2 cr worth bungalow for MP's | இரண்டு கோடி ரூபாய் செலவில் எம்.பி.,க்களுக்கு சொகுசு வீடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இரண்டு கோடி ரூபாய் செலவில் எம்.பி.,க்களுக்கு சொகுசு வீடு

Updated : செப் 03, 2012 | Added : செப் 01, 2012 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,க்களுக்காக, டில்லியில் அடுக்கு மாடி குடியிருப்பில், நான்கு படுக்கை அறைகளுடன் கூடிய, சொகுசு வீடு கட்டப்படுகிறது. ஒவ்வொரு வீடும், இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. ராஜ்யசபா எம்.பி.,க்கள், டில்லியில் தங்கியிருப்பதற்காக, டால்கடோரா சாலையில், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில், சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு, ஏழு தளங்களைக் கொண்டதாகவும், ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வீடுகள் என, மொத்தம் 14 வீடுகளை உடையதாகவும் இருக்கும். இந்த குடியிருப்பு வளாகத்தில், பொது வரவேற்பறை, உடற்பயிற்சிக் கூடம் உட்பட அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு வீடும், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், நான்கு படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை என்பது உள்ளிட்ட, வசதிகளை கொண்டதாக இருக்கும். இந்த குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகளை, அடுத்த மாதம் துவங்கி, 16 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kovai Subbu - Coimbatore,இந்தியா
02-செப்-201223:43:03 IST Report Abuse
Kovai Subbu மக்களே, நிறைய பேர் இதில் ஒரு முக்கியமான ஒன்றை கவனிக்க மறந்து விட்டீர்கள். இந்த வீடுகள் ராஜ்யசபா எம்.பிகளுக்கு. லோக் சபை எம்.பிகளுக்கு கிடையாது. ராஜ்யசபா எம்பிகள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்கள் அரசியல் வாதிகளால் //தேர்ந்து// எடுக்கப்பட்டவர்கள். பாவப்பட்ட ஏழைகள். தேர்தலில் நின்று செலவு செய்ய காசு இல்லாதவர்கள். உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர், கனிமொழி, மணி ஷங்கர் ஐயர், ஏ.கே.அந்தோனி, குலாம் நபி ஆசாத், ஜெய பச்சன், ஞானதேசிகன், அருண் ஜெட்லி, ராம் ஜெத்மலானி , எஸ். எம். கிருஷ்ணா, மைத்ரேயன், விஜய் மால்யா, வெங்கையா நாய்டு, ஜெயந்தி நடராசன், ராம் விலாஸ் பஸ்வான், த.ராஜா, ஜெயராம் ரமேஷ், வயலார் ரவி, ஜனார்தன ரெட்டி, ரேகா, செல்வகணபதி, அமர் சிங், அபிஷேக் மனு சிங், திருச்சி சிவா, அம்பிகா சோனி, ஜி.கே. வாசன், சீதாராம் யச்சூரி, சிரஞ்சீவி. எல்லோருக்கும் மேலாக இது வரை இந்திய மக்களால் எந்த தேர்தலிலும் தேர்ந்து எடுக்க படாத நம் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். For a list of current members as of Sept 2, 2012, please refer to - rajyasabha.nic.in or 164.100.47.5/Newmembers/memberlist.aspx. இப்போது சொல்லுங்கள் இவர்களுக்கு எல்லாம் ராஜ்ய சபா நடக்கும் போது டெல்லியில் தங்குவதற்கு ஒரு வீடு வேண்டுமா இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
Shasun N - erode,இந்தியா
02-செப்-201221:54:23 IST Report Abuse
