5 buses carrying Sri Lankan pilgrims attacked near trichy | "நாங்கள் என்ன தான் பாவம் செய்தோம்?' இலங்கை நாட்டினர் கதறல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"நாங்கள் என்ன தான் பாவம் செய்தோம்?' இலங்கை நாட்டினர் கதறல்

Updated : செப் 05, 2012 | Added : செப் 04, 2012 | கருத்துகள் (262)
Advertisement

திருச்சி: ""எங்கள் நாட்டில் நடந்த சம்பவத்துக்கு, எங்களை ஏன் துன்புறுத்தவேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?,'' என்று இலங்கை நாட்டிலிருந்து வந்த பெண்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இலங்கை, புத்தளம் மாவட்ட,ம் சிலாவம் பகுதியைச் சேர்ந்த 184 பேர் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்காக, கடந்த இரண்டாம் தேதி விமானம் மூலம் தமிழகம் வந்தனர். அவர்கள், நேற்று முன்தினம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர். இதையறிந்த பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இலங்கை நாட்டினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பூண்டிமாதா கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நேற்று காலை அவர்கள் வேளாங்கண்ணி கோவிலில் பிரார்த்தனை செய்ய சென்ற போதும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் போராட்டம் நடத்தினர். இதனால், வேளாங்கண்ணியிலிருந்து, அதே வேன்களில், அவர்கள் நாடு திரும்ப, திருச்சி விமான நிலையம் புறப்பட்டனர். வரும் வழியில், திருவாரூர் பைபாஸ் ரோட்டில் அவர்களின் வேன் மீது செருப்பு வீசப்பட்டது. பின், திருச்சி மாவட்டம், காட்டூர் அருகே வந்த போது, அவர்களுடைய வேன்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். அதன் பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இலங்கை நாட்டினர், திருச்சி விமான நிலைய போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டனர்.

தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து செலீன் என்ற பெண்மணி கூறும் போது, ""நாங்கள் என்ன பாவம் செய்தோம்?. எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அன்னையை கும்பிட குழந்தைகளுடன் வந்தோம். எதிர்ப்பால், மீண்டும் ஊர் திரும்புகிறோம். ஏன் எங்களை தாக்குகின்றனர். எங்கள் நாட்டில் நடந்ததற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும். கடவுளை கும்பிட கூட அனுமதி மறுப்பது சரியில்லை,'' என்று கூறினார்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த ஜூட் என்பவர் கூறுகையில், ""அப்பாவிகளான எங்கள் மீது, தாக்குதல் நடத்துவது எந்த வகையில் சரி. குழந்தைகளும், பெரியவர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், பத்து நாட்களுக்கு விசா இருந்தும், எங்களால் இங்கு தங்க முடியவில்லை. மாதாவை கூட தரிசிக்க முடியவில்லை, என்பது வருத்தமளிக்கிறது,'' என்று கூறினார்.

இலங்கையின் உளவுத்துறை அதிகாரி ரோஷன் கூறுகையில், ""சாமி கும்பிட வந்தவர்களை, இப்படி விரட்டி அடிப்பது சரியில்லை. இவர்கள், நாடு திரும்ப உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்றே (நேற்றே) அவர்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்புவர்,'' என்று கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (262)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudhakar - chennai,இந்தியா
07-செப்-201217:27:59 IST Report Abuse
Sudhakar ஏன்டா எங்க மக்களை கொன்னுட்டு நல்லவனுக மாதிரி வருவீங்க.நாங்க உங்கள நல்வரவு சொல்லனுமா ???.உங்க மக்களை வெளிய போக சொன்னதுக்கு உனக்கு இவ்வளவு கோவம் னா நாங்க எவ்ளோ கோவபடனும் ?
Rate this:
Share this comment
Cancel
Anbalagan Marichetti - Jubail,சவுதி அரேபியா
05-செப்-201220:38:03 IST Report Abuse
Anbalagan Marichetti we didn't the srilankans, we don't want those peoples coming to T.N. But i am asking the srilankans, why did you sexualy abuse and our peoples in your country? And also why you are ing our fishermen? give the proper answer. Fu........ you shouldn't come to T.N.
Rate this:
Share this comment
Cancel
Rajandran Velaiuthapillai - kandy,இலங்கை
05-செப்-201220:24:04 IST Report Abuse
Rajandran Velaiuthapillai திராவிட நாகரிகத்துக்கு ஒரு பெரிய கரும் புள்ளி நாள். இலங்கையில் தமிழர்க்கு எதிரானவர்கள் சில தமிழர்களே
Rate this:
Share this comment
Cancel
Sathish Kumar - Jurong,சிங்கப்பூர்
05-செப்-201219:30:13 IST Report Abuse
Sathish Kumar இலங்கையில் தமிழன் கொல்லப்பட்டதை பற்றி பேசாத தினமலர் ..... சிங்களன் அடிவாங்கியதுக்கே மனம் துடிக்கிறதோ.....
Rate this:
Share this comment
Cancel
Rajan - jeddah,சவுதி அரேபியா
05-செப்-201219:24:12 IST Report Abuse
Rajan எங்கள் மக்கள் செருப்பு வீசியது அவர்களுக்கு இல்லை ராஜபக்சேவுக்கு விடுத்த எச்சரிக்கை
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-201219:21:31 IST Report Abuse
Jeyaseelan இங்க அடிச்சா அங்க வலிக்கணும் ...........
Rate this:
Share this comment
Cancel
Sunil Narine - madurai,இந்தியா
05-செப்-201219:15:05 IST Report Abuse
Sunil Narine தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் விரட்டியடிப்பு, சிங்கள ராணுவத்தால் படுகொலை" போன்ற சம்பவங்களுக்கு வராத எதிர்ப்பு, "சிங்கள பக்தர்கள் தமிழர்களால் விரட்டியடிப்பு" என்ற சம்பவத்துக்கு மட்டும் அளவுக்கு மீறி வருவது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
05-செப்-201219:02:11 IST Report Abuse
Pasupathi Subbian இலங்கை தமிழர்கள் தாங்கள் பாதிக்கபடும் போது மட்டும் தமிழக தாயகத்தை நினைபவர்கள் . தமிழகத்தில் இருக்கும் இந்த ஈழ தமிழர்கள் தமிழகத்தை கொஞ்சமேனும் நன்றியுடன் நினைத்துபார்ப்பது இல்லை என்பதே எனது சொந்த அனுபவம் . இவர்கள் நம்மை எதோ கொள்ளைகாரர்கள் போல நடத்துவதை நான் பார்த்திருக்கிறேன் . பல தமிழக மக்களின் நிலையை கண்டுகொள்ளாத இந்த அரசு இவர்களுக்கு பாதுகாப்பு மற்ற அத்யாவசிய வசதிகளை செய்து தந்தும் இவர்களில் பலர் தவறான வழியில் செல்வதையும் தமிழகத்தை இவர்களின் சட்டதுக்கு புறம்பான செயல்களுக்கு ஒரு இடமாக ஆக்கி இவர்களின் நடமாட்டத்தை நமது காவல்துறை கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
siva - chennai,இந்தியா
05-செப்-201218:21:22 IST Report Abuse
siva ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகள் என்ன செய்தார்கள் முள்ளிவாய்க்காலில், ஏன் நீங்கள் அவர்களை கொலை செய்தீர். உங்களை உயிருடன் விடுவதே பாவம். உங்களுக்கு என்ன துணிச்சல் தமிழில் நாட்டுக்கு வர.
Rate this:
Share this comment
Cancel
Balu Ba - Abqaiq,சவுதி அரேபியா
05-செப்-201218:15:41 IST Report Abuse
Balu Ba இலங்கையில் மாதா கோவில் இல்லையா?? புதியதாக கட்டிக்கொள்ள வேண்டியதுதானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை