சென்னை:ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அக்பர், வழக்கறிஞர்கள் மீனாம்பிகை, தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட ஐந்து பேர், தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அடுத்தாண்டே தமிழகத்தில், தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு ஒரு தலைமை ஆணையர் மற்றும் ஆறு ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.தற்போது, இந்த ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக, ஸ்ரீபதியும், ஆணையராக, சீனிவாசன் என்பவர் மட்டுமே உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடி, ஐந்து பேர் அடங்கிய பட்டியலை, கவர்னர் பரிந்துரைக்கு அனுப்பியது.இதன் படி, முன்னாள் எம்.பி., டாக்டர் சரோஜா, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிறிஸ்டோபர் நெல்சன், வழக்கறிஞர்கள் மீனாம்பிகை, தமிழ்ச்செல்வன் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் ஆகியோர், புதிய தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், ஐந்தாண்டுகள் அல்லது 65 வயது வரை, இப்பதவியில் இருப்பர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரோஜா: நாமக்கல், ராசிபுரத்தைச் சேர்ந்த இவர், மகப்பேறு மருத்துவராக, சென்னை ஸ்டான்லியில் பணியாற்றியுள்ளார். ராசிபுரம் எம்.பி., மகளிர் மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு ஆணைய உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அ.தி.மு.க., மகளிர் அணி இணைச் செயலராக இருந்தார்.
கிறிஸ்டோபர் நெல்சன்: ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான கிறிஸ்டோபர் நெல்சன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தமிழ்நாடு திட்டக்கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது, தகவல் ஆணையர்களில் ஒருவராகியுள்ளார். புதிய பதவியைத் தொடர்ந்து, திட்டக்கமிஷன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மீனாம்பிகை: ஐகோர்ட் வழக்கறிஞரான இவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முன்னதாக, தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினராக பணியாற்றினார். தற்போது, இவரது கணவர் பாலசுப்ரமணியம், தேர்வாணையத்தில் உறுப்பினராக உள்ளார்.தமிழ்ச்செல்வன்: 1983ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் துவக்கிய தமிழ்ச்செல்வன், பார் கவுன்சில் உறுப்பிராகவும், அம்பேத்கர் சட்டப் பல்கலையின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினராக இருந்துள்ளார்.
அக்பர்: நெல்லை மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த இவர், 1973ம் ஆண்டு, வழக்கறிஞராக பதிவு செய்தார். மாவட்ட நீதிபதியாக பணியாற்றி, அதன் பின், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைய குழு உறுப்பினராகவும், தடா கோர்ட் நீதிபதியாகவும் பணியாற்றினார். இறுதியாக, தொழில் தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது போன்ற பதவிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் வெகுமதி ஆகிவிட்டது. கேட்டால் அந்த பதவிக்கு உரிய தகுதியை வைத்தே நியமிக்கப்பட்டார்கள் என்று கூறுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்பு இருவர் ஏற்கனவே ஒரு பதவியில் இருந்து அதை முடித்து இரெண்டாவது பதவியை பெறுகிறார்கள்ஒருவர் தேர்வாணைய உறுப்பினர் பதவியை முடித்துவிட்டு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கணவர் தேர்வாணைய உறுப்பினராக தற்போது இருக்கிறாராம். தமிழ் நாட்டில் ஆட்கள் பஞ்சமா என்ன?
ஒய்வு பெற்றபின் எத்தனை பேர் இந்த மாதிரியான பதவிகளுக்கு விரும்புவார்கள் என்று சொல்ல முடியாது. நிறய பேர் ஒய்வு பெற்ற பின் ..அவர்களுக்கு கிடைக்கும் பென்சன் தொகையும் மற்ற சலுகைகளையும் பயன்பத்தி கொண்டு நிம்மதியாக வீட்டில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்று கூட நினைத்து கொண்டிருக்கலாம். ..ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பபட்டிருகிறது என்றால் ...ஆளுநர் ...இவர்கள் பின் புலன்களை ஆராய்ந்து இந்த பரிந்துரைகளை ஆராய்ந்து நிராகரிக்க செய்யும் உரிமையும் ஆளுநருக்கு இருக்கலாம். இருக்க வேண்டும்.இந்த மாதிரி பதவிககள் சலுகைகள் கொடுக்கும் பதவிகள் என்று சொல்வதை விட கவுரவ பதவிகள் என்று தான் தெரிகிறது.அரசியல்வாதிகள் இந்தமாதிரி பதவிகளை வேண்டியவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்றால்...அது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான். ...பலகலை துணை வேந்தர் பதவிகளே...விலை போகின்றன்னவே....நடைமுறைக்கு மாறாக...பதவிகளை தகுதியின்றி அள்ளி கொடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்து கொண்டிருகிறீர்கள் என்றால் ,நீதிமன்றத்தை நாடலாம்.,,,தனி மனிதனாக நீதிமன்றத்க்கு போகும் உரிமையை யாரும் தடுக்க முடியாது.....ஆட்களுக்கு பஞ்சமில்லை என்று நினைப்பது சரி தான்....அதற்காக.....வாழ்நாளில் ஒரு முறை ....நாம் பிரதமாராகி விட வேண்டும் குடியரசு தலைவராகி விட வேண்டும் என்றால்...அது நடை முறைக்கு ஒவ்வாதது...naattuku chevai cheyya வேண்டும் entra aarvam irunthaal....osai padaamal evvalavo ceyalaam.......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.