Shasun N மக்களாகிய நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் நமது பிரதிநிதிகள் வீடு இல்லாமல் இருந்தால் உலகம் நம்மைக் கேவலமாக நினைக்கும் என்பதால் தான் ஓட்டுப் போடும் மக்கள் இடிந்து விழும் குட்டிச்சுவர் வீட்டில் இருந்தாலும் சரி என்று கருதி அவர்கள் வலுவான வீட்டில் இருந்து கொண்டு தொடர்ந்து நமக்குச் சேவை செய்வது என்று கங்கணம் கட்டிச் செயல்படுவதால் மிகவும் குறைவான தொகையில் அதாவது 2 கோடி ரூபாய் செலவில் சிக்கனமாக இருந்தால் போதும் என்று கட்டிக்கொள்கிறார்கள். உலக அரங்கில் நமது தாய்நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் "நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" இந்தச் சிக்கன நடவடிக்கையினால் நாம் பெருமிதம் கொள்வோம். ஏனெனில் நம்மில் ஒருவராக இருந்து நமக்காகச் சேவை செய்யும் அர்ப்பணிப்பு உணர்வோடு சென்று இன்று வரை நமக்காகவே இரவு பகல் பாராது அயராது உழைக்கும் அவர் மென்மேலும் பல வழிகளிலும் வளர்ந்து சிறப்புப் பெற வாழ்த்தி நாம் வளர அடுத்த தேர்தலை நோக்கிக் காத்திருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Kunga Chandru - Madurai,இந்தியா
02-செப்-201221:49:30 IST Report Abuse
Kunga Chandru இது அநியாயம் அக்கிரமம் 1 86 ௦௦௦ லட்சம் கோடிக்கு அமுக்கிட்டு கேவலமா 2 கோடிக்கு நம்ம MP களுக்கு வீடா?? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Edi Shivaji - Fairfield,யூ.எஸ்.ஏ
02-செப்-201221:27:45 IST Report Abuse
Edi Shivaji 30 வருஷங்களுக்கு மேல் அரசாங்க வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் ஐந்து வருடங்கள் பதவியில் இருக்கபோகிற MP களுக்காக இந்த மாதிரி சொகுசு வீடுகளா? வரி கட்டுபவர்களுக்கு வயிறு எரியும். MP க்கள் தலை குனிய வேண்டிய சலுகை.
Rate this:
Share this comment
Cancel
Samir - Trichy,இந்தியா
02-செப்-201220:51:41 IST Report Abuse
Samir இவ்வளவு நாள் வளைகுடாவில் இருந்து ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை. ஊருக்கு வந்து ஒரு MP ஆக முடியுமான்னு பாக்கலாம். ஆமா...., ஒரு MP ஆவதற்கு என்ன தகுதி வேணும் ? யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுகளேன்.
Rate this:
Share this comment
Cancel
siva - bangalore,இந்தியா
02-செப்-201219:48:55 IST Report Abuse
siva ஏன் இப்போ ரோட்டிலேயா படுக்குரானுங்க?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-செப்-201215:03:26 IST Report Abuse
g.s,rajan மக்களுக்காக அல்லும் பகலும் அயராது கஷ்டப்படும் நமது பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கு வீடு கட்ட 2 கோடிங்கறது ரொம்ப ரொம்ப கம்மி இது ரொம்ப அநியாயம் அக்கிரமம் இந்தியா ஏழை நாடாக இருந்தாலும் நம்ம அரசியல்வாதிங்க பெரிய பெரிய பணக்காரர்கள் ஆச்சே அவங்க அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி கட்டிக்குடுங்க இல்லேனா நாட்டுலே ஒரு பய மதிக்க மாட்டான் ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
Santhan Raj - singapore,சிங்கப்பூர்
02-செப்-201214:47:35 IST Report Abuse
