E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2012,23:33 IST
கருத்துகள் (30)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மதுரை: தமிழகத்தை அதிர வைத்த, கிரானைட் முறைகேடு விவகாரத்தில், குவாரி உரிமையாளர்கள் கைது, குவாரிகளில் சோதனை, அலுவலகங்களுக்கு, "சீல்' வைப்பு போன்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, "டாமின்' அதிகாரிகள் மூவரைக் கைது செய்து, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் மீதான, இந்த நடவடிக்கை காரணமாக, கிரானைட் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த, இதர அரசுத் துறை அதிகாரிகளும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை, தனியார் கொள்ளையடிப்பதை தடுக்கும் நோக்கோடு, 1978ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால், தமிழ்நாடு கனிம நிறுவனம், "டாமின்' துவக்கப்பட்டது. கனிம வளம் உள்ள பகுதிகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு, அவற்றை வெட்டியெடுத்து, விற்பனை செய்து, அரசுக்கு, "டாமின்' லாபத்தை ஈட்டிக் கொடுத்தது.

விதிமுறைகள் மாற்றம்: கணக்கில் வராத, கனிம வளங்களை கொள்ளையடித்தால், கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என்ற ஆசை, "டாமின்' அதிகாரிகளுக்கு ஏற்பட, அதற்கேற்ப விதிமுறைகள் மாற்றப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலமாக, கனிம வள கொள்ளை அரங்கேறத் துவங்கியது. தற்போது பூகம்பத்தை கிளம்பியுள்ள, கிரானைட் கொள்ளை விவகாரத்தில், "டாமின்' ஒப்பந்தம் பெற்ற குவாரிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. மதுரை, மேலூர் கோட்டத்தில், "டாமின்' நிறுவனத்துக்கு, எட்டு குவாரிகள் உள்ளன. இதில், "டாமின்' மூலம், 7 சதவீதம் மட்டுமே, கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, "சப்-கான்டிராக்டர்கள்' மூலம் விற்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் இழப்பு: மேலூர், கோட்ட குவாரிகளில் எடுக்கப்படும் கற்களுக்கு, கடந்த ஆண்டு இறுதி வரை, விற்பனை

விலை இருந்தது; இந்த ஆண்டு துவக்கம் முதல் விற்பனை விலை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், "டாமின்' குவாரிகளில் வெட்டப்படும் கற்களுக்கு, சப்-கான்டிராக்டர் நிர்ணயிக்கும் விலையே, கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. இதன் மூலம், "டாமின்' நிறுவனத்தை நடத்துவதே, சப்-கான்டிராக்டர்கள் தான் என்ற நிலை ஏற்பட்டது. கிரானைட் கற்களுக்கு விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

போலி முத்திரை: மேலும், "டாமின்' ஊழல் அதிகாரிகள் சிலர், தங்களை, "கவனிக்கும்' ஒப்பந்ததாரர்களுக்கு, கிரானைட் கற்களை வெட்டி எடுக்க, ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். இந்த ஒப்பந்ததாரர்கள், "டாமின்' எடுத்துள்ள குவாரிகள் தவிர, வேறு சில குவாரிகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து, வெட்டி எடுக்கும் கிரானைட் கற்களை, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் "டாமினி'ன் போலி முத்திரையை குத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளனர். மேலூரில் உள்ள, "டாமின்' அலுவலகத்தில், நேற்று காலை, 8:00 மணிக்கு, டி.எஸ்.பி., தங்கவேல் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

முதன் முறையாக: மேலூர், "டாமின்' கோட்ட மேலாளர் தில்லைநாயகத்திடம், அவர்கள் விசாரணை நடத்தினர். அவர், ""இங்கு வந்து ஒரு மாதம் தான்

Advertisement

ஆகிறது; எனக்கும், இத்துறையில் நடந்த முறைகேட்டிற்கும் சம்பந்தம் இல்லை,'' என்றார். இதையடுத்து, முதுநிலை திட்ட அலுவலர் மனோகரன், திட்ட அலுவலர் ஜவகர், சுரங்கப்பணி துணைவர் ரகுபதி ஆகியோரை கைது செய்தனர். ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றினர். கிரானைட் முறைகேட்டில், "டாமின்' அதிகாரிகள் கைதானது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே, முறைகேடுகள் தொடர்பாக இரண்டு உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த அரசின் இதர துறை அலுவலர்கள், கலக்கமடைந்துள்ளனர். விசாரணை வளையம் தீவிரமானால், தாங்களும் கைதாகலாம் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajeshwaraadevar Subramanian - Liverpool,யுனைடெட் கிங்டம்
02-செப்-201220:23:35 IST Report Abuse
Rajeshwaraadevar Subramanian Excuseme public... Relax... Whole govt officers not bad... Some of them ok... But high officers & low officers don't worry... Investigation officers... We need to take auction against to every one... Deportment enquiry wast... Without any loophole make some All section but the FIR ... Arrest them lower& higher level.. They did ... They make poor state... Without food some of them living our state.. This guys are made it... So pls... Our honourable CM & collector.. And other officer pls... Don't give any excuse plssss .. Whole over world Tamil people beg you sir... Punish them..., plssss.... We are together we can change our poverty ..., our son& daughter & grand sons... Respect you officers... Don&39t allow to escape the criminals plsss
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
02-செப்-201213:40:38 IST Report Abuse
Ashok ,India அரசு ஜீப்பில் பந்தா காட்டும் கனிமவளத்துறை ,வருவாய் துறை அதிகாரிகளை அரசு போலீஸ் ஏன் ஒன்றும் செய்யவில்லை. ஏன் இவர்களுக்கு தெரியாமலா இவ்வளவு கோடி ஊழல் நடந்துள்ளது. இவர்கள் இங்கு சம்பளம் மட்டும் வங்கி கொண்டு வெளிநாட்டில் வேலை பார்த்தார்களா ??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Karikalan - Manapakkam, CHENNAI-125.,இந்தியா
02-செப்-201213:15:40 IST Report Abuse
Karikalan அதிகாரிகளே புரிந்து கொள்ளுங்கள்.அரசியல்வாதி களுக்கோ, தெரிந்தே முறைகேடு செய்பவர்களுக்கோ துணை போனால் இது தான் கதி.பலிகடாகளையும் தாண்டி, உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். வெளிப்படையான நடவடிக்கை மட்டுமே மீண்டும் குற்றங்களை தடுக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
02-செப்-201216:48:15 IST Report Abuse
Pannadai Pandianபழைய திமுக ஆட்சியில் (2006 -2011 ) இல் முக்கிய அதிகாரிகள் எல்லோரும் குற்றவாளிகள்தான். இல்லை என்றால் எப்படி இந்த அளவுக்கு போலி பத்திரங்களுக்கு நிலப்பதிவு செய்து கொடுத்திருப்பார்கள் ? ஐயோ....அப்பப்பா.....என்ன மாதிரி அராஜகம் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pambanathaan - Jeddah,சவுதி அரேபியா
02-செப்-201212:09:36 IST Report Abuse
Pambanathaan கோடாம்பாகத்தில் கனிம வளத்துறையில் வேலை பார்த்த ஒரு அதிகாரி கொல்லப்பட்டாரே......அதற்க்கும் இதற்கும் ஏதேனும் சம்மந்தம்....?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
02-செப்-201210:57:34 IST Report Abuse
Dhanabal கடந்த 20 ஆண்டுகாலமாக டாமின் நிர்வாக பொறுப்பில் இருந்த உயர் மட்ட ,ஐ .ஏ.எஸ் அதிகாரிகளில் எவரும் இதில் சிக்காதது ஆச்சரியமே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Haribaskaran Krishnan - Chennai,இந்தியா
02-செப்-201210:41:35 IST Report Abuse
Haribaskaran Krishnan மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
02-செப்-201210:40:01 IST Report Abuse
ஆனந்த் கிரானைட்டுகளால் தனக்கு தானே சமாதி அமைத்துகொண்ட இவர்களை என்ன என்று சொல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mohan Raj - Madathukulam,இந்தியா
02-செப்-201210:37:19 IST Report Abuse
Mohan Raj இந்த திமுக அடிபொடிகளுக்கு நொட்டை சொல்வதே வேலையாகிவிட்டது.நடவடிக்கை எடுத்தாலும்,எடுக்காவிட்டாலும் ஏதோ ஒரு நொட்டை சொல்வது.பல வருடங்களாக நடக்கும் முறைகேட்டை போன ஆட்சியில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டியதுதனே?அதெப்படி எடுக்கமுடியும்...அணைத்து ஊழலையும் செய்ததே கருணா குடும்பம்தானே.என்னை கேட்டால் முதலில் கருணாவையும் அவனது குடும்பத்தையும் பிடித்து உள்ளே போட்டால் அனைத்தும் சரியாகிவிடும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
02-செப்-201210:25:17 IST Report Abuse
vasan தவறு செய்தவர்கள் எந்த கட்சியில் உள்ளவர்களாக இருந்தாலும் தண்டிக பட வேண்டும் பாரபட்சம் இல்லாமல்.............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
மொக்கை - madurai,இந்தியா
02-செப்-201210:16:49 IST Report Abuse
மொக்கை பணத்திற்காக எதையும் செய்ய துணிந்த இவர்களெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்தானா என்ற சந்தேகம் வருகிறது..இவர்களுக்கு பணமே பிரதானமாகிப்போனதால், தாய் மண்ணை விற்று கொள்ளையடிப்பதை போல வீட்டுப்பெண்களையும் விற்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.. இவர்களின் போட்டோக்களை இவர்கள் குடியிருக்கும் ஊரிலேயே முச்சந்தியில் வைத்து அனைவரும் உமிழும்படி செய்ய வேண்டும்..பாதகஞ் செய்பவரை கண்டால் நீ பயங் கொள்ளலாகாது பாப்பா..மோதி மிதித்து விடு பாப்பா..அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.