sambavam news | கணவனை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலனுடன் கைது| Dinamalar

கணவனை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலனுடன் கைது

Updated : செப் 04, 2012 | Added : செப் 04, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மூணாறு: கணவனைக் கொலை செய்த பெண்ணையும், அவரின் கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்தனர். மூணாறு அருகே, கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான, லட்சுமி எஸ்டேட் சவுத் டிவிஷனை சேர்ந்த தோட்ட தொழிலாளி சுடலைமணி,38. இவரை ஆகஸ்ட், 28 ம் தேதி இரவு முதல் காணவில்லையென, அவரது மனைவி லதா,37, போலீசில் புகார் அளித்தார். புகார்: சுடலைமணி காணாமல் போனதில், லதா, அதே பகுதியைச் சேர்ந்த, ஜீப் டிரைவர் பால்துரைக்கும் தொடர்பு உள்ளதாக, சுடலைமணி சகோதரர் மகாராஜன் போலீசில் புகார் அளித்தார். பால்துரையிடம் போலீசார் விசாரித்ததில், சுடலைமணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

கைது: அவர் அடையாளம் காட்டிய பகுதியில், ஆற்றில் கிடந்த சுடலைமணியின் உடலை, நேற்று காலை மீட்டனர். பால்துரை,46, சுடலைமணியின் மனைவி லதா,37, ஆகியோரை மூணாறு போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: பால்துரை - லதாவுக்கிடையே, 15 ஆண்டுகளாக, கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக சுடலைமணிக்கும், லதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், லதா கள்ளத் தொடர்பை துண்டிக்கவில்லை. கள்ளக் காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர். கடந்த, 28ம் தேதி மாலை, சுடலைமணிக்கும், பால்துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்ற சுடலைமணி, மனைவியை கண்டித்துள்ளார். இதை லதா, பால்துரையிடம் கூறியுள்ளார். இரவில், வீட்டருகே ரோட்டில் பதுங்கி இருந்தவர், அந்த வழியாக வந்த சுடலைமணியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

வழக்கு பதிவு: உடலை தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று ஆற்றில் வீசியுள்ளார். பால்துரை மீது கொலை வழக்கும், லதாக்கு எதிராக கூட்டு சதி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை