சென்னை: ""துரை தயாநிதி மீதான வழக்கு குறித்து, ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்த கம்பெனியிலிருந்து, துரை தயாநிதி விலகி விட்டதாக, ஏற்கனவே அறிக்கை விட்டிருப்பதாக, எனக்கு தகவல் கிடைத்தது. அதைத் தவிர, வேறு தகவல் எதுவும் தெரியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
அறிவாலயத்தில், அவரது பேட்டி: இலங்கைத் தமிழர்கள், தங்களுடைய வாழ்வாதாரத்தைக் காண முடியாத, ஒரு பயங்கரமான சூழலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் பிழைப்பதற்கு, எந்த மார்க்கமும் இல்லை. இன்னமும், அவர்கள் எங்கேயாவது ஓடி தப்பித்து, தங்களுடைய குழந்தை குட்டிகளைக் காப்பாற்ற வேண்டிய, அவல நிலையில் இருக்கின்றனர். இதை எல்லாம் சுட்டிக் காட்டி, "டெசோ' மாநாட்டிலே, தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த தீர்மானங்களை எல்லாம், ஐ.நா., சபைக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம். இன்னும் ஓரிரு வாரத்தில், ஐ.நா., சபையில், அந்தத் தீர்மானங்களை, ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் சென்று கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்கான தேதியை, இன்னும் இரு நாட்களில் வெளியிடுவேன். விளையாட்டு வீரர்கள், பொதுவாக, கிரிக்கெட் ஆடுபவர்கள், இலங்கைக்கு, இந்தியாவிலிருந்து செல்வதும், அங்கேயிருந்து, இங்கே வருவதும், வாடிக்கையாக நடைபெறும் விஷயம். இங்கே, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, பயிற்சி கொடுக்கக் கூடாது. பார்லிமென்டில் கூட, உரத்தக் குரலில் இதைத் தான் முழங்கிக் கொண்டிருக்கிறோம். பார்லிமென்டிற்கு, எம்.பி.,க்களை வெற்றி பெறச் செய்து, மக்கள் அனுப்பி வைப்பது, தங்களுடைய பிரச்னைகளுக்காக வாதாடுவதற்காகத் தான். அதை விட்டு விட்டு, பார்லிமென்டை இயங்காமல் செய்து விட்டால், எங்கே வாதாடுவது? லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களை, கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த ராஜபக்ஷே, தமிழகத்தில், அல்லது இந்தியாவில், சிறப்பாக வரவேற்கப்படுகிறார் என்றால், அதை, நாங்கள் மனம் விரும்பி ஏற்க முடியாது. நிலக்கரி சுரங்க ஊழல், சொத்துக் குவிப்பு ஊழலை விட பெரியதா, சிறியதா என்று தெரியவில்லை. இவ்வாறு, கருணாநிதி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பெருசு, பாவம் ஒன்னும் தெரியாது. எதாவது புரியற மாதிரி பேசி இருக்கறா பாருங்க,,,,,,,,,,,,,,,,,ராஜபக்சேவை இந்தியாவில் வரவேற்றல் மனம் விரும்பி ஏற்க முடியாது, உங்களுக்கு யாருக்கவது இதன் அர்த்தம் புரியுதா. இதையே அம்மா சொன்னது எப்படினா ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை கண்டிப்பாக ஏற்கமுடியாது, மத்திய அரசிற்கு இதை அழுத்தமஹா தெரிவிக்கிறோம். மு கா,,,,,,,,,,,,,,,,,,எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்,,,,,,,,,,,,,,,,,,,
இந்த கருனாநிதி இப்பொழுது இருக்கும் வயது வரை நம்மை கடவுள் வாழ வைப்பாறா, அப்படியே வாழ வைத்தால் இப்படித் தெளிவாக பேசும் அளவுக்கு நமது மூளை செயல்படுமா என்பது நமக்குத் தெரியாது. அது ரொம்ப சந்தேகமான விஷயம்தான், சந்தேகமான கேள்விதான். இந்த வயதிலும் இவ்வளவுத் தெளிவாக, மக்களை குழப்பும் வகையில் பேசுவது,பதில் தருவது கருனாநிதிக்கு கைகவந்த கலை. இன்னும் எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் இந்த ஹிம்சையை நாம் தாங்கிக்கொண்டு இருக்க வேண்டுமோ அது கடவுளுக்குத்தான் தெரியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.