கவுரிவாக்கம்:அதிகரித்து
வரும் ஆக்கிரமிப்புகளால், கவுரிவாக்கம் ஏரி, குட்டையாக மாறிவிட்டது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம், ஒரு சென்ட் இரண்டு லட்சம் ரூபாய்க்கு
விற்பனை செய்யப்படுகிறது.சேலையூரை அடுத்த கவுரிவாக்கம் ஏரி, 26 ஏக்கர்
பரப்பளவு கொண்டது. பரங்கிமலை ஒன்றியம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை
நம்பி, ஒரு காலத்தில் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் நடந்துவந்தது. பின்,
விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால், நிலத்தடி நீருக்காக ஏரி
பயன்பட்டது.அதிகரிக்கும் ஆக்கிரமிப்புஇதை பயன்படுத்தி
அரசியல்வாதிகளும், சமூக விரோதிகளும் ஏரியின் உட்பகுதி, கரை, உபரிநீர்
கால்வாய் ஆகிய இடங்களை ஆக்கிரமிப்பு செய்யத் துவங்கினர். துவக்கத்தில்
அங்கொன்றும், இங்கொன்றுமாக செய்யப்பட்ட ஆக்கிர மிப்பு, நாளடைவில் பல மடங்கு
அதிகரித்தது.
விற்பனைக்கு ஏரி நிலம்தற்போது, 10 ஏக்கருக்கு அதிகமான
இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன. சிலர்
ஏரியினுள் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இதன் காரணமாக, பரந்து
விரிந்து காணப்பட்ட ஏரி குட்டையாக மாறிவிட்டது. இந்நிலையில், மீதமுள்ள
இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யும் வேலையில், சமூகவிரோதிகள்
ஈடுபட்டுள்ளனர்.கட்டட இடிபாடுகளை கொண்டு வந்து, ஏரியில் கொட்டி
சமப்படுத்துகின்றனர். சமூக விரோதிகள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து, ஒரு
சென்ட் நிலத்தை, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.என்ன
காரணம்?ஒன்றிய அதிகாரிகளின் அலட்சியமே கவுரிவாக்கம் ஏரி மாயமாகி வருவதற்கு
முக்கிய காரணம். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, கவுரிவாக்கம்
ஏரியை காப்பாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து,
பொதுமக்கள் கூறுகையில் ,""அதிகாரிகளின் அலட்சியத்தால், புறநகரில் உள்ள
ஏரிகள் ஆக்கிரமிப்புகளால் மாயமாகி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த
சில ஆண்டுகளில் ஏரிகளின் மாவட்டமான, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளே
இல்லாமல் போய்விடும்,'' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.