புட்டபர்த்தி:"புட்டபர்த்தி, சத்ய சாய்பாபா டிரஸ்டுக்கு, பக்தர்கள் வழங்கிய சொத்துகள், காணிக்கை பொருட்கள் அனைத்தும், மக்களின் சேவைக்குச் சொந்தமானது' என, சத்ய சாய்பாபா, "பிரகடன பத்திரம்' ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
"மக்கள் சேவையே மகேசன் சேவை' என, வாழ்ந்து வந்த சாய்பாபா, புட்டபர்த்தியில் உள்ள அசையும், அசையா சொத்துகள் அனைத்தும், மக்களின் உபயோகத்திற்கு சேர வேண்டும் என, 1965ம் ஆண்டு எழுதி வைத்துள்ள பிரகடன பத்திரத்தின் மூலம், இத்தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்களே தனக்கு வாரிசுகள் என, நினைத்திருந்த சாய்பாபா, மறைந்து ஓராண்டுக்குப் பின், இப்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல், இ-மெயில் வடிவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாய்பாபா, எழுதியுள்ள பிரகடன பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நான் புட்டபர்த்தி கிராமத்தில் பிறந்தேன். தற்போது எனக்கு, 44 வயது. ஆரம்பக் கல்வியுடன் கல்வி பயில்வதை நிறுத்திக் கொண்டு, பக்தி மார்க்கத்திற்கு வந்து விட்டேன். 14 வயதில், தாய், தந்தையரை பிரிந்து வெளியேறி, பக்தியை நிலைநாட்ட பிரசாரம் துவக்கினேன்.எனக்கென தனி சொத்துகள், வருமானம் இல்லை; எஸ்டேட்டுகளும் இல்லை. எனது பக்தர்கள் என்னிடம் சமர்ப்பித்துக் கொண்ட நன்கொடைகள், மக்களின் உபயோகத்திற்கானவை. இந்த சொத்துகள், "டிரஸ்ட்'ஆக, என் நிர்வாக மேற்பார்வையில் உள்ளது. எனது வாரிசு என, கூறிக்கொண்டு, சொத்துகள் மீது எவரும் உரிமை கொண்டாடக் கூடாது.இவ்வாறு, பிரகடன பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த பத்திரங்களை உறுதிசெய்து, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுக்லா சாட்சியாக கையெழுத்திட்டு உள்ளார். 1998ல், சத்யசாய் மத்திய டிரஸ்டின் நிர்வாகத்தில், மாணவர்களையும் பங்குதாரர்களாக சேர்த்து நிதி, அக்கவுண்ட்ஸ் போன்ற பிரிவுகளின் மேற்பார்வை பொறுப்புகளை, அவர்களிடம் பாபா ஒப்படைத்தார்.
"மதிப்பு வாய்ந்த இப்பத்திரங்களை, பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என, தனது, தனி செயலர் சத்யஜித்திடம் பாபா தெரிவித்திருந்தார். "இதை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டாம். பத்திரமாக வைத்துக்கொள்; தகுந்த நேரம் வரும்போது உபயோகப்படும்' என, அவர், சத்யஜித்திடம் கூறியிருந்தார். அதன்படி, இவ்வளவு காலம் இந்த பத்திரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது."சத்ய சாய்பாபா மறைந்து விட்டதால், இந்த பத்திரங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்புள்ளது என நினைத்ததால், இதை இப்போது வெளியிட்டேன்' என, சத்யஜித் கூறியுள்ளார். மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த, சத்ய சாய்பாபாவின் கையெழுத்துடன் உள்ள, இந்த சொத்து பத்திரங்களின் விவரம், "சத்யசாய் இந்தியா' வெப்சைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பத்திரத்தின் எந்த இடத்திலும், பாபாவின் தனி செயலர் சத்யஜித்தின் கையெழுத்து இல்லை. இந்தப் பத்திரங்கள், பத்திரிகை துறையினருக்கு இ-மெயில் மூலம் கிடைத்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சாய் பாபாவின் வழியில் கொடநாட்டு கொடிய சக்தியும் மன்னார்குடி மாபியாவும் தங்கள் தென்னிந்திய முழுவதும் வாங்கி மற்றும் பிடுங்கி குவித்த சொத்துக்களை அதிமுக தொண்டர்களுக்கு அர்ப்பணிக்க போவதாக பொய்யான தகவல் கசிந்துள்ளதால், போயஸ் தோட்டத்தில் தொண்டர்கள் படையெடுக்கும் அபாயம் இருப்பதால், கொடநாட்டு கொடிய சக்தியும் மன்னார்குடி மாபியா குடும்பமும் ஒபாமாவுக்கு பிரச்சாரம் செய்வதாக கூறி அமெரிக்க சென்று வெள்ளை மாளிகையில் தங்கி உள்ளதாம்.....இதன் மூலம் தோழிகள் இருவரும் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்துள்ளனராம்...அதாகப்பட்டது சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து தப்பித்து போலவும் ஆயிற்று...ஓரளவுக்கு ஒபாமாவுக்கு உபகாரம் செய்தது போவும் ஆயிற்று... அமெரிக்கா சென்ற கொடநாட்டு கொடிய சக்திக்கும் மன்னார்குடி மாபியா குடும்பத்துக்கும், மிட்செல் ஒபாமா சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வெள்ளை மாளிகையில் தங்க வைத்திருப்பதாக, கடைசியாக வந்த தகவல்கள் கூறுகின்றன........ஆனால் அங்கேயும் ஒபாமாதான் தன்னை வந்து பார்க்க வேண்டும் தன்னை பார்த்தவுடன் எல்லாரும் காலில் விழ வேண்டும், தன் படத்தை மட்டும் போஸ்டர்களில் போட வேண்டும் என்று பிடிவாதம் காரணமாக சண்டை உருவாகி விடுமோ என்ற கிலி மன்னார்குடி மாபியா குடும்பத்தாரிடம் இருப்பதை அமெரிக்கா உளவு நிறுவனம் கண்டுபிடித்திருப்பதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன....ஆகவே அடிமை அமைச்சர்களும் அப்பாவி அதிமுக தொண்டர்களும் தங்களுக்கு பிடித்த கட்சிகளில் ஐக்கியம் ஆகலாம் என்று நினைப்பதாக வதந்தி உள்ளது...
சாய்பாபாவின் வழியில் திருக்குவளை குடும்பமும் தனது சொத்து பத்துக்களை திமுக தொண்டர்களுக்கு அர்பணிக்க போவதாக பொய்யான தகவல் கசிந்துள்ளதால், கோபாலபுரத்தில் தொண்டர்கள் படையெடுக்கும் அபாயம் இருப்பதால், திருக்குவளை குடும்பம் ஊரை காலி பண்ணிவிட்டு, ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்பெறுமே என்ற சாக்கில் அமெரிக்கா விரைந்துள்ளதாம்...இதன் மூலம் திருக்குவளை குடும்பம் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்துள்ளதாம்...அதாகப்பட்டது, கிரைனட், நிலஅபகரிப்பு, 2G , போன்ற வழக்குகளில் இருந்து தப்பித்து போலவும் ஆயிற்று...ஓரளவுக்கு ஒபாமாவுக்கு உபகாரம் செய்தது போவும் ஆயிற்று... அமெரிக்கா சென்ற திருக்குவளை குடும்பத்துக்கு, மிட்செல் ஒபாமா சிறப்பான சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வெள்ளை மாளிகையில் தங்க வைத்திருப்பதாக, கடைசியாக வந்த தகவல்கள் கூறுகின்றன........ஆனால் அங்கேயும் ஒபாமாவுக்கு பக்கத்தில் யார் நிற்பது என்பதில் வாரிசு சண்டை உருவாகி விடுமோ என்ற கிலி திருக்குவளை குடும்பத்தாரிடம் இருப்பதை அமெரிக்கா உளவு நிறுவனம் கண்டுபிடித்திருப்பதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன....
அவ்வளவு ராசி மஞ்சள் துண்டுக்கு. அவரோட யாராவது சேர்ந்தால் அவங்க காலி. அது இந்த மகானையும் விட்டு வைக்கலை. ராமர் எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சு ராமர் பாலம் கட்டினார்னு கேட்ட மேதாவியை சந்தித்தது மகா தவறு. அதுவும் ஹிந்து என்றால் திருடன்னு புது அர்த்தத்தை உலகுக்கு சொன்ன ஹிந்து துவேஷிக்கு துணைபோனது சென்னை மக்களுக்கு உதவியதை காட்டிலும் உதவாமலே இருந்திருந்தால் நல்லது. இவர் எப்போது கோபாலபுரம் சென்றாரோ அன்றே நான் சொன்னேன் இவருக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது. அதை தொடர்தால்போல் 55 வயது இளைஞர் அணி தலைவர் இவருடைய கையால் தன்னுடைய கன்னத்தை தடவ வைத்தாரோ ஒரு விழாவில். அப்போதே இவருக்கு ரொம்ப நல்ல காலம் தொடங்கிரிச்சு. ஒரு ஆத்திகவாதி நாத்திகனுடன் கை குடுக்க கூடாது. ஒரு ஆன்மிகவாதி அரசியல்வாதிக்கு ஆதரவளிக்க கூடாது. பாபா ஒரு மகான். அவரை 2 முறை நேரில்
பார்த்திருக்கிறேன். அவருடைய சித்து செயல்களை கண்டு அசந்திருக்கிறேன். அவரும் கடைசியில் கூடா நட்பு கொண்டாரே என்று நினைக்கும் பொழுது
உள்ளம் நெருடுகிறது. கடவுளுக்கு கண் இல்லை என்பார்களே, அதனால் தானோ? வாழ்க பாபா புகழ்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.