சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை, திறந்த வெளி முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையால், தமிழக அரசியல் களத்தில், மீண்டும் இலங்கை விவகாரம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
தமிழகத்தில், 132 முகாம்களில், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள், தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.இலங்கையிலிருந்து வரும் தமிழர்களில், விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களும், புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று அறியப்படுபவர்களும், மற்ற அகதிகளுக்கான முகாம்களில் வைக்கப்படுவதில்லை. இவர்கள், செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.இவர்கள் மற்ற அகதிகளைப் போல, சுதந்திரமாக முகாம்களில் இருக்க முடியாது; கியூ பிரிவு போலீசாரின் கண்காணிப்பிலும், பாதுகாப்பிலுமே இவர்கள் வைக்கப்பட்டு உள்ளனர்.
தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டங்களிலும் இவர்கள் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் மட்டும், ஒன்பது பேரை, சிறப்பு முகாம்களில் இருந்து, திறந்தவெளி சிறைக்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் செந்தூரனுக்கு மட்டும், எந்தப் பதிலையும் இதுவரை, அரசு சொல்லவில்லை. ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இவருக்காக குரல் எழுப்புகின்றன. "செந்தூரன் விஷயத்தில், தமிழக அரசுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்காமல், கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள வைகோ நினைக்கிறார். அதனால்தான், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கூட, தனது கட்சி அலுவலகத்திலேயே நடத்துகிறார். வைகோவின் குரலுக்கு, அரசு செவி சாய்க்க வாய்ப்புள்ளது' என்றார் உளவுத்துறை அதிகாரி ஒருவர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பல குடி பெயர்ந்தோர் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக குடியேற முயன்ற போது, கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், திறந்த வெளி சிறையில் இருந்தால், இன்னும் பலர் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று என்ன தடுப்பு இருக்கும். இலங்கை தமிழர்கள் வெளி நாடு போக தான் விரும்புகிறார்கள். அவர்களில் சிலர் இலங்கைக்கே போக விரும்பினால் அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்து அனுப்ப வேண்டும். போரில் ஈடுபட்ட சிலர் தங்கள் மேல் அடக்கு முறை பாயும் என்று கருதினால் அவர்களை மட்டும் இங்கே வைத்து கொள்ளலாம்.
வைகோவின் அணுகுமுறை இலங்கை தமிழர் பிரச்சினையை அதிகபடுதியது. வைகோ தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர், தமிழ் உணர்வுடன் செயல்படுகிறார் என்ற கருத்துக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், வைகோ இலங்கை விவகாரத்தில் ஒரு சமாதானம் வரமால் செயல்படுகிறார். ஒரு பக்கம் காஷ்மீர் தனி நாடு கேட்க கூடாது என்று சொல்லும் இந்தியா, மறு பக்கம் தனி ஈழம் வேண்டும் என்று எப்படி கேட்க முடியும்? வைகோ 1998 மற்றும் 1999 சமயத்தில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு கொடுத்தவர். அந்த சமயத்தில் வாஜ்பாய் அரசை நிர்பந்தம் செய்து இந்த பிரசினைக்கு ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாமே? வாஜ்பாய் அரசு தமிழ் நாட்டில் இருந்து போன எம்.பிக்களை நம்பித்தான் அரசு நடத்தியது (1998 முதல் 1999 வரை அதிமுக கூட்டணி), பிற்பாடு (1999 முதல் 2004 வரை திமுக கூட்டணி). அந்த சமயத்தில் வைகோ அரசை நிர்பந்தம் செய்து இலங்கை பிரசினையை தீர்த்து இருக்கலாமே? மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்த போதும் (2004 முதல் 2009 ), காங்கிரஸ் அரசு திமுக தலைமையிலான திமுக கூட்டணியை நம்பி இருந்தது. வைகோ கூட்டணியில் சேரும் முன்னே இலங்கை பிரசினை தீர்க்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து தேர்தல் அறிக்கையில் சேர்த்து இருக்கலாமே?
இலங்கை பிரசினையில் மத்திய அரசை திட்டி ஓட்டு வாங்குவது தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுக்கு ஒரு கலை ஆகி விட்டது. யாருக்கும் இதை தீர்க்க விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை.
பாகிஸ்தானிலிருந்து கேரளத்திற்குள் நுழைந்து தற்போது இந்தியர்களைவிட சகல சௌபாக்கியங்களுடனும் சர்வ சுதந்திரத்துடனும் எத்தனையோ ஆயிரம் பேர் வாழ்ந்து கொண்டும் ....வைத்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை அங்கு எந்த முகாம்களிலும் அடைக்க வில்லை. அதே போல் இலங்கை தமிழர்களையும் சுதந்திரமாக தங்க அனுமதிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.