ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு குடியரசு கட்சி எதிர்ப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தாம்பா:"ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க, இந்தியா, கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என, அமெரிக்க குடியரசுக் கட்சி வலியுறுத்திஉள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும், நவம்பர் மாதம் 6ம் தேதி, நடக்க உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, குடியரசுக் கட்சி வேட்பாளராக, மிட் ரோம்னி, 65, களமிறங்குகிறார்.ரோம்னியை தேர்வு செய்து, அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்க, புளோரிடா மாகா ணத்தில் உள்ள தாம்பாவில், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடந்தது.

பெரும்பான்மை உறுப்பினர்களால் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட ரோம்னி பேசியதாவது:எரிசக்தித் தேவையில் முற்றிலும் சுயசார்பு நாடாக அமெரிக்காவை மாற்றுவேன். நிதிப் பற்றாக்குறையை போக்கி, 1.20 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். பிரச்னையில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை வெற்றிகரமாக மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.வெளியுறவு விவகாரங்களை பொறுத்தவரை, உலக நாடுகளுடன் அமெரிக்கா நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருப்பதை உறுதி செய்வோம்.

ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை, ஒபாமா தலைமையிலான அரசு தடுக்காமல் விட்டது, ஒவ்வொரு அமெரிக்கரையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டது.சர்வதேச அளவில், ஈரானையும், சீனாவையும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு கடுமையாக கையாளத் தவறிவிட்டது. உள்நாட்டிலும், ஒபாமா வின் கொள்கைகள், நடுத்தர மக்களுக்கும், வேலையற்ற மக்களுக்கும் உதவவில்லை.சிறுதொழிலுக்கான வரியை உயர்த்தியது, வேலையின்மையை உருவாக்கிவிட்டது. நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் துறையில் குளறுபடி செய்ததால், எரிபொருள் மற்றும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகள், சீனாவுக்கு மாறிவிட்டன.இவ்வாறு ரோம்னி பேசினார்.

