சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 40 பேர் படுகாயங்களுடன், விருதுநகர், சிவகாசி, மதுரை மருத்துவமனைகளில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில், ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. 400க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் இங்கு பணியாற்றி வந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வந்தன. 40க்கும் மேற்பட்ட அறைகளில், ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.
விபத்து நடந்தது எப்படி?
தீபாவளிப் பண்டிகைக்காக, பட்டாசுகள் தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வந்தது. பட்டாசுகளில் மருந்து உட்செலுத்தும் பணி 40க்கும் மேற்பட்ட அறைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, வெடிபொருட்கள் செலுத்தும் போது ஒன்றுடன் ஒன்று உராய்ந்த நிலையில், பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்து அனைத்து அறைகளுக்கும் பரவியது. அதுமட்டுமல்லாது, வெடிபொருட்கள் இருந்த அறைக்கும் தீ பரவியது. தீ விபத்து கடுமையாக இருப்பதால், சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு அதன் பாதிப்பு இருப்பதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
60 பேர் பலி?
பட்டாசு ஆலையில் உள்ள 40க்கும் மேற்பட்ட அறைகளில் தீ பரவியுள்ளது. ஒவ்வொரு அறையிலும் 2க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 பேரை தாண்டும் என்று கூறப்படுகிறது.
வேடிக்கை பார்த்தவர்கள் பலியான பரிதாபம்
வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட தீவிபத்தைப் பார்த்த பலர் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் 25 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்தின் பாதிப்பு நெடுந்தூரம் இருப்பதால், சம்பவம் நடந்த பட்டாசு ஆலை பகுதிக்கே, மீட்புக்குழுவினரால் பல மணி நேரம் செல்ல இயலவில்லை .
சம்பவ இடத்திற்கு விரைவு
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்டு பணிகளில் ஈடுபட்டன.. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகி்ன்றன.
சம்பவ இடத்தில் மருத்துவக்குழுக்கள்
விபத்து நிகழ்ந்த சம்பவ இடத்தில் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
தொடர்நிகழ்வு
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்துகளும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற விபத்தில் 11 பேரும், 2010ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற விபத்தில் 4 பேர், 2009ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர், 2006ம் ஆண்டில் நடைபெற்ற விபத்தில் 7 மற்றும் 2005ம் ஆண்டில் நிகழ்ந்த விபத்தில் 13 பேர் என ஆண்டுதோறும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதுபோல, சிவகாசி பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் ஏற்பட்டவண்ணம் தான் உள்ளன.
அவசர உதவி தொலைபேசி எண்
வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரையில் மேல்சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைக்கான எண் : 0452-2532535, விருதுநகர் மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 -242017, சிவகாசி மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 - 220301; சாத்தூர் மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 -260215; அருப்புக்கோட்டை மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 - 220624
32 உடல்கள் மீட்பு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை 35 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 38 பேர் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், மதுரை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு 80 சதவீத அளவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது
அமைச்சர்கள் விரைவு
சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், ராஜேந்திர பாலாஜி, வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விரைகின்றனர். முதல்வரின் உத்தரவின்பேரில், அவர்கள் சிவகாசி வருவதாக அரசு சார்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை தடை
வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு பொதுமக்கள் செல்ல தீயணைப்புத்துறையினர் தடை விதித்துள்ளனர். தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆலை ஃபோர்மேன் கைது
வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக, அந்த ஆலையில் போர்மேனாக பணியாற்றி வரும் திருத்தங்கலை சேர்ந்த உதயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல்வர் நிவாரணம்:
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கவும், இந்த தொகையினை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசாங்கம் பட்டாசு தொழிற் பூங்கா ஒன்றை அமைத்து ஆதில் பட்டாசு தொழில் முனைவோர் அனைவரும் இந்த பகுதிகுள் பங்கு பெரசெய்து மற்றும் அதன் அருகில் பாதுகாப்பு மையம் அமைதால் இது போற்ற சம்பவங்கள் நடை பெறாமல் உடனடியாக தவிர்க்கலாம்.
வருமானம் அதிகம் வரும் தொழிற்துறைகளில் கவனம் செலுத்துவது போல் இது போன்ற தொழிற்களிலும் வரைமுறை அமைத்து மக்களுகாக அரசாங்கம் கவனம் செலுத்தினால் நல்லது.
இது எனது கருத்து. எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.
அய்யோ மனது துடிக்கிறது என்ன செய்ய பாழாய் போன பணம் மீது நம்மை ஆள்வோர்க்கும் அதி்காரிகளுக்கும் இருக்கும் வரை இது போன்ற உயிர் பலி தொடரும் இதற்கு நிரந்தர தீர்வு பட்டாசு தயாரிப்பை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிரந்தர வேறு தொழில்துறை மேம்படுத்த வேண்டும் இது எல்லாம் நம்ம அரசாங்கம் செய்ய இயலும் செயல்முறை தான் நம்மை ஆள்வோரும் ஆன்டவர்களும் ஆள நினைப்பவர்களும் செய்ய முடியும் காரியம் தான் ஆனால் இது மாதி்ரி முடிவு எடுக்க நல்ல மனம் சிந்தனை உள்ளவர்கள் நம்மை ஆட்சி புரிய வேண்டும் பாவபட்ட ஏழை மக்களின் ரத்தம் உறிந்து குடிக்கும் அட்டை முதலாளிகள் மாற வேண்டும் இது நடக்குமா
இந்த விபத்திற்கு முக்கிய காரணம் இது மட்டுமல்ல. நாட்டில் நடக்கும் இது போன்ற ஒவ்வொரு நிகழ்விற்கும் காரணம் ஊழல்.. இந்த ஊழலின் பிறப்பிடம் அரசு அதிகாரிகள் தான்.. இவர்கள் ஒவ்வொருவரும் ஒழுங்காக நேர்மையாக தன் பணிகளை செய்தால் நாட்டில் எந்த ஒரு ஊழலும் நடக்காது. மந்திரி தப்பு பண்ண சொல்றாரா முடியாதுன்னு சொல்லு அதனால் உனக்கு தண்டனை கிடைக்கிறதா. அரசு அதிகாரிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் பண்ணுங்க. மத்ததுக்கெல்லாம் போராட்டம் பண்றீங்க ரோட்டுக்கு வரிங்க. இதுக்காக வா மக்கள் உன் பின்னால் நிற்ப்பார்கள். அரசு இவர்களை இடைநீக்கம் செய்யகூடாது. பணியை விட்டே நீக்க வேண்டும். அரசு பணி என்பது ஒரு சேவை. அதை புனிதமாய் நினைக்கும் சேவை செய்யத்துடிக்கும் பல பேர் இருக்கிறார்கள்.பாவம் இறந்தவர்களின் குடும்பத்தை நினைத்தால் கண்ணீர்தான் வருகிறது. அந்த முதலாளிகளின் பண வெறிக்கும் அரசு அதிகாரிகளின் பண ஊழலின் வெறிக்கும் பலி ஆனது வறுமையில் வாடிய கூலி தொழிலாளி கள் தான். அதன் தலைவர் விஜயகுமார் யும் கைது செய்யவேண்டும் அவர் பேசியதிலிருந்தே தெரிகிறது அவனின் அலட்சியம். கூலி தொழிலாளி தானே எதை சொன்னாலும் செய்வான் என்ற நினைப்பு. பாவம் தன் குடும்பத்திற்காக ஆபத்து என்று தெரிந்தும் உயிரை பறி கொடுத்து விட்டார்கள். கடவுளுக்கு கூட இறக்கம் இல்லை அப்பாவி மக்களை தான் அவனும் விரும்புகிறான் போல இரக்கமில்லாதவன். ஒரு கோரிக்கை அரசு அலுவலகங்களில் என்ன அலட்சியம் நடக்கிறது என்று ஆராய்ந்து ஒவ்வொரு நாளும் நேரடியாக ஒளிபரப்பினால் திருந்துவார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் செய்யவேண்டும். இந்த அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல் தான் அலட்சியம் தான் எல்லாவற்றிக்கும் காரணம். அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
சரி இனிமேலே அந்த துறை அதிகாரிகள் ஒரு மாதத்திற்கு எல்லா பட்டாசு ஆலைகளுக்கும் பறப்பர். எல்லா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா மற்றும் பட்டாசு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என ஆராய்ந்து. சில ஆலைகளை மூட உத்தரவு பிறப்பிப்பார். இதற்கிடையில் வேறு எதாவது பெரிய அசம்பாவிதம் நடக்கும் .. இதை மறந்துவிட்டு அதை பற்றி பேச ஆரம்பித்து விடுவோம். என்னங்கடா மற்ற நாடுகளை போல இம்மாதிரி உயிரை பணயம் வைக்கும் தொழில் செய்வோருக்கு பாதுகாப்பு கொடுக்க போறீங்க? வெள்ள வேட்டிய இங்கு போட்டுக்கிட்டு சுத்துறீங்க... வெளிநாடு டூர் செல்லும்போது மட்டும் கோட் சூட் சகிதம் அரசாங்க செலவில் சுற்று பயணம் மேற்கொள்றீங்க. எல்லாம் வாயை பிளந்து பார்த்துவிட்டு. பழையபடி வெள்ள வேட்டிய சுத்திகிட்டு இந்தமாதிரி சம்பவம் நடக்கும் பொது முகத்தை உம்மென (சோகமா இருக்காரம்மாம்) வைத்து கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு அப்படியே மறந்துவிடவேண்டியது.
சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் முகத்தில் எலி கடித்ததால். பணியில் அலட்சியமாக இருந்ததாக சொல்லி,
மருத்துவமனையின், நிலைய மருத்துவ அதிகாரி , பணியில் இருந்த டாக்டர் உள்ளிட்ட ஒன்பது பேரை, அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.-
சிவகாசி பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 56 பேர் பலியாகியுள்ளனர்.அதற்கு காரணமாக இருந்த முதலாளிகளையும் அரசு அதிகாரிகளையும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் ?
நான் சிவகாசியில் பிறந்து வளர்த்தவன் என்ற முறையில் இதுபோலே விபத்துகள் எத்தைனையோ பார்த்துள்ளேன் .இதெல்லாம் இப்பொழுதுதான் வெளியில் தெரியுது. சிவகாசி மக்களுக்கு இதெல்லாம் பழகி விட்டது . ஏனென்றால் தீபாவளியில் பிறந்து தீபாவளியில் மடியும் என் உறவுகளின் உயிர்களுக்கு கடவுள் நிர்ணயிங்கும் விலை ஒரு லக்சமோ இல்லை இரண்டு லக்ஷோமோ ?சர்வேசா

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.