சிறந்த ஆசிரியருக்கு, வரும் 5ம் தேதி வழங்கப்பட உள்ள ராதாகிருஷ்ணன் விருதுக்காக, ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், ஆளுங்கட்சி பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதனால் தர்மசங்கட சூழ்நிலை ஏற்பட்ட போதும், தகுதியான ஆசிரியர் பட்டியல் தயாரிப்பு பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எதையும் எதிர்பாராமல், பள்ளியின் வளர்ச்சிக்கும், கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடும் ஆசிரியரை கவுரவிக்கும் வகையில், ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. சிறந்த ஆசிரியர், மாநில அள விலும், தேசிய அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, இந்த விருது வழங்கப்படுகிறது.
கல்வித்துறை மவுனம்:
விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகள், 100 சதவீதம் கடைபிடிக்கப்படுகிறதா என்று விசாரித்தால், கல்வித் துறையின் பதில், மவுனமாகத் தான் இருக்கிறது.வரும் 5ம் தேதி, தமிழக அரசு சார்பில், சென்னையில் நடக்கும் விழாவில், 360 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, மாநிலம் முழுவதும் இருந்து, 1,000த்திற்கும் அதிகமாக குவிந்த விண்ணப்பங்கள், சென்னையில் ஆய்வு செய்யப்பட்டன.
பரிந்துரைகள்
ஆசிரியர் அனுப்பிய விண்ணப்பங்களுடன், அவர்களுடைய அருமை, பெருமைகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட, வி.ஐ.பி.,க்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என, பலவற்றையும் சேர்த்து, பெரிய புத்தகம் அளவிற்கு, ஒவ்வொருவரும் கோப்புகள் தயார் செய்து அனுப்பினர்.ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முதல், மாவட்டம், தொகுதி என, பலரும், "இவர், எனக்கு மிகவும் தெரிந்தவர்; திறமையானவர். பள்ளி வளர்ச்சிக்காக, அரும்பாடு பட்டுள்ளார். உள்ளூரில், ஏற்கனவே பல விருதுகளை வாங்கியுள்ளார். இவருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்' என, அதில் தெரிவித்துள்ளனர்.
இறுதி கட்டம்:
இந்த பரிந்துரை கடிதங்களை, விருதுக்குரிய விண்ணப்பத்துடன் இணைக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனாலும், ஆளுங்கட்சியினரின் பரிந்துரை கடிதங்களை எடுக்காமல், அப்படியே மாவட்ட அதிகாரிகள், மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பி விட்டனர். விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது. கல்வி நடைமுறையை ஒழுங்குபடுத்தி, சிறப்பாக இயங்கும் கல்வி நிலையங்கள் உருவாகி வரும் சூழ்நிலையில், இதற்கான அடிப்படை வரன்முறைகளும் வரும் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை கருதுகிறது.அதன் மூலம் இத்துறையில் மேலோங்கி இருக்கும் ஆசிரியர் மட்டுமே இந்த விருதைப் பெற வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது; இருந்தாலும், இது, நடைமுறைக்கு வராது என்பதே, சிறந்த ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதையும் எதிர்பார்க்காமல் கல்வியின் தரத்தையும், பள்ளியின் தரத்தையும் உயர்த்துவதற்காக வழங்கும் உயரிய விருதான, அவரின் பெயரை அவமதிக்கும் ஒரு செயல் ...பண்ணாடைகளா ...உங்களை நினைத்தால் கேவலமாக இருக்கு .....எதற்ககெல்லாம் கடிதம் ........இது வருந்ததக்க செயல் ....உண்மையாக விருதுபெறும் எல்லோருக்கும் இது அவமான செயல் .....மக்கள் இனி விற்றது பெரும் எவரையும் மதிக்கபோவது இல்லை ..
அடப்போங்க சார். இங்க நெருக்கடி பண்ணினா நம்ம நல்லாசிரியர்கள் தங்கள் கைவரிசையை மத்திய அரசு பரிந்துரை குழுவிடம் காண்பித்து " just like that " தேசிய நல்லாசிரியர் விருது வங்கி போய்க்கிட்டே இருப்பாங்க. இந்த வருடம் ஒரு டுடோரியல் கூடமாக பள்ளியை நடத்தும் பலரும் மத்திய அரசு விருது வாங்க பலத்த முயற்சி செய்து வெற்றியும் பெற்றாகி விட்டடார்கள். பெரிய ஓட்டையை .... சின்ன ஓட்டை அடைத்து ஆவது என்ன சார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.