mining scam: Alagiri son's bail hearing adjourned | மத்திய மந்திரி அழகிரி மகன் தயாநிதி சிக்குவாரா? முன்ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (130)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மதுரை: மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை தீவிரமாகி வருகிறது. கிரானைட் விதிமீறல் வழக்கில், தி.மு.க., மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி உட்பட கிரானைட் உரிமையாளர்களின் முன்ஜாமின் மனுக்கள் ஐகோர்ட் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணையை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
தயாநிதி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவில் கூறியதாவது:
கீழவளவில் 1.21.5 எக்டேரில் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க, ஒலிம்பஸ் நிறுவனம் உரிமம் பெற்றது. இதில், விதிமீறல் நடந்துள்ளதாகவும், டாமின் குத்தகைக்கு உட்பட்ட பகுதியை ஆக்கிரமித்ததாகவும், கற்களை வெளியில் கொண்டு செல்வது பற்றி கணக்குகளை முறையாக பராமரிக்கவில்லை எனவும் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான் அந்நிறுவனத்தில் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பெயரள விலான இயக்குனராகத்தான் இருந்தேன். 2010ல் ராஜினாமா செய்துவிட்டேன். தற்போது நாகராஜன்தான் நிர்வாக இயக்குனராக உள்ளார். அரசியல் உள்நோக்குடன் என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும், என குறிப் பிட்டார். ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நாகராஜன், சிந்து கிரானைட்ஸ் உரிமையாளர் பி.கே.செல்வராஜ், மனைவி சாந்தி, மகன் சூர்ய பிரகாஷ், பி.எஸ்.கிரானைட்ஸ் பெரியசாமி, மதுரா கிரானைட்ஸ் ரபீக்ராஜா, ஜி.ஜி., கிரானைட்ஸ்கோபாலகிருஷ்ணன் மற்றும்

பெரியகருப்பன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் நேற்று நீதிபதி டி.மதிவாணன் முன் விசாரணைக்கு வந்தன. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் ராமச்சந்திரன், மனுதாரர் வக்கீல்கள் வீரகதிரவன், ரவி, செல்வம், சக்கர வர்த்தி, ராஜசேகர், சண்முகநாதன் ஆஜராயினர். அரசு தரப்பில், "அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டியி ருப்பதால், விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்,' என்றனர். வீரகதிரவன்,""மனுக்கள் நீண்டநாட்களாக நிலுவையில் உள்ளன. அரசுத்தரப்பு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. இடைக்கால உத்தரவுபிறப்பிக்க வேண் டும்,'' என்றார்.பி.கே.செல்வராஜ் மனுவை நாளை (இன்றும்), கோபாலகிருஷ்ணன் மனு செப்.,6, தயாநிதி, நாகராஜன் மனுக்கள் செப்.,10 மற்றும் இதர மனுக்களை செப்.,11 க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

ஜாமின் மனுக்கள்: கிரானைட் மோசடி வழக்கில் கைதான மதுரா கிரானைட் உரிமையாளர் பன்னீர்முகமது, ஓய்வு பெற்ற கனிம வள அதிகாரி சண்முகவேல், வக்கீல் லோகநாதன், டாமின் ஊழியர் சீனிவாசன் உட்பட 36 பேர் சார்பில் தாக்கலான ஜாமின்

Advertisement

மனுக்கள், மதுரை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. "விசாரணை துவக்க நிலையில் இருப்பதால், கைதானவர்களை ஜாமினில் விட்டால், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது', என சென்னை அரசு குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், அரசு வக்கீல் தமிழ்செல்வன் எதிர்ப்புத் தெரிவித்தனர். பன்னீர்முகமது உட்பட சிலரது மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. சீனிவாசன் உட்பட மற்றவர்கள் மனுக்களை, உத்தரவுக்காக நீதிபதி கோகுல்தாஸ் தள்ளிவைத்தார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (130)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajeshwaraadevar Subramanian - Liverpool,யுனைடெட் கிங்டம்
06-செப்-201200:17:03 IST Report Abuse
Rajeshwaraadevar Subramanian Excuse me guys.... Tamilnadu now god power ok..., who ever law will do the duty... Our jurge god child.., Wait they con&39t escape this time... Madurai also now CM control... madam pls don&39t listen sasikala pls... Public & madurai minatchi & IAS & IPS , govt officers ur side... You can win this time....don&39t give them any excuse.... If u don&39t do this time.... History won&39t forgive you mam plssss.... Ultimate auction
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
05-செப்-201223:15:09 IST Report Abuse
v.sundaravadivelu வசதி வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், பல கோடி பணப் புழக்கம்... அது போக அடாவடி அப்பா, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கருணா தாத்தா... ஸ்டாலின் சித்தப்பு, கனிமொழி அத்தே... இம்புட்டு பாக் கிரவுண்டோட உன்னைக் கைது செய்ய யாருக்குய்யா தில்லு இருக்கு?.. கவலைப் படாதே சகோதரா... நம்ம அம்மா கருமாரி... இல்ல இல்ல .. ஜெயா அம்மா .... சொல்ல முடியாது நைனா .. காப்பத்துவாரா மாட்டாரான்னு... கருமாரின்னா கூட காப்பாத்துவான்னு காரன்டியா சொல்லிப்புடலாம்...
Rate this:
Share this comment
Cancel
Chidambaram Bose - Tuticorin(Thoothukudi),இந்தியா
05-செப்-201222:49:32 IST Report Abuse
Chidambaram Bose தக்கார் தகவிலர் என்பது அவரது எச்சத்தால் காணப்படும் என்பது தற்சமயம் நிரூபணமாகி விட்டது மூன்று தலைமுறையாக ஊழல் தொழிலை நடத்தியாகி விட்டது இன்னும் எத்தனை தலைமுறைக்கு நீடிக்குமோ தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-201221:59:26 IST Report Abuse
Sivakumar Manikandan இங்கே விமர்சனம் செய்யும் அனைவருமே முட்டாள்கள் .......நீங்கள் இப்படி எழுதுவதால் மட்டும் இந்த குடும்பம் திருந்த போகிறதா?...இல்லை பணம் திரும்ப அரசிடம் ஒப்படைக்கப் போகிறார்களா?...எதுவுமே நடக்கப் போவது இல்லை........நாம் எவ்வளவுதான் திட்டினாலும் அசிங்கப் படுத்தினாலும், ஒரு வார்த்தையில் நம்மை மடக்கி விடுவார்கள் ...அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும் அது போல் நீங்கள் திட்ட திட்ட நாங்கள் உயர் ஓம் .....ஏனென்றால் அவர்கள் தங்களை சந்தனமாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்...காரணம் இன்னும் ஒரு கூட்டம் அவர்களுக்கு ஆதரவாக ஒட்டு போடுகிறது ........ஒன்று மட்டும் உண்மை ..பணம் வைத்திருப்பவன் சாக்கடை ஆனாலும் அவன் வெளி உலகத்திற்கு சந்தனம் தான் .......ஆக மொத்தத்தில் மு க குடும்பம் ஒரு சாக்கடை ஆனாலும் பணத்தால் சந்தனம் ஆகிறது ...........திட்டு வதை நிறுத்தி விட்டு ஆக்கப் பூர்வமாக யோசனை சொல்லுங்கள்..........
Rate this:
Share this comment
Cancel
05-செப்-201221:02:51 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஹேய் நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் சார், நானும் ஊழல் மன்னன் தான் சார், என்னை கைது பண்ணுங்க சார், வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருது.
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
05-செப்-201218:08:39 IST Report Abuse
Ambaiyaar@raja முதலில் சிக்குவார், அதன் பின்பு கக்குவார் உண்மைகளை, அதன் பிறகு மாட்டுவர் கருணா கும்பல், வாழ்த்துக்கள் உங்களுக்கு, முதலில் முன்னாள் முதல்வர் ops அவர்கள் பெயர் அடிபட்டது, அதுவும் விசாரிக்கப்படவேண்டும் . ஜெயா இதை செய்வாரா? ஏன் என்றால் ops கோடு போட்டார், இவர்கள் ரோடு போட்டு, ரயில் விட்டு , கோபுரம் எல்லாம், ஊழல் கோபுரம்தான் கட்டிவிட்டார்களே கடுமையான புலன் விசாரிப்பு தேவை ஜெயாம்மா.
Rate this:
Share this comment
Cancel
Sivakumar K M - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-201217:25:35 IST Report Abuse
Sivakumar K M அழகிரி , வீரபாண்டி ஆறுமுகம் போன்ற மூதேவிகள் சிறைக்கு செல்வது திமுகவுக்கு ரொம்ப நல்லது . இந்த பீடைகள் தொலைந்தால் தளபதியின் தலைமையில் கழகம் மீண்டும் வெற்றிபெரும் .
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
05-செப்-201215:48:12 IST Report Abuse
Daniel Joseph இங்கு நீங்கள் எல்லாம் கருத்து எழுதி இவரை ஒரு வருங்கால முதல்வர் ஆக்கிட்டீங்க .........................இந்த மாதிரி பட்ட விஷயங்களுக்கு தயவு செய்து கருத்து எழுதாதீர்கள் .............. ஊழல் செய்பவர்களை பெரிய ஆட்கள் ஆக்குவதே நம் கருத்து தான் காரணம் ............ நம் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க போவதில்லை பணத்துக்காக அலையும் அரசு ஊழியர்கள் தான் சிக்குவார் இவர்கள் எல்லாம் தப்பிடுவாங்க ................மொத்தத்தில் நம் மக்களுக்கு கோவிந்தா கோவிந்தா
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
05-செப்-201215:44:08 IST Report Abuse
சகுனி தம்பி, நீ இன்னும் கொஞ்சம் வளரனும் .......... தாத்தா, அத்தை, ராசா மாமா, அப்பா எல்லாம் எப்புடி ஊழல்ல வெளுத்து வாங்குறாங்க பாரு .......... சுத்த சின்ன புள்ளதனமாயில்ல இருக்கு ......... எதுக்கும் நெறைய காம்ப்ளான் குடி கண்ணா ........
Rate this:
Share this comment
Kathiresasn Sornavel - Mumbai,இந்தியா
05-செப்-201216:45:36 IST Report Abuse
Kathiresasn Sornavelஇல்ல இல்ல ஹோர்லிக்ஸ் தான் குடிப்பேன்............
Rate this:
Share this comment
kmuthuk - London,யுனைடெட் கிங்டம்
05-செப்-201221:01:50 IST Report Abuse
kmuthukஇல்ல திருட்டு ஹார்லிக்ஸ் தான் குடிப்பேன்...............
Rate this:
Share this comment
Cancel
Satheeshkumar Kalaimani - karur,இந்தியா
05-செப்-201213:36:17 IST Report Abuse
Satheeshkumar Kalaimani காலம் மாறிவிட்டது. இவனது கல்யாணத்தின் பொழுது அனைத்து காவல் துறை அதிகாரிகளும் இவனுக்கு சலாம் அடித்தனர்.இன்று?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.