Laptop father | லேப்டாப் "பிதா மகன்'| Dinamalar

லேப்டாப் "பிதா மகன்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

"பெரியது, சிறியது ஆவதும், சிறியது பெரியது ஆவதும், விஞ்ஞான வளர்ச்சியின் அடையாளங்கள். கம்ப்யூட்டரும் இதற்கு தப்பவில்லை.

1940களில் கண்டுபிடிக்கப்பட்ட "கம்ப்யூட்டர்', வீட்டின் அறை முழுவதையும் அடைத்துக்கொண்டு இருந்தது. நாளடைவில், இது "சுருங்க'த் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1979ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த "பில் மாக்ரிட்ஜ்', கம்ப்யூட்டரின் தனித்தனி பாகங்களை ஒன்று சேர்த்தால் என்ன என சிந்தித்து, முதல் "லேப்டாப்' கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.மாற்றி யோசித்த பில்:


இவர் வடிவமைத்த "கம்ப்யூட்டரில்' கீ போர்டும், மானிட்டரும் ஒன்றாக இணைக்கப்பட்டு, கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருந்தது. மானிட்டர் சிறிதாக இருந்ததால், அதை மடக்கி, கீ போர்டில் உள்ள இடைவெளியில் வைக்கும் வகையில் வடிவமைத்திருந்தார் பில். இதை கையடக்க கம்ப்யூட்டர் என்றே முதலில் அழைத்தனர். ஆரம்ப காலத்தில் இதை அமெரிக்க ராணுவ மையத்திலும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலும் பயன்படுத்தினர். இதை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு நிறுவனங்கள், தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டன.

1983ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மேனி பெர்னான்டஸ் என்பவர், தான் கண்டுபிடித்த கையடக்க கம்ப்யூட்டரை, "லேப்டாப்' என அறிமுகப்படுத்தினர். இன்று நோட்புக் வடிவத்தில் லேப்டாப் வந்துவிட்டது. லேப்டாப்பை முதலாக வடிவமைத்த பில், சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். செப்.8ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆனால், சதா "பிசி'யாக இருக்கும் கம்ப்யூட்டர் உலகம் என்னவோ, இவரை மறந்து விட்டது. இவர் இறந்ததே, உலகில் ஒரு செய்தியாக பேசப்படவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Web Chennai - Madras,இந்தியா
12-செப்-201222:03:06 IST Report Abuse
Web Chennai வியாபார காந்தங்களை பற்றி படித்து படித்து சலித்துப்போன எங்களுக்கும் திரு.பில் அவர்களுக்கும் இன்று நிறைவு தந்தது இந்த செய்தி....
Rate this:
Share this comment
Cancel
12-செப்-201221:29:53 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆனால், சதா "பிசி&39யாக இருக்கும் கம்ப்யூட்டர் உலகம் என்னவோ, இவரை மறந்து விட்டது. இவர் இறந்ததே, உலகில் ஒரு செய்தியாக பேசப்படவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை........................ அதுதாங்க நாம எப்பவுமே ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்போமில்ல அது தாங்க இந்த லாப்டேப்பு, கம்பூட்டரு, அதுலேயே மூழ்கிட்டோமா அவரை நினைச்சு பார்க்க நேரமில்லை. அவரோட ஆத்மா சாந்தி அடையட்டும். நாங்க கடவுளு கிட்ட வேண்டிக்கிரோமுங்க.
Rate this:
Share this comment
Cancel
Anand Jayakumar - Chennai,இந்தியா
12-செப்-201218:07:11 IST Report Abuse
Anand Jayakumar நன்றி தினமலர்
Rate this:
Share this comment
Cancel
gomathi saravanan - madurai,இந்தியா
12-செப்-201214:28:27 IST Report Abuse
gomathi saravanan இன்று தான் நான் தெரிந்து கொண்டேன், தினமலருக்கு நன்றி. திரு. பில் அவர்கள் இன்றைய தலைமுறைக்கு மிக பெரிய சேவை செய்திருக்கிறார். மேலும், இதுபோல் அறிய செய்திகளை தினமலர் அள்ளித்தர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.