சென்னை:பணி நேரத்தில், மருத்துவமனையில் இல்லாத, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர், நர்ஸ் ஆகியோருக்கு, "மெமோ' அனுப்ப, அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.ஓராண்டாக, "அசமந்த'மாய் இருந்த, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், திடீரென விழித்தெழுந்து, எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையைத் தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காலை, 9:00 மணியளவில், மருத்துவமனைக்கு வந்த அமைச்சர், விபத்து மற்றும் காய சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, "எக்ஸ்ரே' எடுக்கும் இடம், நோயாளிகளுக்கான உணவு தயாரிக்கும் இடம் என, ஒன்றரை மணி நேரம், ஆய்வு நடத்தினார்.அப்போது, மருந்தியல் பிரிவு டாக்டர் ஜெயகுமார், நர்ஸ் வசுந்தரா தேவி ஆகியோர் பணியில் இல்லை. அவர்களிடம், உரிய விளக்கம் கேட்டு, "மெமோ' அனுப்ப, அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனை வளாகத்தில், சுத்தத்தை பராமரிக்காததால், துப்புரவு மேற்பார்வையாளர் திருமால் என்பவரை, பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இவர்களுடன் சேர்த்து இதுவரை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், அமைச்சரின் ஆய்வின்போது, "மெமோ' பெற்றுள்ள டாக்டர்களின் எண்ணிக்கை, இரண்டாகவும், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவமனை பணியாளர்களின் எண்ணிக்கை, மூன்றாகவும் உயர்ந்துள்ளது.அமைச்சரின் இந்த சுறுசுறுப்பு தொடர வேண்டுமென, நோயாளிகள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.