"இலங்கை தமிழர் பிரச்னையில் மனசாட்சிப்படி பணியாற்றுகிறேன்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:"இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும், என் மனச்சாட்சிப்படி என்னால் முடிந்த அளவிற்கு, என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:

இலங்கைத் தமிழர் பிரச்னையில், என் மீது சாற்றப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதற்கு, எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை, தமிழக மக்கள் அறிவர். முதுகில் பெரிய அறுவை சிகிச்சை வரை நடைபெற்று, அது உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த, 1986ம் ஆண்டு, ஜூன், 3ம் தேதி, என்னுடைய பிறந்த நாள் விழாவை ஒட்டி, உண்டியலில், 2.75 லட்சம் ரூபாய், மாலைக்குப் பதிலாக சேர்ந்தது.அந்த நிதியை விடுதலைப்புலிகள் இயக்கம் உட்பட, அனைத்துப் போராளி இயக்கங்களுக்கும் பிரித்து அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால், சிலரின் மறைமுகத் தூண்டுதல் காரணமாகவோ, என்னவோ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர், அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளவில்லை.

அன்றிரவு, 12 மணியளவில் விடுதலைப்புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் என்னை, என் இல்லத்தில் வந்து சந்தித்து, தங்களால் ஏன் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை என்பதை விளக்கினார். என்னக் காரணம் கூறினார் என்பதை, நான் இப்போது நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், அங்கேயுள்ள தமிழர்கள் அமைதியாகவும், நலத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காகவும், என் மனச்சாட்சிப்படி என்னால் முடிந்த அளவிற்கு, என் வாழ்க்கையில் பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் பணியாற்றி வருகிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (193)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnaswamy V - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-செப்-201200:41:15 IST Report Abuse
Krishnaswamy V எப்பொழுது பணம் பண்ணவேண்டும் என ஆரம்பித்தாரோ அன்றை அவரது மனசாட்சி ஓடிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
pullatpandi - uae,ஐக்கிய அரபு நாடுகள்
04-செப்-201200:35:51 IST Report Abuse
pullatpandi அய்யா மனசாட்சியா? அப்படினா என்னங்கையா? எந்த கடைல கெடைக்கும்? , உங்க மனசாட்சி 2g , granite , நிலக்கரி இது பத்தி எல்லாம் ஒன்னும் பேச காணோமே? சீக்கிரம் அதையும் உங்க மனசாட்சிகிட்ட கேட்டு சொல்லுங்கய்யா
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
04-செப்-201200:04:41 IST Report Abuse
babu விடுதலை புலி - பத்து வருடம் முன் தீண்டதகதவர்கள் இந்திய அரசியலுக்கு, கருணாநிதி - நிழல் கூட்டாளி வைகோ விடுதலை புலிகளின் அதரவு தலை புள்ளி ஜெயா - விடுதலை புலிகளின் நடமாட்டம் தமிழகத்தில் ஊடுருவியது இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்றவர், கருணாநிதி - விடுதலை புலிகள் இலங்கை தமிழர்கள் என்று இனத்திற்கு அரசியல் செய்தவர் அதை வைத்து போரட்டங்கள் பல இங்கு, ஆனால் பதவியில் இருந்த போது இலங்கையில் நடக்கும் அட்டுழியங்கள் இந்திய உளவுத்துறைக்கு அறிந்தும் கண்டும் காணாதது போல் இருந்து விட்டு மத்திய அரசின் நோக்கங்களுக்கு சில ஊழல் வழக்குகளின் பிடி அரசியல் சாணக்கியனின் தோல்வி படி கண்டு செவி சாய்த்து விட்டார், எம் ஜி ஆர் போன்ற ஆட்சின் போது எதிர் கட்சி தலைவர் தமிழ் நாட்டையே உலுக்கிய போராட்டங்கள், அதனால் எம் ஜி ஆர் அரசே அரசு துக்கமாக ஒரு நாள் நிறுத்தம் அறிவித்தது ஆனால் இன்று பதவியில் இருந்தும் எந்த உதவிக்கும் வழி தேடாமல் உண்ணாவிரதமும் உண்மையில் நின்று போனது, உண்மை என்ன வென்றால் இந்திய அரசின் வழி இல்லாமல் இலங்கை எந்த செயலிலும் ஈடுபட முடியாது, இங்குள்ள தலை புள்ளிகள் சற்றே தூங்கிய வேலையில் இந்திய அரசின் உதவியோடு இலங்கை தன இன வேங்கை களை களை எடுத்துள்ளது, ஆளும் ஆட்சி இவர்களுக்கு வைத்த அரசியல் செக் 2 ஜி ஊழல் சூறாவளி, இதை பயன் படுத்தி கொண்டவர்கள் ஜெயா, தமிழகத்தில் மட்டுமே இதற்க்கு வெற்றி, விடுதலை புலி தலைவர் பிரபாகரை தீர்க்க அல்லது நீதிக்குமுன் கொண்டு வர இந்திய படை இலங்கை செல்ல வேண்டி இருக்கும் அப்போது இங்குள்ள தமிழர்கள் போராட்டம் பற்ற வைக்க பட்டிருக்கும், ஈழம் வந்தால் இந்தியாவுக்கு ஒரு புறம் இங்குள்ள தமிழர்களுக்கு ஆதரவாக அங்குள்ள தமிழர்கள் ஆர்பாட்டம் செய்ய நேரிடும், எனிவே ஈழம் இந்தியாவுக்கு வேண்டாம் இலங்கை தமிழரை ஒடுக்கியது இலங்கையின் சாமர்த்தியம் அல்ல இந்தியாவின் அருளே அதை நாம் அறிய மறைத்தது தமிழகத்தின் அரசியல் இருளே, தமிழன் அங்கு அழிந்தது வரலாற்று உண்மை, அதை இங்கு ஜெயா கருணாநிதி போன்றவர்கள் தமிழ் அரசியலில் ஒரு அங்கமாக வைக்கிறார்களே ஒழிய சர்வேதேச நாடுகள் அங்கு பார்த்த பார்வையில் ஒரு சிமிட்டு கூட இவர்களுக்கு இல்லை, நான் என்ன செய்தேன் அல்லது நாங்கள் என்ன செய்தோம் என்கிற கட்சிகள் கூப்பாடுகள் தான் இங்கு கேட்கின்றன, இலங்கை பற்றி இவர்கள் கூறுவதை விட சானெல் நான்கு குறிப்பிட்டது உலகமே எப்படி பார்த்து இருக்கும் அதே இங்குள்ள தமிழனும் பார்த்து இருக்கிறான், தமிழ் நாட்டை தவிர வேறு எந்த இந்தியனும் மனம் வருதியதாக தகவல் இல்லை, தமிழ் நாடு இந்தியனின் மேல் உள்ள இந்தியாவின் இந்தியர்களுக்கு உள்ள பாசம் அவ்வளவு தான், ஆன்மாக்கள் உண்மை இல்லை என்றால் மனசாட்சிகள் மனம் போல பேசும், உலக அளவில் மத பனி போர் ஒன்று இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, இதில் அரசியல் கட்சிகள் அரசாங்ககள் தீவிரவாதிகள் என பல வகையிலும் பார்த்து அலசி பார்த்தால் ஓரளவு உண்மைகள் இதில் இருக்கவே செய்கிறது, இந்த மத போரில் கருணாநிதி என்ன பிரபாகரன் என்ன ராஜா பக்ஷே என்னே எல்லாருமே கிள்ளு கீரைகளே. மத போர் வெற்றி அடைந்துள்ளது, இனியும் தொடரும், இதை புரிந்து தானுண்டு தன வேலையுண்டு என்று சிறப்பித்த இந்துகளுக்கு எதிரான வெட்டி பேச்சுகளை கருணாநிதி போன்றவர்கள் புரிந்தாலும் சரி புரியாவிட்டாலும் சரி குறைத்து கொள்ளவேண்டும், மீறி பேசுவது அவர்களுக்கு அரசியல் நாகரீகம் அற்றது, இந்தியாவை மத சார்பற்ற நாடாக அறிவித்த போது அமைதியாக ஏற்று கொண்டவர்கள் இந்திய இந்துகள், மத போர் திணிப்பு மற்ற மதங்களுக்கு இனிப்பாக இங்கு தான் நடக்கிறது இதற்க்கு காரணம் இங்குள்ள அவர்கள் போடும் தீனியை சாப்பிடும் அரசியல் மார்க்கங்கள் தான், நடனம் சங்கீதம் ஆன்மிகம் கல்வி உடை கலாச்சாரம் இவை பலவும் மற்ற மதங்களும் இங்கு காப்பி அடிக்கின்றன அதற்க்கு இந்து மதத்தின் மீதுள்ள அவர்களின் பிடியே அதுவே இந்து மதத்துக்கும் வெற்றி, பாரதத்திற்கும் வெற்றி, இந்துக்களுக்கும் வெற்றி, இன்று இலங்கையில் இனம் அழிவது என்பது அவர்களுக்கு வெற்றியாக இருக்கும் இதே இனத்தை நம்பி அவர்கள் வாழ்க்கை நடத்த வேண்டிய காலம் வரும், பொருத்துஆழ்வார் பூமி ஆழ்வார், இந்து எவர் மீதும் திணிக்க பட வில்லை அவர்களே ஏற்று கொண்டு இருக்கிறார்கள் ஏற்று கொண்டு வருகிறார்கள் வரும் காலம் ஏற்று கொண்டு தான் இருக்கும், உருவங்களே வேண்டாம் என்பவர்களும் எதோ ஒரு உருவத்தை சுற்றுவது தான் உண்மை, பாவங்களை ஜீவிப்பவர்களும் உண்மையில் உலகம் முழுவதும் அரசியல் ரீதியாக போர்கள் மற்றும் வணிக ரீதியாக அரசியல் அடக்குமுறைகளையும் கையாள்கிறார்கள், அன்றாடம் இதை பார்க்கிறோம், புத்தரின் எலும்புகளை இந்தியா இலங்கைக்கு கொடுத்து விட்டது, இந்தியாவின் இறையாண்மையை இந்தியா இழந்து விட்டது, இந்தியாவிலிருந்து சிலைகளும் அரிய பொருள்களும் கொள்ளடிக்க பட்டு விட்டன, இன்று வரை எவனும் எவரும் திருப்பி தர வில்லை, இன்றும் இந்தியர்கள் இந்திய அரசியல் வாதிகளின் செயல்பாடுகளினால் அறிக்கைகளால் மன உளைச்சலில் தான் உள்ளனர், எதாவது ஒரு வகையிலோ வெளிநாட்டு உதவி சிலருக்கு இங்கு இதனால் அவர்கள் போடும் கூப்பாடுகளில் இங்கு தீவிரவாதம், வாழ்க்கை வழி முறைகளில் சீர்கேடுகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது, பனி போர் என்றுமே ஆபத்து, பொருது கொள்வதும் அளவு உள்ளது சிறு எஸ் எம் எஸ் கூட பெருமளவு பயத்தை மக்களிடம் உருவாகிடும் என்பது உண்மை ஆகி விட்டது, அப்பாவிகளே இதற்க்கு பலி கடாக்கள், அரசியல் வாதிகளே உங்களுடையே கருத்துக்களும் அறிக்கைகளும் யாருக்கும் தேவையில்லை, உங்களுக்கு மக்கள் அளித்த பதவியையும் பொறுப்பையும் உணர்ந்து அதன் படி பேசுக செயல் படுக, செய்ய மறந்ததை மறுத்து கூறுவது அறம் அன்று, கட்சிகளுகிட்யே புறம் கூறுவது நன்றன்று, மனசாட்சி கூறட்டும் மக்களுக்காக என்ன செய்தீர், என்ன செய்தீர், என்ன செய்தி,
Rate this:
Share this comment
Cancel
Thiru - Madurai,இந்தியா
03-செப்-201223:34:18 IST Report Abuse
Thiru இவர்(ன்) எதற்க்காக தற்போது சிறிது காலமாக டெசோ மாநாடு மற்றும் ஈழ தமிழர் மீது ஏதோ அக்கறை செலுத்துவது போல் பாசாங்கு செய்கிறார்(ன்) புலம்புகிறார்(ன்) ?? எல்லாம் வரும் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்துதான் ...முழுமையாக தோற்றுவிடாமல் குறைந்த பட்ச இடத்தையாவது தக்க வைத்துகொள்ள , மக்களை திசைதிருப்பும் மிகபெரிய நாடக நடிப்பே இந்த ஈழ தமிழ் அக்கறை பாசாங்கு முதலை கண்ணீர் நடிப்பு . வரும் நாடாளுமன்ற தேர்தல் வரும் முன், தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் உள்ள காலத்தினால் அழிக்க முடியாத உலக மகா 2G ஊழல் மற்றும் ஈழ மக்கள் துரோகத்தின் சுவடை மக்கள் மனதில் இருந்து அகற்றவே இந்த ஈழ மக்கள் பாசாங்கு நடிப்பு. நடிப்பதிலும் நயவஞ்சகதிலும் துரோகத்திலும் இவருக்கு நிகர் இவரே...
Rate this:
Share this comment
Cancel
03-செப்-201222:00:43 IST Report Abuse
கூடல்நகர் வெ இராசா இராமன் ஆமாம் மனசாட்சி சொன்னது உண்ணாவிரத நாடகம் நடத்தி பல இலட்சகணக்கான தமிழர்களை கொல்ல சொல்லி. நேற்று வரை போர்ஜரி குடியரசுத்தலைவர் என்று சொல்லி விட்டு இன்று மனசாட்சி... நாளை யாரோ.... முரண்பாட்டின் மொத்த உருவமே.... உன் துரோகம் இன்னமும் தொடர்கிறதே.... கேட்பார் இல்லையா... ஆனால் வரலாறு என்று ஒன்று உண்டு.... பார்போம்
Rate this:
Share this comment
Cancel
Siddhan Cbe - Madurai,இந்தியா
03-செப்-201221:52:44 IST Report Abuse
Siddhan Cbe நிஷாந்தன். அவரும் ஒரு இலங்கை தமிழர்தான். அவருக்கு கலைஞரை பற்றி அறிந்த அளவுக்கு கூட இங்கு உள்ள ஈன பிறவிகளுக்கு இது தெரியவில்லை.. உண்மையில் சொல்ல போனால் நிசாந்தனின் கருத்துக்கு பதில் அளிக்க முடியாமல் முக்குவது நன்றாக தெரிகிறது.. ..
Rate this:
Share this comment
Cancel
A.S.VENKATESAN - Chennai,இந்தியா
03-செப்-201221:13:47 IST Report Abuse
A.S.VENKATESAN அட விடுங்கப்பா பாவம் பெருசு எதோ உளரிட்டு போஹுது.
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
03-செப்-201219:55:17 IST Report Abuse
Thamilan-indian இவருடைய மனசாட்சிக்கு, இவர் அங்கம் வகிக்கும் இந்திய அரசிடமும், இலங்கை அரசிடமும் எவ்வளவு மரியாதை இருக்கிறது, அதனால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது. எல்லாவற்றையும் விட தன் மக்களுக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்பது ஊர் உலகம் அறிந்த விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Michael Xavier - Doha,கத்தார்
03-செப்-201218:41:55 IST Report Abuse
Michael Xavier முதல்ல தமிழ் நாட்டு மக்களோட முன்னேற்றத்த பத்தி சிந்திங்கஅப்புறமா அயல் நாட்ட பத்தி பேசலாம் .....
Rate this:
Share this comment
Cancel
I Love India - Bangalore,இந்தியா
03-செப்-201218:17:48 IST Report Abuse
I Love India இவர் கூறும், செய்திகளை ஒத்து ,இந்த வரம் ஜூனியன் விகடன் பழ நெடுமாறன் கட்டுரையில் வந்துள்ளது. அதற்குத்தான் இவர் இவள்ளவு விளக்கம் கொடுக்கிறார் என்று நினைக்கிறன். உங்கள் வரலாறை கேட்டால் கேவலமாக உள்ளது. இந்திய அரசும், தமிழக அரசியல் வாதிகளும், இலங்கை தமிழர்களை அழித்துவிட்டனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்