் தப்பில்லை என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டார்களோ என்று அஞ்சத் தோன்றுகிறது. காங்கிரஸ் செய்தாலும், பா ஜ க செய்தாலும் ஊழலை எதிர்க்க வேண்டுமேயன்றி, அந்த கட்சியினர் கேட்க உரிமையில்லை, இந்த கட்சியினர் செய்யாத ஊழலா என்று கருத்து எழுவது நல்லது அல்ல. இன்று காங்கிரசின் ஊழலை கேட்க, பா ஜ கவை நாம் பயன் படுத்திக்கொள்வது தவறாகாது. இது போல, பா ஜ க தவறிழைக்கும் பொழுது, காங்கிரசை பயன் படுத்துக் கொள்ளவும் தயங்கக் கூடாது, இது ஒரு வகை செக் அண்ட் பாலன்ஸ் ( Check and Balance ) - சாமான்ய மக்கள், எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் கிடையாது, இங்கு காங்கிரசிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், பா ஜ கவினர் இல்லை, பொது மக்கள், இது போன்ற அரசியல் வாதிகள் ஊழலை எதிர்த்து வேறொன்றும் செய்ய இயலாத, நம் நாடும் முன்னேற வேண்டும் என்ற, எண்ணமுள்ள பொது மக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Balakumar Nattamai - Madurai ,இந்தியா
01-செப்-201211:15:03 IST Report Abuse
Balakumar Nattamai காங்கிரஸ் கட்சியை அழித்தால்தான் நாடு உருப்புடும்.இல்லையேல் நாட்டையே விற்றுவிடுவார்கள் இந்த காங்கிரஸ் சதிகாரர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
01-செப்-201210:33:22 IST Report Abuse
Indiya Tamilan ஐ.மு.கூட்டணி அரசு ஊழலின் மொத்த உருவம்.இந்தியாவில் இனிமேல் வேறு எந்த கட்சியும் இப்படிப்பட்ட ஊழல்களை செய்யவே முடியாது.
Rate this:
Share this comment
Cancel
RAMAN R - BANGALORE - MADURAI,இந்தியா
01-செப்-201208:35:52 IST Report Abuse
RAMAN R BJP is not above Corruption. In fact BJP Chief leader was caught and punished now. No moral right to say about Congress or any other party. All are kachada parties.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-செப்-201208:01:17 IST Report Abuse
Kasimani Baskaran பாஜக மட்டும் கர்நாடகத்தில் சுரங்க ஊழல் செய்யவில்லையா? எடியூரப்பாவை என்ன செய்தீர்கள்? கழுதை எச்சத்தில் முன்எச்சம் எச்சம் என்ன பின் எச்சம் என்ன - எல்லாம் ஒன்றுதான். அளவு வேண்டுமானால் வெவ்வேறாக இருக்கலாம் - ஆனால் அடிப்படையில் பேராசை படைத்தவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
AXN PRABHU - Chennai ,இந்தியா
01-செப்-201207:38:21 IST Report Abuse
AXN PRABHU பிஜேபி கட்சியினர் காங்கிரஸ் அரசு மீது சுமத்தும் ஊழல் குற்ற சாட்டுகள் ஒன்றை கூட இவர்கள் கண்டு பிடித்து வெளியில் சொல்ல வில்லை. 2G அலைகற்றை ஊழல் நடக்க காரணமான ஏலம் இல்லா முறை தவறு . அரசுக்கு வருமான இழப்பு என்று இவர்கள் முன் கூட்டியே பாராளுமன்ற விவாதத்தில் சொல்லவில்லை. அந்த முறையை எதிர்க்கவும் இல்லை. அவ்வாறே நிலக்கரி சுரங்க உரிமங்கள் கோயில் சுண்டல் போல இத்தனை நாளும் இலவசமாக தனியாருக்கு காங்கிரஸ் அரசு அளித்தபோது எந்த எதிர்ப்பையும் செய்ய வில்லை. இத்தனைக்கும் இவர்கள் ஆண்ட மாநில முதல்வர்கள் ஏலம் வேண்டாம் என்று தான் மத்ய அரசுக்கு பரிந்துரை செய்தார்கள். இவர்கள் கூட சுரங்க ஊழல் சக்ரவர்த்திகள் ரெட்டி சகோதரர்களை வளர்த்தவர்கள் தாம். அதனால் பெரும் ஊழல் புரிந்தவர்கள் தாம். இத்தனை தவறுகளை செய்த பிஜேபி கட்சிக்கு அரசியல் செய்ய பாய்ண்ட்டுகளை கூட CAG தான் பிச்சை போடுகிறது. CAG அறிக்கை வந்தவுடன் தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள். ஏன் இவர்கள் அந்த தவறை முன்கூட்டியே பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் வைக்கவில்லை. இதே ஊழலை இவர்களும் தங்கள் ஆட்சி உள்ள மாநிலங்களில் தொடர்ந்து செய்யது கொண்டு தானே இருக்கிறார்கள். CAG யும் அன்னா ஹசாரே வும் தான் இவர்களுக்கு அரசியல் நடத்த தீனி போடுகிறார்கள். மீடியாக்கள் வெளிக்கொணரும் ஊழல்களை மட்டும் தான் இவர்கள் ஆர்ப்பாட்டம் சேது அமளி பண்ணுகிறார்கள். பெட்ரோல் விலை, தேசிய சாலைகளில் சுங்க வரி கொள்ளை போன்ற பல விஷ்யனகழி தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். ஊடங்களில் செய்தி வந்தால் தான் அந்த அபிரச்சனையை கையிலெடுக்கிறார்கள். அந்த அளவுக்கு பிஜேபி வீழ்ச்சி அடைந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
01-செப்-201205:20:45 IST Report Abuse
Samy Chinnathambi ஊழல் பெருச்சாளிகள் நிறைந்த இடம் என்று சொல்லி இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
01-செப்-201205:07:32 IST Report Abuse
Ramasami Venkatesan நிலக்கரி உரிமங்கள் தவறு நடாக்காதபோது ஏன் ரத்து செய்யவேண்டும் - நல்ல கேள்வி - 2G ஸ்பெக்ட்ரம் கூட தவறே நடக்கவில்லை என்று தான் கூறுகிறீர்கள். அங்கு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யவில்லையா. நீங்கள் செய்யவேண்டிய ஒன்று இதுதான் - ஜனாதிபதி, உப ஜனாதிபதி - உங்கள் ஆதரவாளர்கள். சி ஏ ஜி தலைமையும் உங்கள் ஆளை நியமித்துகொள்ளுங்கள், அப்புறம் சுப்ரீம் கோர்ட், ஜட்ஜ்கள் உங்கள் ஆதரவாளர்களாக பார்த்துகொள்ளுங்கள். அப்புறம் என்ன ஒரு ஊழல் கேஸ் கூட மக்களுக்கு தெரியவே தெரியாது. பார்லிமெண்டும் முடங்கவே முடங்காது. நீங்கள் சொல்லும் எல்லாமே முழு மெஜாரிட்டியுடன் பாஸ் ஆகிவிடும். தவறே செய்தாலும் தவறு இல்லை தான்.
Rate this:
Share this comment
Cancel
bala a - chennai,இந்தியா
01-செப்-201204:10:14 IST Report Abuse
bala a ஊழலை பத்தி நாம பேசபிடாது .எங்க நம்ம தேசிய தலீவர் கட்காரியை ? ரெண்டும் கூட்டு களவாணிகள். இன்னும் நாம தானே கர்நாடகத்தில் ஆட்சி செய்கிறோம் . அது எல்லா அரசியல் கட்சிகளும் தனக்கு வந்தா ரெத்தம் அடுத்தவுனுக்கு வந்தா தக்காளி சட்னி . அப்படி காங்கிரசை மாத்தணும்னு மக்கள் நினைச்ச அவங்களே மாத்திகுவங்க நம்ம கர்நாடகத்தில் மாத்துற மாதிரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை