சென்னை:பள்ளி வாகனங்களில், குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்ய, புதிய வரைவு விதிகளை, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த விதிமுறைகளை, ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது.
சென்னை சேலையூரில், சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பலியான சம்பவம் குறித்த வழக்கை, தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' தானாக முன் வந்து விசாரித்தது.
வரைவு விதிகள்:
"பள்ளி பஸ்களை ஒழுங்குபடுத்த, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்; வரைவு விதிகளை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.கடந்த ஆகஸ்ட், 30ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், "இந்த முக்கியமான பிரச்னைக்கான வரைவு விதிகளை தாக்கல் செய்வதாக, அரசு சார்பில் உத்தரவாதம் அளித்தும், அதை நிறைவேற்றாமல், இதுவரை அதை தாக்கல் செய்யாமல், மேலும் கால அவகாசம் கேட்பது துரதிருஷ்டம்; செப்., 3ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று, வரைவு விதிகளை அரசு கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.அதை தொடர்ந்து, இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆஜராகி, ஆகஸ்ட், 31ம் தேதியிட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதை நீதிபதிகள் படித்துப் பார்த்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, "ஐகோர்ட் தலையிட்டதால் தான், இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. எனவே, கோர்ட்டை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்' என்றார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "பள்ளி குழந்தைகளின் நலனை, இந்த கோர்ட் எப்போதுமே கருத்தில் கொள்ளும்' என்றார்.
முழு திருப்தி:
அதை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், வரைவு விதிகளை அரசு தாக்கல் செய்துள்ளது. அதை, விதிகளாக அரசு அறிவிக்கை செய்ய வேண்டும். வரைவு அறிக்கையை படித்துப் பார்த்தோம். முழு திருப்தி அடைந்தோம். இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்தினால், பள்ளி வாகனங் கள் தொடர்பான விபத்துகள் பெருமளவு குறையும். இந்த பள்ளி சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு ஆட்டோவில் 10 பிள்ளைகளை ஏற்றி கொண்டு போகிறார்கள். ஒரு பிள்ளைக்கு 100 ரூபாய். புதிய விதிமுறையின்படி 4 பிள்ளைகளைதான் ஏற்றவேண்டும் என்று சொன்னால் யார் கேட்பார்கள், சரி என்று சொன்னால் கூட ஒரு பிள்ளைக்கு 250 ரூபாய் கேட்பார்கள். நம்மால் கொடுக்கமுடியுமா? ஒரு வீட்டில் 3 அல்லது 4 பிள்ளைகள். நடக்கின்ற காரியமா? பழைய குருடி கதவை திறடி என்கின்ற கதைதான்.
"இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்தினால்" - என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்... முதலில் இருக்கும் சட்டத்தினால், தவறிழைத்தவர்களுக்கு என்ன தண்டனை அளித்தீர்கள்.. நீங்கள் உள்ளே போட்ட நபர்கள் இப்போ எங்கே இருக்கிறார்கள் ?? இருக்கும் சட்ட திட்டங்களை ஒழுங்காக / கண்டிப்பாக இன்றைக்கு அமல்படுத்தினாலும் தீயவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.. செய்தார்களா ?? கோழி முட்டையில் இருந்து கோழிக்குஞ்சு தான் வரும்... தங்கமயிலா வரும் ?? புதுசு புதுசா சட்டம் போடுவதால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடாது.. அதே ஓட்டை வண்டி, அதே குண்டும் குழியுமான சாலை, அதே ஓட்டுனர், அதே அதிகாரி, அதே முதலாளி, அதே கல்வி விற்பனையாளர்... அதே கதை தான் ...அப்போ ? முடிவும் அதே தான்.. தப்புச் செஞ்சவனை வாய்தா, ஜாமீன்னு சும்மா வெளியே விட்டுட்டு இப்ப மீண்டும் புதுசா ரூல்ஸ் போட்டு ? எதுக்கு ? நாக்கு வழிக்கவா ?? என்ன சரியா?... ஆனால், அதிக ரூல்ஸ்... ஆகவே அதிக வசூல்ஸ்... அவ்வளவு தான் வித்தியாசமாக இருக்கும்.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.