தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, மத்திய அரசின் அனுமதி பெறாமல், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை, கேரள அரசு துவக்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம், அப்பர் பவானி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது பவானி ஆறு. தமிழக பகுதியில் உற்பத்தியாகி, கேரள மலைப்பகுதிகள் வழியாக சுமார் 32 கி.மீ., வரை சென்று, மீண்டும் தமிழக பகுதிக்கு வருகிறது; தமிழக - கேரள எல்லையில் உள்ள பில்லூர் அணையை அடைகிறது.பவானி ஆற்றின் கிளையான சிறுவாணி ஆறு, கேரள பகுதியில் ஓடுகிறது. கேரள அரசு, 1978ம் ஆண்டு, அட்டப்பாடி வனப்பகுதியில் உள்ள சித்தூரில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீர் எடுக்க திட்டம் கொண்டு வந்தது.
தமிழகத்தின் எதிர்ப்பு;
மத்திய திட்டக்குழு அனுமதி மறுப்பால், இத்திட்டத்தை கேரளா கைவிட்டது. எனினும், பவானி ஆற்றின் குறுக்கே முக்காலியில் அணை கட்ட, கடந்த 2001 - 2002ல் முயற்சித்தது. அப்போதும் தமிழகத்தின் எதிர்ப்பு; மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுப்பால், இத்திட்டத்தையும் கேரளா தொடரவில்லை.இந்நிலையில், 1978ல் கைவிடப்பட்ட அணை கட்டும் திட்டத்தை' , கேரள அரசு மீண்டும் கையில் எடுத்தது. ரமேஷ் சென்னிதலா தலைமையிலான குழு, "சித்தூர் பகுதியில் அணை கட்டி, அதிலிருந்து 4.5 டி.எம்.சி., தண்ணீர் எடுக்கலாம்' என, பரிந்துரைத்தது. இதையடுத்து, கேரள சட்டசபையில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது; 400 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கோரியது; இது, நிலுவையில் உள்ளது.
இருப்பினும், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலும்; தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும், தன்னிச்சையாக தடுப்பணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை, கேரள அரசு துவக்கியுள்ளது.தடுப்பணைக்கான பில்லர் அமைக்க, மலை மீது ஏராளமான மரங்களை கேரள அரசு வெட்டியுள்ளது. அங்குள்ள பாறைகளையும், சுமார் 120 அடி அகலத்துக்கு செதுக்கி, தயார் நிலையில் வைத்துள்ளது. வனத்துறை அனுமதியின்றி, அணை கட்ட தேவையான கட்டுமான பொருட்கள் மற்றும் கருவிகளையும் குவித்துள்ளது.இருமுறை அணை கட்டுவதை நிறுத்திய கேரள அரசு, இம்முறை எப்படியும் அணையை கட்டி÷ தீருவது என்பதில் உறுதியாக உள்ளதையே, இது காட்டுகிறது.
"மத்திய அரசும் உடந்தை'
பவானி ஆற்றை ஆதாரமாக கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் உள்ளன. பவானி ஆற்றில் இருந்து பில்லூர் குடிநீர் திட்டம் 1, 2 உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள், செயல்பாட்டில் உள்ளன; இரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.கேரள அரசு பவானி ஆற்றில் இருந்து 4.5 டி.எம்.சி., தண்ணீர் எடுக்க கட்டும் தடுப்பணையால், மேட்டுப்பாளையம் பகுதியில் துவக்கப்பட்டுள்ள நீர் மின் உற்பத்தி திட்டங்கள்; பவானி சாகர் அணையை ஆதாரமாக கொண்டுள்ள ஈரோடு மாவட்டம், கோவை, திருப்பூரில் உள்ள குடிநீர் திட்டங்கள் என, அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ம.தி.மு.க., கோவை மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் கூறும்போது,
"கேரளாவுக்கு நதிகள் மூலம் 2,700 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது. இதில், கேரளாவின் பயன்பாட்டுக்கு, 4ல் 1 பங்குதான் தேவைப்படுகிறது. ஆனாலும், தமிழக மக்களை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், பவானியின் நீர் ஆதாரத்தை முடக்க கேரள அரசு முயற்சிக்கிறது' என்றார்.
பா.ஜ., மாநில செயலாளர் செல்வகுமார் கூறும்போது
, "அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணியை கேரளா துவக்கிவிட்டது. இவ்விஷயத்தில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தவில்லை; மத்திய அரசும் உடந்தையாக உள்ளது' என்றார்.
-நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு யோசனை ஏன் தமிழக அரசு கேரளாவிற்கு செல்லும் உணவுதானிய பொருள்களுக்கு சிறப்பு வரியை விதிக்க கூடாது குறிப்பாக காய்கறிகளுக்கு அதிகம் வரிவிதிக்கப்பட வேண்டும். மேலும் வர்த்தக வாகனங்களுக்கு அனுமதி வரியையும் அதிகரிக்க வேண்டும். சுற்றுலா வாகனங்கள் தவிர மற்ற அனைத்தையும் உட்படுத்தவேண்டும். இது கேரளா அரசும் மக்களும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களையும் சார்ந்தே உள்ளது என உணர்த்த முடியும்.
மத்திய அரசுக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்லை ...அந்த கட்சியே பதவியை தக்க வைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறது ...எப்பொழுதும் அடுத்தவன் பொழப்பை கெடுக்க நினைக்கும் கேரளா மக்கள் இப்படி செய்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ...கெடுவான் கேடு நினைப்பான் ......நடக்கும் ...ஒரு முறையாவது கேரளா தண்ணி நம் நாட்டிற்குள் வரக்கூடாது என்ற நிலைமை எப்போது நடக்கும் என ஏங்கி நிற்கும் தமிழன் ....
உண்மையிலேயே அங்கு குடிநீருக்கு பற்றாக்குறை இருக்கிறதா......??? நீங்கள் சாப்பிட அரிசி,காய்கறி,மாமிசம் முதல் வீடுகட்ட மணல் வரை தமிழ்நாடு தரவேண்டும். ஆனால், தமிழ்நாட்டுக்கு கேரளாவிலிருந்து தண்ணீர் தரக்கூடாது என்று உங்கள் அரசியல்வாதிகள் சொல்கின்றனர்....சுப்ரீம் கோர்ட் பலமுறை அணை உறுதியாக இருக்கிறது என்று சொன்ன பின்பும் ,முல்லை பெரியார் அணையை இடித்தே தீருவோம் என்கின்றனர் .தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாதம் மேலே சொன்ன பொருள்கள் வராவிட்டால் என்ன ஆகும் என்றாவது சிந்திக்கிறார்களா......கேரளத்தில் பல ஆறுகள் இருந்தும் அங்கு மணல் எடுக்க கூடாது என்னும்போது தமிழ்நாட்டில் இருந்து லாரிக்கணக்கில் கடத்துவது சரியா...?????நீங்கள் சாப்பிட்ட மாமிச கழிவுகளால் சுகாதாரக் கேடு என்று சொல்லி அவற்றை தமிழ்நாட்டில் கொட்டிச் செல்வது சரியா....???ஏன் தமிழன் உங்களுக்கு மிக கேவலமான பிறவியாக தெரிகிறானா...???...
Five lakhs keralites family are living In Govai and thirupoor.Three lakhs keralites family are
Living in Chennai.four lakhs keralites family are living in Kanniyakumari dist.Five lakhs kerala
Men and women are working Tamilnadu Government job & private company in Tamil nadu.so
The tamilnadu Political government must be restricting this Malaya lies getting jobs in tamilnadu.
The Tamil peoples must be get jobs for first priorities in tamilnadu for the Private companies.so Tamilnadu Government must nominate ( appoint) a HR representative in private company and restrict
Other state (particularly Kerala people) people entering and getting jobs in private company.Tamilnadu
Government must be restricted to enter the sand, cow(meat) rice(food items) for kerala.The present
Kerala governments were (politics) purposely playing games against tamilnadu....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.