Shanaz arrested in forgery marriage case | பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர்; பெண் கில்லாடி பெங்களூரூவில் கைதானார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர்; பெண் கில்லாடி பெங்களூரூவில் கைதானார்

Updated : செப் 02, 2012 | Added : செப் 02, 2012 | கருத்துகள் (64)
Advertisement

பெங்களூரூ: சென்னையில்தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து 50க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கில்லாடி பெங்களூரூவில் கைது செய்யப்பட்டார். இவள்தான் நமக்கு மனைவி என்று ஏமாந்த கணவர்கள் பலரும் புகார் கொடுத்ததோடு இந்த பெண்ணுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரியுள்ளனர். பெண்கள் தான் ஏமாற்றப்படும் கதை கேட்டிருக்கின்றோம். ஆனால் இந்த செகாநாத் என்ற பெண் ஆண்களை மிஞ்சிய பெண் கில்லாடியாகி விட்டார். இனி ஆண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.


திருமண பந்தத்தை கொச்சைப்படுத்தியவள்:

"செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்தவர் செகாநாத் ( வயது 25 ) . இவர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்தவர். அவரது தாயின் நடவடிக்கை சரியில்லாததால், அவரது தந்தை வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். ஆண்கள் பலருடன் நெருக்கமாகப் பழகிய செகாநாத், வீட்டிலிருந்து வெளியேறினார்.பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த சித்திஷ், 32 என்ற வாலிபரை, சில ஆண்டுகளுக்கு முன் செகாநாத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. செகாநாத்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவரிடம் இருந்து சித்திஷ் விவகாரத்து பெற்றார்.வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்தியவர்:

யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டத்திற்கு பல இடங்களில் சுற்றி, பல ஆண்களுடன் பழகி வந்த செகாநாத், விபசாரக் கும்பலிடம் சிக்கினார். பத்தனம் திட்டா பகுதியில் ஹரி என்பவரைத் திருமணம் செய்து, அவருடன் 6 மாதம் வாழ்ந்தார். அவரது வீட்டில் "டிவிடி பிளேயர்', நகையைத் திருடி தலைமறைவானார். திருச்சூரை சேர்ந்த பிஜு என்ற ஊனமுற்ற வாலிபரைத் திருமணம் செய்த செகாநாத், அவருடன் ஒரு வாரம் வாழ்க்கை நடத்தி விட்டு எஸ்கேப் ஆனார். ஏறக்குறைய கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் வார, மாதக் கணக்கில் குடும்பம் நடத்திய செகாநாத், தமிழகத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்.வேப்பேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவர்களிடம், தான் ஒரு அனாதை என்று பேசி வந்தார்.

செகாநாத்துடன் கடலை போடும் வாலிபர்களிடம், திடீரென காதலிப்பதாகக் கூறி, அவர்களிடம் பணம் கறந்து, திருமணம் வரை சென்றுள்ளார். ஒரு சிலருடன் முதல் இரவை முடித்ததும், எஸ்கேப் ஆகியுள்ளார்.வேளச்சேரியில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த செகாநாத்திடம் ஏமாந்த திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறை சேர்ந்த சரவணன் மற்றும் தி.நகரை சேர்ந்த ராஜா ஆகியோர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.


இந்த புகாரை பெற்ற கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் போலீஸ் தனிப்படையினர் செகாநாத்தை தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூரூவில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
03-செப்-201219:03:29 IST Report Abuse
Ramesh Kumar சில பேர் மிகவும் வக்கிரமாக கருத்து என்ற பெயரில் வாந்தி எடுத்துள்ளனர்....
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
03-செப்-201215:43:17 IST Report Abuse
சாமி இந்த யூப்பி எஸ்ல 50 டியூப்லைட் எரிய சாத்தியம் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Sembiyan Thamizhvel - THIRUVALLUR,இந்தியா
03-செப்-201213:19:45 IST Report Abuse
Sembiyan Thamizhvel வெள்ளை கலர் பொம்பளைக்கு அலைந்ததால் இப்படித்தான்......... இவளை கல்யாணம் பண்ணி ஏமாந்தவன் முகரையை பார்க்கவும். அலைபவங்கள் என்று எழுதி ஒட்டி இருக்கிறது. தவறு அந்த பெண்ணிடம் இல்லை. வெள்ளைத்தோல் வெறி பிடித்து அலைந்த இந்த பரதேசி பயல்களிடம்தான்..... ஒழுங்காக கல்யாணம் செய்வதாக இருந்தால், டௌரி இவ்வளவு தரியா? அவ்வளவு தரியா? என்று பேரம் பேசுவாங்கள். இப்போது இவளிடம் கைக்காசை இழந்து, மானம் மரியாதை கெட்டு, இவன் கெட்டது மட்டும் அல்லாது, இவன் ஆயி, அப்பனையும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் இழுத்து விட்டாங்கள். இந்த பயல்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.....சபாஷ் சஹானா
Rate this:
Share this comment
Cancel
alecs Xuan - mildred,சுவசிலாந்து
03-செப்-201212:51:45 IST Report Abuse
alecs Xuan பாரதி கண்ட புதுமை பெண் .........எத்தனை காலம் தான் பெண்கள் ஏமாற வேண்டும்....ஆண்களுக்கும் வலி தெரியட்டும் ......சூப்பரப்பு
Rate this:
Share this comment
Cancel
uma - chennai,இந்தியா
03-செப்-201212:02:43 IST Report Abuse
uma The lady married in our country, But many foreingers came to trying to marry our Indian guy, but already they have boy fris and husbands in their country, First reduce the Visa period for foreigners immediately.
Rate this:
Share this comment
Cancel
justin - mumbai,இந்தியா
03-செப்-201211:10:20 IST Report Abuse
justin நாக்க தொங்க போட்டு அலையறது அப்புறமா ஏமாந்துட்டேன்னு சொல்லுறது .... அவளுக்கு எதுக்கப்பா தண்டனை விட்டுருங்க .... அவ அழகா இருந்தது நாலா தானே லவ் பண்ணி அவ பின்னால ஓடினணுக.. இதே பொம்பளை அழகா இல்லாம இருந்திருந்த இவ பின்னாடி இத்தனை பேறும் ஓடி இருப்பனுகளா .... எத்தனையோ ஆம்பளைங்க இந்த மாதிரி வேலை பண்ணுறாங்க .... அவனுகள விட்டாச்சி ... ஒரு பொட்டச்சி பண்ணிட்டன்னு ஓடி ஓடி புடிச்சிட்டாணுக...............அட விடுங்கப்பா.................. அவளும் சரி இல்லை இவனுகளும் சரி இல்லை............எல்லாம் சரி தான்........... கூட்டி கழிச்சி பார்த்த எல்லாம் சரியா தான் தெரியுது.........
Rate this:
Share this comment
Cancel
Dhana Sekar - Chennai,இந்தியா
03-செப்-201211:02:47 IST Report Abuse
Dhana Sekar ஆண்கள் பெண்கள் விசயத்தில் பலவீனமாக உள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஒரு பெண் இவ்வளவு பேரை ஏமாற்றி இருக்கிறாள் என்பதை விட இத்தனை ஆண்கள் ஒரு பெண்ணிடம் ஏமாந்து உள்ளனர் என்று சொன்னால் சரியாக இருக்கும் . ஆண்களே இனியாவது விழிப்புணர்வுடன் இருங்கள்.......
Rate this:
Share this comment
Cancel
karunai endra vaarthai ariyatha arabu nadu.... Kin - jeddah,சவுதி அரேபியா
03-செப்-201200:22:58 IST Report Abuse
karunai endra vaarthai ariyatha arabu nadu.... Kin போடோ பாதா அவன் நல்லவன் மாதிரியும் தெரியல ... அவ கேட்டவ மாதிரியும் தெரியல .. எத பாத்து கண்டுபிடிகிறது ..... இவ அவதான்னு...
Rate this:
Share this comment
Cancel
Unmai Valavan - Choza Nadu,இந்தியா
02-செப்-201223:46:50 IST Report Abuse
Unmai Valavan கேரளத்துக்கு தண்ணீர் மற்றும் கண்ணீர் eappodum பிரச்சனை dhan
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
02-செப்-201222:14:10 IST Report Abuse
மணிமேகலை  பாவம் இனி எத்தனை போலிஷுங்க ஏமாறப்போறான்களோ .................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை