மதுரை: மதுரை மாவட்டம், திருமோகூரில் போலீசாருக்காக உருவாக்கப்பட்ட "டைகர் ஜாங்கிட் நகர்' கிரானைட் குவாரிகளின் கைங்கரியத்தால் காணாமல் போனது.
மதுரை போலீஸ் கமிஷனராக, ஜாங்கிட் 2000ம் ஆண்டில் பணிபுரிந்தார். போலீசார் நலன் கருதி, "போலீசாருக்கான வீடு கட்டும் சங்கம்' துவக்கினார். இதன் தலைவராக ஜாங்கிட் இருந்தார். நிர்வாகிகளாக போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்களாக போலீசார் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு வீடு கட்டுவதற்காக, குறைந்த விலைக்கு திருமோகூர் புதுத்தாமரைப்பட்டியில், நிலம் தேர்வு செய்யப்பட்டது.
டைகர் ஜாங்கிட் நகர்:
இதில், தலா ஐந்து சென்ட் வீதம் 248 பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு "டைகர் ஜாங்கிட் நகர்' என பெயர் சூட்டப்பட்டது. பிளாட்டுக்கான தொகை முழுவதையும் சங்கத்தில் செலுத்திய போலீசாருக்கு, 2001ல் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. அங்கு, போலீசார் சிலர் வங்கிக்கடன் மூலம் வீடுகள் கட்டினர். குடியிருப்புக்கு மிக அருகில் புதிதாக கிரானைட் குவாரிகள் துவங்கப்பட்டன.
போலீஸ்காரர் இறப்பு:
கிரானைட் கற்களுக்காக பாறைகளுக்கு சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்பட்டதால் குடியிருப்புகள் அதிர்வுக்குள்ளாகின. நாளடைவில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. சில வீடுகள் முற்றிலும் சேதமடைந்து குடியிருக்க இயலாமல் போனது. இதனால், ஜாங்கிட் நகரில் புதிதாக வீடு கட்ட போலீசார் பலர் முன்வரவில்லை. கடன் வாங்கி வீடு கட்டிய போலீசார் பலருக்கு, கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், அங்கு குடியிருந்த போலீஸ்காரர் ஒருவர் மன உளைச்சலில் இறந்தார்.
அடிமாடு விலைக்கு கேட்பு:
ஜாங்கிட் நகர் முழுவதையும் கிரானைட் குவாரி உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக அழகர்கோவில் பகுதியில் இடம் ஒதுக்கும்படி, கிரானைட் குவாரி உரிமையாளர்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு கிரானைட் குவாரி உரிமையாளர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஜாங்கிட் நகர் இடத்தை "அடிமாடு விலைக்கு' கேட்டனர்.
குவியும் புகார்கள்:
மனம் நொந்த போலீசார் சேதமடைந்த வீடுகளை காலி செய்து, பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். கிரானைட் குவாரி கைங்கரியத்தில் ஜாங்கிட் நகர் இருந்த சுவடு தெரியாமல் போனது. அங்கு கிரானைட் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். பிளாட்டுகளை வாங்கிய போலீசார் பலர் தங்களை கடன்காரர்களாக ஆக்கிய கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மீது போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.