Santhan Raj எல்லாருக்கும் வணக்கம். எல்லாரும் அவங்களுக்குச் செய்யறது வெறுமனே இங்கே மட்டும் குறை சொல்லிட்டு வேலையைப் பார்த்துட்டுப் போயிடுறீங்க. ஊழலை எதிர்க்கிற இயக்கம் கிளம்பின எவ்வளவு பேர் ஆதரவு தரத் தயாராகுறீங்க. படிக்காத, அரைகுறையா படிச்ச, இல்லேன்னா முழுசா படிச்ச ஆனா எல்லா மொள்ளமாரித்தனமும் பண்றவனா முதல்ல எம்.பி யாவோ எம்.எல்.எ வாவோ, கவுன்சிலராவோ போட்டியிடவே அனுமதிக்காதீங்க. அதுக்கு முதல்ல ஒண்ணு சேருங்க. ஒவ்வொரு வட்டத்துக்கும் சீர்திருத்த இளைஞர்கள் ஒண்ணு சேருங்க. கவுன்சிலர் தேர்தலில்ல கட்சியால நிறுத்தப்படுறவங்கள உங்கள் அணியினர் உள்ளூர் மன்றத்தில மக்கள் முன்னிலையில என்ன செய்வாங்க, அவை எப்படிச் சாத்தியமாகும், எவ்வளவு காலத்துல செய்து முடிப்பாங்க. தற்போதைய நிலையில இருக்குற அப்பகுதி குறிப்பிட்ட காலத்துல எவ்வளவு முன்னேற்றம் அடையும் என்பதை எல்லாம் தேர்தல்ல நிக்கறவங்க தெளிவா தெரிஞ்சிருக்கணும். மேம்படுத்துகிற அறிவுத்திறனும் மனத்திட்பமும் இருக்கணும். அவர்கள் அப்படி இல்லையென்றால் அக்கட்சியிடமே முறையிட்டு அவர்கள் தேர்தலில் மீறிப் போட்டியிட்டால் ஓட்டுப் போட மாட்டோம் என்று தெளிவுபடுத்த வேண்டும். இங்குக் கட்சி முக்கியமல்ல. நம் பகுதி முன்னேற்றம்தான் முக்கியம். அவர்கள் அதற்காகத்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதையே சட்டசபைத் தொகுதித் தேர்தலுக்கும் பாராளுமன்றத் தொகுதித் தேர்தலுக்கும் தைரியமாகப் பயன்படுத்துங்கள். எல்லாவற்றையும் வீடியோ எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். யாரும் நாட்டையாளலாம் என்பதில்லை. யாரெல்லாம் நாட்டை ஆளத் தகுதி பெற்றிருக்கிறார்களோ அவர்கள்தான் ஆள வேண்டும். பணம் வெற்றியை நிர்ணயித்தால் லட்சம் கோடி வரை கொள்ளையடித்துவிட்டு நாங்கள் யோக்கியம் மற்றவர்களைக் கேளுங்கள் என்று தெனாவட்டாகப் பதிலளிக்க மாட்டார்கள். அவ்வாறு பதிலளித்தால் முன்பு எடுத்த வீடியோக்களை YouTube- இல் ஏற்றம் செய்து விடுங்கள். மானம் கப்பலேறட்டும். அவன் குடும்பமே அவன் மூஞ்சில காரித்துப்பட்டும்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
02-செப்-201213:50:15 IST Report Abuse
K.Sugavanam பதவிக்காலம் முடிஞ்சதும் காலி பண்ணாம இருக்க போறாங்க.இது தேவையா?இப்ப எங்க தங்க றாங்க.ரோடுல மரத்தடியிலையா?ஜகஜீவன் ராம் தங்கிய வீடு இன்னும் அவர் குடும்ப கச்டடில தான் இருக்காம்.அதாவது அம்பது வருஷமா.அதை இப்போ அவர் நினைவிடமா மாத்த யோசனையில் அவர் குடும்ப ஆட்கள் உள்ளனராம்.அப்புறம் ஆறாண்டுகளுக்கு ஒருதரம் கட்டிகிட்டே இருக்க வேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
02-செப்-201213:36:24 IST Report Abuse
periya gundoosi இரண்டு கோடி செலவில் எம்.பிகளுக்கு சொகுசு வீடா, அநுபவிப்பதெல்லாம் பத்தாதுன்னு இதுவும் ஒரு கேடா, எல்லா எம்.பிக்களையும் நாண்டுக்கிற மாதிரி மக்கள் கேட்கிறான் சூடா, கட்டுமானப் பணியிலும் ஊழலுன்னு விரைவில் செய்தி வருமோடா, ஏழை டவுசரில் கட்ட இல்லை சிறு நாடா, உங்களாலே பாரதநாடு பாழாய்ப்போகி மாறப்போகுது சுடுகாடா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை