E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நியூசி.,யை நசுக்கியது இந்தியா: பெங்களூரு டெஸ்டில் வெற்றி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 செப்
2012
01:56

பெங்களூரு: விராத் கோஹ்லி, தோனியின் அசத்தலான ஆட்டம் கைகொடுக்க, பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 2-0 என, கைப்பற்றி கோப்பை வென்றது. நியூசிலாந்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது.முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 365, இந்தியா 353 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது.

மோசமான தீர்ப்பு:



நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. உமேஷ், ஜாகிர் பந்துகளை பவுண்டரி அடித்த ஜீதன் படேல், ஸ்கோரை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினார். இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. படேல் 22 ரன்கள் எடுத்த போது, அம்பயரின் தவறான தீர்ப்பில் அவுட்டானார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில், 248 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது.

அதிரடி துவக்கம்:



இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 261 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. சேவக், காம்பிர் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இவர்கள் ஒருநாள் போட்டி போல பவுண்டரிகளாக விளாச, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. 12 இன்னிங்சிற்கு பின், முதன் முறையாக, இந்த ஜோடியின் "பார்ட்னர்ஷிப்பில்' இந்தியா 50 ரன்களை கடந்தது.

சேவக் அதிரடி:



பிரேஸ்வெல் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த சேவக், ஜீதன் படேலின் சுழலில் "சூப்பர்' சிக்சர் விளாசினார். மற்றொரு சிக்சருக்கு ஆசைப்பட்ட சேவக் (38) போல்டானார். காம்பிர் (34) வழக்கம் போல, "சிலிப்' பகுதியில் "கேட்ச்' கொடுத்தார்.பின் புஜாரா, சச்சின் சேர்ந்தனர். புஜாரா அவ்வப்போது பவுண்டரிகள் விளாசினார். தன்பங்கிற்கு சச்சின், டிம் சவுத்தி பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தஇருந்த போது, மழையால் போட்டி தடைபட்டது.

விக்கெட் சரிவு:மீ



ண்டும் ஆட்டம் துவங்கியதும் முதலில் சச்சின் (27) போல்டானார். புஜாரா (48) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். தடுமாறிய ரெய்னா, "டக்' அவுட்டாக, இந்திய அணி 166 ரன்னுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

"சூப்பர்' ஜோடி:



பின் இணைந்த விராத் கோஹ்லி, கேப்டன் தோனி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவுல்ட் பந்தில் பவுண்டரி அடித்த தோனி, படேல் சுழலில் சிக்சர் அடித்தார். இவர்களது அசத்தல் பேட்டிங் கைகொடுக்க, வெற்றி இலக்கை இந்திய அணி நெருங்கியது. டிம் சவுத்தி ஓவரில், மூன்று பவுண்டரி விளாசிய கோஹ்லி, தனது 6வது அரைசதம் கடந்தார்.

"சிக்சர்' வெற்றி:



படேல் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த தோனி, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு, 262 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி (51), தோனி (48) அவுட்டாகாமல் இருந்தனர்.
டெஸ்ட் தொடரை 2-0 என, கைப்பற்றிய இந்திய அணி, கோப்பை வென்றது. ஆட்டநாயகன் விருதை கோஹ்லி பெற்றார். இரு அணிகள் மோதும் முதல் "டுவென்டி-20' போட்டி, வரும் 8ம் தேதி விசாகப்பட்டனத்தில் நடக்கவுள்ளது.

