India asks china to cease activities in pakistan occupied kashmir | பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா:மத்திய அரசு பெரும் கவலை| Dinamalar

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா:மத்திய அரசு பெரும் கவலை

Updated : செப் 05, 2012 | Added : செப் 03, 2012 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
India asks china to cease activities in pakistan occupied  kashmir

புதுடில்லி:""பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், சீனா, தன் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது,'' என்று, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.

ராஜ்யசபாவில் நேற்று அவர் கூறியதாவது:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியில், சீனா ஈடுபட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. அதனால், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீனா, தன் நடவடிக்கைகளை, நிறுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியா - சீனா இடையேயான, சர்வதேச எல்லைக் கோடு விவகாரத்தில், சீனா தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இரு நாடுகள் இடையே, பொதுவான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இரு தரப்பிலும், எல்லைக் கோடு தொடர்பான அவரவர் கருத்துப்படி, ராணுவ ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியப் பகுதியில் அத்துமீறும் செயல்களில், சீனா ஈடுபடுவதில்லை.

ஜம்மு காஷ்மீர் பகுதியில், 38 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு நிலத்தை, 1962ம் ஆண்டு முதல், சீனா ஆக்கிரமித்து உள்ளது.இந்தியா - சீனா இடையே, 1963ல் ஏற்பட்ட எல்லை ஒப்பந்தப்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான, 5,180 சதுர கி.மீ., பரப்பளவு நிலத்தை, சீனாவுக்கு, பாக்., தந்துள்ளது.அருணாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 90 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு நிலத்தை, தனக்குரியது என, சீனா கூறி வருகிறது. இந்தியா - சீனா இடையில், எல்லை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, இரு நாடுகளும் விசேஷ பிரதிநிதிகளை நியமித்து இருக்கின்றன.இவ்வாறு அந்தோணி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-செப்-201223:25:14 IST Report Abuse
Nallavan Nallavan யார் கண்டா? காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்கும் ஏதாவது எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கோ என்னவோ "நாங்க பதவியில இருக்கற வரைக்கும் அட்டாக் பண்ணாதீங்க பொறுமையா இருங்க நாங்க சேர்த்த பணத்த வெச்சு நிம்மதியா வெளிநாட்டுல செட்டில் ஆனா பிறகு போட்டுத் தாக்கிக்குங்க" என்று காங்கிரஸ் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளதோ?
Rate this:
Share this comment
Cancel
Sivamani Arumugam - London,யுனைடெட் கிங்டம்
04-செப்-201222:12:52 IST Report Abuse
Sivamani Arumugam இந்திய ஒரு கேவலமான நாடு. இந்தியன்னு சொல்றதையே அசிங்கமா நெனைக்கிறேன். நிச்சயமா ஒருநாளு சீனா கிட்ட அடிமையா aagathan போறோம்
Rate this:
Share this comment
Cancel
Ravi - Doha,கத்தார்
04-செப்-201215:07:01 IST Report Abuse
Ravi இந்தியா - சீனா இடையே, 1963ல் ஏற்பட்ட எல்லை ஒப்பந்தப்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள, இந்தியாவுக்கு சொந்தமான, 5,180 சதுர கி.மீ., பரப்பளவு நிலத்தை, சீனாவுக்கு, பாக்., தந்துள்ளது. அருணாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 90 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு நிலத்தை, தனக்குரியது என, சீனா கூறி வருகிறது. வாங்க நாட்டை ஆளும் அமைச்சர்களே எல்லோரும் சேர்ந்து "கும்மி" அடிப்போம். வெக்கமா இல்ல.
Rate this:
Share this comment
Cancel
Kanagu - Pollachi,இந்தியா
04-செப்-201213:45:34 IST Report Abuse
Kanagu களவாணி காங்கிரஸ், இது கைலாகாத காங்கிரஸ், எம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திர நாட்டை, நம் கண் முன்னே ஆக்கிரமிக்கிறார்கள். ஆனால் இது போன்ற வெறும் வெட்டி பேச்சு மட்டும் தான் உங்களிடம் இருக்கிறது. நமது எல்லை பகுதியில் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் சுரங்கம் அமைத்து கடந்த ஆறு மாதமாக ஊடுருவி உள்ளனர். இது ஒரு மாதத்திற்கு முன்பே உளவுத்துறை மூலம் தெரிந்தும் நடவடிக்கை இல்லை. வங்கதேசத்தினர் ஊடுருவியதால் அசாம் கலவரம். வங்கதேசத்தினர் ஊடுருவுகின்றனர் என்று அந்த மாநில கவர்னர் முன்பே பல முறை சொல்லியும் உங்களிடம் நடவடிக்கை இல்லை. போன வாரம் சீனா அருணாச்சல பிரதேசத்தின் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை தெற்கு திபெத் என்று சொல்லியது. இதற்கு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. தமிழ் நாட்டு மீனவர்களை சிங்களன் துன்புறுத்துகின்றான் மற்றும் அவர்கள் எல்லைக்கு செல்கின்றனர் என்று சுட்டு தள்ளுகின்றான். இதற்கு கூட மத்தியில் இருந்து ஒரு கண்டனம் கூட கிடையாது. இதற்கெல்லாம் மேலே எம் தமிழ் இனத்தை அழித்த கோத்த பய ராஜபக்சே கேட்டதால் ஆகஸ்ட் 20 ஆம் தேதி புத்தரின் நினைவு சின்னங்களை தனி விமானம் மூலம் ஸ்ரீ லங்கா-வுக்கு அனுப்புனீர்கள் (சத்தமில்லாமல்). கறுப்பு பணம் மீட்பதில் அக்கறை இன்மை மற்றும் 02 -08 -2011 அன்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட கறுப்பு பண பட்டியலில் காங்கிரசர் பெயர் குறிப்பாக ........ இது மட்டுமில்லாமல் தனி தெலுங்கனா, தமிழ் நாட்டை புறக்கணிப்பது, வட கிழக்கு மாநிலத்தவருக்கு பாதுகாப்பின்மை, காஷ்மீரில் ஒரு பகுதியினர் இந்திய கொடியை எரித்து பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு எதிர்ப்பும் இல்லை. கருத்து 1: இந்த பிரச்சினை எல்லாம் கூர்ந்து நோக்கும் போது நீங்கள் இந்தியாவை சிறு சிறு துண்டுகளாக்க அடித்தளம் போடுகிறீர்கள் என்றே தோன்றுகிறது. அது நடக்காது. தனி ஒருவருக்காக மட்டுமே இங்கு ஆட்சி நடக்கிறது. மக்களுக்காக அல்ல. அடுத்த தேர்தலில் மூட்டை முடுச்சுகளோடு ரெடியா இருங்க இத்தாலி போக... கருத்து 2: ஆக மொத்தம் உங்கள் தலைவி இத்தாலியில் பிறந்ததால் இந்தியா மேல் பற்று இல்லை. நீங்கள் செய்யும் ஊழல் குற்றங்களுக்கு துணையாக இருந்து உங்களை காப்பாற்றுவதால் நீங்கள் அனைவரும் வெறும் பொம்மைகளாக இருக்கிறீர்கள். இப்படியே போனால் நாம் அனைவரும் மீண்டும் அடிமை ஆவோம். இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராக வேண்டியதுதான். (ஆனால் உங்கள் தலைவி இத்தாலியில் செட்டில் ஆகி விடுவார்).
Rate this:
Share this comment
Cancel
Irulappan Ipn - sivagangai,இந்தியா
04-செப்-201211:41:14 IST Report Abuse
Irulappan Ipn காங்கிரஸ் ஆட்சி காலம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகத் தான் இருக்கும். இதை மாற்ற யாரால் முடியும் என்றே தெரியவே இல்லை. கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போயி..................... தனது தொகுதிய ( வறட்சியான )மேம்படுத்த முடியாத கையாலாகாத ஒரு மிகப்பெரிய இந்தியாவே எதிர் பார்க்கும் மினிஸ்டர் ப.சிதம்பரம் ,ak .அந்தோனி ,sm.kirushnaa நாட்டை காப்பாத்தி ................... கடவுளே ............ இன்னும் என்னென்ன அனுபவிக்கனுமோ ,இவுங்க ஆட்சி எப்ப முடியுமோ ,இல்லை இந்தியா இந்த manmokansingh ,சோனியா கையில் சிக்கி 10 வருசதோட அழிந்துதான் போகுமோ கடவுளே ......................
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
04-செப்-201211:21:40 IST Report Abuse
Ravichandran இப் பிரச்சனை தீர்க்க உங்களால் முடியாது. பி ஜே பி அரசு வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
04-செப்-201210:04:41 IST Report Abuse
JAY JAY எப்படியோ அடுத்த தேர்தலுக்கு ஒரு கான்செப்ட் ஐ ரெடி பண்ணி விட்டார்கள்... ஊழல் பிரச்சினைகளில் இருந்து கரெக்டா மக்களை திசை திருப்பி, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று ஒரு புருடா விட்டு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் ஒரு விளையாட்டு சண்டை போட்டு, ராணுவத்தில் உள்ள காலாவதியான பட்டாசுகளை வெடித்துவிட்டு, தேர்தலில் வெற்றி வாகை சூட அந்தோணிக்கு கொடுக்கபட்ட்ட பார்முலாவுக்கு கான்செப்ட் எழுதி விட்டார் என்றே தோன்றுகிறது... நமக்கு தெரியாததா? இந்திரா / வாஜ்பாயி காலத்திலேயே இப்படி கூத்துக்கள் நடந்தேறினவே... OK ..தொடங்குங்கள் உங்கள் சகோதர யுத்தத்தை... . நம்ம தமிழன தலைவர் அடுத்த தேர்தலுக்கு என்ன கான்செப்ட் வைத்திருக்கிறாரோ...?
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
04-செப்-201209:55:10 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) வடகிழக்கு மாநிலங்கள் சீனாவுடன் இருப்பதே, அங்கே இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு. இல்லையேல், இன்னும் சில காலத்தில், அந்த மாநிலங்கள் எல்லாவற்றையும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கொண்டு பங்களாதேஷ் கைப்பற்றிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Nandu - Chennai,இந்தியா
04-செப்-201209:13:26 IST Report Abuse
Nandu கவலை படுங்கள்... தங்கள் கையாலாகாத நிலையை எண்ணி. தயவு செய்து வெட்கப் படுங்கள்... கொள்ளையடிப்பதில் மட்டும் குறைவில்லை...
Rate this:
Share this comment
sethu - jddah,சவுதி அரேபியா
04-செப்-201209:55:21 IST Report Abuse
sethuசரி,இதற்க்கு மன்மோகன் சிங்க அவர்கள் அமெரிக்க சென்று அங்குள்ள ராஜே பக்சேவின் உறவினர்களின் உதவியை கேட்கிறேன் என நல்ல பதிலையும், இதற்கும் வருந்துகிறேன் எனவும்,இதற்குமேல் எனக்கு எதையும் பேச அனுமதி இல்லை என்பதை நீங்களே தெரிந்து புரிந்திருப்பீர்கள் என ஒரு அறிக்கை விட்டுவிட்டு ஏதாவது மனிதனால் மறந்துவிட்ட ஒரு வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார், பின்பு அழைப்பு மணி வந்தவுடன் இந்தியாவின் விமான நிலையத்தில் பின்னாடி யாரோ விரட்டியடிப்பதுபோல வேகமாக ஓடி ஓடி செல்லும்போதே பதில் சொல்லுவார் எப்படி, ஏதும் எனக்குத்தெரியாது,சார் நீங்கள் எந்த நாட்டிலிருந்து வர்றீங்க அதும் எனக்கு தெரியா, இருங்க கேட்டு சொல்றேன்,இப்படியும் ஒரு ...,இந்தியனுக்கு கெட்டகாலம்....
Rate this:
Share this comment
Cancel
praba karan - sINGAPORE,சிங்கப்பூர்
04-செப்-201208:10:08 IST Report Abuse
praba karan இலங்கை தமிழர் விஷயத்தில் மத்திய அரசு நன்றாக நடித்து விளையாடுகிறது. அவர்களுக்கு மக்கள் அனைவரும் முட்டாளாக தெரிகிறது. நாமும் மதிய அரசோடு இதுபோல் விளையாட வேண்டுமானால், நாமும், நம்முடைய தமிழக அரசியல் கட்சிகளும் சீனாவுக்கு சில விஷயங்களில் ஆதரவு தெரிவிக்கலாம். நாம் சீனர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டால், கண்டிப்பாக சீனா இலங்கைக்கு உடன்பாடான தமிழர்களுக்கு எதிரான செயல்களில் கண்டிப்பாக ஈடுபடாது. மேலும் இது மத்திய அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கும். பொதுவாகவே சீனர்களுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதுவும் ஒரு முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரமே. அனைத்து விஷயங்களிலும் இப்போது தமிழ் நாடு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் நம் அரசியல் கட்சிகளோடு சேர்ந்து சீனா வை குளிர்வித்தால் நமக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும்.
Rate this:
Share this comment
sethu - jddah,சவுதி அரேபியா
04-செப்-201209:58:35 IST Report Abuse
sethuநெட்டையர்களை நம்பினாலும் (அரேபியர்கள் )குட்டையர்களை நம்பாதே என ஒரு பழமொழி உண்டு, இருந்தாலும் உங்களது ஆலோசனை எனக்கு புடிச்சிருக்கு....
Rate this:
Share this comment
raja - Chennai,இந்தியா
04-செப்-201212:45:37 IST Report Abuse
rajaஅடிப்படை அற்ற ஆபத்தான கருத்து......இந்தியாவுக்கு எதிரி ஒவ்வொரு இந்தியனுக்கும் எதிரியே.....
Rate this:
Share this comment
Siva kumar - Tripoli,லிபியா
04-செப்-201213:00:42 IST Report Abuse
Siva kumarஒரு தனி மனிதன் இறப்பிற்காக தமிழ் இனத்தையே காவு வாங்க துடிக்கும் சோனியா குருப்ஸ் க்கு நாம் சீனாவை ஆதரித்தால் கூட பெரிய விசயமாக தெரியாது,............ நமக்கு எல்லாமே ஒன்றுதான் இப்போ டெல்லி தலைநகர் என்பதை பீசிங் என்று மாற்றி சொல்லணும், பொதிகை தூர்தர்சனில் ஹிந்தி க்கு பதில் சைனீஸ் கொடி பறக்கும் அவ்வளுவுதான்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை