E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ரிசர்வ் வங்கி பெயரில் போலி இ-மெயில்: ஆன்-லைன் மோசடி கும்பலின் தொடரும் கைவரிசை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

03 செப்
2012
03:04
பதிவு செய்த நாள்
செப் 01,2012 23:40

ஆன்-லைன் வங்கிக் கணக்குகளில், பணம் திருடும் கும்பல், ரிசர்வ் வங்கியின் பெயரில் அனுப்பிய போலி இ-மெயில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு நாளுக்குள் வங்கிக் கணக்கின், "டேட்டாபேஸ்' அனுப்பவில்லை எனில், ஆன்-லைன் கணக்குகள் முடிக்கப்படும்' என, அதில் எச்சரிக்கப்பட்டிருந்ததால், வங்கிகளும், வாடிக்கையாளர்களும், பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர். " ஆன்-லைன் வாடிக்கையாளர்கள் உஷார்' என, அனுப்பப்பட்டு உள்ள இ-மெயிலில் கூறப்பட்டிருந்ததாவது: ரிசர்வ் வங்கி, 24 மணி நேரம் இயங்கும் மத்திய கண்காணிப்பு மையத்தைத் துவங்கியுள்ளது. இணையதள வங்கி மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றங்களை, இம்மையம் கண்காணிக்கும். இதற்காக, வங்கியின் இணைய தள வங்கி வாடிக்கையாளர் கணக்கு விவரங்கள் தேவைப்படுகின்றன. அனைத்து வங்கிகளும், தங்களுடைய இணையதள வங்கி தகவல் தொகுப்புகளை, ரிசர்வ் வங்கியின், 24 மணி நேர கண்காணிப்பு மையத்தில் இணைக்க வேண்டும். இதற்கு, இ-மெயிலுடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பைத் தொடர்பு கொண்டு, உங்களுடைய வங்கியைத் தேர்வு செய்து கொள்ளலாம். இ-மெயிலின் இணைப்பு, 24 மணி நேரத்துக்குத் தான் தொடர்பு கொள்ளும்படி இருக்கும். அதற்குப் பின் தொடர்பு கொண்டால், உங்களுடைய இணையதள வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். மீண்டும் கணக்குகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வர, ரிசர்வ் வங்கியை அணுக வேண்டியிருக்கும். எனவே, உடனடியாக உங்கள் கணக்குகளை, ரிசர்வ் வங்கி கண்காணிப்புப் மையத்துடன் இணைத்து விடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ செய்தி வடிவில், இ-மெயில் இல்லாமல் இருந்ததும், இ-மெயிலில் குறிப்பிட்டிருந்தபடி, கணக்கை, "அப்-டேட்' செய்ய முயன்றபோது, ஆன்-லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கான ரகசிய குறியீட்டு எண், மற்றும் கணக்கைப் பயன்படுத்தும் நுழைவு எண் ஆகிய விவரங்களைத் தரும்படி கோரப்பட்டதும், பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழக்கமான செயல்பாடுகளிலோ, வங்கியிலோ, வாடிக்கையாளரின் ரகசிய குறியீட்டு எண்கள் கேட்கப்படுவதில்லை. இதையடுத்து, தனிநபரின் இணையதள வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, அதன்மூலம் பணம் திருடுவதற்காகவே, இது போன்ற இ-மெயில்கள் அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரியிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் பெயரில், போலி இ-மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. இதை நம்பி, வங்கிகளோ, வாடிக்கையாளர்களோ, ஆன்-லைன் பரிவர்த்தனை விவரங்களை, யாருக்கும் அளிக்க வேண்டாம். ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளம், www.rbi.org.in என்ற முகவரியில் தான் இருக்கும். ஆனால், நேற்று அனுப்பப்பட்ட இ-மெயில், alert@rbi.org என்ற முகவரியில், அனுப்பப்பட்டு உள்ளது. ஆன்-லைன் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, மோசடி செய்யும் கும்பலே, இது போன்ற இ-மெயிலை ரிசர்வ் வங்கியின் பெயரில் அனுப்பியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை, அறிமுகம் இல்லாத இணைய தளத்திலோ அல்லது நேரடியாகவோ அளிக்க கூடாது என, வங்கிகளை ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளதும், வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-செப்-201213:13:26 IST Report Abuse
Kasimani Baskaran எந்த விபரத்தை website இல் enter செய்வதற்கு முன்னரும் s :// மற்றும் வங்கி உங்களுக்கு கொடுத்த website ஆக இருக்க வேண்டும். இணையத்தள முகவரியில் கடைசியில் வரும் வார்த்தை - அதாவது .org அல்லது .ws அல்லது .cc அல்லது .tv போன்ற முகவரிகள் போலியானவை - RBI ஐ பொறுத்தவரை. சரியான முகவரி இருக்கிறதா உறுதி செய்த பின்னரே உங்களது சங்கேத என்னையோ அல்ல்லது password ஐயோ enter செய்யுங்கள். IE உபயோகிக்காதீர்கள் - அதுதான் நிறைய ஓட்டைகள் உள்ள browser . Firefox அல்லது opera browswer internet explorer ஐ விட பாதுகாப்பானது. எந்த வங்கியும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் enter செய்யச் சொல்ல மாட்டார்கள். இப்பொழுதெல்லாம் பிற நாடுகளில் security token கள் உபயோகத்தில் வந்துள்ளது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
T.Mahendran - Tabuk,சவுதி அரேபியா
02-செப்-201213:05:00 IST Report Abuse
T.Mahendran From: cbe mahar To: info@rbieservicedept.com.in, transfer@rbieservicedept.co.in Content-Type: multipart/mixed boundary=00248c768f5ab2f48304c669ddbb Team, I have received a fake email as attached here with in the name of RBI , including director photo As an Indian nationality, I want to highlight this issue with RBI chamber Kindly go through to find root cause and initiate preventive action. to avoid such a from the RBI Name . I don’t know the right person from RBI to highlight this issue, anyhow if you feel this is not related your part of job, at least try to forward to concerned correct person with your conscience & National patriot
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Madukkur Nesan - Madukkur ,இந்தியா
02-செப்-201211:50:00 IST Report Abuse
Madukkur Nesan மதுக்கூர் நேசன், இது குறித்து தகவல்களை எந்த இடத்தில புகார் அளிக்க வேண்டும் என்று கூறவும். எனக்கு வரும் ஈமெயில் எது போன்று வரும் தகவல்களை FWR செய்தல் கண்கணிக்க வசதியாக இருக்கும் அல்லவா? from "Reserve Bank Of India" Reserve Bank Of India 17 Shantipath, Chanakyapuri, New Delhi 110021 INDIA Customer services, Payment file: RBI-DEL/id1033/12. Payment amount: $ 500,000. us dollars. RESERVE BANK OF INDIA OFFICIAL PAYMENT NOTIFICATION Attn: Beneficiary, The Foreign Exchange Transfer Department Reserve bank of India has decided to bring to your attention, that you were listed as a beneficiary in the recent schedule for payment of outstanding debts incurred by the BRITISH GOVERNMENT Ping since 2007 to 2012 According to your file record with your email address, Your payment is categorized as: Contract type: Lottery/inheritance/ unpaid contract funds/ Undelivered Lottery fund/ Recently on the 5th of August, 2012. The Reserve Bank of India (RBI) Governor, Dr D. Subbarao and Ban Ki-moon Secretary-General of the United Nations met with the Senate Tax Committee on Finance RBI Mumbai/Delhi branch. Regarding unclaimed funds which have been due for a long run, which have make owners to be confused that’s they have been Defrauded by fraudster, at of the meeting (RBI) Governor, Dr D. Subbarao mandate all unclaimed funds to be release to the beneficiary stating that it is an unfair practice to withhold funds for government basket for one reason or the other for tax accumulations. Therefore, we are writing this email to inform you that $500,000 US DOLLARS will be release to you in your name, as it was committed for (RBI) Governor that Beneficiary will have to pay Fund Release Order Fee Charges (Rs 9,500INR) only. To credit your account immediately after making the payment you will have to s your Pan card, payment receipt and one picture of you passport size for file record, This is according to law assigned and the security covering your fund from the source The assigned transfer department don’t have any right to DEDUCT from your fund because it’s made to reach your account in complete Value We decline for 3 working days after date of receiving this mail. Also reconfirm your details- for crediting. Please you are advised to fill the form below and s it immediately to our transfer department for verification through email below for prompt collection Contact. Manager Name DR. Mark Roland in charges of foreign exchange Transfer department Contact E-mail: funds_transferdept@accountant.com Fill The Form Below: 1. Full Names 2. Residential Address: 3. MOBILE NUMBER: 4. Fax Number: 5. Occupation: 7. Sex: 8. Age: 9. Nationality: 10. Country: 11. Marital Status: 12. E-mail id: 13. Bank Name: 14. Account Number: 15. Account Holders Name: 16. Bank Branch: RESERVE BANK OF INDIA (CENTRAL BANK). CONTACT TRANSFER DEPARTMENT EMAIL: funds_transferdept@accountant.com Claim Your ($500, 000.00) United State Dollars. NOTE: If you are not the rightful owner of this E-mail Address Please don&39t reply to this message, for any double claim will lead to Disqualification of this Fund. Be Warned You are to keep all information away from the general public for security reason DR D. SUBBARAO. RESERVE BANK OF INDIA GOVERNOR. Accept my hearty congratulations once again Yours faithfully, Dr D. Subbarao
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-செப்-201213:16:59 IST Report Abuse
Kasimani Baskaranஒன்றும் செய்யாமல் விடுவதே உத்தமம். யாரும் ஓசியில் பணம் கொடுக்க மாட்டார்கள்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
02-செப்-201211:30:14 IST Report Abuse
periya gundoosi நேற்று தான் திரு.பாலகுருசாமி கூறியிருந்தார் இந்திய திருநாட்டில் படித்தவர்கள் செய்யும் குற்றமே அதிகம் என்று இப்பொழுது புரிகிறதா அவர் கூறியது 100 சதவிகிதம் உண்மை என்று. நம்நாடு 2220 லும் கூட வல்லரசு நாடாகாது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-செப்-201213:19:51 IST Report Abuse
Kasimani Baskaranஇப்படிப்பட்ட scam கள் பெரும்பாலும் மற்ற நாடுகளில் இருந்து வருபவை (கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்க நாடுகள் - நைஜீரியா போன்றவை) . படித்தவர்கள் செய்யும் குற்றம் இந்தியாவில் உலகநாடுகளை விட மிக குறைவு....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Chitra Leka - mumbai,இந்தியா
02-செப்-201208:32:15 IST Report Abuse
Chitra Leka இந்த மாதிரி ஈ-மெயில்களுக்கு பதில் அனுப்பாமலும் உடனடியாக அழித்து விடுவதுமே சிறந்தது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vadiveliob - namakkal,இந்தியா
02-செப்-201206:53:26 IST Report Abuse
vadiveliob Day by day fraud against the public is increasing. Even the public is not taking care to know whether the message is correct or not. Most of the public want money without HARD WORK. Also there is a possibility to lose entire savings for eg EMU CHICKEN SCHEME AT PERUNDURAI. MAIN REASON FOR THIS IS: WANT TO LIVE WITH EXTRAVAGANT EXPENSE LIKE WINE, WOMEN AND OTHER ENJOYMENT. ALSO MOST OF THE LIVELY GOODS WERE SUPPLIED BY GOVERNMENT AT FREE OF COST. HE NEED NOT GO FOR EMPLOYMENT. IDLE MIND IS DEVILS WORKSHOP.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sunder Raj - Coimbatore,இந்தியா
02-செப்-201200:52:44 IST Report Abuse
Sunder Raj BUSINESS RELATIONSHIP Dear Fri, Let me start by introducing myself,I am Dr Haruna Bello Manager of Bank Of Africa Burkina faso. I am writting you this letter based on the latest development at my Department which I will like to bring to your personal edification.(18.5 million U.S Dollars transfer claims). This is a legitimate transaction and I agreed to offer you 40% of this money as my foreign partner after confirmation of the fund in your bank account, If you are interested,get back to me with the following details below. (1)Your age........ (2)Your occupation..... (3)Your marital status..... (4)Your full residential address....... (5)Your private phone and fax number and your complete name....... As soon as I receive these data&39s, I will forward to you the application form which you will s to the bank. Best Regard Dr Haruna பெல்லோ DEAR LOTTERY WINNER, CONGRATULATION THE ATTACHMENT FILE OF THIS MAIL FOR YOUR LOTTERY LUCKY WINNING DETAILS AS ONE OF THE LUCKY WINNER OF THE UK BBC ONE NATIONAL LOTTERY AWARD HELD ON THURSDAY 2ND AUGUST 2012 , FILL THE FORM AND RETURN YOUR DETAILS REQUIRE FOR DELIVERY OF YOUR FUND CLAIMS IMMEDIATELY. ALL YOUR PERSONAL INFORMATION AND REPLY SHALL COME DIRECTLY TO OUR OFFICIAL EMAIL:bbclonclaimsdept@w.cn CONGRATULATIONS TO YOU AND YOUR FAMILY BEST REGARDS BBC NATIONAL LOTTERY BOARD. COMPENSATION FROM RESERVE BANK OF INDIA? 3 May 12 18:01:10 Print "\(RBI\) Governor, Dr D. Subbarao" More Mails from this user To : undisclosed recipients: Attn: Beneficiary, The transfer department of the Reserve bank of India has decided to bring to your attention, that you were listed as a beneficiary in the recent schedule for payment of outstanding debts incurred by the RBI government 2010 to 2012 According to your file, Your payment is categorized as: contract type:Lottery/inheritance/ unpaid contract funds/ undelivered Lottery fund/ Payment file: RBI-DEL/id1033/09. Payment amount: $ 500,000. Pounds. But recently, on the 24th of April, 2012. The Reserve Bank of India (RBI) Governor, Dr D. Subbarao and Ban Ki-moon Secretary-General of the United Nations met with the Senate Tax Committee On Finance RBI Mumbai branch. Regarding unclaimed funds which have been due for a long run, at of the meeting (RBI) Governor, Dr D. Subbarao mandate all unclaimed funds to be release back to the beneficiary stating that it is an unfair practice to withhold funds for government basket for one reason or the other for tax accumulations. Therefore, we are writing this email to inform you that $500,000 POUNDS will be release to you in your name, as it was committed for (RBI) Governor that Beneficiary will receive his/her fund within 3 working days. To credit your account immediately making a decline for 2 working day after date of receiving this mail. Also reconfirm your details- for crediting. S BELOW INFORMATION: FULL NAME:- AGE:- SEX:- ADDRESS:- CODE: STATE/PROVINCE: COUNTRY:- PHONE:- OCCUPATION/POSITION:- ACCOUNT NUMBER: BANK NAME:- ACCOUNT HOLDERS NAME: BANK BRANCH:- S all your details to us on this e-mail: ( rbipaytcenter@hotmail.com ) (Transfer Officer) Mrs. Sharma COMPENSATION FROM RESERVE BANK OF INDIA?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.