மாநாட்டு நிகழ்ச்சிகளின் இடையே, குடியரசுக் கட்சியின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் ரிச்சர் கிரினெல், நிருபர்களிடம் கூறியதாவது: ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க, இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், மிக முக்கியமான இப்பிரச்னையில் இந்தியா இன்னும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க, இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். ஆனால், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த, இந்தியா இன்னும் சற்று கூடுதலாக முயல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
01-செப்-201211:43:23 IST Report Abuse
periya gundoosi இவன் ஒரு வீணாப் போனவன், சீட்டில வந்து உட்காரும் முன்னமேயே அமெரிக்கன் என்றால் இப்படித்தான் என்று நிரூபிக்கிறான். இவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு இந்தியா ஈரானைப் பகைத்தால் பெட்ரோல் லிட்டர் ரூ200க்கு வாங்கும்படியாச் செய்துவிடுவார்கள். இவனுங்களுக்கு ஒவ்வொரு ஆட்சி மாறும் பொழுதும் எந்த முஸ்லிம் நாட்டையாவது அடிச்சி நாசமாக்கி துவம்சம் பண்ணனும், 7 வருஷம், 8 அங்கே அடிமேல் அடிவாங்கிக்கிட்டு திரும்ப ஓடனும். வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தானில் வாங்கிய, வாங்கிக்கிட்டுக்கிற அடி இவனுங்களுக்கு பத்தாது. இதுக்கு முன்னே ஒபாமாவும் இப்படித்தான் வாய் சவடால் விட்டார், ஒன்னும் முடியலை. இப்ப இவரு விடுறார்.
Rate this:
Share this comment
Cancel
Unmai - Jeddah,இந்தியா
01-செப்-201211:20:11 IST Report Abuse
Unmai ஆக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தினால் தான் ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க, இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று சொல்றீங்க... அதான என்னைக்கு மற்ற நாடுகளுக்கு பிரதிபலன் பார்க்கம உதவி இருக்கீங்க... ஏற்கனவே இங்க பெட்ரோல் விலை தாறுமாறா இருக்கு. இப்போ ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்து மக்களை கஷ்டத்தில் ஆழ்த்த விரும்புறீங்க.. உனக்கு எப்படி ஒவ்வொரு அமெரிக்கனும் முக்கியமோ அது போலதான் எல்லா நாடுகளுக்கும்.... மற்ற நாடுகள் விசயத்தில் தலையிடாமல் இருந்தாலே நீ உலகத்துக்கு செய்ற நன்மைதான்......
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-செப்-201207:49:30 IST Report Abuse
Kasimani Baskaran கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்தால் ஈரான் என்ன - எண்ணையே வேண்டாம் என்று சொல்ல நம்மிடம் அறிவார்ந்த அரசியல் வாதிகள் இருக்கும் பொழுது யாரை சொல்லி என்ன பயன்? இலங்கையை கண்டே பயப்படும் நம் ஆட்கள் அமெரிக்காவை கண்டால் பேய் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
01-செப்-201205:13:22 IST Report Abuse
Samy Chinnathambi இந்தியாவுக்கு ரொம்ப வருடமா எண்ணெய் கொடுப்பது ஈரான். அமெரிக்கா எதையும் வர்த்தக ரீதியிலே தான் இந்தியாவை அணுகி இருக்கிறது. எதையும் பிரதி பலன் இல்லாமல் இந்தியாவுக்கு செய்ததில்லை. இந்தியாவின் மீது பொருளாதார தடை இருந்த போது கூட ஈரான் இந்தியாவுக்கு எண்ணெய் கொடுத்தது. இந்தியாவுக்கு பைப் மூலம் ஈரானில் இருந்து கேஸ் சப்ளை செய்ய ஈரான் ஒத்து கொண்டது. இந்தியா நன்றி மறந்து அமெரிக்காவின் பேச்சை கேட்டு ஈரானை பகைத்து கொள்ள கூடாது. அமெரிக்காவிடம் இருந்து அணு சக்தி திட்டம் வேண்டுமா? இல்லை ஈரானிடம் இருந்து எண்ணெய் வேண்டுமா என்பதை இந்திய அரசு முடிவு செய்ய கூடாது. இந்திய மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Jai - ,கனடா
01-செப்-201205:12:56 IST Report Abuse
Jai இந்திய ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணையை குறைதுகொள்ளும், எப்பொழுது தெரியுமா - அமெரிக்கா எப்பொழுது குவைதிளிருந்தும், சவுதி அரேபியாவிலிருந்து விலை குறைவாக எண்ணை இருக்குமதியை நிருத்திகொண்டால், இந்தியாவும் நிருத்திகொல்ல்லும். செய்யுமா அமெரிக்கா. உலகில் உள்ள நாடுகள் எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்கும் பொழுது இவர்கள் மட்டும் விலை குறைந்து வாங்க வழிசெய்து கொண்டு, மற்ற நாடுகளுக்கு உபதேசம் செய்வதை நிறுத்துமா. உலக இசலாமிய நாடுகள் கூட்டமைப்பில் (OIC) , உலகிலேயே இரண்டாவது அதிக இஸ்லாமிய சகோதரர்கள் இந்தியாவில் இருந்தும், இந்தியாவை அதில் உறுப்பினர் ஆக்காமல் இருக்க தடை செய்யும், பாகிஸ்தான், சவுதி, ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகளைவிட, இந்தியாவை ஆதரிக்கும் இரானை, இந்தியா நம்பலாம். ஈரானியர்கள் என்றுமே மதத்தின் பெயரால், தீவிரவாதத்தை மற்ற நாடுகளுக்கு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போல, ஏற்றுமதி செய்ததில்லை என்பதயும் இந்தியா நினைவில் கொள்வது நல்லது.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
01-செப்-201208:35:15 IST Report Abuse
Pannadai Pandianஇப்போதெல்லாம் நல்ல கருத்தை பதிக்கிறீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
01-செப்-201203:00:01 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை நம்ம விசயகாந்த்கூட அவரோட கட்சிக்கு குடியரசுக் கட்சி ன்னு பேரு வெச்சிருக்கலாம் பொருத்தமா இருந்திருக்கும்
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
01-செப்-201207:08:44 IST Report Abuse
K.Sugavanamகாலங்காத்தாலேயே ஆரம்பிச்சுட்டீங்களா..அப்புறம் அடிதான் வாங்க போறீங்க... ...
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
01-செப்-201201:39:28 IST Report Abuse
Panchu Mani இவர்தான் செயக்கணும் .கடவுளாண்ட வேண்டிக்கிங்க . இல்லாங்காட்டி நம் ஆட்கள் கழுத்த புடிச்ச்கினே இங்க வந்துக்கினே மாதிரி ஆயிபூடும் . நம்ம ஆளுங்கோ அங்கனே செட்டில் ஆவணும்னா இவரு வரணும் ..இவரு வந்தாதுக்கு அப்புறம் எல்லாருக்கும் பச்ச அட்டை கிடைக்க போது டோய். ஏன் நானு சொல்றேன்ன இவராண்டை எண்ட பிரண்டு 5 வருஷத்துக்கு முன்னமே பேசும் போது இத்தை சொன்னாருப்பா..மெய்யாலும்பா.
Rate this:
Share this comment
Cancel
abdul - tamilnadu,இந்தியா
01-செப்-201201:22:53 IST Report Abuse
abdul நீ மூடிகிட்டு போ..... எங்களுக்கு தெரியும், வந்துட்டான் வரிஞ்சி கட்டி கிட்டு,போ போ,,,,,,,,,,,,,,,பொய் தண்ணிய குடி,,,,,,,
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
01-செப்-201209:25:19 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)ஈரானுக்கு எதிரா சவுதிஅரேபியா செய்யற கொடுமைகல எல்லாம் தட்டிகேக்க முடியாதவங்க, இங்க அமேரிக்காவ குத்தம் சொல்ல வந்துடுவாங்க.. அமெரிக்கா சொல்றது கரக்ட்டு.. நம்ம கச்சா இறக்குமதி செய்ய வேற நாடு பாக்கணும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்