ஜாகிர் கான் "100':



நேற்று ஜீதன் படேலின் விக்கெட்டை வீழ்த்திய ஜாகிர் கான், சொந்த மண்ணில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் கபில் தேவ் (219) ஸ்ரீநாத் (108) இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

டிராவிட் வழியில் சச்சின்...:



கிரிக்கெட்டில் "போல்டு' முறையில் அவுட்டாவது தான் ரொம்ப மோசம். நியூசிலாந்துக்கு எதிரான ஐதராபாத் டெஸ்டில் போல்டானார் சச்சின். பின் பெங்களூரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் இதே முறையில் அவுட்டான இவர், "ஹாட்ரிக்' போல்டானார். இவர் கடைசியாக விளையாடிய ஆறு டெஸ்ட் இன்னிங்சில் (15, 8, 25, 13, 19, 17) ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

டிராவிட்டும் இப்படித்தான் கடைசியாக பங்கேற்ற 12 டெஸ்ட் இன்னிங்சில் 9 முறை போல்டானார். பின் வேறுவழியின்றி ஓய்வு பெற்றார். இவரைப் போன்ற முடிவை 39 வயதான எம்.பி., சச்சினும் எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

* டெஸ்ட் வரலாற்றில் அதிக முறை போல்டான வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார் சச்சின்(51). முதல் இரு இடங்களில் டிராவிட் (55), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (53) உள்ளனர்.

தரவரிசையில் மாற்றமில்லை:



டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணிக்கு, கூடுதலாக 2 புள்ளிகள் கிடைத்தன. இருப்பினும், தற்போதுள்ள ஐந்தாவது இடத்தில் (106 புள்ளி) மாற்றம் கிடைக்கவில்லை. முதல் நான்கு இடத்தில் தென் ஆப்ரிக்கா (120), இங்கிலாந்து (117), ஆஸ்திரேலியா (116), பாகிஸ்தான் (109) அணிகள் உள்ளன.

அடுத்த தொடருக்கு தயார்:



இந்திய அணி கேப்டன் கூறுகையில்,"" சச்சின் "பார்ம்' குறித்து எல்லோரும் பேசுகின்றனர். விரைவில் பெரிய ஸ்கோர் அடிப்பார் என, காத்திருக்கிறேன். காம்பிர் முன்னேற்றம் அடைந்துள்ளார். கோஹ்லி, அஷ்வின் ஓஜா ஆகிய அனைவரும் நன்கு திறமை வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்தமாக அணியின் முன்னேற்றம் மகிழ்ச்சி தருகிறது. எதிர்வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு "ரெடியாக' உள்ளோம்,'' என்றார்.

சபாஷ் கேப்டன்:



பெங்களூரு டெஸ்டில் வென்றதன் மூலம், சொந்த மண்ணில் அதிக வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் தோனி. இதுவரை சொந்த மண்ணில் 20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், 14 டெஸ்டில் வெற்றி தேடித் தந்துள்ளார். ஒரு டெஸ்டில் தோல்வி, 5 போட்டிகள் "டிரா' ஆனது. இவரை அடுத்து அசார் (20 போட்டி, 13 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா), கங்குலி (21 போட்டி, 10 வெற்றி, 3 தோல்வி, 8 "டிரா') உள்ளனர்.

சிறந்த "சேஸ்':



நேற்று இந்திய அணி, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் அதிக ரன்களை "சேஸ்'(262/5) செய்து வென்றது. முன்னதாக இங்கு 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 207 ரன்களை "சேஸ்' செய்திருந்தது.

ஆறாவது வீரர்:



பெங்களூரு டெஸ்டின் முதல் இன்னிங்சில் சதம் (103) அடித்த கோஹ்லி, இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் (51*) அடித்தார். இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்சில் சதம் மற்றும் அரைசதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ஜி. விஸ்வநாத் (1976), டிராவிட் (1999, 2003), கங்குலி (1999), லட்சுமண் (2003, 2009), ஹர்பஜன் (2010) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

அஷ்வின் அபாரம்:



இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை இர்பான் பதானுடன் (18 விக்., எதிர்-வங்கதேசம், 2004) பகிர்ந்து கொண்டார் அஷ்வின்(18 விக்.,). முதலிடத்தை தலா 21 விக்கெட் கைப்பற்றிய கும்ளே (எதிர்,பாகிஸ்தான், 1999), இர்பான் பதான் (எதிர், ஜிம்பாப்வே, 2005) ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.