EGoM to consider raising MNREGA work days | நூறு நாள் வேலை திட்டம் 150 நாள் ஆகிறது !| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நூறு நாள் வேலை திட்டம் 150 நாள் ஆகிறது !

Updated : செப் 03, 2012 | Added : செப் 02, 2012 | கருத்துகள் (13)
Advertisement
EGoM to consider raising MNREGA work days

புதுடில்லி: தேசிய அளவில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் வகையிலும் கிராமபுற மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டிய முயற்சியாகவும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்திட மத்திய அரசு திடமிட்டுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டியது இருக்கும். மத்திய அரசின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி கெண்டு வரப்பட்டது. இதன் மூலம் கிராமங்களில் விவசாயப்பணிகள் இல்லாத காலங்களில்,அரசுப்பொதுப்பணிகளை மேற்கொள்ள கிராமவாசிகளுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து கிராமவாசிகளுக்கு இந்த திட்டத்தில் பணியாற்றிய பின்னர் நாள் ஒன்றுக்கு கூலி ரூ.120 வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் நல்லவரவேற்பினை பெற்றுள்ளதால், கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.வறட்சியை சமாளிக்க உதவும்:

இந்நிலையில் இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும்விதமாக 100 நாட்கள் என்பதனை 150 நாட்களாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த நிதியாண்டில் 2011-12-ம் ஆண்டில் 33 ஆயிரம் கோடியினை நிதி ஒதுக்கியுள்ளது.தற்போது பருவமழை பொய்த்துவிட்டதால் சில மாநிலங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இம்மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் வேலை நாட்களை 100 -ல் இருந்து 150 நாட்கள் உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


காங்கிரஸ் அரசுக்கும் நல்ல பெயர் :

இது தெடர்பாக மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையிலான அதிகாரப்பூர்வ அமைச்சரவை குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பருவமழை பெய்யாத மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. வறட்சி பாதித்த மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்பட உள்ளன. இதன் மூலம் மழையில்லாமல் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் பலன் அடைவர். காங்கிரஸ் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என நிதிதுறை ஆலோசகர்கள் தங்களின் ஆலோசனையை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivuchudar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-செப்-201218:35:31 IST Report Abuse
Arivuchudar இனி எவனும் உழைக்கவே மாட்டான். ஏற்கனவே படித்தவர்களும், விஷயம் தெரிந்தவர்களும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். காரணம்... இதில் உள்ள குறைபாடுகளும், அதிகாரிகளும், கிராம நிர்வாக அதிகாரிகளும், இதில் வேலைசெய்பவர்களும் செய்து செய்யும் கூட்டு கோல்மாலும் தான். இந்த திட்டத்தால் இன்று விவசாய வேலைகளுக்கு ஆட்களேக் கிடைப்பதில்லை. மேலும் இந்த திட்டத்தில் எந்த வேலையும் செய்யாமலே வேலை செய்ததாக கணக்கு எழுதி அந்த பணத்தை அதிகாரிகளும், கிராம நிர்வாக அதிகாரிகளும் பங்குப் போட்டுக் கொள்கிறார்கள். மேலும் இதில் வேலை செய்பவர்களும் குறுப்பிட்ட முழு நேரமும் வேலை செய்யாமல் சும்மா பெயருக்கு இரண்டு மூன்று மணி நேரம் வேலை செய்ய வேண்டிய இடத்தில் நின்று விட்டு, சுமார் 80 - 100 ரூபாய் வேலை செய்யாமல் வந்த வரைக்கும் லாபம் என வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இப்படி இதில் பல குறை பாடுகள் இருக்கிறது. மேலும் இதனால் இன்று விவசாயம் நலிவடைய ஆரம்பித்து விட்டது. அது தான் உண்மை. ஒரு காலத்தில் நாம் பசுமை புரட்சி செய்தோம். ஆனால் அரசு இன்றோ இந்த திட்டத்தினால் விவசாய தொழிலை நலிவடைய வைத்து விட்டது. அதனால் முதலில் இந்த திட்டத்தை அறவே நீக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
raj - chennai,இந்தியா
03-செப்-201210:11:49 IST Report Abuse
raj இலவச கல்வி, இலவச மதிய உணவு, இலவச சீருடை, விலை இல்லா கிரைண்டர், விலை இல்லா மிக்சி- மாநில அரசு வேலையில்லா சம்பளம் - மத்திய அரசு
Rate this:
Share this comment
Cancel
S.Sriram - Kumbakonam,இந்தியா
03-செப்-201200:16:38 IST Report Abuse
S.Sriram நாசமா போச்சு.. இனி எவனும் உழைக்கவே மாட்டான். ஏற்கனவே படித்தவர்களும், விஷயம் தெரிந்தவர்களும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். காரணம்... இதில் உள்ள குறைபாடுகளும், அதிகாரிகளும், கிராம நிர்வாக அதிகாரிகளும், இதில் வேலைசெய்பவர்களும் செய்து செய்யும் கூட்டு கோல்மாலும் தான். இந்த திட்டத்தால் இன்று விவசாய வேலைகளுக்கு ஆட்களேக் கிடைப்பதில்லை. மேலும் இந்த திட்டத்தில் எந்த வேலையும் செய்யாமலே வேலை செய்ததாக கணக்கு எழுதி அந்த பணத்தை அதிகாரிகளும், கிராம நிர்வாக அதிகாரிகளும் பங்குப் போட்டுக் கொள்கிறார்கள். மேலும் இதில் வேலை செய்பவர்களும் குறுப்பிட்ட முழு நேரமும் வேலை செய்யாமல் சும்மா பெயருக்கு இரண்டு மூன்று மணி நேரம் வேலை செய்ய வேண்டிய இடத்தில் நின்று விட்டு, சுமார் 80 - 100 ரூபாய் வேலை செய்யாமல் வந்த வரைக்கும் லாபம் என வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இதில் ஒழுங்காக முழு நேரம் வேலை செய்பவர்களிடமும் சிலர் பணத்தை பிடித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இப்படி இதில் பல குறை பாடுகள் இருக்கிறது. மேலும் இதனால் இன்று விவசாயம் நலிவடைய ஆரம்பித்து விட்டது. அது தான் உண்மை. ஒரு காலத்தில் நாம் பசுமை புரட்சி செய்தோம். ஆனால் அரசு இன்றோ இந்த திட்டத்தினால் விவசாய தொழிலை நலிவடைய வைத்து விட்டது. அதனால் முதலில் இந்த திட்டத்தை அறவே நீக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
03-செப்-201200:13:45 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA basically it is a stupid policy... cant the stalwarts like MMS, MSA, etc aware that this utterly a wasteful expiture to the exchequer... atrocious... meantime they are planning to give cell phones to the BPL... what non-sense going on here... exting 100 to 150 is similar to exting the reservation policy till now (as opposed to the basics of constitution) and adding more & more es... can we see a better India before 2020... I think no chance at all.. so long as such policies are here... Even GOD cannot able to save India at this stage... fully rotten... yatha raja.. thatha praja...
Rate this:
Share this comment
Cancel
Karkuvelrajan - chennai,இந்தியா
02-செப்-201223:29:13 IST Report Abuse
Karkuvelrajan என்ன, நூறு நாள் சோம்பேறிகள் உருவாக்கும் திட்டம், நூற்றி ஐம்பது நாள் சோம்பேறிகள் உருவாக்கும் திட்டம் ஆகிவிட்டதா? நமது நாட்டை முன்னேற்ற காங்ரசாருக்கு தான் எவ்வளவு அக்கறை.. உருப்பட்டுடும்... :(
Rate this:
Share this comment
Cancel
KR Ramachandran - Peerkalaikadu,இந்தியா
02-செப்-201223:19:40 IST Report Abuse
KR Ramachandran தினமலர் போட்டோகிராபருக்கு எங்குதான் மக்கள் இப்படி வேலை செய்வது போல் போட்டோ கிடைக்கிறதோ?
Rate this:
Share this comment
Cancel
Jana - rajapalayam,இந்தியா
02-செப்-201223:10:30 IST Report Abuse
Jana ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அதன் குடி மக்கள் உழைப்பை நம்பி வாழவேண்டும் ஒவ்வொரு குடி மகனுக்குள்ளும் போட்டி இருக்க வேண்டும் இந்த பாலாய்போன அரசியல் வாதிகள் நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கி எப்போதும் ஒரு மயக்க நிலையிலேயே வைக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள் நம் நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவதற்கு வெளிய்ளிர்ந்து யாரும் வரவேன்ட்யதில்லை
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
02-செப்-201222:34:53 IST Report Abuse
சாமி நூறு நாள் வேலை திட்டம் 150 நாள் ஆகிறது .. பலே வெள்ளையத்தேவா கொஞ்ச நஞ்ச விவசாயமும் போச்சா ..
Rate this:
Share this comment
Cancel
Shasun N - erode,இந்தியா
02-செப்-201221:40:19 IST Report Abuse
Shasun N உண்மையாகவே உடல் உழைப்புத் திறன் குறைந்த ஒரு குறிப்பிட்ட வயதுக்கு (சற்றேக்குறைய 55 வயது முதல்) மேலான மக்களைப் பொறுத்த வரை இந்தத் திட்டம் வரவேற்கக்கூடியது. ஆனால் உழைக்கும் வலிமை நன்றாக உள்ள மற்றவர்களும் இத்திட்டத்தில் சேரும் போது அவர்கள் உழைக்காமல் வீணே பொழுதைப் போக்கி பணம் பெரும் நிலைமை உருவாக்கப்பட்டு விட்ட படியால் தவறான திட்டமாகப் பரவலாகப் பெயர் பெற்று விட்டது. மேலும் இது வரை கடந்த காலங்களில் இந்தத் திட்டத்தினால் இதற்காக வழங்கப்பட்டுவந்த பணத்தினால் அடைந்த பலன் என்ன என்று பார்த்தால் ஒன்றுமே உருப்படியாகத் தெரியாததாலும் கூட இந்தத் திட்டம் தவறாகத் தோன்றலாம். தனிப்பட்ட முறையில் எந்த நபருக்கும் பணத்தை அரசாங்கம் கொடுத்தால் அதற்கு எதிர்ப்பு வருமாகையால் கிராமப் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் "ஒரு பிரயோசனமும் இல்லாமல் ஒதுக்கும் பணத்துக்கு எதிர்பாராமல்" நமது அரசாங்கம் கடந்த பல ஆண்டு காலமாக இத்திட்டத்தினை மிக்க சிரத்தையோடு கருமமே கண்ணாக நிறைவேற்றி வருவதால் விரைவில் இத்திட்டம் "வருடம் முழுவதும் (அரசு விடுமுறை நீங்கலாக) வேலை செய்தால் அரசுப் பணிக்கான அத்தனை பலன்களும் பணியாளர்களுக்குக் கிடைக்கும்" வகையிலான ஒரு திட்டமாக அறிவிக்கப்படும் நாள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்வது தேர்தல் வந்து விடுகிறதே யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?.
Rate this:
Share this comment
Cancel
Sathish kumar - Erode,இந்தியா
02-செப்-201221:08:49 IST Report Abuse
Sathish kumar 100 நாள் வேலை திட்டமே விவசாயத்திற்கு ஆள் கிடைகாம திண்டாட வைக்குது. இனிமேல் 150 நாளாக மாற்றினால் விவசாயம் செய்ய முடியாமல் போய் விடும் . முக்கியமா இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல் படுத்த கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை