பொள்ளாச்சி:"சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களின் நேரம் மாற்றப்படுகிறது' என, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த, சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை கூடுதல் இயக்குனர் ராஜு, நிருபர்களிடம் கூறியதாவது:அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் எலிகள், நாய்கள், பன்றிகள் உள்ளிட்டவை, வெளியேற்றப் படுகின்றன.
அனைத்து மருத்துவமனைகளிலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைத்து, கால்நடைகள் நுழையாத வண்ணம், அவற்றின் உயரம் மற்றும் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையால், சுகாதாரம் பாதிக்காத வகையில், "அவுட் சோர்சிங்' முறையில், பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். முதல்கட்டமாக, தற்காலிக முறையில் ஆட்களை பணியமர்த்தி, மருத்துவமனைகள் சுத்தம் செய்யப்படும்.
இதற்கேற்ப, நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களின் நேரம், மாற்றப்பட உள்ளது. அதன்படி, காலை 6 - 8 மணி வரை; பகல் 12 - 2 மணி வரை; மாலை 5 - 7 மணி வரை என, பார்வையாளர் நேரம் இருக்கும்.வெளியிலிருந்து நோயாளிகளுக்குக் கொண்டு வரும், மீதமாகும் உணவு பொருட்கள் கீழே கொட்டப்படுவதால், எலித் தொல்லை அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், உணவகம் ஏற்படுத்தப்படும். உள்நோயாளிகளுடன், அடையாள அட்டையுடன், ஒருவர் மட்டும் உடனிருக்க அனுமதிக்கப்படுவர். அரசு மருத்துவமனைகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. இதில், 30 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், கோவில்பட்டி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளில், பல்வேறு பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை, வரும், 6ம் தேதி, "வீடியோ கான்பரசிங்' மூலம், முதல்வர் திறக்க உள்ளார்.இவ்வாறு, ராஜு தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.